Sunday, 11 February 2018

ரசமணி தயாரிக்கும் முறை

*இன்று பல அன்பர்கள் கேட்டு கொண்டதட்கு இணங்க அபூர்வ ரசமணி தயாரிக்கும் போது பயன்படுத்த படும் கை கொள்ளுகின்ற அபூர்வ மூலிகைகள் பற்றிய ரகசியங்களையும் மூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்யும் அபூர்வ ப்ரயோகங்களையும் முழுமையாக தருகிறேன்.*


*மூலிகைகள் சாப நிவர்த்தி முறைகளும் அஷ்ட கர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கும்.....*
**********************************************************************

*மூலிகை சாப நிவர்த்தி*
****************************

மூலிகை எடுக்க உரிய நாளில் மூலிகை இருக்கும் இடத்திற்கு சென்று மூலிகையை சுற்றி உள்ள இடத்தை சுத்தம் செய்து அதன்பின் அந்த இடத்தை கோமியம் அல்லது மஞ்சள் நீர் தெளிக்கவும். பின் தேங்காய், பழம், ஊதுபத்தி வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி இவைகளை வைத்து ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பின் விக்னம் நீக்கும் வினாயகரை மனமாற துதித்து பின் எந்த காரியத்திற்காக மூலிகை எடுக்கிறோமோ அதற்குறிய திசை பார்த்து அமர்ந்து கன்னி நூல் [மஞ்சள் நிற நூல்] காப்புகட்டி தேங்காய் உடைத்து சாம்பிராணி தூபம் தீபம் காட்டி எலுமிச்சை காவு கொடுத்து பொங்கல் நைவேத்யம் வைத்து *"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாஸய நாஸய சித்தர் சாபம் நாஸய நாஸய, தேவ முனி அசுர முனி சாபம் நாஸய நாஸய ஹூம் பட் ஸ்வாஹா*- என 108 உரு சொல்லியும், *சிங்வங்சிவயநம சங்வங் சரஹணபவ* - என்று ஒரு முறை சொல்லி பின் இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமலும் இலையை கிள்ளுவதோ செடியை பிடுங்குவதோ எப்படி செய்தாலும் பலிக்கும். இது என் அனுபவ ரீதியில் கைகண்டது.

*மூலிகை பறிக்க உகந்த கிழமைகள் :*
************************************

வசியத்திற்கு - ஞாயற்றுகிழமை,

மோகனத்திற்கு - திங்கள்கிழமை,

ஏவலுக்கு - செவ்வாய்கிழமை

தம்பனம் - புதன்கிழமை,

உச்சாடனம் - வியாழன்,

ஆகர்ஷ்ணம் - வெள்ளி,
மாரணம் - சனி

*மூலிகை பறிக்க உகந்த திசைகள் :*
**************************************

வசியம் - கிழக்கு பார்த்து அமரவும்,

மோகனம் - தெற்கு,

உச்சாடனம் - மேற்கு,

பேதனம் - வடக்கு,

ஏவல், தம்பனம் - தென்மேற்கு,

மேலும் சில காரிய்களுக்கு உரிய நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது எடுக்க வேண்டி வரும் அந்த நாளில் செய்ய பலிதம் ஆகும்.

*மூலிகை சாப நிவர்த்தி பற்றி மேலும் விளக்கம் – Molikai Saba Nivarthi*

மூலிகைகள் பல்வேறு வித பரிமாணங்களில்
செயல்படும் விளக்கம்
சித்தர் கலைகளில் மூலிகைப் பிரயோகங்களும்
மற்றும் பயன்படுத்தும் விதங்கள் என்பது
பல்வேறு நிலைகளில் கையாளப் படுகின்றது.

1 . நாட்பட்ட, கொடிய, கர்மவினை
நோய்களைத் தீர்க்கும் மருத்துவ மூலிகைகள்.

2 . மாந்திரீக அஷ்ட கர்மங்கள் எனப்படும்
வசியம், மோகனம், தம்பனம், உச்சாடணம்
போன்றவைகளுக்குப் பயன்படும் மாந்திரீக
மூலிகைகள்.

