வியாழனுக்குரிய பரிகாரம்
வியாழனின் மூலிகை அரச மரத்தின் புல்லுருவியை சாப விமோசனம் கொடுத்து முறைப்படி பூஜை செய்து காப்பு கட்டி தாயத்தாக்கி அணியவும். வியாழனின் திசையில், தனதான்ய அபிவிருந்தி,புத்திர பாக்கியம் சுகம்,குருவருள்,இறையருள் கிடைக்கும்.
வியாழனின் மூலிகையான செங்கழுநீர்ச் செடியின் வேரினை முறைப்படி பூஜை செய்து எடுத்து தங்கத் தாயத்து செய்து கழுத்தில் அணிய, தொட்டதெல்லாம் பொன்னாகும். வண்டி ,வீடு,நல்ல ஆசான் அமைவர்.
சித்திரா பெளர்ணமி அன்று முல்லைச் செடியின் வேருக்கு காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து, தாயத்தாக அணிந்து கொள்ள குருவின் திசை முழுவதும் நல்ல பலன் கொடுக்கும். வெற்றி கிட்டும். குருவின் புத்தியும்,அந்தரமும் நல்ல பலன் தரும்.
சகல சாஸ்திரங்கள் தெரிந்த நல்ல குருவுக்கு வியாழக்கிழமை உணவு வஸ்திரம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கவும்.குரு திசை முழுவதும் நல்ல பலன் கொடுக்கும் குழந்தைகள் நிலை உயரும்.செல்வ வளம் சேரும்.எடுத்த காரியம் கைகூடும்.
அனைவருக்கும் வணக்கம் எங்களது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிரங்கள்(share pannuga) பன்னுங்கள்..🦁🦁🦁📚
நன்றி குருமுனி மறைக்கப்பட்ட மாந்திரீகம் மர்மங்கள் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி மையம்
நன்றி குருமுனி பயிற்சி
9600043233 வாட்ஷாப் எண்
9600043233 வாட்ஷாப் எண்
No comments:
Post a Comment