Tuesday, 15 January 2019

அகர ரகசியம் 1-16


Image may contain: 1 person, text



பகுதி-1 அகர ரகசியம் (விரிவானது)




வெட்டவெளி

சீனர்களால் அறிமுகமாகிய அக்குபங்சர் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சித்தர்களால் விவரிக்கப்பட்ட வர்மக்கலையைப் போன்றதே ஆகும்.
வர்மத்தில் புள்ளிகளை மட்டுமே அதுவும் மிக முக்கிய புள்ளிகளை மட்டுமே விவரித்துள்ளனர்.அக்குப்பங்சரில் இதன் தொடர்ச்சியாக இக்கலை ஆராயப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட ஒரு மருத்துவ முறையாக வளர்ந்திருக்கிறது.வர்மக்கலையில் இது போன்ற ஆராய்ச்சிகள் நடத்தப்படவில்லை என்பது வருத்தமான ஒன்றேயாகும்.
அக்குப்பங்சரின் சக்திப்பாதைகள் யாவும் நம் உடலிலே இருந்தாலும் கூட ,அவற்றை நம் கண்களிளே காண முடியாது.இதனாலேயே இம்முறையை ஏற்றுக்கொள்ள பலரும் தயங்கினர்.
இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையும் கூட பல்வேறு ஆராய்ச்சிக் கட்டங்களைத் தாண்டியே வந்ததாகும். முதன் முதலாக 1939 ல் உடலியங்கு முறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கொண்ட குழுவும் இணைந்து பலவித சோதனைகளை நடத்தியது.
இந்த சோதனைகளின் பயனாக அக்குபங்சர் புள்ளிகளை அறிய உதவும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
ஆராய்ச்சியின் முடிவில் அக்குபங்சர் புள்ளிகளில் ஒருவித மின்னோட்டம் இருந்ததை அறிந்தனர்.இதற்குப்பிறகு எழுபதுகளில் நடந்த ஆராய்ச்சியில் கிர்லியான் கருவியும் ஔிவிடக்கூடிய திரவ நிலை ஐசோடோப்பும் பயன்படுத்தப்பட்டன.
இந்த ஆராய்ச்சி அமெரிக்காவின் சைரஸ் நகரில் உள்ள அப்ஸ்டேட் மெடிக்கல் சென்டர் நடத்தியது.
அந்த ஆராய்ச்சி நேரடியாக மனிதரைப்பயன்படுத்தி செய்யப்பட்டது என்பதால் முடிவுகள் துல்லியமாக கிடைத்தன.இதில் சீனர்கள் குறிப்பிட்ட விவரப்படி சக்திப்பாதையின் துவக்கத்தில் ஔிவிடும் தன்மையுள்ள ஐசோடோப் உடலில் செலுத்தப்பட்டு உயர்நிலை ரேடியேசன் கருவிகளால் அவரது உடல் தொடந்து கவனிக்கப்பட்டு திரவம் செல்லும் பாதை பதிவு செய்யப்பட்டது.
இம்முறையில் ஐசோடோப் ரத்தஓட்டத்திலோ ,நரம்புகளிலோ செல்லாமல் தனியான ஒரு பாதையில் செல்வதையும் அது இடைப்பட்ட உறுப்புகளில் தடையின்றிப் பயணம் செய்வதையும் கண்டு வியந்தனர்.அந்த ஐசோடோப் திரவம் சரியாக சீனர்களது வரைபடத்தை ஒத்த பாதையில் பயணம் செய்து அடுத்த பாதையில் இணைந்தது.
கண்களால் காணமுடியாத சூரிய சக்திப்பாதை உடலில் இருப்பதையும்,அதிலே சக்தி குறிப்பிட்ட முறையில் நகரவும் செய்கிறது,என்கிற உண்மையை ஔி உமிழும் திரவத்தால் காணவே முடிந்தது ஆராய்ச்சியாளர் குழுவால்.இதற்குப்பிறகே உலக சுகாதார மையம் அக்குபங்சருக்கு உலக அளவிளான அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுத்தது.
இந்த சக்திப்பாதைகள் அரூபமானவை.நம்முடைய உயிரும் அரூபமானது.ஆனாலும் கூட நாம் வடிவ உடலில் உயிரோடு வாழ்கிறோம்.
அரூபமான உயிரையும் வடிவமாய் அதற்கு வேறுபட்ட உடலையும் இணைப்பவை "ஆற்றல் பாதைகள்" என்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
அரூபமான உயிர் என்றும் அழியாமல் இருக்கக் கூடியது.உடலோ தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டு அழிந்து வேறு ஒன்றாய் மாறக்கூடியது.
நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தில் வடிவமாய் வெளிப்பட்ட கோள்களைத் தவிர பிறபகுதி யாவும் வெட்டவெளி.
இந்த வெட்டவெளி என்பது ஒன்றுமில்லாததாகத் தோன்றினாலும் தனக்குள்ளே அனைத்து உயிர் வகைகளுக்கும் உடல் அமைவதற்கு ஆதாரமாய் உள்ள அடிப்படைப் பொருளை அரூப நிலையில் கொண்டுள்ளது ஆகும்.
வெட்டவெளி என்பது அரூபமயமானது. உயிரும் அரூபமயமானது.இரண்டுக்கும் உரிய தொடர்பை உடல் தற்காலிகமாகப் பிரிக்கிறது.இப்படி உடல் வடிவில்,எந்தப் பொருள் உயிருக்கும்-பிரபஞ்சவெளிக்கும் இடையில் ,உடலாய் வடிவம் எடுக்கிறது? அப்படி வடிவம் எடுக்க அதற்கு எது உதவி செய்கிறது?
இப்படி உயிருக்கும் -உடலுக்கும் உரிய தொடர்பை ஆராய்ந்த சித்தர்கள் அதற்கு பஞ்சபூதங்களில் ஒன்றே பயன்படுகிறது எனவும் அறிந்தனர்.அப்படிப் பயன்படும் பஞ்சபூதத்தைப் பிரிக்கவும், தனித்து இயக்குவதில் வெற்றியும் கண்டனர்.
அந்தப்பொருள் அனைத்திற்கும் உயிர் கொடுக்கும் பொருள் அது வெட்டவெளி எங்கும் பரவிக்கிடக்கிறது என்பதையும் சித்தர்கள் கண்டறிந்தனர்.
இப்படி ஒரு வழி முறையை அறிந்த திருமூலர் அதன் உதவியால் மூவாயிரம் ஆண்டு வரை உடலோடு வாழ்ந்ததும் அதன் பின் அழியா நிலை பெற்றதும் வரலாறு.இப்படிப் பல சித்தர்கள் இன்றளவும் நம்மோடு நாமறியாமல் வாழ்ந்தும் வருகின்றனர்.
சித்தர்களைப் பொறுத்த வரையிலும் உடலுடன் அமரத்துவம் பெற்று ,இறவா நிலையை அடைந்தவர்கள்.இன்றும் கூட சூட்சும நிலையில் அவர்கள் பலருக்கும் வழிகாட்டி உதவுவதும் நடைபெறுகிறது.
சாகாக் கலை , மரணமிலாப் பெறுவாழ்வு என்பதெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடியாதவையாக இருந்து வந்தது.இப்போது விஞ்ஞானிகள் ஜீன்கள் மீதான தமது ஆராய்ச்சியைத் திருப்பி, விஞ்ஞான பூர்வமாகவே ஆயிரத்து இருநூறு ஆண்டுகாலம் வரையிலும் மரணத்தைத் தள்ளிப் போட முடியும் என்கிற விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜீன்கள் எதிலும் கைவைக்காமல் 'அகரம் ' என்கிற ஒரேஒரு வான் பொருளைக் கொண்டு நமது சித்தர்கள் 'சாகாக் கலையை' சாத்தியமாக்கிக் காட்டி இருக்கிறார்கள்.
இறப்பு என்பதில் நமது உடலுக்கும் உயிருக்கும் என்ன நிகழ்கிறது? உயிரையும் -உடலையும் இணைக்க உதவும் பொருளின் கட்டு விலகிய பின்பே , உயிர் உடலில் இருந்து வெளியேருவது சாத்தியம்.
அரூபமான உயிரையும், ரூபநிலையில் இருக்கும் உடலையும் இணைக்கும் இந்த பொருள் இரண்டிலும் தொடர்பு கொள்ளக்கூடிய திறனையும், அதே சமயம் மாறுதலுக்கு உட்பட்டாலும் அழியாத தன்மையோடு இருப்பதும் அவசியம் ஆகும்.
இப்படிப்பட்ட ஒரு பொருள் பிரபஞ்சத்தின் வெட்டவெளியில் அரூப நிலையில் அடிப்படைப் பொருளாய் இருந்து வருகிறது.இப்பொருள் மழை பெய்வதற்கு மேகங்கள் திரளும் பொழுது ஏற்படும் இடி மின்னல் ஆகியவற்றால் சலனமடைந்து அரூப நிலையிலேயே வானிலிருந்து பூமிக்கு வந்து சேரும் மழை நீருடன் கலந்து உலகெங்கும் பரவுகிறது.
நீரநிலை , நிலம், மரம், செடி, கொடிகள் என அனைத்து உயிர் வகைகளுக்கும் ஆதாரப் பொருளாய் நிலஉலகின் மண்ணோடு கலந்தும், நீரில் கலப்பது மூலமாய் பிற உயிர்களுக்கும் இந்தப் பொருள் தங்கு தடை இன்றிக் கிடைத்து வருகிறது.
இந்தப் பொருளே உயிர் வகைகளின் தோற்றத்திற்கு ஆதியாய் அமைந்த பொருளாகும்.அதனாலேயே இதற்கு இறைபொருள் என்றும் சித்தர்கள் பெயரிட்டு இருக்கிறார்கள்.
எந்த ஒரு உடலும் அல்லது தாவரமும் தனது அழிவுக்குப் பிறகு மக்கி மண்ணோடு மண்ணாகக் கலந்தாலும் அதிலிருக்கும் இந்த அடிப்படைப் பொருள் ஒரு போதும் அழிவதில்லை. மாறாக பிறஉயிர் பொருட்களுக்கு உதவும் பொருட்டு இயற்கைச் சுழற்சியில் மாறியமைகிறது.
இந்தப் பொருளை சித்தர்கள் எப்படித் தனித்துப் பிரித்து எடுத்தனர்? எப்படிப்பட்ட வகையில் பயன்படுத்தி தமது உடல் , உயிரை அமல நிலைக்கு உயர்த்தினார்கள் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

அகர ரகசியம் (விரிவானது)
பகுதி-2
அண்டம் பிண்டம்
அண்டம் பிண்டம் என்பதும் சித்தர்களின் பரிபாசைகளில் ஒன்று.இதுவும் மறைமுகமாக எட்டு இரண்டு என்பதையே குறிக்கும்.வடிவ நிலையில் உள்ளதை பிண்டம் எனவும்,அரூப நிலையில் உள்ளதை அண்டம் எனவும் சித்தர்கள் குறிப்பிடுவார்கள்.
உயிருக்கு உதவுவதற்காக பஞ்சபூத ஆற்றல்கள் வடிவநிலையில் உடலாய் நமக்கு அமைகிறது.அந்த நிலையில் அதற்கு பிண்டம் என்று பெயர்.இப்படி உடல் உருவாக நாத-விந்து என்ற விந்துப் பொருள் தேவை.அதாவது விதை மூலமாக உருவாகும் நிலையில் உள்ள, அத்தனை வடிவப் பொருட்களுமே அதன் அரூப இயல்பை இழந்து தோற்றத்திற்கு வருவதால் பிண்டம் என்கிற பெயரைப் பெறுகின்றன.
அதாவது வடிவமாய் வெளிப்பட்ட வித்துள்ள மூலப் பொருட்களே பிண்டம் ஆகும்.இதனையே சித்தர்கள் நாதம்-சத்தி-மதி என்றும் கூறுவார்கள்.இது சித்தர்களின் மெய்ஞான அறிவியல் படி ,அண்டம் என்பது வெட்டவெளி நிலையில் இருந்து உலகின் வடிவப் பொருட்கள் உருவாக முதற்காரணமாக அமையும் அணுப் பொருள் ஆகும்.
உடலாய் உருமாறிய பஞ்சபூத ஆற்றலுக்கு தொடர்ந்து உதவ அரூப இயல்பில் இருந்து வித்து எதுவும் இல்லாமல் நேரடியாகப் பிறக்கும் வடிவப் பொருள் ஒன்று இறைவனது கருணையால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையே சித்தர்கள் அண்டம் என்பதாகக் குறிப்பிடுவாா்கள். இது வித்தின்றி விளைவதால் செம்பொருள் என்றும் கூறுவர்.இது நமது உடலின் வடிவக் கட்டமைப்பை திரும்பவும் அரூப நிலையின் பிராண ஆற்றலாய் மாற்றி உயர்த்தும் தன்மை உடையதாகும்.
இப்படி நமது உடலின் தன்மையானது திரும்பவும் அண்டம் என்கிற பொருளால் மாற்றப்பட்ட நிலையில் மட்டுமே உடல் பிராண ஆற்றலை நேரடியாகக் கிரகித்துப் பயன்படுத்தும் வசதியை அடையும்.
நமது உடலின் உள்ளாக இருக்கும் உயிருக்கு உதவும் பிராண ஆற்றலை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி முறையாக உடலில் நிலை பெறச் செய்வதும் இந்த அண்டம் என்கிற பொருளால் மட்டுமே சாத்தியமாகும்.
இப்படி நமது உடலின் இயல்பை முற்றிலும் வேறு விதமாக தலைகீழாய் மாற்றக் கூடியதால் இதனை ஜோதி எனவும் சித்தர்கள் கூறுவார்கள்.
அண்டம் என்கிற இந்தப் பொருளும் எட்டு இரண்டில் ஒன்றாகும்.அண்டம் என்கிற இந்தப் பொருளை அறிந்து அதனைத் திருத்தி அதன் மூலமாகப் பிண்டத்தைத் திருத்தும் போது மட்டுமே நமக்கு உடல் அளவில் பிராணாயாமம் -யோகம் முதலியவைகள் சித்தியாகும்.
இவ்வாறு உடலை எட்டு இரண்டால் முறைப்படுத்தாமல் செய்யும் யோகமும் பிராணாயாமமும் உடலை அழிக்கவே செய்யும்.அதன்றி உடலில் தீவிர நோய்கள் உருவாகவும் காரணமாகும்.
பிராணாயாமப் பயிற்சியில் விவரிக்கப்படும் நாடிசுத்தி என்கிற பயிற்சியானது பிராணன் செல்கிற பாதைகளைச் சுத்தம் செய்யும் ஒரு முறையாகும்.உடல் பிராணனை நேரடியாகப் பயன்படுத்தும் வசதியை அடைந்த பிறகு நாடி சுத்தியால் திறக்கப்படும் பாதைகள் நம் உயிருடன் இணைப்புப் பெறும்.அதன் மூலமாகப் பிராணாயாமப் பயிற்சி மூலம் உடலுள் சேரும் பிராண ஆற்றல் உயிரால் முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டுவிடும்.
இப்படி முறையான பிராணாயாமப் பயிற்சியில் அதைப் பழகும் சாதகருக்கு எவ்விதமான சிரமமும் இருக்காது.இவ்வாறு அல்லாமல் நேரடியாக நாடி சுத்தியின் மூலம் திறக்கப்படும் பிராணப் பாதைகள் உயிர் ஆற்றலில் இணைப்புப் பெறாத நிலையில் உடலில் அதிகமாகச் சேரும் பிராண ஆற்றல் சாதகருக்கு பலவிதமான சிரமங்களை உண்டு பண்ணும்.
பிராணாயாமம் அதிகமாகச் செய்யும் போது உடலின் உள்ளாக உயிராற்றலோடு இணைப்பு ஏற்படாமல் திறக்கப்பட்ட பிராணப்பாதைகளில் நிரம்பும் பிராண ஆற்றல் , பயன்படும் முக்கிய பகுதியை அடைய முடியாமல் உடலின் ரத்த ஓட்டத்தில் நேரடியாகக் கலக்கத் தொடங்கும். இது ஆரம்பத்தில் நம்மில் அதிகமான புத்துணர்வை ஏற்படுத்தும்.
தொடரும் பிராணாயாமப் பயிற்சியால் இப்படி நமது ரத்த ஓட்டத்தில் அதிகமாக கலக்கும் பிராண ஆற்றல் வெளியேற முயலும். அதற்கு நம்மிடம் ஒரு வழி மட்டுமே வசதியாக இருக்கிறது.
நம்முடைய முழு வாழ்விலும் திறந்திருக்கும் மூலாதாரம் என்பதன் மூலமாக வெளியேற முயலும் பிராண ஆற்றலுக்கு வழியாய் அமைவது நம்முடைய பிறப்பு உறுப்புக்கள் மட்டுமே.
இதன் காரணமாக நேரடிப் பிராணாயாமம் பயிலும் குருவும் சரி, சாதகரும் சரி, தமது தீவிர சாதனைதளுக்கு ஏற்ப அதிகமான காம உணர்வால் தினமும் சிரமப்படுவதும் , அதன் மூலம் உடல் நலம் பாழாகுவதையும் பலரும் தமது அனுபவத்தில்இன்று வரையிலும் அறிவார்கள்.
இப்படி தியானம் ,யோகம்,பிராணாயாமம் என்று எந்த முறையைப் பயின்றாலும் சரி, சற்று தீவிரம் காட்டும் நிலையில் உடனடியாக காம உணர்வு தலை தூக்குவதை அறிந்தும் அதனை எப்படி சரி செய்வது ? அதற்கான வழி எது?என்பதெல்லாம் அறியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்குவார்கள்.
வெளிய்படயாக தமது குருவிடம் சொல்லவும் அச்சம். காரணம் குருநாதர் தம்மை ஆன்மீகப் பயிற்சிக்கு தகுதி இல்லாதவன் என்று கூறிவிடுவாரோ அல்லது பயிற்சியிலிருந்து விலக்கி விடுவாரோ என்கிற உணர்வோ காரணமாகும்.
இது பற்றிய விஷயத்தில் சாதகரை விடவும் மிகுந்த வேதனை குருவுக்குத்தான் எனலாம்.காரணம் பல வருட பயிற்சிக்குப் பிறகும் கூடத் தமக்கும் அதே நிலையே என்பதை குருவும் அறிவார்.ஆனால் எப்படி எவரிடம் சென்று கேட்டு தெளிவு பெறுவது? இல்லறத்தில் இருக்கும் குருவுக்கும் கூட இதே நிலைதான்.
இதுவரையிலும் பலவருடத் தீவிர சாதனைக்குப் பிறகும் தமக்கே ஏன் இவ்வித நிலை தொடர்கிறது என்பதைப் பற்றி பல குருமார்கள் சரியாக எதுவும் அறிய மாட்டார்கள்.அதற்கு அவர்களுக்கு நேரமே இருக்காது.வயதாகி உடலில் வலு இல்லாத நிலையிலும் கூடத் தம்மை இந்த உணர்வு பாடாய்ப் படுத்துவதை மிக நன்றாக ஒவ்வொரு குருவும் அறிவார்கள்.
அதுமட்டுமல்ல தம்முடைய முழுச் சாதனையும் இந்த ஒரு விசயத்தில் ஒன்றும் இல்லாமல் போவதையும் அதிலிருந்து தப்பிக்கவுமே நேரம் சரியாக இருக்கிறது என்பதையும் கூட மிக நன்றாக அறிவார்கள்.
வழி எதுவும் புலப்படாததால் தாமே எதுவும் செய்ய முடியாத இந்த நிலையில் இது பற்றி எந்த கேள்வி எழுந்தாலும் தவிர்த்துவிடவே முயலுவார்கள்.எந்த அளவுக்கு அதிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த அளவை விட அவரது தொல்லைகள் அதிகம்ஆகும்.
இறையுணர்வு அனுபவம் பெற்ற எவருமே இந்த எட்டு இரண்டு என்பதைப் பயன்படுத்தாமல் அடைந்திருக்க முடியாது. இதனை அறியாதவரை எவரும் எவ்விதமான ஆன்மீக முறையிலும் உண்மை வளர்ச்சிபெறுவதோ அல்லது ஞான நிலை அடைவதோ இயலாது.
இவ்விதம் உண்மை அனுபவம் பெற்ற எவருமே எட்டு இரண்டு என்பதைப் பற்றிச் சுட்டி்க் காட்டாமல் இருக்க முடியாது.
உடல் உருவாகும் நிலையில் தொடங்கி உடலில் இருந்து உயிர் பிரியும் காலம் வரையிலும் அவற்றுக்கு உதவும் இந்தப் பொருட்கள் பஞ்சபூதப் பொருட்களே ஆகும்.
இவற்றில் ஒன்றை அப்பு எனவும் மற்றொன்றை உப்பு எனவும் சித்தர்கள் கூறுகின்றனர்.இவற்றின் நிறமோ ஒன்று வெள்ளையாகவும்,மற்றது சிகப்பாகவும் இருக்கும்.
சிவப்பான பொருளை வாலைப்பெண் என்றும் அவளே தேவி என்றும் சித்தர்கள் பூசிப்பார்கள்.
அழியும் நமது உடலை இந்த இரண்டும் சொரூபசித்தி அடையும் அளவுக்கும்,காயசித்தி என்கிற அழியாத தன்மை கொண்டதாகவும் மாற்றக்கூடியதாகும்.
நம்முடைய உடலில் 'பிண்ட.' அணுக் கட்டமைப்பு இருக்கும் வரையிலும் அதனை நம்மால் புகைப்படம் எடுக்க முடியும் . அதுவே அண்ட அணுக் கட்டமைப்பாய் மாறிய நிலையில் உடலில் பஞ்சபூத ஆற்றல்கள் தம்முடைய ஊடுருவும் அரூபத்தன்மையை அடையும்.அப்படிப்பட்ட நிலையில் ஔி ஊடுருவும் என்பதால் அப்போது எடுக்கப்படும் புகைப்படம் பதிவாகாது.
வள்ளலாரின் உருவம் புகைப்படத்தில் பதிவாகாமல் விடுபட்டது இப்படிப்பட்ட சொரூப சித்தியை அவர் அடைந்ததால் ஏற்பட்டதாகும்.
சொரூப சித்தியை அடைய முயன்றவர்கள் பெரும்பாலும் தமது உடலுடனேயே அந்த நிலைக்கு மாறி விடுவார்கள். அப்படி அவர்கள் உடலோடு செல்லாமல் உடலை விட்டுச் செல்லும் நிலையில் அல்லது சொரூப சித்தி முழுமைஅடையாத நிலையில் உடலில் இருந்து உயிர் பிரியுமானால் அப்படிப்பட்டவரின் உடல் அழியாமல் நிலைபெறும். வெட்டவெளியிலேயே இருக்கும் இப்படிப்பட்ட உடல்கள் அழியாமல் இருப்பதற்குரிய காரணம் இதுவாகும்.
சித்தர்களால் பயன்படுத்தப்படும் இந்த அதி முக்கியமான இரண்டும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மறைந்து இருப்பதாகும்.
இவற்றில் ஒன்றை நாம் குழந்தைகளின் விளையாட்டில் காண முடியும்.மற்றது வெளியில் விளைவதாகும்.இவை இரண்டும் இறைவன் திருவருளால் மட்டும் அறியக்கூடியதாகும்.
இந்த இரண்டில் ஒன்று குருவாகும். "குருவில்லா வித்தை பாழ் " என்பதும், தொட்டுக்காட்டாத வித்தை பலிக்காது என்கிற பழமொழிகளும்,இந்த குறிப்பிட்ட முறையைப்பற்றி விவரிக்க உருவானதாகும்.
இந்த இரண்டையும் முறை தவறிப் பயன்படுத்தும் நிலையில் தான் (விதை நிலையில்) இவை இரண்டின் மாறுபாட்டால் உடலில் பிணி.,மூப்பு, நரை, திரை முதலானவைகள் உருவாகும் என்பது சித்தர்களது தெளிந்த அனுபவ ஆராய்ச்சி முடிவாகும்.
இந்த இரண்டில் ஒன்று நிலத்தோடு தொடர்பு உள்ளதாகவும் மற்றது நீரிலே அழியாததாகவும் இருப்பதாகும். இந்த இரண்டும் திருத்தப்பட்ட நிலையில், நெருப்பிலே பிறக்கும் ஒரு பொருள் காயசித்திக்கும் -சித்தவைத்தியத்திற்கும் அதி முக்கியமாய் பயன்படும் முப்புக் குருவாகும்.
வித்திலே பிறப்பதை சிவத்தின் கூறான சத்தி எனவும், வித்தினறிப் பிறப்பதை சத்தியின் கூறான சிவம் எனவும், முதலாவதைச் சுப்ரமணி எனவும், பிந்தியதை கணபதி எனவும் கூடச் சித்தர்கள் கூறுவார்கள்.
சிவ பூசை, சத்தி பூசை, வாம பூசை, சோம பூசை என்பதெல்லாம் சித்தர்களின் மறை பொருள் பரிபாசையாகும்.நேரிடையான வெறும் பூசை முறைகளால் எவ்விதமான பலனும் ஏற்படாது.மறைபொருட்கள் ஓரளவு வரை விளக்கப்படுவதற்கு சித்தர்கள் அனுமதித்திருக்கிறார்கள். இந்த எல்லை வரை தான் இந்த பொருட்களைப் பற்றி விவரிக்கமுடியும்.
விதியமைப்பும் குருவின் அருளும் இவற்றுக்கெல்லாம் மேலாக இறைவனின் திருவருளும் துணைபுரி்ந்தாலொழிய எட்டு இரண்டை அறிவதும் அப்பியாசம் செய்து உண்மைத் தெளிவு பெறுவதும் இயலாததாகும். நமக்கெல்லாம் இறைவன் திருவருள் துணை புரிந்து உதவட்டும்.தெளிவை அடையக் கருணை பொழியட்டும்.
அமுரி தாரணை என்றால் என்ன என்பது பற்றி அடுத்தபதிவில் காணலாம்.