3 . இரசவாதம் எனப்படும் செம்பு - வெள்ளி -
இரும்பு போன்ற தாழ்ந்த உலோகங்களின்
அணுக்களை மாற்றி அமைத்து உயர்ந்த
உலோகமான தங்கமாக மாற்றும் இரசவாத
மூலிகைகள்.

4 - மனிதர்களின் வாழ்க்கையில் நவக்கிரகங்கள்
ஏற்படுத்தும் தீய - கொடிய பலன்களை
விளக்கி நற்பலன்களை கொடுக்கும் நவக்கிரக
மூலிகைகள்.

5 - பஞ்சபட்சி சாஸ்த்திரத்தில் பயன்படும்
மூலிகைகள், தீமை செய்யும் எதிரிகளை
கட்டுக்குள் கொண்டு வரவும், எடுத்த
காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும்,
செய் தொழிலில் அபாரமான விருத்தி
அடையவும், கணவன் மனைவி உறவில்
ஏற்ப்படும் வேற்றுமையில் ஒற்றுமை
காணவும், உயர் பதவி, பெரும் புகழ்,
பொருளாதார வளர்ச்சி, வெளிநாடு
உத்தியோகம், போன்றவைகளில் பூர்த்திபெறச்
செய்யும் பஞ்சபட்சி மூலிகைகள்.

6 - பிறவிவினை தோஷம், கர்மவினை தோஷம்
இவைகளை நீக்கும் வினை தோஷ நிவர்த்தி
மூலிகைகள்.

7 - தொழில் வசியம், ஆண் வசியம், பெண்
வசியம், இராஜ வசியம், உலக வசியம்,
போன்றவைகளுக்குப் பயன்படும் வசிய
மூலிகைகள்.

8 - அதிசய மாயாஜாலங்களுக்குப் பயன்படும்
அமானுஷ்ய மூலிகைகள்.

9 - திருமணத் தடங்களை சுலபமாக நிவர்த்தி
செய்யும் மூலிகைகள், குழந்தைப் பேறு
அளிக்கும் மூலிகைகள், சுகப்பிரசவம்
வெற்றிபெற வகை செய்யும் தெய்வீக
மூலிகைகள்.

10 - வசிய மை, களவு காணும் மை,
புதையல் மை, இராஜவசிய மை, மாயாஜால
மை, மாயமாய் மறையும் மறைவு மை,
போன்றவைகளுக்கு பயன்படும் அமானுஷ்ய
மூலிகைகள்.

11 - உடலின் செல்களையும், அணுக்களையும்
அழியவிடாமல் காத்து என்றும் இளமையுடன்
வாழச்செய்யும் காயகற்ப மூலிகைகள்.

இது போன்று பல்வேறு வகைகளில்
மூலிகைகள் செயல் படுகின்றன.மேற்கண்ட
முறைகள் அனைத்திற்கும் மூலிகைகளைப்
பறிக்கும் போது முறைப்படி சாபநிவர்த்தி
விதிகளைக் கடை பிடித்து எடுத்தால்
மட்டுமே நாம் கோரிய அனைத்து
காரியங்களிலும் மூலிகைகள் வெற்றிகரமான
பலன்களை அளிக்கும்...

மூலிகை சாபநிவர்த்தி செய்தல் என்பதில்
பல்வேறு சூட்சும இரகசியங்கள்
உள்ளன.இதன் உண்மைகளை அறிந்து
இன்றைய காலகட்டத்தில் பிரயோகிப்பவர்கள்
வெகு சிலரே.இன்றைய நடைமுறை யில்
மூலிகைகளை மேற்கண்ட முறைகளுக்காக
சேகரிக்கும் அனைவரும் சித்தர் நூல்களில்
உள்ள முறைகளைப் படித்து அதன்படி
கடைபிடித்து அம் மூலிகைகளின்
உண்மையான நற்பலன்களை அடைய
முடியாமல் தவிக்கின்றனர்.

எந்த ஒரு சித்தர் நூல்களிலும் "மூலிகை சாப
நிவர்த்தி செய்யும் இரகசிய விதிகளை"
முழுமையாக பதிவு செய்யவில்லை.இதன்
சூட்சும இரகசிய விளக்கங்களை குரு சீட வழிமுறையில் மட்டுமே தெளிவாக அறிந்து
கொள்ள முடியும்.

*உதாரணமாக :-* கன்னிநூல் என்பதில் மூன்று
வித இரகசியங்கள் உள்ளன.சாப நிவர்த்தி
செய்வதில் ஒன்பது வித சாபங்கள்
உண்டு.மேலும் சத்ரு மித்ரு விரல் படாமல்
எடுப்பது [சுண்டு விரல் மட்டும் அல்ல] இது
போன்று ஏராளமான விளக்கங்கள் உள்ளன.

மூலிகைகளின் அதிசயமான குணங்களையும்,
அமானுஷ்ய செயல்பாடுகளைப் பற்றி அறிந்து
கொள்ளும் சுயநலவாதிகள் மற்றும்
துன்மார்க்க எண்ணம் கொண்டோர் இவைகளை
மனிதகுல நலனிற்கு எதிராக பயன்படுத்தி
விடக்கூடாது எனக்கருதி மகத்துவம் மிக்க
சித்தர்களும், முனிவர்களும் மூலிகைகளுக்கு
சாபமிட்டுள்ளனர்.மேலும் தெய்வீக
இறைநிலை சாபங்களும் உண்டு.இவற்றை
முறைப்படி சாபநிவர்த்தி செய்து, காப்பிட்டு,
உயிர்கொடுத்து எடுத்தால் மட்டுமே
மூலிகைகள் உயிர்ப்புடன் நின்று நாம் கோரிய
காரியங்கள் அனைத்தும் சித்திக்கும்.

தற்போதைய நிலையில் மூலிகைகளை
மேற்கண்ட அமானுஷ்ய செயல்பாடுகளுக்கு எடுக்கும் அனைவரும் சாபநிவர்த்தி
விதிகளில் நான்கு அல்லது ஐந்து வித
நிலைகளை மட்டுமே கடைபிடிக்
கின்றனர்.இதில் மொத்தம் பனிரெண்டு வித
நிலைகள் உள்ளன.இந்த பனிரெண்டு வித
சூட்சும இரகசியங்களும் எமது சித்தர் வேதா
குருகுலத்தில் குரு சீட வழி முறையில் தகுதி
அறிந்து பயிற்றுவிக்கப் படுகின்றது.

 மூலிகை சாப நிவர்த்தி மற்றும் பிராண பிரதிஷ்டை மந்திரங்கள்

மூலிகைகள் தெய்வீக சக்தி கொண்டவை.அதுவும் நமது ஹிந்து தர்மத்தில் மூலிகை,செடி,மரம் இவை தெய்வ அம்சமாகவே பார்க்கப்படுகின்றன.

*உதாரணம் :-*
************
விநாயகர் - அருகம்புல்
சிவபெருமான் - வில்வம்
அம்மன் - வேம்பு
விஷ்ணு - துளசி
ஹனுமான் - வெற்றிலை,துளசி
துர்க்கை - வன்னிமரம்
அரசமரம் - விநாயகர்,திரிமூர்த்தி ஸ்வரூபம்

அந்த அந்த தெய்வங்களின் அருள் பெற குறிப்பிட்ட தெய்வத்திற்கு பிஇஷ்டமான மரம்,செடியின் அருகில் தேவைக்கேற்ப திசை நோக்கி அமர்ந்துமந்திரம் ஜெபித்து அந்த செடியின் வேரடி மண்ணை பயன்படுத்திப் பல காரியங்களில் வெற்றி பெறலாம். (இந்த சக்தி வாய்த்த பிரயோகம் பற்றி எழுதினால் அதிகம் நீளும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்)
பல மூலிகைகள் அஷ்ட கர்மம் எனப்படும் மாந்திரீக வேலைகளுக்கும் தவறாகப் பயன்படுவதால் சித்தர்கள் ,ரிஷிமார்கள்,தெய்வங்களின் சாபம் மூலிகைகளுக்கு உண்டு. எனவே எந்த மூலிகையை பறிக்கும் போதும் அவர்களின் சாபம் தீர்க்கும் மந்திரம் ஜெபித்த பின்னரே பறிக்கவேண்டும்.