#அகர #ரகசியம்(விரிவானது)
பகுதி-3
#தசதீட்சை
( ரசமணியின் உண்மை விளக்கம்.)
எட்டும் இரண்டும் தசதீட்சையாகும்.அகார உகாரத்தில் மகாரம் பிறக்கும்.சூரிய சந்திரனோடு வெளி சேர அகாரம் பிறக்கும்.இடகலை -பிங்கலை இரண்டும் ஒடுங்க சுழுமுனை திறக்கும்.
மேற்கண்டவை யாவும் பரிபாசையில் சித்தர்களால் குறிப்பிடப்படும் ஒரு பொருளைக் குறிப்பதாகும்.அது குரு மருந்து எனப்படும் முப்பு குரு ஆகும்.
அண்டம்,பிண்டம்; நாதம்,விந்து;அகர,உகரம்; ரவி,மதி;மீன,மேசம்;கோச,பீசம்;ஆண்,பெண்; சத்தி,சிவம்;கணபதி,சுப்ரமணி;அப்பு,உப்பு;சிற்றண்டம், பேரண்டம்;வாசி,சுழினை என்று பல்வேறு பெயர்களில் சித்தர்களால் விவரிக்கப்படும் பொருள் ஒன்றே.
அந்த ஒரே பொருளிலேயே இரண்டும் கலந்து கட்டுண்டு கிடக்கிறது.அப்படிப்பட்ட சிவப்பொருளே அகாரம் ஆகும்.
இதனை அறிவதற்கே பல வருடங்கள் ஆகும்.அதுவும் குருவால் தொட்டுக் காட்டப்படாமல் தெளிவு பெறுவது என்பது மிகவும் அரிது ஆகும்.இந்த உபதேசம் கூட விட்டகுறை தொட்ட குறை உள்ளவர்களுக்கே வாய்க்கும் என்கிறார்கள் சித்தர்கள்.
இதனை உபதேசிக்கும் முன்பாக ஒரு சீடனை தக்க விதத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் சோதித்த பின்னரே ஒவ்வொன்றாக போதிக்க வேண்டும் என்றும் விதிமுறை செய்துள்ளனர் சித்தர்கள்.
சித்தர் பாடல்களில் அண்டம்,கடுக்காய், முட்டையோடு,ஏகமூலி, வல்லாரை,திருநீற்றுப் பச்சிலை,குருவண்டு,தலைப்பிண்டம்,அஸ்தி, கருங்குருவி என்றெல்லாம் விவரிக்கப்படும் பொருட்கள் வெறும் பரிபாசைகள் என்பதை வாதவைத்திய முறைகளில் அனுபவம் பெற முயன்றவர்கள் ஆரம்பத்திலேயே புரிந்துகொள்வார்கள்.தமது செயல் முறைகள் பூர்த்தியாகாமல் போகும் நிலையில் இதை எளிதாக உணர்ந்து கொள்வார்கள்.
ஆகவே வாதமானாலும் சரி, வைத்தியமானாலும் சரி ஆதிப்பொருள் இதுவென அறியாத நிலையில் அது முழுமை பெறாது.
அகார-உகாரம் என்பது இரண்டு பொருட்களாக விவரிக்கப்பட்டிருந்தாலும் இரண்டும் ஒரே பொருளில் இருந்து வெளிப்படும் தனிப்பொருளே ஆகும்.
அகாரம் என்பது ஆதிப்பொருள்.அதிலிருந்து பெறப்படும் பொருளே உகாரம்.ஆக அகாரத்தின் உள்ளாகவே , உகாரம் என்பது இருக்கிறது.இதைப்பிரித்து திரும்பவும் இணைக்கும் நிலையில் பெறப்படுவதே மகாரம் எனப்படும் பொருளாகும்.
இதனை அ-உ-ம சேர்ந்த நிலையில் ஓங்காரப் பொருள் என்பார்கள்.இப்படிப் பெறப்படும் பொருள் இரவில் ஔி வீசும் தன்மை உள்ள ஜோதிப் பொருளாய் இருக்கும்.
அகாரம் என்பதை அகத்தியர் வான் பொருள் ஆகிய விண் என்றும்,அது பஞ்சபூதத்தில் ஒன்று என்றும் விவரிக்கிறார்.
" மகத்தான சித்தர்களும் சொல்லார் பாரே
சொல்லாத வான்பொருள் தான் வெளியாய் காணும்"
-அகத்தியர் பூசா விதி
இதை வள்ளுவர் கூறும் போது
"ஒன்றாகி எப்போதும் அழியா அண்டம்
ஓகோகோ சித்தர் உண்ணும் அண்டம் தானே"
வள்ளுவர் முப்பு சூத்திரம்
அகாரத்திலிருந்து பக்குவப்படுத்தப்பட்ட அண்டப் பொருள் சித்தர்களால் உடலோடு சேர்க்கும் விதத்தில் உண்ணக்கூடிய ஒரு பொருளாகவும் இருந்து வருகிறது.
அகாரம் பஞ்சபூதங்களில் ஆகாயக்கூறைச் சேர்ந்தது.விண்ணில் விளைந்து மண்ணுக்குள் வளர்வதால் , நீரிலே பிறப்பதால் இதனை அப்புப் பொருள் என்றும், பரிதி என்றும்,விண் என்றும் ,வெளி என்றும்,இதனுள் தீயும் இருப்பதால் வள்ளி என்றும் சித்தர்கள் அழைப்பார்கள். அகரத்திற்கு அண்டக்கல் முதலாய் 320 பெயர்கள் உண்டு. அதனை அகத்தியர் பரிபாசை -500 ல் கண்டு தெளிக. அதனால் தான் இதனை அறிவது மிகவும் கடினம்.
அகரம் என்னும் ஒரு பொருள் மூன்று பஞ்ச பூதங்களை தன்னுள் கட்டுண்ட நிலையில் வைத்திருக்கிறது.இப்படிப்பட்ட நிலையில் அது ஒரு கல்லாக இருக்கிறது.இதிலே கட்டுண்டு கிடக்கும் பொருட்கள் நீராகிய இரசம்,தேயுவாகிய கெந்தி,வாசியாகிய காற்று.
இதே பொருட்கள் நம் உடலிலும் இருக்கின்றன.ஆனால் கட்டுப்படாது தனித்தனி நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளன.அவை தான் வாத, பித்த, கபம் எனப்படும் முப்பொருட்களாகும். உடலிலே கட்டுப்படாத நிலையிலும், அகாரத்தில் கட்டுப்பட்டும் இருக்கின்றன. இது தான் அண்ட பிண்ட ரகசியமாகும்.
இப்படிப்பட்ட அகாரத்தை முறைப்படி வேதிக்கும் போது அதில் உள்ள ரசமும்,கெந்தியும்,வாயுவும் தனித்தனியே பிரிய இறுதியாக பருதி என்னும் மண்ணின் கூறாகிய சாம்பலும் மிஞ்சும்.
ஆக அகாரத்திலிருந்து நான்கு பொருட்கள் பெறப்படும்.இவைகளை ஏன் பிரிக்க வேண்டும்.?அகாரத்தில் கட்டுண்ட நிலையில் உள்ள பஞ்சபூதங்களைப் பிரிப்பதால் செயல்படாது ஒடுங்கும் தன்மைக்கு உரிய அவைகளின் கட்டு அவிழ்க்கப்படுகிறது.இதனால் அவைகள் திரும்பவும் செயல்படத் துவங்குகின்றன.
ஒடுங்கிய பஞ்சபூதங்களை செயல்படும் நிலைக்கு கொண்டு வரும் போது அவைகளின் செயல்திறன் மிக அற்புதமாக இருக்கும்.நீராக உள்ளவற்றை கெட்டியாக்கும்.கெட்டியாக உள்ளவற்றை சுண்ணமாக்கி நீராக மாற்றும்.இப்படி அவைகளால் மாற்றப்படாத பொருட்களே இல்லை.
இப்படி பஞ்சபூதங்களைப் பிரித்து அவைகளை "சிவயநம" என்னும் முறையில் திிரும்ப இணைக்கும் நிலையில் அதிலிருந்து இனிப்புச் சுவையுடையதும், தேன் போன்றதும், தெள்ளமுது என்று கூறத்தக்கதாகவும் உள்ள அமிர்தம் கிடைக்கிறது.
இதுவே பெருமருந்து.இதனை நீராக, மெழுகாக, குழம்பாக , சுண்ணமாகப் பெறுகின்ற பல முறைகள் சித்தர்களால் பலவிதமாக விளக்கப்படுகின்றன.
இந்தப் பொருளை உடலில் சேர்ப்பது அமுரி தாரணை,அமிர்த தாரணை, வாசி தாரணை என பலவாறாகக் கூறப்படும்.
"வாசியே அமுதமென அறியாது கும்பித்து மாண்டோர் கோடி"
என்பார் புலஸ்தியர் என்னும் அகத்தியரின் சீடர்களில் ஒரு சித்தர்.இந்த முறையில் அப்பியாசம் செய்யும் ஒருவருக்கு அவரது சுவாசமாகிய 21600 ம் மூல நாடியில் ஒடுங்கி குண்டலி ஆற்றலை உச்சிக்குக் கொண்டு வந்து உச்சிக்குழியைத் திறக்கும். இதன் பிறகு உடலில் உள்ள அண்ணாக்கும்,உண்ணாக்கும் இணைய உடலில் உள்ள மண்டலம் திறந்து அமிர்தம் கசிந்து இறங்கும்.
இந்நிலையில் சாதகரது சுவாசங்கள் இடகலை பிங்களை தானாகவே ஒடுங்கிச் சுழுமுனை திறக்கக் கும்பகம் ஏற்பட்டுச் சமாதி நிலை உருவாகும்.
சமாதி நிலை என்பது சொரூப சித்திக்குரிய துவக்க நிலை அனுபவம் ஆகும்.அகாரத்தைப் பக்குவப்படுத்திப் பெறும் பொருட்களாகிய சிகாரம் முதல் உகாரம்,மகாரம்,நகாரம்,யகாரம்,வகாரம் ஆகியவற்றையும் அடைந்து முறைப்படி உடலில் சேர்ப்பதே தசதீட்சை எனப்படும்.
இதற்குரிய கால அளவுகள் பத்து முதல் இருபத்திஇரண்டு ஆண்டுகள் வரை ஆகும்.முதல் பத்து ஆண்டுக் கால அப்பியாசமே சித்தர்களால் தச தீட்சை என்று விவரிக்கப்படுகிறது.
இப்படிப்பெறப்படும் முப்பு குருவால் பாதரசத்தைத் தூய்மைப்படுத்தி நெருப்புக்கு ஓடாத மணியாகக் கட்டலாம்.இப்படி ரசத்தைக் கட்டி மணியாக்குவது முப்பு குரு சரியாக முழுமையாக உள்ளதா என்பதை அறிவதற்குரிய ஒரு சோதனையாகும்.அடுத்து ஒரு முறையில் பாதரசத்தை முப்பு குருவால் கட்டுப்படுத்தும் போது அது உயர்ந்த உலோகமாக மாறுகிறது.இது முப்பு குரு சரியாக சித்தியானதற்கு அடையாளமாகும்.
அகாரப் பொருளால் கட்டப்படும் பாதரச மணிக்குச் சிறப்பு குணங்கள் உண்டு.அதனை உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டால் நமது உடலின் மூலாதாரம் முழுமையாக இயங்கத் துவங்கும்.இந்த நிலையில் மணியை வைத்திருப்பவரிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும்.அதாவது உடலின் சுழுமுனை மேலெழும்பத் துவங்கி உடல் முழுவதும் ஆற்றல் அதிர்வாய் பெருகுவதை உணர முடியும்.மணியைக் கையிலிருந்து எடுத்த பிறகும் கூடச் சிறிது நேரம் வரை அந்த அதிர்வு நம் உடலில் இிருக்கும்.
ககன மணி எனப்படும் ஒரு வகை மணியானது வாயில் இட்டால் உடலிலிருந்து உயிரைப் பிரித்து மேலே தூக்கும்.கற்ப முறையில் பயிற்சி செய்து தசதீட்சை முடித்தவர்க்கு இதே மணி அவரது உடலையும் உயிரையும் சேர்த்தே தூக்கும்.ஆம்.புவிஈர்ப்பு விசைக்கு எதிராக நமது உடல் மேலே எழும்பும் ஆற்றல் இந்த மணியால் ஏற்படும்.
சாதாரணமானவர்கள் இதுபோன்ற உண்மை மணியை வாயில் போட்டால் அவர்களது உடலைக் கீழே தள்ளி உயிரை மட்டும் பிரித்துத் தூக்கும்.இது பாதரச மணியின் இயல்பாகும்.
ஆனால் இப்போது பலரால் விற்கப்படும் மணிகள் யாவும் ஒன்றுக்கும் உதவாதவையாகும்.அவைகளைச் சிறிது நாட்கள் காற்றுப் படுமாறு வைத்து விட்டால் அவைகளின் பாதரச மேற் பூச்சு கழன்று வந்து விடும்.இதைத் தவிர்க்க பாதரச மணிக்கு நீரால்,பாலால்,சந்தனத்தால் அபிசேகம் செய்ய வேண்டும் என்று கூறிவிடுவார்கள். இப்போது வேறு பல முறைகள் மூலமும் மணிகள் கட்டப்படுகின்றன.எவ்வகையில் மணி கட்டப்பட்டாலும் அதனால் எந்த பலனும் ஏற்படாது.முப்பு குருவால் அல்லது அமுரியால் கட்டப்படும் மணியே அதற்கு சக்தி தரும்.பாதரசம் என்பது உடல் மட்டுமே ஆகும்.உடல் தனித்து இயங்க சக்தி அற்றது.அகரமே அதற்கு உயிராகும்.உடலும் உயிரும் இணைந்தால் தான் இயக்கம் ஏற்படும்.
பாதரசத்தின் மூலம் எளிய முறையிலும் மணி செய்ய முடியும்.ஆனால் அதன் மூலமாக எவ்விதமான சக்தியையும் பெற முடியாது.
துறவிகள் பொருள் சேர்ப்பதற்காக இப்போது பாதரச மணிகள் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.ஆனால் இம்முறையில் செய்யப்பட்ட மணிகளை அணிந்தால் உடலில் மணி படும் இடங்களில் பாதரசத்தின் விசத்தன்மையும் குளிர்ச்சியும் சேர்ந்து உடலில் கறுப்பு நிற அடையாளத்தை ஏற்படுத்தும்.
அவ்வித அடையாளம் ஏற்பட்டால் அந்த மணி அணியத் தக்கதல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இது ரசவாதத்தில் பாதரசத்தைக் கட்டும் வித்தையில் ஒன்றாகும். சுத்தம் செய்யாத பாதரசத்தால் செய்யப்படும் இவ்வித மணிகளை அணிவது வேறு வகையில் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு பலவிதமான கெடுதல்களை உருவாக்கும்.எனவே இவ்விதம் ரசமணிகளைப் பயனபடுத்துவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அமுரி தாரணை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் காணலாம்.
No photo description available.