மூலிகை பிடுங்கும் முன்னர் கன்னிப்பெண் நூற்ற நூல் கொண்டு அல்லது மஞ்சள் தடவிய வெள்ளை நூல் கொண்டு காப்பு கட்டி எலுமிச்சம்பழம் படைத்துக் குறைந்தது 3 நாட்கள் கழித்துப் பறிக்க சிறப்பு என்று மந்திர சாஸ்திரம் கூறுகிறது.சில குறிப்பிட்ட பிரயோகங்களுக்குக் குறிப்பிட்ட நாள்,நட்சத்திரம்,திதி , பட்சி எல்லாம் பார்த்துச் செய்ய வேண்டும்.இங்கு நான் பொதுவான காரியங்களுக்குப் பயன்படுத்துவது பற்றி எழுதியுள்ளேன்.

குறிப்பிட்ட மூலிகையின் முன் கிழக்கு முகமாக நின்று கொண்டு கீழே உள்ள சாபநிவர்த்தி மந்திரத்தை 3 தடவை சொல்லிக் கொஞ்சம் விபூதியை அந்த மூலிகையின் மேல் போட்டு வணங்க வேண்டும்..

*மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்*
ஆனைமுகனை அனுதினம் மறவேன்
அகஸ்தியர் சாபம் நசி நசி
பதினென் சித்தர் சாபம் நசி நசி
தேவர்கள் சாபம் நசி நசி
மூவர்கள் சாபம் நசி நசி
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி

பின்னர் கீழே உள்ள ப்ராணப்ரதிஷ்டை மந்திரம் 3 தடவை ஜபித்து சிறிது அருகம்புல்லை மூலிகையின் மேல் போட்டு வணங்கி எடுக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே மூலிகை மண்ணில் உயிர்ப்புடன் இருந்த போது உள்ள அதே சக்தியுடன் .விளங்கும்.சோதனை செய்து பாருங்கள். சாதாரணமாகப் பறிக்கும் மூலிகையை விட சாபநிவர்த்தி மற்றும் ப்ராண ப்ரதிஷ்டை மந்திரம் ஜெபித்து எடுக்கப்பட்ட மூலிகை நீண்ட நேரம் ,நாட்கள் வாடாமல் இருக்கும்.

*ப்ராண பிரதிஷ்டை மந்திரம் :-*
ஓம் மூலி மகாமூலி ஜீவமூலி உன்னுயிர் உன் உடலில் நிற்க சிவா

*வசிய மூலிகைகளின் மருத்துவ செய்கைகள்*
***********************************************

பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மூலிகைகள் என சிலவற்றை கூறலாம். இளமையாக அழகாக பார்ப்போரை கவரும் தன்மையைக் கொடுக்கும் செயல்பாடுகள் அதிகம் கொண்ட மூலிகைகள்.இந்த மூலிகைகளுக்கு எடுத்துக்காட்டாக நன்னாரிக் கொடியைச் சொல்லலாம்.

நன்னாரிக் கொடியின் வேர்:
நன்னாரிக் கொடியில் முக்கியமானது வேர். இதை சேகரித்து முறைப்படி சுத்தம் செய்து சூரணமாக மாற்ற வேண்டும்.பின்னர் ஆவின் பாலோடு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும் .

இதனால்தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. இதனுடன் சீரகம் , மல்லி சக்கரை கலந்து சாப்பிட்டால் மேகச்சூடு, நீர்க்கடுப்பு, மேக வெட்டை, வறட்டு இருமல், கண் வளையம், தேமல், படை ஆகியவைவிலகுகின்றன.

எட்டுவிதமான செய்கைகளை கொண்ட எட்டுவித மூலிகைகள் முதலில் நோயை தம்பணப்படுத்தி பரவவிடாமல் வசியபடுத்தி, மாராண மூலிகைகள் அக்கிருமிகளை அழித்து, பேதண மூலிகைகள் பேதப்படுத்தி வித்துவேஷன் மூலிகைகள் அவற்றை உடலிருந்து வெளியேற்றுகின்றன.

இதன்படி பார்த்தால் முதல் இரண்டு வகை மூலிகைகள் கட்டாயம் இருக்க வேண்டும். தம்பனம், வசியம் மற்ற 6 வகைகளில் வைத்தியர் எதை சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து சேர்க்க வேண்டும். கடைசியில் கட்டாயம், மாரணம்,வித்வேசனம் , பேதணம், இதில் ஏதாவது ஒரு மூலிகை இருக்க வேண்டும்.

எட்டுவித மூலிகைகளில் எதுவும் இல்லையெனில் மருந்தினால் பயன் இல்லை. இவ்வாறு அஷ்ட கர்ம முறைப்படி சேர்க்காததால் மருந்துகள் தோல்வியடைகின்றன என்பது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் :
பத்தியம்
இந்திய வைத்தியத்தில் அன்று மருந்துடன் கட்டாயம் ஏதாவது ஒரு பத்தியம் வைத்தனர். பத்தியம் தான் நோயாளிக்கு முதல் மருந்து, இரண்டாவது தான்மூலிகைகள். பத்தியம் இல்லாவிட்டால் மருந்துகளினால் பயன் இல்லை. இதனால் நல்ல மருந்துகள் கூட தோல்வியடைகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பக்க தலைவலி தலையில் நீரேற்றம், கண்களில் இருந்து சதா நீர் வருதல், தலைக்குத்தல், என்னும் நோய்களை 3 நாட்களில் பரிபூரண குணமடையச் செய்யலாம். முதல் நாள் காலை தலையில் பீனிச தைலம், அல்லது மிளகாய் தைலம் அல்லது சீரக தைலம் இதில் எதாவது 1 தைலத்தை வைத்து தலை முழுகிபின்பு கடுக்காய் 10கிராம், 10 மிளகு, வைத்து கஷாயம் செய்து சாப்பிட, 1 அல்லது 2 தடவை பேதியாகும். இவ்வாறு 3 நாள் செய்தால் பரிபூரண குணமாகும். ஆனால் இதில் பத்தியம் முக்கியம். பகலில் தூங்க கூடாது. படித்தல், டி.வி. பார்த்தல், வெயிலில் உலாவுதல் கூடாது.
பச்சரிசி கஞ்சியும், பருப்பும் மட்டும்தான் உணவாக கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் 3 நாளில் குணப்படும். பத்தியம் இல்லாமல் 30 நாள் செய்தாலும் குணப்படுவதில்லை. பத்தியம் 3 நாட்கள் வரைதான் இருக்க வேண்டும் என்பதுவிதி. எனவே பத்தியம் இரண்டாவது காரணமாகின்றது.

3-வது காரணம்:
விதிகள் மாற்றப்படுகின்றன:
சரக்கு சுத்திகள்:
சுக்கு, மிளகு,திப்பிலி முதல் வீரபாஷாணம், வரை எல்லா மூலிகைகளும், கடைச்சரக்குகளும் மூலத்தில் உள்ளபடி சத்தி செய்யப்பட வேண்டும் என்பது விதி.
“சுத்தி என்பது அதிலுள்ள மருத்துவ குணங்களுக்கு எதிரான குணங்களைநீக்குவது” அன்றுபோல் எல்லா மருந்துகளும் சுத்தி செய்யப்பட்டு தயாரிக்கும் முறைகளை கையாளும் நிறுவனங்கள், மருத்துவர்கள் குறைவே”.

எல்லா மருந்துகளிலும் முக்கியமாக இடம் பெறும் மருந்துகள் ஆடாதொடை, தண்ணீர்விட்டான்கிழங்கு, கீந்திற்கொடி, கொடிசம்பாலைபட்டை, சோம்பு, அமுக்கிறா கிழங்கு, நன்னாரி வேர், நிலவேம்பு முதலியன. இவைகளை எப்போதும் பச்சையாக சேர்க்க வேண்டும். ஆனால் இன்று இவைகள் காய்ந்த சரக்குகளாகவே சேர்க்கப்படுகின்றது. இதனால் இவைகள் சேர்க்கப்பட்ட மருந்துகள் தோல்வியடைகின்றன.