#அகர #ரகசியம். பகுதி-4(விரிவானது)
வாலை பூசை
#அமிர்தம்
எனும் அமுரி
சித்தர்கள் என்கிற பெயர் யாருக்கு உரியது? அமுரி எனும் அமிர்தம் உட்கொண்டு தமது உடலை காயசித்தியால் , ஔியுடலாய் மாற்றி, சொரூப சித்தி அடைந்தவர்களுக்கே உரியது ஆகும்.
பிறந்தவர் இறப்பதும்- இறந்தவர் பிறப்பதும்பொது விதி ஆகும்.இதிலே பிறப்புக்கு பின் வரும் இறப்பை வென்று சொரூப சித்தி பெறுவது மூலமாக மரணத்தை வென்று விடுகின்றனர் சித்தர்கள்.
அதற்குப் பிறகும் அவர்கள் விரும்பிய காலம் வரையிலும் உடலுடன், அல்லது உடலைப் பிறர் கண்களுக்கு புலப்படாது மறைத்தும், வாழும் திறன் உடையவர்கள் சித்தர்கள்.
இப்படிச் சித்தர்களது வழி முறையில் மிகப்பெரிய அற்புதமாக இருந்து வருவது 'சாகாக் கல்வி' என்பது தான்.
இதிலே அனுபவம் பெற்ற சித்தர்கள் தாம் பெற்ற அனுபவத்தைக் கருணை வயப்பட்டு பிறர் அறியும் படி, தமிழ்ப் பாடல்களில் பாடியும் , எழுதியும் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
சித்தர்களது பாடல்கள் மூலமாக, நாம் பல துறைகள் பற்றிய விவரங்களையும் பெறமுடியும். அதிலே மிகவும் முக்கியமானது , உடலுடன் கூடிய முக்தியைப் பெறும் வழிமுறையாகிய சாகாக் கல்வி பற்றியது ஆகும்.
நமக்கு சித்தர்கள் வழிமுறையை ஆராயவும், பொறுமையாய் அவற்றின் உண்மைகளைக் காணவும் வாய்ப்புகள் போதுமான அளவில் ஏற்படுவதில்லை.
இதனாலேயே நம்முடனேயே உடலோடு வாழ்ந்து வரும் பல சித்தர்களைப் பற்றிய உண்மைகளை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
சித்தர்களைப் பற்றிய விவரங்களைக் கூறும் போது அகத்தியர் உட்பட பலரும் , சித்தர்களது சுவாசம் மாறுபட்டுஇருப்பதைப் பற்றி மிகவும் முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள்.காயசித்தி பெற்றவரது சுவாசம் #சுழுமுனையால் தான் நடக்கும் உடலில் சுவாசம் நிகழாது என்பதாக ஒரு அற்புதமான விபரத்தைத் தெரிவிக்கின்றனர்.அதுமட்டுமல்ல பசி, தாகம், உறக்கம் ஆகியனவும் மாறிப்போகும் எனவும் கூறுகின்றனர்.
இப்படி எல்லாம் சித்தர்களது உடலில் ஏற்படும் மாற்றம் எப்படி ஏற்படுகிறது? எதன் மூலமாக அந்த மாறுதல்களை அவர்களால் அடைய முடிந்தது.
சித்தர்களது காயசித்தி எனும் முறை 'அமுரி' என்னும் கற்பம் பயன்படுத்துவதை பற்றி விவரிக்கிறது.இந்த அமுரி என்பது பஞ்சபூதப் பொருட்களில் முழுமை அடைந்த பொருளாகிய அண்டக்கல்லில் இருந்து பெறப்படுவதாகும். இந்த அண்டக்கல் என்பதற்கு 'விஷக்கல்' என்பதாக ஒரு பெயரும் உண்டு.
பெயருக்கு ஏற்றபடி இந்தக்கல் தன்னுடன் அமிர்தத்தையும் , #விஷத்தையும் ஒன்றாக உடையதாகவே உள்ளது.
அண்டக்கல்லில் இருந்தே அமிர்தம் என்னும் அமுரியை பிரிக்க வேண்டும்.அப்படி அமுரியை அடைய "வாலையெனும் தேவி பூசை " தெரிய வேண்டும்.
வாலை பூசை என்பது அமுரியை அண்டக்கல்லில் இருந்து பிரித்தெடுக்கும் வழி முறையாகும்.
அண்டக்கல்லை நன்கு இடித்து மாவாக்கி உகாரம் என்னும் பிண்ட நீரில் கரைத்துப் பின்பு அந்தத் தெளிவிலிருந்து வாலையெனும் கண்ணாடிக் குடுவையில் நிரப்பி காற்றுப் போகாமல் மூடி நெருப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும்.இப்படிக் காய்ச்சும் போது அமுரியானது சொட்டுச் சொட்டாக குடுவையில் சேகரமாகும்.
அண்டக்கல்லுக்கு தீட்சை செய்து ,பக்குவப்படுத்திய நிலையில் அது அமிர்தத்தைத் தரும்.அந்த அமிர்தமே அமுரி ஆகும்.
இந்த அமுரியானது எண்ணெய் வடிவம் கொண்டதாகவும், வெண்மை நிறமுடையதாகவும், பாகு போன்றும், தேன் போன்றும், இனிப்புச் சுவையுடையதாகவும், முகர்வதற்கு இனிமையான வாசனையுடையதாகவும், காற்றில் திறந்து வைக்க எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், வறண்ட நீர்மம் என்பதால் கையில் தொட்டால் ஒட்டாத தன்மை உடையதாகவும், ஈரமாகாததாகவும், ஐஸ் போன்ற ஜில் என்ற குளிர்ச்சித் தன்மை உடையதாகவும் காணப்படுகிறது.
சித்தர்களால் 'வாம பூசை' , 'தேவி பூசை', 'கன்னி பூசை', என்றெல்லாம் கூறப்படும் பூசை யாவும் இப்படி அமுரியைப் பெறக்கூடிய வழிமுறையைப் பற்றியதே ஆகும்.
அமுரியைப் பெற்ற பிறகு அதைக் கற்பமாக தொடர்ந்து உடலில் ஓராண்டு சேர்க்க வேண்டும்.அதாவது காலை, மாலையில் கற்பமாக அமுரியை அருந்த வேண்டும்.இதுவே " அமுரி தாரணை" என்பது.இதனால் உடலில் காயசித்தித் தன்மை ஏற்படும்.
அமுரியை உடலில் சேர்க்கும் போது பத்தியம் உண்டு.அது ஒரு வேளை பால் சோறு மட்டும் உண்டு வருவதாகும். வேறு எதுவும் காயசித்திக்கு உதவாது.கற்பத்தை முறித்து விடும்.
இப்படி ஓராண்டு முதலாய் ,படிப்படியாய் அமுரி சேர்ந்த பல்வேறு கற்ப முறைகளை ஒருவர் முறையாக , தொடர்ந்து உட்கொண்டால் , பத்தாண்டுகளுக்குப் பிறகு அவர் செரூப சித்தி அடைய முடியும் என்பது சித்தர்களின் அனுபவ முடிவு.
அமுரி பற்றி மேலும் சில விவரங்கள்.
அமுரி என்பது #சிறுநீரல்ல
அமுரிக்கு பல பெயர்கள் உண்டு.சிவநீர்,சுத்தகங்கை,ஊசிநீர்,தேசிநீர்,உதகநீர்,உமிழ் நீர்,கடல் நீர்,காடிநீர்,சாகரநீர்,சந்திர புஷ்கரணி, ரோமநீர்,மதனப் பால் என்று ஏராளமான பெயர்கள் உள்ளன.இடத்திற்கு தக்கவாறு பெயர்களை வைத்துச் சித்தர்கள் நம்மை குழப்பி விட்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து இந்த அமுரியில் ஏழு விதமான நிறங்கள் தோன்றும், கையில் தொட்டாலும் ஒட்டாது. சிறுநீர் கையில் தொட்டால் ஒட்டாமல் இருக்குமா என்பதை ஆய்வாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
"நலம் பெற்ற அமுர்தத்தை காய்ச்சினாக்கால் உண்டான உப்புக்கு இந்நாமங்கள்" அகத்தியர் அந்தரங்க தீட்சா விதி.
இந்த இடத்தில் அமிர்தம் என்பது ஆதிப் பொருள். இதில் உப்பு கிடைக்கும். நாம் தயாரித்த அமுரியை காய்ச்சினால் உப்பு கிடைக்குமா என்பது ஆய்வுக்குரியது.
"விள்ளுகிறேன் ஆதியந்த அமிர்தத்துக்கு வெளியான மதனப்பால் என்றும் பேரு
வீரமுள்ள அலகை என்றும் பேரு" ஆதிப் பொருளுக்கும் , அமுரிக்கும் ஒரே பெயர் உள்ளது காண்க.
"என்றுமே அமுரியுண்டால் அனேக நோய்கள் என் மகனே புலத்தியனே வீரிட்டோடும்"
"கிடைத்தாலே மனதுதான் ஒருமை பண்ணி
கிருபையுடன் ஓராண்டு அமுரியுண்டு
உடலதுவும் புலத்தியனே வேறு கூறானால்
உண்மையுடன் தசதீட்சை முடியும் பாரு
சடமது சித்தியாம் யோகவானாம்"
ஒரு வருடம் சிறுநீரைக் குடித்தால் உடல் வேறு கூறாகுமா என்பதை சிந்திக்க வேண்டும்.
சித்தர்களின் கலைகளை அறிந்து கொள்ள நமக்கு அறிவும் போதாது பிறவியும் போதாது.
No photo description available.              No photo description available.

அகர ரகசியம். பகுதி -5
(விரிவானது)
வாலை பூசை தொடர்ச்சி.....
இப்படி அமுரி தாரணை செய்யும் போது இரணடு அல்லது மூன்று ஆண்டுக்குள் உடலின் கர்ம வினைகள் யாவும் வெளிப்படத் துவங்கும். அது மிகவும் கொடுமையானதாகவே இருக்கும். அப்படிப்பட்ட துன்பங்களைக் கடந்த பிறகு, அவரது உடலில் முடி கொட்டி , நகம் விழுந்து , உடலின் தோல் கழன்று விழும்.அதன் பிறகு உடலின் நிறமே மாறிப் போகும்.
இதற்குப் பிறகு புதிய முடியும்,நகமும் முளைக்கும்.இப்படி புதிய உடலைப் பெற்றவர் தொடர்ந்து அமுரியை உட்கொள்ளும்போது , பத்தாண்டுகளில் சொரூப சித்தி அடைவார்.
அப்படி சொரூப சித்தி அடைந்தவரது உடலில் இருந்து நிழல் கீழே விழாது.இதுவே சொரூப சித்திக்கு அடையாளம் ஆகும்.
சாதாரணமாக நம்முடைய தூல உடலில் ஔி பட்டு திரும்ப பிரதி பலிக்கும்.அதனால் ஔியின் போக்கில் தடை ஏற்பட ,மறுபுறம் நமது நிழல் விழும்.நம்முடைய தூல உடல் கற்ப சாதனையால் ஔியுடலாய் மாறிய பிறகு , ஔியானது சூக்கும மாறுதல் பெற்ற உடலில் ஊடுருவி வெளியே வந்து விடும்.இதனால் மறுபுறம் நிழல் விழாது.இதுவே உண்மை சித்தர் நிலையை அடைந்தவர்களது சொரூப இலக்கணம் ஆகும்.
இப்படி சொரூப சித்தியை தரக்கூடிய அமுரியைப் பற்றி, பல சித்தர்களும் பரிபாசையில் சுமார் முன்றூற்று ஐம்பது பெயர்களுக்கும் மேலாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவே அமுரியை அடையும் செய்முறையை, ஒரு குருவின் கூட இருந்து தெரிந்து கொண்டலன்றி , அவர் அதைத் தொட்டுக் காட்டினாலன்றி நாமாகவே தெளிவாய் உண்மையை அறிவது மிகவும் சிரமமாகும்.
அமுரிக்கு உலோகங்களின் குற்றத்தை ((களிம்பு))நீக்கும் தன்மை உண்டு. அது பேலவே உடலின் குறைகளையும் நீக்கி சுத்தமாக்குகிறது.
அமுரியை கற்பமாகக் கொள்ளும்போது உடலை அமலமாக மாற்றுவதற்காக , முதலில் உடலிலுள்ள குறைகளைப் போக்கி ,உடலின் தோலையே நீக்கி புதியதோலைஉருவாக்கும்.அதுமட்டுமல்ல , குறிப்பிட்ட கால அளவில், நமது உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வெளியேறி , உடல் சுத்தியாகி புதிய இரத்தமும் உருவாகும்.
கற்பம் உட்கொள்ளும் பொழுது ஏற்படும் வேதனைகள் அதிகம் என்பதால் ,பெரும்பாலானோர் அதைப் பற்றி அறிந்த பிறகும் கூட ,அதைக் கொண்டு கற்பசாதனை செய்யத் தயங்குவர்.அமுரி தாரணை உயிர் அனுபவித்துத் தீர்க்க வேண்டிய முழு அனுபவங்களையும் உடனடியாகச் செயலுக்குக் கொண்டு வருவதால் ,இவ்வித வேதனை கற்பம் உட்கொள்ளும் போது உடல் அளவில் ஏற்படவே செய்யும்.
இப்படிப்பட்ட வேதனைகளை இது தமது பிறவிக்குரிய கர்மவினை என்பதை ஏற்று , அனுபவித்துத் தீர்க்கும் மனவலிமை இருந்தால் மட்டுமே கற்ப சாதனையில் ஒருவர் வெற்றி பெற முடியும்.
இதனாலேயே கற்ப சாதனைக்கு "குருவருளும்-இறைவன் திருவருளும்" மிகமிக அவசியமாகிறது.அப்போது தான் சொரூப சித்தி என்கிற நிலையை அடைந்து சித்தராக முடியும்.
சித்தர்கள் என்பவர்கள் இறந்து போனவர்கள் அல்லர்.இன்றும் கூட நம்மோடு கலந்தே வாழ்ந்து வருபவர்கள்ஆகும்.