இதே போல் வாய்விளங்கம்திப்பிலி, வெல்லம், தேன், கொத்தமல்லி ஆகியவைகள்1 வருடத்திற்கு மேற்பட்டதாய் இருக்க வேண்டும். ஆனால் இன்று தேன் உடனடியாக சேர்க்கப்படுவதால் லேகிய முறைகள் யாவும் எதிர்பார்த்த அளவு வேலை செய்யாமல் தோல்வியடைகின்றன. இதே போல் மாசிக்காய், கடுக்காய் போன்ற துவர்ப்புமூலிகைகளை, பதார்த்தங்களை இரும்பில் அறைக்கக் கூடாது என்பதும் விதி.

இப்படி மருந்து தயாரிப்பதிலே அன்றும் இன்றும் ஒப்பிட்டு பார்க்கையில் இவ்வளவு முரண்பாடுகள் உள்ளன. மேலும் இன்று நவீன வடிவில் தயாரிக்கப்படுவது மருந்துகளின் வீரியத்தை குறைக்கத்தான் செய்கிறது. அன்று எல்லா மருந்துகளுக்கு கவசம் போடப்பட்டதில்லை. அப்படியே சாப்பிடலாம். மருந்து நாக்கில் பட்டவுடனேயே உமிழ் நீரில் கலக்கும். எல்லா பாகங்களுக்கும் சென்றடைந்து, வயிற்றை அடைந்து

ரத்தத்தில் கலந்து வேலை செய்தது.
இன்று கேப்சூல் மூலம் தரப்படுவதால் உமிழ்நீரோடு கலப்பதில்லை. எனவே இதனாலும் மருந்தின் வீரியம் குறையலாம். இவை பொதுவான காரணங்கள். இவைகளை கண்டு இக்குறைகளை களைந்தால் நிச்சயமாக நோயைவிரட்டலாம்.

*ரசமணி கட்ட பயன்படுத்துகின்ற அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு*
******************************************

பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம்தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பலகாரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்தியமூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்ம்ம்என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5.மாரணம், 6. மோகனம், 7. வசியம, 8. வித்வேஷனம் ஆகும். இந்தஅஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.

1. *ஆகர்ஷனம் :*
*******************

நமக்கு தேவையானதை இருக்கும்இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும்வித்தையாகும்.

 இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2.உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6.அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும்.

இதில்
மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.

2. *உச்சாடனம் :*
*****************

பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள்தீமைகளை விரட்டியடித்தல்.

இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய்மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5.வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவிஆகும்.

இதில்
மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.

3. *பேதனம் :*
***************

ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒருவிஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பைவேறுபட்டு போகும்படி செய்தல்.

 இதற்கு பயன்படும் மூலிகைகள் 1.வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.

நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.

4. *மாரணம் :*
***************

கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களைஅதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயைஉண்டாக்கி கொல்வது.

இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகைகிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.

மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்,
வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை,
கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகைகிழங்கு.

5. *மோகனம் :*
*****************

பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது.

இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3.வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமரவிழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை,
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு,
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது,
மனிதர்களை மோகிக்க - கிராம்பு,
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.

6. *வசியம் :*
*************

எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல்.

இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1.சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4.கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7.செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.

இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.

7. *வித்துவேஷனம் :*
************************

பகையை உண்டாக்குதல்.

 இதற்குபயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3.திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7.ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.

அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.

8. *தம்பனம் :*
***************

தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின்வாயை கட்டுதல்.

 இதற்க்கு பயன்படும் மூலிகைகள் 1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்திசாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.

விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,
பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை,
கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,
கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.

மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி,சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றிமேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் ஜெயமாகும்.

*சித்தர்கள்...மூலிகைகள்...பயன்கள்...*
***************************************

மூலிகை சாபநிவர்த்தி என்பதை மூலிகையினை நிலத்தில் இருந்து பறிக்கும் பொழுதில் செய்திட வேண்டிய முன் தயாரிப்பாக கருதலாம்.காட்டில் மூலிகைகளை தேடும் பொழுது குறிப்பிட்ட மூலிகையினை சுற்றி வளர்ந்து இருக்கும் பிற செடிகளை கவனிக்க வேண்டுமாம்.பிற் செடிகளின் தன்மை மற்றும் பண்புகளை கருத்தில் கொண்டே தேவையான மூலிகையினை பறிக்க வேண்டும் என்கின்றன்ர்.உடல் சாபநிவர்த்தி பெற்றவர்களுக்கு இத்தகைய பகுத்தறியும் திறமை வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.