நமது மெய்ப் பொருள் ஆய்வில் மருந்துகள் தயாரிக்கும் போது முதலில் நமக்கு கிடைக்கும் பூநீர் குணப்படுத்தும் நோய்கள் மற்றும் இரண்டாவதாக கிடைக்கும் பச்சை சிங்கம் என்ற முதல் பாதரசம் குணமாக்கும் நோய்கள் பற்றிய விவரங்களை "புனிதமான இயற்கை அற்புதங்களின் தங்கப் பெட்டகம்" என்ற நூலில் குறிப்பிடப்பட்ட விவரங்களை ஒன்று திரட்டி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.
மேலும் அமுரி என்ற இரண்டாவது பாதரசம் பற்றிய விவரங்கள் மற்றும் இலட்சனங்கள் பற்றியும் அகர ரகசியம் பகுதி நான்கில் கூறிஇருக்கிறேன்.இங்கு அமுரி குணமாக்கும் நோய்கள் பற்றிய விவரங்களை பெனிடிக்டஸ் பிகுலஸ் அவர்களின் நூலில் இருந்து காணலாம்.
"அம் மருந்து தன் மூன்றாவது தயாரிப்பில் ஆவியாகக் கூடிய மிகவும் லேசான பொருளாகவும், எண்ணெய் வடிவம் கொண்டதாகவும், தன்னகத்தே இருந்த குறைபாடுகள் ஓரளவிற்கு நீங்கப் பெற்றதாகவும் , இந்த தயாரிப்பு நிலையில் அது தன் செயல் பாட்டில் அநேக அற்புதங்களை நிகழ்த்தப் போவதாகவும் அமைகிறது.மனித உடலுக்கு அது அழகையும், வலிமையையும் தருகிறது.உணவுடன் மிகச் சிறிய அளவு அதை சேர்த்து அருந்தினால் கல்லீரலில் ஏற்படும் மெலாங்கலி என்ற ரத்த உறைவு நோயை குணமாக்குகிறது. பித்தப்பையின் உஷ்ணத்தை குறைக்கிறது.உடலில் உள்ள ரத்தத்தின் அளவையும், இரத்த செல்களின் அளவையும் உயர்த்துகிறது.
எனவே உடலில் இருந்து இரத்தத்தில் உள்ள வேண்டாத, தேவைக்கு அதிகமான ரத்தத்தை வெளியேற்ற வேண்டியது அவசியமாகிறது. இம்மருந்து இரத்த நாளங்களை விரிவடையச் செய்து செயல் இழந்து போன மூட்டுக்களைக் குணமாக்குகிறது.
பார்வைக் குறைபாட்டை நீக்கி, கண்ணுக்கு மீண்டும் வலிமையைத் தருகிறது.
வளர்ந்து வரும் குழந்தைகளின் உடலில் உள்ள அவசியமற்றவைகளை நீக்குகிறது. மூட்டுப் பகுதிகளில் உள்ள குறைபாடுகளை சிறப்பாகப் போக்குகிறது.
மேலும் கருணாகர சாமிகள் தனது 'அ'கர ஆய்வு நூலில்
"சடம் தோலில் நரம்பெலும்பில் வரும் நோய்க்கு ரசம் தீர்க்கு மென்றாரே"
என்று அமுரி தீர்க்கும் நோய்கள் பற்றியும் விளக்கி உள்ளார்.
அடுத்த பதிவில் மேலும் அமுரி பற்றிய பல ரகசியங்களை எழுத உள்ளேன்.

முப்பு என்றால் என்ன? மற்றும் மெய்பொருள் விளக்கம்!
முப்பு என்பது முக்குற்றமான வாதம், பித்தம் மற்றும் சிலேத்துமம் என்பனவற்றை ஒழுங்கு படுத்தி இம்மை எனும் நிகழ்கால வாழ்க்கையை செம்மைப்படுத்தி, ஆரிருள் எனும் காமம், கோபம்,
குரோதம், லோபம், மத மற்றும் மாச்சர்யம் என்பனவற்றை அகற்றி, மும்மலங்களான ஆனவம் , கன்மம் மற்றும் மாயை என்பனவற்றை போக்கி, மறுமையான ஆதி அந்த அந்தர்யாமியான பரம்பொருளை அடையவைக்கும் இறைவடிவமாகும். முப்பு என்பது இறைவனே சந்தேகம் வேண்டாம். இந்த இரகசியத்தை நமது தென்னாட்டில் வாழ்ந்த சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் மகான்கள் அறிந்து அவரவர் வழிகளில் நமக்கு விட்டுவைத்து சென்றிருக்கிறார்கள்.
உதரணமாக,
மணிவாசக பெருமான் கீழ்கண்டவாறு முப்பின் ரகசியத்தை சொல்கிறார்.
சிவன் அவன் என் சிந்தையுள்
நின்ற அதனால் அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி
அடுத்து,
திருவள்ளுவ பெருமான் தனது முதல் குறளிலேய அகார ("அ"), உகார ( "உ" ) இரகசியத்தை நமக்கு கூறுகிறார். இந்த மெய்பொருள் விளக்கம் சித்தர்கள்(திருவள்ளுவரும் சித்தர்களுள் மிகவும் முக்கியமானவர்) அருள் இல்லாமல் யாருக்கும் புரியாது, அதனால் தன நமது தமிழ் புலவர்கள் கூட மெய்பொருள் விளக்கம் புரியாமல் ஏதேதோ அர்த்தங்கள் புரிந்துகொண்டு விளக்கம் கூறிவருகிறார்கள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு
சித்தர்கள் அருளால் யாம் உணர்ந்த விளக்கத்தை கீழே குறிபிடுகிறேன்:
அகார ("அ"), உகார ( "உ" ) மற்றும் மகாரம்("ம ") என்பதே அகர முதலான எழுத்தாகும் இம்மூன்றே முப்புவகும் இம்முப்பே அதி மெய்ப்பொருளான இறைவனாகும்.
நிச்சயமாக புள்ளியோ, பிறையோ, கோடோ "அ" முதல் ஆரம்பிக்கும் உயிரெழுதுக்களோ அல்லது வேறு ஏதாவதோ அர்த்தம் கொண்டால் எம்மாலோ அல்லது வள்ளுவ பெருந்தகையலோ எதுவும் செய்யமுடியாது.
முதல் குறளே இந்த போடு போடும் போது மீதம் உள்ள குறள் இரகசியங்களை என்னவென்று சொல்லுவது.
அடுத்து,
ஒளவையார் பிராட்டியும் கூட முப்பு பற்றி பாடாமல் இல்லை அவர் பாடிய மூதுரையின் கடவுள் வாழ்த்தே முப்பின் இரகசியமாகும் அருள்பெற்றோருக்கு புரியும்.
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு."
இணையத்திலிருந்து......முப்பூ என்பது மூன்று உப்புக்கள் சேர்ந்த கலவை என்பதை எல்லா ஆய்வாளர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் அவை எந்த மூன்று உப்புக்களின் கலவை என்பதில்தான் கருத்து வேறுபாடுகள் மற்றும் குழப்பங்கள்.
கறியுப்பு , வெடியுப்பு, இந்துப்பு என்கிற மூன்றின் கலவை தான் முப்பூ என்கின்றனர் ஒரு சாரார்.
இல்லவே இல்லை! பூநீர், இந்துப்பு, வெடியுப்பு இவற்றின் கலவையே முப்பூ, இது ஒரு பிரிவினர்..
நீர், நெருப்பு , காற்று இந்த மூன்று பூதங்களின் கூட்டே முப்பூ என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
ஆக முப்பூ வில் சேர்க்கப் பட்டிருக்கும் மூன்று பொருட்கள் இன்னதென அறுதியிட்டு கூறுவதில் நிறையவே குழப்பங்கள் இருக்கின்றது.
இவை பெரும்பாலும் மறைமொழியில் சொல்லப் பட்டிருப்பதால் ஆய்வாளர்கள் ஆளுக்கொரு கருத்தினை முன் வைக்க நேரிடுகிறது.
எனது ஆர்கானா கட்டுரையில் இது பற்றி நான் தெளிவாகவும், வெளிப்படையாகவும் எழுதியிருக்கிறேன்.
முப்பூவின் உண்மையான மூலப் பொருள் இதுதான் என்பதை வெளிப்படையாக சித்தர் நூல்களில் கூறப்பட்டிருந்தாலும் குருவருள் சித்திக்கப் பெற்றவர்களுக்கு மட்டுமே இவற்றை அறியும் ஞானம் கிடைக்கும் என்கின்றனர்.
மேற்படி விவரங்கள் அனைத்தும் எனது அகர ரகசியம் கட்டுரையில் வெளிப்படையாக உள்ளது. காண்க.
அகர ரகசியம் பகுதி -6 விரிவானது
சாகாக்கலை
உயிர் எப்படிப்பட்டது?இறப்பிற்குப் பிறகு உயிர் என்னவாகிறது?அது எங்கே செல்கிறது?இறப்பிற்குப் பிறகு உயிர் இருக்கிறதா? இல்லை அழிந்து விடுகிறதா?இப்படிப் பல கேள்விகள் எப்போதும் இருந்து வருகின்றன.
நமக்கு ஏற்படும் பிறப்பு மூலமாக உயிர் இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொள்ள முடிகிறது.அது போன்று இறப்பிற்குப் பிறகு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்வது அவ்வளவு எளிதல்ல.!
இறப்பிற்குப் பிறகு உயிர் என்னவாகிறது? இந்தக் கேள்விதான் பலரையும், உயிரைப் பற்றிய ஆய்வில் இறங்கத் தூண்டுகிறது.அப்படி உயிரைப் பற்றிய தேடலில் இறங்கியவர்கள் பலர். அவர்களது அனுபவங்கள் பலவிதமான முடிவுகளை வெளிப்படுத்தி இருக்கிறது. இதிலே ஞானிகளும்,சித்தர்களும் அடைந்த தெளிவு மிகவும் அற்புதமானது.
உயிர் இறப்பிற்குப் பின்னும் இருப்பதை ஞானியர் தங்களது சமாதி அனுபவத்தால் உறுதி செய்தனர்.சித்தர்கள் உயிர் திரும்பவும் இந்த பரிமாணத்தில் பிறக்காமல் ,வேறு வித உயர் நிலையை அடையும் முறையைக் கண்டறிந்தனர்.
அவர்கள் கண்டறிந்த வழி முறையே 'சாகாக் கலை' என்பது. உடலுடன் கூடிய முக்தி அடைவதைப் பற்றிய அனுபவம் பெற்றவர்கள் சித்தர்கள்.உடலைத் தவிர்த்த பிறகு உயிர் முக்தி அடைவது இயலாது, திரும்பவும் பிறப்பை அடையவே செய்யும் என்றும் , இதனைத் தவிர்க்க இயலாது என்பதும் அவர்களது அனுபவ முடிவாகும்.
சித்தர்கள் இப்படிப்பட்ட முடிவுக்கு வர ஒரு விபரம் விளக்கப்படுகிறது.பிறந்தவர் எப்படி இறப்பது உறுதியோ, அது போலவே இறந்தவரும் பிறப்பது உறுதி என்பது அவர்களது தெளிவாகும்.
உடலுடன் வழக்கமான மரணம் அடையாமல் , உடலோடு சேர்ந்து அப்படியே ஔியில் கலந்து முக்தி பெறுவது என்பது அவர்களது வழிமுறையாகும்.
ஆன்மீகத்தில் இப்படிப்பட்ட ஔியுடன் இணைந்து உடலோடு கூடிய முக்தி பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட முக்தியையே சித்தர்கள் உண்மை முக்தி என்பதாய் ஏற்கிறார்கள்.பிறவற்றை அவர்கள் முக்தியாய் ஏற்பது இல்லை.
அதுமட்டும் அல்ல.அப்படி முக்தி பெற்ற தங்களைத் தொடர்பு கொள்ளவும் முடியும் என்று கூறி அதற்குரிய வழி முறைகளையும் அவர்கள் விவரிக்கிறார்கள்.இதிலே ஒவ்வொரு சித்தரும் வெவ்வேறு விதமான தனிப்பட்ட வழிமுறைகளையே கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் சித்தர்களோடு பெறமுடியும் தொடர்புகள் அவர்கள் இருப்பதை , அதாவது உடலுடன் முக்தி பெற்றது உண்மையே என்பதை உறுதி செய்வதாக அமைகிறது.
இப்படிப்பட்ட முக்தியை ஒருவர் அடையவே கற்ப சாதனையை ஒரு வழிமுறையாக சித்தர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இப்போதும் கூட அந்த முறை நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
'அகரம்' என்பது பற்றிய தீட்சையை ஒரு குரு நேர்முகமாக சீடருக்குத் தொட்டுக் காட்டித் தர அவர்கள் பயன் படுத்தும் காலம் சித்திரைப் பௌர்ணமி ஆகும்.
பெரும்பாலும் அகரம் காட்டித் தரப்பட்ட பிறகே , பிற வழி முறைகள் பற்றி ஒவ்வொன்றாக கூறுவார்கள்.இதில் அகரத்தில் இருந்து பெறும் அமிர்தமான அமுரியை வைத்தே எல்லாவித சாதனைகளும் சாத்தியமாகும்.
அமுரியை அறியவில்லை என்றால் ,சித்தர்கள் விவரிக்கும் மருந்துகளைச் சரியாக முடிக்க முடியாது.முக்கியமாக அவர்கள் விவரிக்கும் முக்தி நிலையைப் பெறுவதோ முடியவே முடியாது.
"கற்பம்" உடலுக்கு வலிமையை மட்டும் தருவதல்ல.உடலையே முழுவதுமாக மாற்றி விடுவது. இப்படிப்பட்ட அற்புதமான அமுரியை போன்ற ஒன்றை உயிர் தனது உடலை உருவாக்கும் சமயத்தில் , உருவாக்கிப் பயன்படுத்துகிறது.கருவறையில் உருவாகும் நீர்,உயிரால் உருவாக்கப்படும் உடலை, எவ்விதக் கேடும் ஏற்படாதபடி ,மிக அருமையாகப் பாதுகாத்து உதவுகிறது.
அதற்குள்ளே மிதக்கும் கரு அந்த நீரால் ஒருபோதும் பாதிப்படைவதில்லை.மாறாக அதிலே அது மிதந்தபடியே தனது உடலின் முழு வளர்ச்சியையும் பெறுகிறது.
இப்படிக் கருவுரும் சமயத்தில் உருவாகிப் பயன்படும் நீரைக் கூடச் சிலர் கற் முறைக்குப் பயன்படுத்த முயற்சி செய்து மாறுபாடான பலனை அடைகின்றனர்.
இது போன்றே அண்டக்கல் என்ற ஆதிப்பொருளில் பலநூறு வகைகள் இருப்பதாகவும்,பதினெட்டு வகைகள் இருப்பதாகவும் பலர் தப்பெண்ணம் கொண்டு , பெரும் பொருள் செலவு செய்து அவற்றை தேடி அலைந்து வருகின்றனர்.இது மிகவும் வருந்தத் தக்க செயலாக உள்ளது.
உண்மையில் அண்டக்கல் என்னும் சொல் எந்த ஒரு கல் வகையையும் குறிப்பதல்ல.மாறாக அது ஒரு வகை உப்பை குறிக்க சித்தர்களால் பரிபாசையாக கூறப்படும் வார்த்தையே ஆகும்.
இந்த அண்டக்கல் எனப்படும் மெய்ப்பொருளானது உலகில் பல வகையாக உள்ளது என்று பலராலும் எண்ணப்பட்டாலும், அதை தவறான கருத்து என கூறுவது மிகையல்ல. மெய்ப்பொருள் என்பது ஒன்றே.ஒன்று மட்டுமே.அந்த ஒரு பொருளே தரத்தில் உயர்ந்தும், தாழ்ந்தும் பல வகையாக மாறுபட்டும் காணப்படுகிறது.
மேற்படி கருக்குட நீரை பயன்படுத்துபவர்கள் ஓர் உண்மையை அறியவில்லை.
கருவிலே உருவாகும் நீர் , உடல் உருவாகப் பயன்படுமே அன்றி உயிரோடு உடலை அழியாத நிலையில் இணைப்பதற்குப் பயன்படுவது அல்ல!
அமுரியை ஒருவர் பட்டுப்போன செடிக்கு ஊற்றினால் அது திரும்பவும் உயிர் பெற்று வளருவதை கண்கூடாகக் கண்டுஅறிய முடியும். நமது சிறுநீரை ஊற்றினால் நன்கு வளர்ச்சி அடைந்திருக்கும் தாவரமும் காய்ந்து போய்விடும் என்பது அனைவரும் அறிந்ததே.சித்தர்கள் கூறும் இந்த அமுரியை மனித மூத்திரம் தான் என்பவர்கள் இதனை சிந்தித்து உண்மையை உணர வேண்டும்.
'அகரம்' என்பதில்'அரூப நிலைக்கு உரிய' பொருளும் , வடிவ உலகுக்கு உரிய பொருளாகிய நீரும் சேர்ந்து,நெருப்பால் இணைக்கப்பட்டுள்ளது.
இவற்றைப் பிரிக்க முயலும் முயற்சியில் முதலில் வெளிவருவது சுத்தகங்கை எனப்படும் அமுரியாகும்.அதன் பிறகு இந்த அமுரியைக் கொண்டு அகரம் சுத்தி செய்யப்படும்.பிற வழி முறைகளுக்கும் அமுரியே பயன்படும்.
அமுரியைப் பெறுவது , அது எதுவென்று அறிந்தவர்களுக்கே எளிதானது ஆகும்.அப்படி அல்லாமல் அதற்குப் பதிலாக வேறு பலவற்றைப் பயன்படுத்துவது என்பது அவர்களால் அமுரியைப் பற்றிய தீட்சையை சித்தர்களிடமிருந்தோ , நூல்களின் வாயிலாகவோ பெற இயலவில்லை என்பதையே காட்டிக் கொடுக்கிறது.
அமுரியால் முடிக்கப்படும் மருந்துகளில் உயிர்ப் பொருள் அழியாமல் காக்கப்படும் என்பதால் அவற்றை நோய்களுக்கு மிகக் குறைந்த அளவே சித்தர்கள் பிரயோகம் செய்வர்.
அந்த பிரயோகமும் நேரடியாக இல்லாமல் அமுரி உப்பை அமுரி விட்டு ஒரு சாமம் அரைத்து வில்லை செய்து உலர்த்திப் புடமிட்டு சுண்ணம் செய்து அதனை மருந்தில் கலந்தே சித்தர்கள் உபயோகிப்பர்.
இந்த சுண்ணத்தை மீண்டும் அமுரி விட்டு அரைத்து உலர்த்தி பஞ்ச சுண்ண குகையிலிட்டு புடமிட்டு எடுக்க வேண்டும்.இவ்வாறு ஐந்து புடமிட கடுங்கார சுண்ணமாகும். இந்த சுண்ணத்தை கையில் தொட்டாலோ, வாயிலிட்டு சுவைத்தாலோ எரிச்சல் வராது.புண்ணாகாது.மாறாக குளிர்ச்சியாக ஜில் என்று குளுக்கோஸ் போன்று தான் இருக்கும். கடுங்காரம் என்பது வெளிப்பட்டுத் தோன்றாமல் மறைந்தே இருக்கும். இதுவே முப்பு சுண்ணத்தின் சிறப்பும், அடையாளமும் ஆகும். இதனால் தான் சித்தர்களும்
"சவுக்கார வைப்பும் சார நீர் வைப்பும் சிவக்காது மஞ்சளில் சென்றாலுமய்யா" என கூறி உள்ளனர். மேலும் அகத்தியர் கூறும் போது "மஞ்சளுக்கு சிவக்கின்ற மார்க்கமில்லை" என்றும் கூறி அருளி உள்ளார்.
முப்பு சுண்ணம் முடித்து விட்டேன். வேதை செய்து விட்டேன் என்று கூறிக்கொள்ளும் ஆய்வாளர்கள் இந்த உண்மையை கவனத்தில் வைத்தல் நலம்.
முப்பு சுண்ணம் என்றும், அண்டக்கல் சுண்ணம் என்றும், வழலைச் சுண்ணம் என்றும், சத்தி முப்புச் சுண்ணம், சிவமுப்புச் சுண்ணம் என்றும் சித்தர்களால் கூறப்படும் பல்வேறு பெயர்களில் கூறப்படும் சுண்ணங்கள் அனைத்தும் அமுரி எனப்படும் ரச நீராலோ, அல்லது கந்தக நீராலோ அரைக்கப்பட்டு சுண்ணமாக்கப்படுபவை தான்.இவைகளுக்கு அடிப்படையான பொருள் ஒரே ஒரு பொருள் மட்டும் தான். அது ஓம் என்றும்,அல்லாகூ அக்பர் என்றும், பிதா சுதன் பரிசுத்த ஆவி என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.பெயர்கள் வேறு வேறு ஆனாலும் அவை குறிக்கும் பொருள் ஒன்று தான்.பாசை வேறு அர்த்தம் ஒன்று.இந்த உண்மை உணர்ந்தால் மத துவேசம் நீங்கி விடும்.அனைத்து மதங்களும் பிரணவம் என்ற ஓங்காரத்தையே அடிப்படையாகக் கொண்டு உள்ளது. ஓங்கார பொருளை பயன்படுத்தி பெருநிலை அடைந்த சித்தர் பெரு மக்கள் தம் மக்கள் அனைவரும் தாம் அடைந்த நிலையை பெற வேண்டும் என்ற பெருங்கருணையால் அந்தந்த நாட்டில் வாழ்ந்த மக்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப சில விவரங்களை இலைமறை காயாக மக்களுக்கு சொல்லி வந்தனர். இ்ந்த விவரங்களே பிற்காலத்தில் நடைமுறைப் பழக்கமாகவும் , தனி ஒரு வழிமுறையாகவும் சமுதாயத்தில் இடம் பிடித்தது.இதனையே பிறகு மதம் என்றும், மார்க்கம் என்றும் கூறுவாராயினர்.

No photo description available.Image may contain: one or more people and jewellery
No photo description available.




அகர ரகசியம் பகுதி--7 (விரிவானது)
ஆர்கானம் என்பது என்ன?
ஆர்கானம் என்பது ரகசியப் பொருள் என பொருள்படும்.இந்த உலக மக்களிடமிருந்து நான்குபொருள்கள் சித்தர்களால் மறைக்கப்பட்டுள்ளது.
அந்த நான்கு பொருள்கள் முறையே
1.ஓம் என்னும் பிரணவம்.
2.அகரம்.
3.உகரம்.
4.மகரம்(அகர,உகரம் இணைந்தது.)
இப்படி நான்கு வகை ஆர்கானம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.முதல் ஆர்கானம் பிரைமா மெட்டீரியா ஓம் எனவும்,இரண்டாவது ஆர்கானம் ஞானிகளின் கல்(philosopher's stone) உகரம் எனவும்,மூன்றாவது ஆர்கானம் அமுரி அல்லது சார நீர்,அகரம் எனவும்,(mercury of life) நான்காவது ஆர்கானம் டிங்க்சர் (Tincture) மகரம் எனவும் வழங்கப்படும்.
இவற்றில் இரண்டாவது ஆர்கானத்தில் ஞானிக் கல் அல்லது அண்டக்கல் எனப்படும் உகர உப்பில் மூன்று வகைகள் உள்ளன.அவை முறையே,
1.முதல் பூனீர் உப்பு
2.கல்லுப்பு
3.வீரம் எனும் சிவப்பு உப்பு.என வழங்கப்படும்.
அடுத்து மூன்றாவது ஆர்கானத்தில் அமுரி அல்லது சார நீர் எனும் அகரமாகிய பாதரசத்தில் மூன்று வகைகள் உள்ளன.அவை முறையே,
1.சுத்தஜலம் எனும் பச்சை சிங்கம் அல்லது பனிநீர்
2.விந்து நீர் எனும் ஞானிகளின் பாதரசம், வெண்மையான திரவம்.
3.சிவப்பு பாதரசம் எனும் நாதம்.
இறுதியாக மகரம் எனும் நான்காவது ஆர்கானம் அகரமாகிய ரசமும், உகரமாகிய உப்பும் (கெந்தி) இணைந்து கிடைப்பதாகும். இவ்வாறு நமக்கு நான்கு ஆர்கானங்கள் கிடைக்கின்றன.இதில் நான்காவது ஆர்கானம் பத்மினி என்றும்,மூன்றாவது ஆர்கானம் சித்தினி என்றும்,இரண்டாவது ஆர்கானம் சங்கினி என்றும்,முதல் ஆர்கானத்தை அத்தினி என்றும் சித்தர்கள் குறிப்பிடுவர்.இதில் முதல் ஆர்கானம் நாம் எதிர்பார்க்கும் அனைத்து வேலைகளையும் செய்யாது.ஆதலால் தான் விளையாட்டுச் சித்தர் கூறும் போது,
"நாலாஞ் சாதி ஆகாது
நமக்குப் பருப்பு வேகாது" என்றும் கூறி இருக்கிறார்.(ஆர்கானத்தில் முதல் என்றாலும் தமிழ்ச் சித்தர்கள் வகுத்த சாதியில் நான்காவது ஆகும்)
மேற்படி மூன்று ஆர்கானங்களை அடிப்படையாகக் கொண்டு(முதல் ஆர்கானம் தவிர்த்து) நாம் மேலும் பல குரு மருந்துகளைச் செய்யலாம். முப்பு என்பது மூன்று உப்புக்கள் சேர்ந்தது எனப் பொருள்படும்.அவை இரண்டாவது ஆர்கானத்தில் கூறப்பட்ட உப்புக்களே ஆகும்.இவற்றை மேற்படி ரச நீரில் அரைத்துப் புடமிட்டுச் சுண்ணமாக்கினால் அது முப்புச் சுண்ணம் எனப் பெயர் பெறும்.முப்பு என்றால் குருமருந்து என்றும் பொருள்படும். இதனை சுண்ணமாகவும்,பற்பமாகவும்,செந்தூரமாகவும்,மெழுகாகவும் பல விதங்களில் நாம் தயாரிக்கலாம்.இவ் வழியில் நாம் ஆயிரக்கணக்கான குரு மருந்துகளைத் தயாரிக்க இயலும்.இம் மருந்துகள் நமது வாழ்வில் பல விதங்களில் உயர்ந்த முடிவைத் தரவல்லது.இவைகளை நமது விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.இக் கலை முடிவு இல்லாதது.ஒரே முடிவைத் தரும் கலையாக இதை நாம் பார்க்க இயலாது.இதை எதற்காக உங்களுக்கு எழுதுகிறேன் என்றால்,என் அன்புக்குரியவராக நீங்கள் இருப்பதால் தான் எழுதலானேன்.
இப் புனிதமான இயற்கை ரகசியக்கலையில் உங்களையும் ஈடுபடுத்தத் தான் இதை உங்களுக்கு எழுதுகிறேன்.
முதல் ஆர்கானம்: ஓம் எனும் பிரணவம்.
இந்த ஆர்கானம் அழிவு உள்ளதாகவும்,நிலையற்றதாகவும் உள்ளது.இயற்கை எவ்வாறு முதலில் உருவானதோ ,அவ்வாறே அதற்கு ஒப்ப இந்த ஆர்கானம் உருவாகிறது.இது ஒப்புயர்வற்ற வானிலிருந்து பெறப்பட்ட ஓர் உன்னதமான சக்தி வாய்ந்த பொருள்.இது ஆண்டவனின் அதி அற்புத சக்தி அனைத்தையும் கொண்ட திரவ வடிவத்தை உடையது.ஒரு வித்து ,எப்படி அதனுள் உள்ள எல்லாச் சக்திகளையும் புதுப்பித்து,புத்துயிர் அளித்து ஒரு செடியை உற்பத்தி செய்கிறதோ, அதைப் போலவே "பிரைமா மெட்டீரியா" செயல் புரிகிறது. இது ஆணுமல்ல,பெண்ணுமல்ல.அலிப்பொருள் எனும் ஆணும்பெண்ணும் கலந்தது.
இந்த அலிப்பொருளே நமது உடலை அழியா நிலைக்கு உயர்த்தும் உன்னதப் பொருள்.இது வித்தின்றி விளையும் ஒரு விதைப் பொருள்.உலகத்தில் உள்ள அனைத்துப் பொருளையும் உருவாக்கும் ஒரு சிறந்த விதை.ஆகவே இதனை சிம்ஹபீஜம் எனலாம்.இந்தப் பொருள் எங்கே கிடைக்கும் ? பூமியிலா? வானத்திலா? எனில் இரண்டும் இல்லை.இரண்டுக்கும் இடையில் காற்று வெளியில் உள்ளது.ஆகவே இதனை இடைப்பொருளில் தேடுங்கள்.இப்பொருள் அனைத்து உயிர் வகைகளின் தோற்றத்துக்கும் ஆதியாய் அமைந்த பொருள்.அதனால் இதனை இறைப்பொருள் என சித்தர்கள் பெயரிட்டுள்ளனர். இப்பொருள் ஆலகாலம் போன்ற விஷத்தோடு வழக்கில் உள்ள பொருளாக இருந்து வருகிறது.
இதன் விஷத்தை நீக்கி பயன்படுத்தாத காரணத்தினாலேயே
நமக்கு நரை,திரை, பிணி, மூப்பு, சாக்காடு ஆகியன ஏற்படுகிறது.இது குழந்தைகளின் விளையாட்டில் காணக்கூடிய எளிய பொருள்.ஆயினும் இது பணியாளர்கள் கூட்டி எறியும், ஒரு வெருக்கத்தக்க பொருள்.
இந்த மெய்ப்பொருள் ஒன்பத்தைந்து பாகை தலை நிமிர்ந்து , மண்மீது மதிப்பாரற்றுக் கிடக்கிறது.ஆண்களைவிட பெண்களுக்கு அதிகத் தொடர்பு இப் பொருளுடன்.இப்பொருள் பணக்காரர்களுக்கு மட்டும் அல்ல,ஏழை எளியவர்களும் எளிதில் வேறுபாடின்றி அணுகத்தக்க நிலையிலேயே இறைவனால் படைக்கப்பட்டுள்ளது.இது செத்தாலும் பிழைக்கும்.ஆகவே செத்தாரையும் பிழைக்க வைக்கும். தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டே ஊரைச் சுற்றும் உன்னதப்பொருள்.
நமது இந்தப் பொருளானது ஒன்று,இரண்டு, மூன்று,நான்கு ,மற்றும் ஐந்து பொருள்களால் ஆக்கப்பட்டதாகும்.ஐந்து என்பது அதனுடைய சொந்த கருப்பொருளாகிய விதை ஆகும். நான்கு என்பது நான்கு பூதங்கள் என அறியவும்.மூன்று என்பது எல்லாப் பொருள்களின் மூன்று அடிப்படையன ரச,கந்தி,உப்பாகும்.இரண்டு என்பது ரசப்பொருள்கள் இரு மடிப்பாக உள்ளன என்பதாகும்.ஒன்று என்பது ஒவ்வொரு பொருளும் எந்த சாரத்திலிருந்து வந்ததோ அதைக் குறிக்கும்.
இது அனைவருக்கும் தெரிந்த பொருள் தான்.ஆனால் இது தான் என அறிந்து கொள்வது மிகவும் கடினமானது.காரணம் என்னவெனில் அதை அவர்கள் சிரத்தையாக தேடாததே ஆகும்.விதி உள்ளவன் அல்லது தெய்வீக மனிதன் அதைப் பெற்றுக் கொள்கிறான்.முட்டாள்கள் அதைத் தூர வீசி எறிந்து விடுகிறார்கள்.
கருணாகர சாமிகளும்,
'துப்பறிய வெகு சுலபம் அறிவுல்லோர்க்கு' என்றும்,
'உலகிலே இது தெரியா மனிதரில்லை' என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் அகத்தியர் கூறும் போது,
"முப்பான முப்பூவும் ஆதியிலே குருவாய்
முடிந்திருக்கு என்றறியார் மூடர்தானே"
"முப்பூ முடித்து வைத்திருக்குதடா அதை
வைப்பு வைத்து திருத்தும் வழிதேடடா"
-என்றும் அமுதகலை ஞானம்-1200 ல் கூறுகிறார்.
-ஆகவே மெய்ப்பொருளானது ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டுள்ளது.
"பெட்டியதில் உலவாத பெரும் பொருள் ஒன்றுண்டு" என்பதற் கினங்க அம் மெய்ப்பொருள் ஒரு பெட்டியினுள் இறுக மூடப்பட்டு உலகோர் அறியா வண்ணம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அது பளபளப்புடன் ஔி வீசத்தக்க நிறம் உடையதாய் உள்ளது.
"இறைவனின் பொக்கிஷம் மறைபொருளாய்
வைத்திருந்தும் குழந்தை எடுத்தாடுவதேன்"
"குழந்தையுள்ளம் படைத்த இறை குழந்தைகட்கே சொந்தமதாம்"
மழலைச் சொல் குழந்தைகட்கே அக்பரது பொக்கிடமாம்"
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திருக்கும்"
"ஏட்டுச் சுரக்காய் என இங்கெடுத்து யாம் கூறோம்
கூட்டுக் கறிக்காகுமிதால் குடும்பம் எல்லாம் பிழைத்திடுமே".
எனவும் கருணாகர சாமிகள் கூறுகிறார்.
"மூலமென்றவழலையதுமுப்பூவாச்சு
மூதண்டக் கருவதுவும் முடிந்த மூலி
காலனென்ற காலனுக்கு மாதிமூலி
கண்டவர்க்கு மெளிதான கமலமூலி
பாலென்றால் பால் சொறியும் பஞ்சமூலி
பரித்தெவரும் பொசிக்கின்ற பச்சை மூலி
ஞாலமிசை மெத்தவுண்டு நடனமூலி
நவின்றிட்டால் வெளியாகும் நயந்து பாரே"
-நந்தீசர்.
"பஞ்சபூதம் ஒன்று கூடில் பளிங்கு போல் அதீதமாம்"
-திருவள்ளுவர்.
"தானான ஆதார ஜோதி போல
சங்கையுடன் தோணுமடா அங்கே பாரு
வானான அண்டமதின் நடுவே பார்த்தால்
வகையாகத் தோணுமடா பஞ்சரூபம்"
-அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி.
-எனவும் சித்தர்கள் அம்மெய்ப்பொருளை வெட்டவளிச்சமாய்க் காட்டி விட்டார்கள்.மேலும்அப்பொருளானது புனிதமானதாகவும்,வணங்கத்தக்கதாகவும்,பரந்த கடலைத் தன்னுள் பெற்றதாகவும் உள்ளது.
"வாதவைத்திய யோகமெல்லாம் ஆதியந்தம் இரண்டாலாம்
காதமல்ல இவை கிடைக்கும் கண்டகண்ட இடங்களிலும்"
-என்றும் கூறப்படுவதால் எங்கும் தேடி அலையவேண்டியதில்லை. 'ஊரடுக்க மெத்தவுண்டு' எனவும் அகத்தியர் கூறுவதால் அப்பொருள் எங்கும் உள்ள பொருள் என தெளிக.
"குப்பங் காடு மலை சாக்கடை நகரமெலாம்
குடியிருக்கும் வீடு முதல் இது கிடக்கு
ஒப்பம் வைத்து ஊரெல்லாம்ஓடுது பார்
உலகிலே இது தெரியா மனிதரில்லை"
"இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இதுதானென்றும்"
என்று கூறியிருப்பதையும் நோக்கற்பாலது.
இந்த முதன்மைப் பொருளை பற்றி 'துர்வாச மகரிசி' அவர்கள் கூறும்போது 'மூலக்கிழங்கு முளைத்தே கிடக்குது" என்கிறார். அதாவது முதல் பொருளை கிழங்கு என்கிறார். மேலும் அது தயாராக உள்ளது, அதை எடுத்தால் போதும் என்கிறார். எனவே பூநீர் எனப்படும் மூலப் பொருளை ஆய்வாளர்கள் தயாரிக்க வேண்டியதில்லை. இயற்கையில் கிடைப்பதை அப்படியே எடுத்தால் போதுமானது.
அகத்தியர் அமுத கலை ஞானம் --1200 என்ற நூலில்,
"தானென்ற அகாரமடா விந்துவிந்து
தன்மையுள்ள விந்துநீர் தண்ணீராச்சு"
என்கிறார். அதாவது அகரம் எனப்படும் முதல்நீர் தண்ணீராக உள்ளது என்று கூறுகிறார். இதே தன்மை கொண்ட பாடலை அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி என்ற நூலிலும் காணலாம். மேலும் பல இடங்களில் அகத்தியர் இந்த கருத்தை திரும்பத் திரும்ப சொல்கிறார்.
இராமதேவர் வைத்திய காவியம் --1000 என்ற நூலிலும் பூநீர் எனப்படும் வெண்சாரை தண்ணீராக உள்ளது என்று கூறியுள்ளார்.
இதே கருத்தை நந்தீசர் கருக்கிடை --300 என்ற நூலில் கூறியுள்ளதைக் காணலாம். கோரக்கர் நாதபேதம் --25 என்ற நூலிலும் இதே கருத்து உள்ளதைக் காணலாம்.
முதல் பொருளான பூநீர் பற்றி 'அகத்தியர் பரிபாசை --500' என்ற நூலில்,
"தொண்டர்களை கிருபைவைத்து பிழைக்கச்செய்த
துகளில்லா பிரணவமே சுயம்புநீரே"
என்கிறார். இந்த நீரை யாரும் செய்ய வேண்டியதில்லை. இது இயற்கையில் தானாகவே கிடைக்கும் சுயம்பு நீர் என்கிறார். எனவே இந்த நீரை சித்தர்கள் கூறிய முறைப்படி எடுத்தால் மட்டும் போதுமானது. எனவே இதை தயாரிக்க வேண்டிய அவசியமில்லை என்பது தெளிவாகிறது.
இந்த நீர் குறித்து சித்தர்கள் கூறிய கருத்துக்களை தொகுத்துக் கொண்டே சென்றால் சொல்லிக் கொண்டே செல்லலாம். எல்லா சித்தர்களும் இதை நீர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். இந்த கருத்தை உறுதி செய்யும் விதமாகத்தான் மேல்நாட்டு ஞானிகள் நூல்களும் அமைந்துள்ளன. இனி அவர்கள் முதல் பொருளைப் பற்றி கூறும் தகவல்களை பார்க்கலாம்.
ஞானிகளின் இரகசிய கலைக்கு பயன்படும் முதல் பொருளை உவமையாகவும் மிகவும் புரியாத பெயர்கள் கொண்ட கதைகளாகவும் விளக்குகிறார்கள். அதனால் முதல் பொருளை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது என அர்னால்டு அவர்கள் கூறுகிறார்கள்.