மூலிகை பறிப்பதற்கு முதல் நாளே குறிப்பிட்ட மூலிகையினை சுற்றியுள்ள மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டும்.பிறகு குறிப்பிட்ட நேரத்தில் அதற்கென உள்ள பூசை முறைகளோடு தனித்துவமான ம்ந்திரத்தை செபித்து விரல் நகம் படாமல் அந்த செடியினை வேரோடு பறித்திடல் வேண்டும் .சாபநிவர்த்தியின் அடிப்படையே குறிப்பிட்ட மூலிகையின் உயிர்த் தன்மையினை தக்க வைப்பதாகும். .

*சித்தர்கள் கூறிய சிரஞ்சிவி - சஞ்சிவினி மூலிகை ...*

ஒரு மூலிகையை நம் செயலுக்கு வேண்டி காப்பு கட்டி எடுக்கும் போது முகூர்த்தம் பார்ப்போம், உயிர்ப்புள்ள ஞாயிற்றுக்கிழமையும் உயிர்ப்புள்ள பிரம்ம முகூர்த்தமும் உயிர்ப்புள்ள நேத்திரம் ஜீவன் உள்ள நாளும். உயிர்ப்புடன் வளரக்கூடிய வளர்பிறை சந்திர நாளும். தன் பட்சி உயிர்ப்புள்ள வேளையும்  உயிர்ப்புள்ள நட்சத்திரமும். உயிர்ப்புள்ள குரு சுக்ர ஓரையும் வரும் நாள் பார்த்து முகூர்த்தம் கனித்து பின்பு குறித்த நாளில் காப்பும் கட்டி அந்த மூலிகையை பிடுங்கும்முன்- உன் உயிர் உடலில் நிற்க- என்னும் மந்திரத்தையும் பலமுறை ஓதி அந்த மூலிகையின் உயிர் வேரான ஆனிவேர் அறாமலும் உயிர் நீரோட்டம் உள்ள வடக்கு கிளை வேர் அறாமலும். அந்த மூலிகைமேல் எவ்வித ஆயுதத்தாலும் பாதிக்கப்படாமல் மெல்ல எடுத்து  பயன்படுத்துவார்கள், இது பொதுவாக எல்லா மூலிகைகளும் இப்படித்தான் எடுப்பார்கள், இதில் உள்ள சூட்சுமம் என்னவென்றால் இந்த முறையில் எடுக்கப்படும் மூலிகைகள் எல்லாமே சிரஞ்சீவினி சஞ்சிவினி மூலிகைதான், இதைத்தான் சித்தர்கள் மறைமுகமாக சிரஞ்சீவி சஞ்சிவி மூலிகையே பலன் தரும்  என கூறினார்கள் .

சிரஞ்சீவி என்பது மாறாத தன்மையோடு அல்லது இளமையோடு என்பது பொருள்படும் , சஞ்சிவி என்பது சாகாதது அல்லது உயிரோடுள்ளது அல்லது ஜீவன் உள்ளது என்று பொருள், இந்த இரு தன்மையும் உள்ளவாறு மூலிகை எடுத்தால்தான் மூலிகை பலன் தரும் என்று சித்தர்கள் கூறினார்கள்,இதற்கு பெயர்தான் காலம் காலமாக எல்லோரும் கூறும் சஞ்சிவினி மூலிகையாகும்.

ஒரு மூலிகையின் சஞ்சிவி (உயிர்) நற்செயலுக்கு பயன்பட்டால் அந்த மூலிகையின் உயிர் மோட்சம் பெரும்.

*வசிய சஞ்சிவினி மூலிகை..*
*******************************

சஞ்சிவி மூலிகைகள் பற்பல வகைகள் இருக்கிறது .  சத்ரு வசிய புல் என்றும், சித்தர் அஸ்த்திர புல், என்றும் அஷ்டதிக்கு வணங்கி என்றும், வலச்சுற்று மூலிகை என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஜீவ சஞ்சிவினி புல் குறித்து காண்போம்...