ஆண்டிமணி சனியின் தன்மையைக் கொண்ட ஒரு தாதுப் பொருள். இதை இரசவாதிகளின் இரசம் என்று ஞானிகள் அழைப்பர். இந்தப்பொருள் நீராவி அல்லது பனித்துளி போன்று தூய்மையானது என்று ஆர்ட்டிபியூஸ் அவர்கள் கூறுகிறார்கள்.
புத்திசாலி குழந்தைகளாகிய நீங்கள் அறிய வேண்டியது, முன்னாளைய ஞானிகள் பிரிவினையை நீரில் நடத்தினார்கள். அப்பிரிவினை என்பது நீரை பிற நான்கு பொருட்களாக பிரிப்பதாகும் என்று ஒரு மேலைநாட்டு ஞானி கூறுகிறார்.
மிகப் பழங்கால ஞானியான தியோபரஸ்டஸ் என்பவரும் முதல்பொருளை நீர் என்றே குறிப்பிடுகிறார்.
நம் கலையின் முதல் பொருளானது பஞ்ச பூதங்களில் நீர் அம்சம் பெற்ற ஒரு பொருளாக உள்ளது. அதை நெருப்புத் தன்மையுள்ள நீர் என்றும் ஹெர்மஸ் அவர்கள் கூறுகிறார். இந்த நீர்மப் பொருளைப் பற்றி யாருமே வெளிப்படையாக பேசவில்லை. இரகசியமாகவே வைத்துள்ளார்கள். ஆரம்பத்திலிருந்தே ஞானிகளால் மறைக்கப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்.
நம்முடைய முதல் பொருள் காற்று, நீர், நெருப்பு ஆகிய தனிமங்கள் ஒன்றாக கலந்துள்ள கொழுப்பு நீர் வடிவம் கொண்ட ஜீவ விருட்சத்தின் இனிப்புச் சாறு ஆகும். இதற்கு ஞானிகளின் பாதரசம் என்று பெயர் என பாரசெல்ஸஸ் கூறுகிறார்.
நமது மூலப் பொருள் இயற்கைப் பொருளால் ஆனது. இந்த மூலப் பொருள் தடிப்பான பிசுபிசுப்பான ஒரு நீர் ஆகும் என்று கிளாடியஸ் அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறு நம் நாட்டு சித்தர்களும் சரி மேலை நாட்டு ஞானிகளும் சரி மனிதனுக்கு ஞானத்தை வழங்கும் முதல் பொருளை நீர் என்றே குறிப்பிடுகிறார்கள். சிலர் இதை கல் மற்றும் விதை என்றும் குறிப்பிடுகிறார்கள். இவைகளும் முதல் பொருளைத்தான் குறிக்கும் என்று ஹெர்மஸ் அவர்கள் கூறியுள்ளார்.
முதல் பொருளான பூநீருக்கு சித்தர்கள் அகரம், விந்து, சிவம், சுயம்பு நீர், வெண்சாரை, ஏகவஸ்து, பிரணவப்பொருள், பூநீர், சாரம் என பல பெயர்களில் அழைக்கின்றனர். அதேபோல் மேலை நாட்டினர் ஒருபூதம், நிரந்தர நீர், உயிர் நீர், வணங்கத் தக்க நீர், அறிவுநீர், ஞானிகளின் இரசம், சொர்க்கத்தின் பனித்துளி, கன்னியின் பால், இரச உடல், உடலின் உயிர், ஆசீர்வதிக்கப் பட்ட நீர், அறிவாளி நீர், தாது நீர், வான் சம்பந்தப்பட்ட நீர், ஜீவ விருட்ச நீர், கல், விதை என ஏராளமான பெயரிட்டு அழைக்கிறார்கள். பெயர்களைக் கொண்டு குழப்பமடைய வேண்டியதில்லை. இவை அனைத்தும் ஒரே பொருளைக் குறிக்கும் சொல் ஆகும்.
சாகாக் கலை ஆய்வாளர்கள் இக்கலையில் வெற்றி பெற வேண்டுமானால் முதல் பொருளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்து கொள்ள வேண்டும். "முதல் பொருள் தெரியாவிட்டால் , மீதி வேலையும் உனக்குத் தெரியாமல் போய்விடும் " என்று கிளாடியஸ் என்ற ஞானி கூறுகிறார்.
இப்பொருள் தன்னுள்ளே தூய்மையற்ற இரண்டு உட்பொருட்களைக் கொண்டதும், மெல்லிய கொழுப்புத் தன்மை கொண்ட இனிப்புச் சாறாகவும் உள்ளது. இந்த முதல் பொருள் இல்லாமல் உலகில் எந்த உலோக தாதுப்பொருட்களும் தோன்றாது. இதிலுள்ள இரண்டு பொருட்களும் ஆண் பெண் தன்மைகள் கொண்டதாக அதாவது நேர்மின்னோட்டம் (+) மற்றும் எதிர்மின்னோட்டம் (--) கொண்டவைகளாக உள்ளன. ஆனால் இவைகள் ஒன்றுக்குள் ஒன்றாக அதாவது ஒன்றைவிட்டு ஒன்று விலகாதபடி மிகச்சரியானபடி இயற்கையால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இவை எதிர் எதிர் தன்மைகளைப் பெற்றிருப்பதால் எப்பொழுதும் இடைவிடாமல் ஒரே சீராக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த முதல் பொருள் பஞ்சபூதமும் ஒன்றாக கலந்த பொருளாக உள்ளது. இந்த முதல்நீரை ஜீவ விருட்சநீர் அல்லது ஞானிகளின் பாதரசம் என்று ஞானிகள் அழைக்கிறார்கள். பாதரசம் என்பதால் உடனடியாக அசிங்கமான சாதாரண கடை பாதரசத்தை நினைத்துவிடக் கூடாது. ஞானிகளின் பாதரசம் இயற்கையின் சுயம்பு நீர் ஆகும்.
இயற்கையின் இயல்புபடி அமைந்த இந்த முதன்மைப் பொருளான ஜீவ விருட்சநீரை விட்டு, வேறு ஏதாவது ஒரு பொருளை எடுத்து அதன் உட்கருவை பிரித்து எடுப்பதே உண்மையான அல்லது முன்னேற்றமான செய்முறை என்று கூறும் அதாவது எந்த பொருளிலிருந்து வேண்டுமானாலும் பிரிக்கலாம் என்று கூறும் பேராசைக்கார ஏமாறாறுக் கலைஞனால் நமது கலையில் வெற்றிபெற முடியாது. அவன் செயல் முற்றிலும் எதிர்மறையான செயல் ஆகும். அவர்களின் செய்முறை இயற்கையின் செயல்பாட்டிற்கு எதிராக இருப்பதால், இவர்கள் தவறான சுற்றுவட்டப் பாதையில் சிக்கி வெளியேவர வழி தெரியாமல் திண்டாடுவார்கள். இறுதியில் ஏமாற்றமும் மன விரக்தியுமே மிஞ்சும். எனவே ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க சித்தர்களும் ஞானிகளும் கூறுவதை நன்கு படித்து விசயங்களை உள்வாங்கி தெளிந்து இயற்கை வழிகளைப் பின்பற்றி செய்முறையில் இறங்கினால் சித்தர்கள் கூறும் சாகாகலையில் எளிதில் வெற்றி பெறலாம்.
நமது இந்த டிசால்வுடு சால்ட் என்கிற பாதரசத்தை அனைத்து மனிதர்களும் கண்களால் பார்க்கின்றனர்.எனினும் சிலருக்குத்தான் அது, இது தான் என தெரியும். அதனை மருந்தாக தயாரிக்கும் போது மிகவும் மெச்சத்தக்க சிறப்புகளைப் பெறுகிறது.அறிவாளியின் கண்களில் இருந்து அப்பொருள் மாயமாவதில்லை.அப்பொருளின் புறத்தோற்றம் பார்வைக்கு இழிவானதாக இருக்கும்.எனினும் அதை நீ இழிவாகக் கருதாதே.
அவ்வாறு நீ கருதினால் உன்னால் குருமருந்தை முடிக்க இயலாது.அப்பொருளின் முகத் தோற்றத்தை உன்னால் மாற்ற முடிந்தால்,அதன் நிலை மாற்றம் மிகவும் மதிப்பு வாய்ந்த,மிகுபுகழ் தருவதாக இருக்கும்.நமது தண்ணீர் மிகச் சுத்தமானது.எப்போதும் புதிதாகவும், புனிதமானதாகவும் உள்ளது.ஆகவே அதனை அனைவரும் விரும்புகின்றனர்.
தமிழகச் சித்தர்கள் கூறியுள்ள ஆர்கானத்தின் வகைகள்,
1.பத்மினி-பொன் வண்ணம்-சோழநாடு.
2.சித்தினி-பச்சை அல்லது சிவப்பு-பாண்டி நாடு.
3.அத்தினி.-வெண்மை-சேரநாடு.
.4.சங்கினி-கருப்பு-காசிநாடு.என்றும்,
அகத்தியர் பரிபாசைத் திரட்டு கூறுகிறது.இந்த நான்கு விதமான அண்டம் நாலுவகை நிலத்தில் விளைகிறது.
"கதிரான பாலை நிலம்,வண்டல்,பொட்டல்
கன்னி வனஞ் சிறுகாசாக வந்த பூமி
விதி காணும் சுக்கான் பாரிவைகள் கண்டால்
விமல சதாசிவம் சத்தி மேவும் பாரே"
மேலும்,
"கூறுவேன் வழலையிலே நாலு சாதி கூசாமல் முடித்து வைத்தார் சித்தரெல்லாம்
தேறுவாய் அந்தந்த வகையேதென்றால்
சிறுநீரால் காய்ச்சுகிற வழலையொன்று
பேறுபெறச் சுண்ணாம்பும் உவரும் கூட்டிப்
பிசகாமல் காய்ச்சுகிற வழலையொன்று
நாறுகிற சயிந்த லவணங்கள் கூட்டி
நலமாகக் காய்ச்சுகிற வழலையொன்றே"
"ஒன்றான சளியவர் மாண்வீரம் வெள்ளை
உள்ளபடி காய்ச்சுகிற வழலை ஒன்றே
என்றான வென்மகனே வேம்பு புங்கின்
எண்ணெய் யிட்டுச் செய்திடுவார் இந்த நான்கும்"
என்றும் நான்கு வித வழலை பற்றியும் அகத்தியர் கூறுகிறார்.
அகத்தியர் மேலும் கூறும் போது,
"மவுனமென்றால் நாலுவகை மவுனமுண்டு
வாசியிலே மவுனமொன்று கண்டத்தூணல்
மவுனமென்ற சடாதார நிராதாரத்தில்
மவுனமொன்று சாக்கிரமா மதிலே நில்லு
மவுனமென்றால் மேல்வாசல் மவுனமொன்று
வாய்திறந்தால் விந்துவிலே மவுனமொன்று
மவுனமென்றால் வாலையடா வாமியோகி"
என்று அகத்தில் ஆரம்பித்து புறத்தில் கூறப்படும்,ஊமைப்பொருளான மௌனப் பொருளை, வாலையை, வாலாம்பிகையை நான்காக வகைப்படுத்தியுள்ளார்.
மூன்றாவது,நான்காவது மாத பிண்டத்திற்கு அத்தினி என்று பெயர்-வெண்மை நிறம்.
ஐந்தாவது மாத பிண்டத்திற்கு சங்கினி என்று பெயர்-கருப்பு நிறம்.
எட்டாவது மாதபிண்டத்திற்கு சித்தினி என்று பெயர்-சிவப்பு நிறம்.
ஒன்பதாவது,மற்றும் பத்தாவது மாத பிண்டத்திற்குபத்மினி என்றுபெயர்.-பொன்மஞ்சள் நிறம்.
"தானென்ற கணபதியே பஞ்சபூதம்
தன்மையுடனே பிறப்பால் நின்ற ஞானம்
ஊனென்ற கணபதியே ஆண்பெண்ணாகி
உறுதியுடன் நடனமொடு பிண்டமானார்
நானென்ற கணபதியே குருவாமென்று
நன்மையுடன் பூரணத்தைக் கண்டோரில்லை
வானென்ற கணபதியே வகையேழாகி
மகத்தான யோனிநால் தோற்றந்தானே --- கடைப்பிள்ளைகலைக்கியானம்
"கணபதியே வகையேழாகி" -இங்கே பிரைமா மெட்டீரியாவின் உருவகப் படத்தைப் பாருங்கள்.அதில் ஏழு வட்டங்கள் ஒரு வட்டத்தைச் சுற்றிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.ஏழுவட்டங்கள் என்பவை அடிப்படைப் பரமாணுக்களாகும்.
இவற்றை ஏழு கிரகங்கள் என்றும்,(சந்திரன்,புதன்,வெள்ளி,சூரியன்,செவ்வாய்,குரு,சனி)ஏழு உலோகங்கள் என்றும் கூறுவர்(வெள்ளி,பாதரசம்,தாமிரம்,தங்கம்,இரும்பு,வெள்வங்கம்,கருவங்கம்)
ஏழு பரமாணுக்களாலேயே இந்த பிரபஞ்சம் உருவாகி இருக்கிறது.அது போலவே பிரணவ மூலப் பொருளும் உருவாகி உள்ளது.
இன்றய அறிவியல் பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஒரு பத்து சதவீத அளவிற்குத் தான் கண்டுபிடித்துள்ளார்கள்.இன்னும் தொண்ணூறு சதவீதம் நமக்குத் தெரியாத எவ்வளவோ ரகசியங்கள் இந்த பிரபஞ்சத்தில் குவிந்துள்ளன.
இந்த உலகின் மண்,தண்ணீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனும் ஐம்பூத சக்திகள் அளவில் அடங்காமல் உள்ளன.அணுக்களின் சக்திகள்,செயல்பாடுகள் அளவில் அடங்கா.இந்த உலகத்தில் அணுக்கள் ஏழுவிதமாக உள்ளன.ஏழு ஸ்வரங்களாகவும் உள்ளன.ஏழு அடிப்படை நிறங்களாகவும் உள்ளன.இந்த அடிப்படையான ஏழு அணுக்கள் ஒன்றோடு ஒன்று கலந்து பலவிதமான வண்ணங்களையும்,பலவிதமான உருவங்களையும்,பலவிதமான பொருள்களையும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.
வடலூர் வள்ளலார்: பூத ஆகாயத்தில் உள்ள அணுக்கள் ஏழுவிதமாக, கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டுள்ளன.
ஏழு அணுக்கள்: இந்த ஏழு அணுக்களை வள்ளலார் கண்டுபிடித்துக் கூறி உள்ளார்.அவை வருமாறு 1.வாலணு.
2.திரவ அணு
3.குரு அணு
4.லகு அணு
5.அணு
6.பரமாணு
7.விபு அணு
என ஏழு விதமான அணுக்கள் அனந்த வண்ண பேதமாய் உள்ளன என்று கூறி உள்ளார்கள்.
மேற்படி பிரைமா மெட்டீரியா என்ற பிரணவப் பொருளை கைபாகம் செய்பாகம் செய்யும் போது நமக்கு ஏழு விதமான பொருள்கள் கிடைக்கின்றன.
அவை.மூன்று உப்புக்கள்.மினரல் ஆப் சல்பர் அல்லது உகரம் எனப்படும்.
மூன்று திரவங்கள்.டிசால்வுடு சால்ட் எனப்படும் பாதரசங்கள்.
இவை இரண்டும் முதல் பொருளில் தண்ணீராக இருக்கும். இறுதியில் ஏழாவதாக மகரம் எனப்படும் டிங்க்சர் மெழுகாகவும் இருக்கும்.நீர்மமாகவும் இருக்கும்.
இந்த ஏழு அணுக்களால் ஆன உடலை( ஏழு சக்கரங்கள்) ஏழு அணுக்களால் உருவான பிரணவப் பொருளால் பக்குவப்படுத்துவதின் மூலம் காயசித்தியை பெற்று ஞான நிலையைப் பெற இயலும்.
நான் எழுதிய அகர ரகசியம் முதல் கட்டுரையில் கூறியது போல பிரணவப் பொருளால் நமது உடலில் உள்ள பிராண சக்திப் பாதைகள் திறக்கப்பட்டு, பிரணவத்தின் ஏழு அணுக்கள் கொண்ட பிராண சக்தி நமது சூட்சும உடலில் உள்ள ஏழு ஆதாரங்களில், உயிரில் சேரும்.
பிராணாயாம பயிற்சியின் மூலமும் பிராணன் உயிரில் சேரும்.மனம் கட்டுப்பட்டவர்களுக்கு பிராணாயாம பயிற்சிகூடத் தேவையில்லை. பிரணவப் பொருளில் உள்ள பிராண சக்தியே போதுமானது.அதன் மூலம் அணிமாதி அஷ்ட சித்திகளும் கைவரப்பெற்று ,பேரின்பம் வாய்த்தலும் கைகூடும்.
இதுவரை பிரைமா மெட்டீரியா என்ற முதல் ஆர்கானம் பற்றிப் பார்த்தோம்.
பதிவு விரிவாகப் போவதால் மற்ற மூன்று ஆர்கானம் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
Image may contain: plant, flower and nature

அகர ரகசியம் -பகுதி-8# (விரிவானது)
#ஆர்கானம் தொடர்ச்சி...
முந்தய பதிவில் பிரைமா
மெட்டீரியா என்ற முதல் ஆர்கானம் பற்றிப் பார்த்தோம். இந்த பகுதியில் மற்ற ஆர்கானம் பற்றி காணலாம்.
இரண்டாவது ஆர்கானம்; #*உகரம்.*
இதில் மூன்று உப்புக்கள் உள்ளன.
1.பூனீர் அல்லது அடியுப்பு அல்லது உகர உப்பு எனப்படும்.
2.அமுரியுப்பு அல்லது கல்லுப்பு அல்லது வெள்ளை அண்டக்கல் எனப்படும்.
3.வீரம் அல்லது கொச்சி வீரம் அல்லது ஸ்டோன் ஆப் ஃபயர் அல்லது சிவப்பு அண்டக்கல் எனப்படும்.
1.பூனீர் உப்பு:
முதல் ஆர்கானமாகிய ஓம் என்னும் பிரணவப் பொருளில் இருந்து கிடைக்கும் இந்த முதல் உப்பே, மனித குலத்திற்கு வரும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் வாய்ந்ததாகும்.பிரணவப் பொருளில் இருந்து இயற்கையான செய்முறையின் மூலம் கிடைக்கும் முதல் அண்டக்கல் இதுவாகும்.இது பிருத்வி பூத பொருளாகும்.
இந்த மண் பூநீர் சற்று அழுக்கு வெண்மை நிறத்தில் இருக்கும். இந்த அண்டக்கல் அனைத்து உலோகங்களையும் செம்பாக மாற்றும்.இந்த காரம் என்ற உப்பு ஒரு பங்கும்,இதற்கு சாரமாகிய சுத்த சலம் எனும் பனிநீர் நான்கு பங்கும் சேர்த்து கலந்து ஒரு கண்ணாடிக் குடுவையிலிட்டு மூடியிட்டுச் சீல் செய்து ரவியிலிடவும்.நீர் சுண்டி உப்பாகும்.
இவ்வாறு ஏழு முதல் பத்து தடவை செய்ய தரமும்,வீர்யமும் கூடும்.
உலோகங்களை உருக்கி நூற்றுக்கு ஒன்று, ஆயிரத்திற்கு ஒன்று கொடுக்க அனைத்தும் செம்பாகும்.செம்பு மட்டும் மாற்றுக் குறைந்த பொன்னாகும்.
கெந்தகச் செம்பு வேதை:
கெந்தகத்தை மேற்படி காரத்தால் கட்டி உருக்கி சத்து எடுக்க செம்பாகும்.இது கெந்திச் செம்பு எனப்படும்.கெந்தியில் இருக்கும் செம்பில் இந்த கார உப்பாகிய அண்டக்கல் சேர்ந்து ஒரு தொந்தம் ஏறி வீர்யம் கூடி இருக்கும்.இவ்வாறு தொந்தம் கூடக்கூட வீரியம் கூடிக்கொண்டே செல்லும்.
"கெந்திதான் செம்பேயானாற்
கேளப்பா வேதைமார்க்கம்
அந்தியே நூற்றுக்கொன்றா
மப்பனே பரியிற்போடு
பந்திய பரிசெம்பாகும்
பாய்நூறு பரியின்மேலே
தொந்தியாய் நூறுமட்டும்
தொட்டதெல்லாம் செம்புதானே"
இச்செம்பைக் கொண்டு வேதை புரியும் வகையைக் கூறுகிறேன் கேள்.கெந்திச் செம்பை ஒரு பங்கு எடுத்து நூறு பங்கு தங்கத்துடன் சேர்த்தால்தங்கமானது செம்பாய்ப் போகும்.இந்த தங்கச் செம்பை நூறு முறை தொந்தித்தால் தொட்டவுடன் (பரிச வேதை) பொருளெல்லாம் செம்பாகும்.(ஸ்பரிசித்தல்-தொடுதல்)
தானென்ற தங்கமெல்லாந்
தனிச்செம்பாய்ப் போச்சுபோச்சு
வானொன்றிக் கணக்குச்சொல்ல
வாதியா ருண்டோவப்பா
தேனென்ற மொழியாள்காணாள்
சிவன்முதல் மயங்கிப்போனார்
கானென்ற செம்பின்வேதை
கரையில்லைகணக்கைப்பாரே"
எத்தனை முறை தொந்தித்தாலும் தங்கமெல்லாம் செம்பாய்ப் போகும்.இந்த தொந்தத்தால் ஏற்படும் மாற்றைக் கூறுவதற்கு எந்த ஒரு வாதியும் கிடையாது.சிவனும் மயங்கிப் போனார்.செம்பின் வேதைக்கு எல்லையே கிடையாது.
"பாருநீ யீசன்தொட்டுப்
பகருறேன் கணக்குமார்க்கம்
வாரு நீ கோடி தொட்டு
வழங்குமற் புதமேயாச்சு
தாருநீ கணக்குமோசந்
தாம்மறந்து ரைத்தாரப்பா
காருநீ மூலமூர்த்தி
காட்டின முறைமை கேளே"
ஈசனுடைய பாதத்தை வணங்கி கணக்கு முறையைக் கூறுகிறேன்.
கோடிக்கு ஒரு பங்கு சேர்த்தால் லோகங்கள் தங்கமாகும்.இதைத் தேவியானவள் மறதியால் என்னிடம் கூறிவிட்டாள்.இந்தச் செம்பு முறையால் மூலமூர்த்தி செய்ததைக் கூறுகிறேன் கேள்.
கேளுநீ துலாமோர்நூற்று
கெடிதங்க முருகும்போது
வேளுநூ றிந்தச்செம்பை
விளங்கவே காணிபோட்டார்
தோளுறு நடராசம்போற்
சூட்டினார் செம்பேயாச்சு
கோளுநீ சோழன்வந்து
கோபித்தான் கோபித்தானே"
நூறு துலாம் எடைகொண்ட தங்கம் உருகி நிற்கும் பொழுது கெந்தகச் செம்பை ஒரு காணி அளவு போட்டார்.
உடனே தங்கமானது செம்பாக மாறியது.இச்செம்பைக் கொண்டுநடராச விக்ரகத்தை வார்த்தார்கள்.இதை அறிந்த சோழனானவன் மிகவும் கோபமடைந்தான்.
விவரம்:சோழநாட்டு மன்னர்களில் ஒருவன் நடராச விக்ரகம் செய்ய ஆவல் கொண்டு பொற்கொல்லரிடம் நூறு துலாம் தங்கம் கொடுத்தான்.இதைப் பெற்றுக் கொண்ட பொற் கொல்லர்கள் சிலையை வார்த்தார்கள்.ஆனால் சிலையானது ஒழுங்காக வராமல் சிதைந்து போயிற்று. அவ்வழியே சென்ற திருமூலர் இதை அறிந்து கெந்திச் செம்பை தங்கத்தில் போட்டவுடன் தங்கம் அனைத்தும் செம்பாக மாறியது.இச்செம்பைக் கொண்டு சிலை செய்ய சிலையானது முழுவடிவம் பெற்றது.இதை அறிந்த சோழன் திருமூலரிடம் வாதாட வந்தான்.
*திருமூலர் சோழனுக்கு வாதங்காட்டியது*
"கோபித்த சோழன்முன்னே
கொள்ளென மூலமூர்த்தி
யாபித்த தங்கமெல்லா
லடியென்ன வசைவுமென்ன
தாபித்த தங்கம்வேண்டிற்
றனிவெள்ளி கொணர்வாய்நீயும்
நேமித்த வெள்ளிவைத்து
நிமிரநீ யுருக்கென்றாரே".
சோழ மன்னன் மூலமூர்த்தியிடம் கோபம் கொண்டு "நீங்கள் தங்கமனைத்தையும் எடுத்துக் கொண்டு செம்பால் சிலை வார்த்துள்ளீர்கள்.எனவே என்னுடைய தங்கத்தை திருப்பிக் கொண்டுவாறும்" என்று கேட்கவே, மூலமூர்த்தி அரசனிடம்"உனக்கு தங்கம் வேண்டுமானால் ஒருநிறையாக வெள்ளியைக் கொண்டுவா." என்று கூறினார்.
"உருகிய வெள்ளிக்குள்ளே
யுத்தம மூலநாயன்
சொருக்கினார் வீசந்தானும்
துலங்கிற்று தசமாற்றாகப்
பருக்கிய வேதையோடும்
பாவித்துப் பார்த்துக் கொள்ளு
தருக்கிய விந்தச் செம்பு
தாழ்த்திறேன் பாருபாரே".
அரசனும் வெள்ளி கொடுக்கவே அதை தங்கச் செம்புடன் சேர்த்துருக்கி பத்துமாற்றுள்ள தங்கமாக்கினார்.மேலும் இந்தச் செம்பை எதனுடன் சேர்த்துருக்கினாலும்.வேதையுன்டாகும்.இதை நீயறிந்து கொள்.
"பாருநீ மூன்றாங்கட்டோ
பரியுட னைந்தாங்கட்டோ
தாருநீ யெட்டாங்கட்டோ
தனிப்பத்துப் பத்தாங்கட்டோ
கோருநீ நவலோகத்தைக்
குமுறவே செம்பாங்கட்டோ
காருநீ சோழாவுன்றன்
கனகத்தை யெடுபோவென்றார்"
தங்கச் செம்பை எத்தனை முறை வேண்டுமானாலும் நவலோகத்துடன் ஈந்தாலும்,அனைத்து விதமான கட்டு லோகத்துடன் ஈந்தாலும்,உன்னுடைய தங்கமானது மீண்டும் குறைவில்லாமல் அதே மற்றாய் இருக்கும்.
"என்றவன் முகத்தைப்பார்த்தே
யென்னுட மூலநாயன்
பன்றதோ ராசையான
பருமலைக்குள்ளே வாழ்ந்தாய்
வின்றவோ ராசைபோனால்
வெளியெலாங் காணுங்காணுங்
ஒன்றல்லோ பொருள்தானப்பா
வூன்றிநீ யுரைத்துப்பாரே"
மேலும் மூலரானவர் சோழனை நோக்கி "ஏ மன்னா நீ ஆசை என்னும் மலையினுல் வாழ்வதால் உனக்கு ஒன்றும் புரியாது.ஆகையால் நீ உனது ஆசைகளை வென்று நின்றால், அனைத்து விதமான பொருள்களும் வெளியாகத் தோன்றும்.மேலும் உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலப்பொருள் ஒன்றே அதை நாடி நில்". என்று உபதேசம் செய்தார்.
இந்த விவரங்கள் கொங்கணர் வாத காவியம் -3000 த்தில் இரண்டாம் காண்டம் 794 ம் பாடலில் இருந்து
801ம் பாடல் முடிய உள்ளது.
மேலும் இம் மருந்தினால் குணமாகும் நோய்கள் பற்றி பெனிடிக்டஸ் பிகுலஸ் அவர்கள் தனது 'இயற்கை அற்புதங்களின் தங்கப் பெட்டகம்' நூலில்., "அது பூமியின் இயல்பைப் பெற்று அனைத்து நோய்களையும் நீக்கக் கூடியதாகவும், காயங்களையும் மனிதனுக்கு வரும் குடல் நோய்களை தீர்ப்பதாகவும், சிறப்பானவைகளை (தேவையானவற்றை ) உருவாக்குவதாகவும் , உடலில் குடிகொண்டுள்ள துர் நாற்றத்தை வெளியேற்றுவதாகவும், மற்றும் உடலின் அக புற நோய்களை பொதுவாக நீக்கி குணம் செய்வதாகவும் உள்ளது". என கூறுகிறார்.
2. வெள்ளை அண்டக்கல் அல்லது கல்லுப்பு.:
ஞானிகளின் கல்லின் செய்முறையில் இரண்டாவதாக கிடைக்கும் உப்பு இது.இதனை அமுரி உப்பு என்றும் ,பாறையுப்பு என்றும் வெள்ளைக் கல்லுப்பு என்றும் மேலும் பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படும்.இது பளபளப்பாக மின்னும் கண்ணாடி போன்ற, கிரிஸ்டல்,கிரிஸ்டலாக, வெடியுப்பைப் போன்ற வெண்மை நிறமாக இருக்கும்.மேலும் ரசம் பூசாத கண்ணாடியில் பின்பக்கம் உள்ள பொருட்கள் தெளிவாக தெரிவது போல, இந்த உப்பும் ஊடுருவிப் பார்க்கத் தக்கதாக இருக்கும்.இந்த வெள்ளை அண்டக்கல் ஒரு எரியாத நெருப்புக்கல் ஆகும்.அனைத்து உலோகங்களையும் வெள்ளியாக மாற்றும்.மனித உடலுக்கு வரும் அனைத்து நோய்களையம் தீர்க்கும்.நூறு பங்கு ரசத்தை ஒரு பங்கு உப்பே வெள்ளியாக மாற்றி விடும்.இவ்வாறு உருவாக்கப்படும் வெள்ளியானது, இயற்கையில் உள்ளதைக் காட்டிலும் உயர்வானது,தூய்மையானது,மென்மையானது,தரம்உயர்ந்தது.மேலும் ஒரு மனிதனைப் புதுப் பிறவியாக மாற்றும்.வயோதிகனை வாலிபனாக மாற்றும்.இறந்துபட்ட ஒரு தாவரத்தின் வேரில் சிறிது பொடியைத்தூவி நீர் ஊற்றிவர உயிர் பெற்று வளரும்.மாதவிடாய் நின்ற பெண்களுக்கு,மீண்டும் மாதவிடாயை ஏற்படுத்தி இளம்பெண்ணாக மாற்றும்.மேலும் பல அற்புதங்களைச் செய்ய வல்லது.
குறிப்பாகக் கூற வேண்டுமானால் பச்சோந்தியின் உடலில் உள்ள புள்ளிகளில்நெருப்புகாணப்பட்டு, அது அதனை புதுப்பிறப்பாக மாற்றுகிறதே.,அதைப்போல 'ஞானிகளின் கல்லில்' இருந்து எடுக்கப்பட்ட சக்தி,நெருப்பாக உடலில் கலந்து மாசுக்களை அகற்றி ,தூய்மையாக்கி ,அவனை இளமை உள்ள புது மனிதனாக மாற்றுகிறது.
கல்லுப்பு ஒரு பங்குடன் மூன்று பங்கு ஞானிகளின்
பாதரசத்தை கலந்து கரைத்து,ஒரு குடுவையிலிட்டு,காற்றானது வெளியேயும்,உள்ளேயும் போகாத படி இறுகமூடி சீல் செய்து ,முதல் மருந்து தயாரித்த முறைப்படியே செய்முறையைத் தொடர்ந்து செய்து வர,முந்தைய மருந்தைவிட பத்துமடங்கு அதிக சக்தியும், நற்குணமும் இந்த இரண்டாவது மருந்து பெற்றிருக்கும்.இந்த வெள்ளைக் கந்தகம் ஒரு பங்கு எடுத்து,ஆயிரம் பங்கு ஏதாவது ஒரு உலோகத்தில் கிராசமிட ,அந்த உலோகம் முழுதும் வெள்ளியாக மாறும்.
3.#சிவப்பு அண்டக்கல்:#
இரண்டாம் செய்முறையின் இறுதியில் கிடைத்த வெள்ளை அண்டக்கல்லை நீ பின் வரும் வழி முறைகளின் படி விந்து நீருடன் கூட்டிச் செயல்படுத்தலாம்.உயர்தரமான உப்பு ஐந்து பங்கெடுத்து ஒரு குப்பியில் போட்டு அதை உருகச் செய்.உன்னுடைய மருந்தை மெழுகைப்போல் உருக்கி மென்மையாக்கு.பிறகு அதை வறுத்து எடு.பத்து பங்கு விந்து நீரில்
அதைக் கரைத்து விடு.அந்தக் கரைசலை அப்படியே மூன்று நாட்களுக்குவை.நான்காம் நாள் அதைக் காய்ச்சி வடி.அடியில் இருக்கும் உப்பை வெய்யிலில் இட்டு இறுகச் செய்.ஆவியாகி வெளிவந்த நீரை குப்பியில் ஊற்றி மூடு.உப்பு உலர்ந்ததும் முன் போல அதை உருக்கி புதிய விந்து நீரை ஊற்றிக் கரைத்து வைத்து, காய்ச்சி வடி.
அக்கல்லின் தனித்துவமும் சக்தியும் உயரும். இவ்வாறு ஐந்து முறை செய்ய, அதாவது உப்பை சேர்த்துப் பிரிப்பதற்கு மூன்று நாட்களாகும்.அந்தக் கல் முழுமையாக இறுகுவதற்கு 24 மணி நேரம் பிடிக்கும்.சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்த #ஔிநிறைந்த அந்தக் கல் #சிவப்புநிறஔிரும் எரிகல்லாக உருவாகும். வெள்ளை உப்புச் செய்முறையில் அவ்வுப்பானது ஔி விடும் நீராவி போன்று இருக்கும்.
வெள்ளை அண்டக்கல்லின் தொடர்ந்த மிகையான வளர்ச்சியே சிவப்பு அண்டக்கல் என்பதை மேலே பார்த்தோம்.இந்தக் கல்லே முடிவானதும், இறுதியானதுமாகும்.
இந்த சிவப்பு அண்டக்கல் மிகவும் எடை மிக்க , கனமான பொருளாகும்.இதன் மற்ற பண்புகளை அறிவுக் கண்கொண்டு நோக்குமிடத்து, முடியாது அல்லது முடியாதவை என்று எதுவுமில்லை.
இக்கல் எரியாத கந்தகம் என்று கூறப்படும் கருத்து யாதெனில், பதங்கமாகாதது, பற்ப, செந்தூரமாகாதது (ஆக்சிஜனேற்றம் அடைதல்) வெப்பத்தின் காரணமாக மற்றும் எந்த வழியிலும் மாற்றம் அடையாதது.ஒரு மிகச் சிறந்த அனைத்து நோய்களையும் தீர்க்கும், "பிரபஞ்ச சஞ்சீவி" என்று இதற்குப் பெயரிடலாம். இம் மருந்திற்குப் பணியாத, குணமாகாத எந்த ஒரு நோயும் இல்லை.மாறாக அனைத்து நோய்களுமே இதனிடம் சரணடைந்து விடும்.இதனைப் பயன்படுத்தும் வயதான மனிதனும் தனது இளமையை மீண்டும் பெறுவார். அவர் இழந்த தனிப்பட்ட நுட்பத் திறமை மற்றும் உடல் பலம் மற்றும் பாதி இறந்து போன நிலையிலும் கூட, சட்டென விரைவாகக் குணமாக்கி புத்தெழுச்சியூட்டும்.
நமது தங்கப் பொருளில் நட்சத்திரங்கள் உள்ளன.இது நிலையானது.குங்குமப்பூ நிறம் உடையது.எந்த வகையிலும் பெருகி மாற்றம் அடையாதது.நீர்ம வடிவ பிசின் போன்றது.கிரிஸ்டல் வடிவ ஔி ஊடுருவக் கூடிய, மென்மையான, கண்ணாடி போல் உடையக்கூடிய, மாணிக்கம் போன்ற நிறம் உடையது.குறிப்பிட்ட ஈர்ப்பு ஆற்றல் கொண்டது.
ஜான் பிரடெரிக் கூறுவதாவது-
இந்தச் செயல் முடிந்த பிறகு பாத்திரம் குளிர்ச்சி அடைந்து விடும்.பின் பாத்திரத்தைத் திறந்து கூர்ந்து கவனி.அது மிக பலுவான,சிவப்பு வண்ணமுள்ள, எளிதில் பொடியாகக் குறைக்கத் தக்கதாகவும், எளிதில் எந்த நீர்மத்திலும் கரையக்கூடியதாகவும் உள்ளது.சில கிரைன் மருந்தே மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்தி அனத்து நோய்களையும் வேரோடு அழிக்கிறது.வாழ்நாளைக் கூட்டி, குறிப்பிட்ட கால எல்லையைத் தாண்டி வாழ வைக்கிறது.
நமது தங்க மருந்து நெருப்பில் எவ்வளவு தான் எரித்தாலும் மாற்றம் அடையாது. பூமியில் புதைத்து எவ்வளவு நாள் ஆனாலும் அழுகாது. இந்த இரண்டு மருந்துகளையும் உட்கொண்டால் வயதும் ஆகாது.மரணமும் வராது.வயதாவது இயற்கையானது அல்ல.உடலின் தேவை எதுவோ, அதற்கு உடலின் அழிவு முரண்பாடானது.வயதாவது (முதுமை) என்பது மனித ஜீனில் இல்லை. நமது கல்லானது மனித உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளைக் கொடுப்பது மட்டும் அல்லாமல் தன்னையும் பாதுகாத்து,
உடலையும் பாதுகாக்கிறது.
அந்தக் கல் தரமானதாக இருந்து, சரியான அளவில் ஒரு வயதான மனிதன் உட்கொள்ளும் போது இளமை திரும்புகிறது. இந்த நிகழ்வானது ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நீடிக்கிறது. அதன் பின்பு உடலானது திரும்பவும் முதுமை நிலையை அடையத் தொடங்குகிறது.ஆகவே , அந்தக் கல்லை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் அவசியமானது ஆகும்.
கடைசியாக கட்டிய உப்பை
(சிவப்பு அண்டக்கல் அல்லது தங்கம் அல்லது மூலப்புளி) ஒரு பங்கு எடுத்துக் கொள்.தங்க உலோகம் ஆயிரம் மடங்கு எடுத்துக் கொள்.உலோகத்தை உருகச் செய்து
அதில் கட்டின உப்பை ஒரு பங்கு தூள் செய்து, உருகிய உலோகத்தில் போடு.அந்த தங்க உலோகமானது, தங்கச் செந்தூரமாக மாறும்.(கவனிக்கவும் புடம் எதுவும் கிடையாது.) இந்த தங்கச் செந்தூரத்தை 10,000 மடங்கு தரம் தாழ்ந்த உலோகம் எதுவானாலும், அதை உருக்கி அதில் செந்தூரத்தை ஒரு பங்கு போட, தாழ்ந்த உலோகம் தங்கமாக மாறும்.வெள்ளி உலோகமாக மாற்ற வேண்டுமானால் வெள்ளிச் செந்தூரம் செய்து தாழ்ந்த உலோகத்தில் போட்டு வெள்ளியைச் செய்து கொள்.(மூலப்புளி என்றால் என்னவென்று புரிந்திருக்கும் என நம்புகிறேன்)
மேலும் , மேற்படி தங்க , வெள்ளி செந்தூரங்களுக்கு நாம் மேற்படி தங்கத்தையும், வெள்ளியையும் கடையில் வாங்கி அவதிப்படத் தேவையில்லை.ஏனென்றால் ஒரு சிறிதளவு நாதநீரின் (சிவப்பு பாதரசம்)மூலமாக அதிக அளவுள்ள மருந்துப் பொருளை இந்த வழியில் பெருக்கிக் கொள்ள முடியும். ஒரு கப்பல் நிறைய ஏதோ ஒரு உலோகம் இருந்தாலும், அதை நமது இனிப்புப் பொருளால் தங்கமாக மாற்றலாம்.
#இறுதிச் செயல்பாடு#
நம்முடைய மருந்து சில சமயம் உலோகத் திருத்தி என்றும் அழைக்கப்படுகிறது. பூரணமாய் முடிந்த நம்முடைய கல்லில் ஒரு பங்கு எடுத்துக் கொள்ளவும்.அது சிவப்பாகவும் இருக்கலாம் அல்லது வெள்ளையாகவும் இருக்கலாம்.அதை ஒரு குடுவையில் போட்டு உருகச் செய்.நான்கு பங்கு வெள்ளை அமுரி அல்லது சிவப்பு அமுரி (நாதநீர்) எடுத்துக் கொள்.வெள்ளி என்ற உப்பாக வேண்டுமானால் வெள்ளை அமுரியுடனும், தங்கம் என்ற புளியாக வேண்டுமானால் சிவப்பு அமுரியுடனும் (சிவப்பு உப்பு ,சிவப்பு பாதரசத்துடனும்,வெள்ளை உப்பு வெள்ளை பாதரசத்துடனும் மட்டுமே புளிக்கும்.மாற்றிச் சேர்த்தால் கெட்டுவிடும்) எது தேவையோ அவற்றுடன் நமது கல்லைச் சேர்த்துக்கொள். எல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டுக் காய்ச்சு.கடைசியில் உனக்கு தூளான வீழ் படிவம் கிடைக்கும்.அதை எடுத்து பத்திரப்படுத்து.
சுத்தி செய்யப்பட்ட பத்து பங்கு பாதரசத்தை எடுத்துக் கொள். அதை ஒரு குடுவையிலிட்டு நெருப்பிட்டுக் காய்ச்சு.ரசமானது சூடேறிப் புகையப் போகும் நேரத்தில் ஒரு பங்கு அளவு நமது பொடியை அதில் போடு.இதற்கு முன் இல்லாத சிமிட்டுகிற கண்களையுடைய அப்பொருள் ரசத்தில் ஊடுருவும்.அதைக் குறைந்த நெருப்பில் சூடாக்கி உருகச் செய். உனக்கு ஒரு மருந்து கிடைக்கும். அது முற்றிலும் உயர்ந்த சுத்திகரிக்கப்பட்ட மருந்தாக இருக்காது. இதிலிருந்து ஒரு பங்கு மருந்தை எடுத்து ஏதாவது ஒரு லோகத்தில் கொடுத்து, அவை இரண்டும் உருகும்போது தான், நாம் கொடுத்த மருந்து உயர் நிலை மருந்தாக மாறும்.
தாழ்ந்த உலோகம் வெள்ளியாக வேண்டுமானால் அந்த நிறம் வரும் வரையிலும் நமது மருந்தைப் போடு. இப்பொழுது,உனக்கு இயற்கை உருவாக்கியதைக் காட்டிலும் வெள்ளியோ, தங்கமோ கிடைக்கும்.
இருந்தாலும் இந்தத் தொழிலைச் செய்யும் பொழுது, அந்தக் கல்லில் இருந்து திரவம் கசியாத அளவுக்கு அதை சூடேற்றி வறுக்க வேண்டும். இது எப்பொழுதும் நல்லது.ஏனென்றால் ஒரு சிறிய அளவு மருந்தை ,அதைவிடப் பலமடங்கு சுத்தி செய்யாத உலோகங்களில் செலுத்தும் பொழுது,நமது கல்லை அதிக அளவுக்கு உபயோகப்படுத்த வேண்டியதாய் உள்ளது.இறுதிச் செயல்பாட்டுக்கான உப்பை அதிகப்பட்ச அளவுக்கு சுத்தி செய்தால் தான் வாதம் ஜெயிக்கும்.
இரண்டாவது ஆர்கானம் முடிவு பெற்றது.அடுத்த பகுதியில் மூன்றாவது ஆர்கானம் பற்றிக் காண்போம்.
No photo description available.Image may contain: food