தெய்வீக சக்தி உள்ள இடத்தில் மூலிகை வனங்களில் மட்டுமே இம் மூலிகை வளரும் மற்ற இடங்களில் எவ்வளவு முயன்றாலும் உற்பத்தி செய்யமுடியாது . கிடைக்காதவருக்கு இம் மூலிகை அரியவகையாக தோன்றும் கிடைத்தவருக்கு அவர் செய்த பாக்கியமாகவே கருதுவர் .

இம் மூலிகை வீட்டிலோ அல்லது வியாபார இடத்திலோ இருப்பது நலமாகும் . ஏனெனில் விரோதிகள் மற்றும் தரித்திரரை அவ்விடத்தில் அண்டவிடாது . எவருடைய கெட்ட திருஷ்டியையும் விலக்கிவிடும் . சர்வகாரியமும் வெற்றியாகவும் வசியமாகவும் வேண்டும் என்று மஞ்சள் பிள்ளையாருக்கு இம் மூலிகையை சூட்டினால் அக்காரியம் விரைவில் நடக்கும் .

மற்றவர் கண்ணுக்கு புலப்படாத பல சக்திகள் இம் மூலிகைக்கு இருந்தாலும் பார்ப்பவர் கண்ணுக்கு புலப்படும்படியான ஒரு அதிசயம் இம் மூலிகையிடத்தில் உண்டு . அது என்னவெனில் இம் மூலிகையில்  ஒன்றை எடுத்து கை விரல்களால் பிடித்துக்கொண்டு தண்ணீரில் நனைத்து எடுத்தால் வலசுற்றாக மூன்று அல்லது ஐந்து முறை எட்டு திசையையும் சுற்றும் . இதேபோல் மீண்டும் மீண்டும் முயற்சிக்கலாம் . இதை கண்கூடாக அனைவரும் காணலாம் . நம் எச்சில் பட்டால்கூட எட்டுதிக்கும் சுற்றும் .

இம் மூலிகை நம்மிடம் இருந்தால் விலங்குகளோ விஷ ஜந்துக்களோ நம்மை தீண்டாது .

 வனத்தில் சித்தர்கள் தன் பாதுகாப்பிற்க்காக இம் மூலிகையில் ஒன்றை எடுத்து தலைமுடியில் சொருகி இருப்பார்கள் . எதிரியால் மந்திர திருட்டு உண்டாகக் கூடாது என்பதற்காகவும் இதை பயன்படுத்துவார்கள்.

முறையாக பயன்படுத்துதல்...

இம் மூலிகையில் ஒன்றை கையில் எடுத்து உங்கள் விருப்ப தெய்வத்தை வணங்கி நான் விரும்பும் சகல காரியமும் தடையின்றி வெற்றியாக்கித்தாருங்கள் என்று மூன்றுமுறை மனதிற்ககுள்ளேயே கூறி பிறகு உங்கள் தெய்வ பாதத்தில் இம் மூலிகையை வைத்துவிடுங்கள் போதும் . அல்லது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து மேற்க்கூறியபடி பிராத்தனை செய்து அவர் சிரசில் இம் மூலிகையை சொருகி வைக்கவும் காரியஜெயம் உண்டாகும் .

*குறிப்பு :-* ஒரே மூலிகையை எத்தனை தடவை வேண்டுமென்றாலும் பிராத்தனைக்கு பயன்படுத்தலாம் . பிராத்தனை எதுவாக இருந்தாலும் இம் மூலிகையைக்கொண்டு பயன்பெறலாம் . இவ்வளவு அற்புதம் நிறைந்த மூலிகையை வீட்டில் எவ்விடத்தில் இருந்தாலும் நமக்கு நன்மையே அளிக்கும் . நம்  கண்ணுக்குதெறியாத விரோதியையும் விலக்கும் வல்லமை இம் மூலிகைக்கு உண்டு.

- *சித்தர்களின் குரல் shiva shangar*

*ஷிவோகம்*

No comments:

Post a Comment