#அகர #ரகசியம்- பகுதி 9
(விரிவானது)
இந்த மூன்றாவது ஆர்கானத்தில் மூன்று பாதரசங்கள் உள்ளன. அவை அமுரி என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படும்.
1.பனிநீர் என்ற சுத்த ஜலம் அல்லது பச்சை சிங்கம்.(பொதுவாக சித்தர்கள் இதனைப் பாதரசம் என கூறுவதில்லை)
2.விந்து நீர் என்ற வெள்ளைப் பாதரசம் அல்லது வெள்ளை அமுதம்.அல்லது ஞானிகளின் பாதரசம்.
3.நாதநீர் என்ற சிவப்புப் பாதரசம் என்பவை ஆகும்.
1.#சுத்தஜலம்:
மூன்றாவது ஆர்கானத்தின் முதல் சார நீர் இந்த பச்சை சிங்கம் ஆகும்.இதனை பனி நீர் என்றும் கூறுவர்.பச்சை சிங்கம் என்ற இந்த நீரானது பச்சை நிறத்தில் இருக்காது.பச்சை சிங்கம் என்ற பெயர் குழூக்குறியாக (உருவகமாக) கூறப்பட்டுள்ளது. பச்சை என்பதற்கு, பச்சையான காய் அதாவது பழுக்காத நிலையில் வெக்காயாக உள்ள பொருள் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது.அப்படிப்பட்ட பழுக்காத பச்சைக்காயாக இருக்கும் பொருளைப் பழுக்க வைத்துத் தயாரிக்கப்படும் திராவகம் அனைத்து உலோகங்களையும்,உப்புக்களையும், உபரசங்களையும், பாசாணங்களையும் வேட்டையாடும் வல்லமையுடையதாக, பலம் பொருந்தியதாக, பெரும் வலிமையுடன் திகழ்வதால் சிங்கம் என்றனர்.இந்த இரண்டுபெயர்களையும் இணைத்து பச்சைச் சிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது வெளிநாட்டுச் சித்தர்களால்.பச்சைச் சிங்கம் பற்றி பெனிடிக்டஸ் பிகுலஸ் அவர்கள் தனது இயற்கை அற்புதங்களின் தங்கப் பெட்டகம் எனும் நூலில் ,
"அம் மருந்து தன் இரண்டாவது தயாரிப்பில் தண்ணீர் உடலுடன் தோற்றமளிக்கிறது. முதலில் இருந்ததைக் காட்டிலும் சிறிது அழகுடைய பொருளாகவும் இருக்கிறது.அதன் குணம் உயர்த்தப்பட்டுள்ளது.அது உண்மை நிலைக்கு சற்று அருகில் உள்ளது.குணமாக்குவதில் அதிக சக்தி உடையதாய் இருக்கிறது.இந்த வடிவத் தன்மையில் அம்மருந்து சளி மற்றும் சூட்டினால் வரும்அனைத்து காய்ச்சல்களையும் நீக்கும்.(7 times distilled mercury பச்சை சிங்கம்.)மேலும் அது எல்லா விதமான விஷங்களையும் முறிப்பதில் நிச்சயமான மருந்தாக இருக்கிறது.அது நுரையீரலில் இருந்தும் இதயத்திலிருந்தும் செயல்படுகிறது.
அடிபட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் குணமாக்குகிறது.இரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது.இதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர அனைத்து நோய்களையும் சிறப்பாக குணமாக்குகிறது."என்று கூறியிருக்கிறார்.
பச்சை சிங்கம் தங்கத்தைக் கூட,எளிதில் கரைத்து விடும்.ஆனால் அது உடல் என்னும் தங்கமாகும்.அனைத்து உலோகங்களையும், பாசாண,உபரச,உப்புக்களையும் சுத்த ஜலத்தால் அரைத்து புடமிட, ஒரே புடத்தில் பற்ப, செந்தூரமாகும்.ஏனெனில் இந்தச் சிங்கம் சூரியனைச் சாப்பிட்டு கொடுங்காரத் தன்மையில் இருக்கும்.
மேலும், லோகங்களை பழுக்கக் காய்ச்சி இந்நீரில் தோய்த்து எடுத்து,பின் உருக்கி எடுக்க செம்பாகும்.
அகத்தியர் அந்தரங்க தீட்சா விதியில்,
."...........இன்னுங் கேளு
உறுதியுடன் நாக வங்கம் எல்லாம் அப்பா
பார்த்துமே பானத்தில் உருக்கிச் சாய்க்க
பகருகிறேன் குவடு மணிபோலே யாகும்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கருணையுடன் உலையதனில் அதனைக் காய்ச்சி
வீரமுள்ள சாரத்தில் தோய்த்துத் தானும்
விருப்பமுடன் மூசைதனில் வைத்து மூடே"
நாகவங்கத்தை உருக்கி மேற்படி பானத்தில் தனித் தனியே சாய்க்க மணிபோல் கட்டும்.கட்டிய மணியை பழுக்கக் காய்ச்சி சாரத்தில் தோய்த்து எடுத்து மூசையில் வைத்து மூடு.
"மூடியே சீலை மண் செய்து தானும்
முக்கியமாய் உலையில் வைத்து ஊதினாக்கால்
ஆடியே உருகி நன்றாய் செம்பே யாகும்
அப்பனே வங்க நாக மதுவும் செம்பாம்
நாடிநீ பணவிடை தான் வகைக்குத் தூக்கி
கனகுகையில் இட்டுமே உருக்கினாக்கால்
கூடியே உருகி நன்றா யிருக்கும் பாரு
குங்குமப்பூ வர்ணமதுக்கு அதிகம் தானே"
மூடிய மூசையை சீலைமண் செய்து உலையில் வைத்து கனமாக ஊதினால் செம்பாகும். கட்டிய நாகவங்கத்தில் பணயெடை தனித்தனி எடுத்துச் சேர்த்து உருக்கினால் குங்குமப்பூ வர்ணமாகும். குருச் செந்தூரமாகும்.
"அதிகமாங் குருவதனை நவலோகத்தில்
அன்பனே யீய்ந்தால் வேதை யாகும்
சதி மோச மில்லாமல் வெளியாய்ச் சொன்னேன்"
இந்த நாகவங்ககுருச் செந்தூரத்தை நவலோகத்தில் பத்துக்கு ஒன்று கொடுக்கத் தங்கமாகும். இந்த சாரநீர் மும்மடிப்பான பாதரசம் என கூறப்படுகிறது.ஏனெனில் இதிலிருந்துமேலும் இரண்டு பாதரசங்கள் நமக்குக் கிடைக்கின்றன.பச்சைச் சிங்கம் என்பதுஉடல் ஆகும்.அல்லது மேஜிக்கல் மண் (மந்திரமண்) எனவும் கூறப்படும்.
#நாகச்செம்புவேதை
திருவள்ளுவ நாயனார் வாதசூத்திரம் - 16 ல்
"..................................................................
கண்டுகொள்ளு உப்பெடுக்க கருச்சொல்வேனே"
"கருச் சொல்வேன்காரமது ஒன்றேயாகும்
கனிவான சாரமது நாலதாகும்
உறுதியாஞ் சாரத்தில் அதைக் கரைத்து
உறவாக்கி அதை நீயும் பதனம் பண்ணு
அருதியாய் மூன்றாநாள் தெளிவிருத்து
அடைவான கடைச் சரக்கு வீரம் பூரம்
நிருதி நீ பொடித்ததிலே தூளைக் கொட்டி
நேராக முன் போலத் தெளிய வைத்தே"
"வைத்துமே மூன்றாநாள் தெளிவை வாங்கி
வாகாக அடுப்பேத்தித் தீயை மூட்ட
நைத்துமே ஜலமெல்லாம் சுண்டிப் பின்பு
நாயகமே பீங்கானில் வார்த்துப் போடு
பைத்துமே ரவியில் வைக்க உப்பதாகும்
பாங்காக அதையெடுத்துப் பதனம் பண்ணு
சைத்துமே தாய் தந்தாள் என்று சொல்லிச்
சரியாகக் குப்பி தனில் அடைத்திடாயே"
"அடைத்த பின்பு சிறுகண்ணாம் நாகம் வாங்கி
அதையிலுப்பை எண்ணெய்யிலே சுத்தி செய்து
திடப்படவே நாகமதை உருக்கிச் சாய்க்க
திகட்டாமல் உருக்கு முகம் கிராஷஞ் செய்ய
வடுப்படவே உப்பெடுத்துக் கொடுத்துப் பாரு
வாதியே நாகச் செம்பாகு மப்பா
முடிப்பட்டதைக் குருவாய் வைத்துக் கொண்டு
மூவுலகிற் சித்து விளையாடுவாயே"
"ஆடப்பா செம்பைத்தான் பத்துக் கொன்று
அடைவாக நீ கொடுத்தால் ஈரஞ்சப்பா
மூடரப்பா முறையறிந்து செய்யமாட்டார்
#முட்டாளுக்கு உரையாதே முழுகிப் போவாய்
தேடய்யா தேட்டான தேட்டிதாகும்
தெரியவே சொல்லிவிட்டேன் நுணுக்கமாக
காடப்பா திரிந்தே நீ அலையவேண்டா
கண்டு கொள்வாய் பதினாறுங் கணக்கு முற்றே"
சாரநீர் நான்கு பங்கில் காரம் என்ற முதல் உப்பு ஒரு பங்கு சேர்த்து,கரைத்து உறவாக்கி பதனம் செய்யவும்.இதனை மூன்று நாட்களுக்குப் பின் தெளிவிருத்து அதில் வீரம்,பூரம் கடையில் வாங்கி பொடித்துச் சேர்த்து முன்போல தெளிய வைக்கவும்.
இதனை மூன்று நாட்களுக்குப் பின் தெளிவிருத்து, அடுப்பேத்தி எரிக்கவும்.தண்ணீர் சுண்டியபிறகு பீங்கானில் போட்டு ரவியில் உலர்த்தவும்.
இவ்வாறு நன்கு உலர்ந்த உப்பை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு சிறுகண்ணாகம் வாங்கி அதனை இலுப்பை எண்ணெய்யில் சுத்தி செய்து எடுத்து
மூசையிலிட்டு உருக்கவும்.நன்கு உருகிய பின் அதில் மேற்படி தயாரித்து வைத்துள்ள உப்பை கிராஷம் தரவும்.இதனை ஆறியபின் எடுத்துப் பார்க்க #நாகச்செம்பாகும்.இதை எடுத்துவைத்துக் கொண்டு மூவுலகிலும் சித்து விளையாடலாம்.
இந்த நாகச் செம்பை எந்த உலோகத்திலும் பத்திற்கு ஒன்று தாக்க, ஈரைந்து மாற்றாய் இருக்கும்.
இதனை #முட்டாளுக்கு சொல்ல வேண்டாம்.காட்டில் திரிந்து அலையாமல் நான் கூறியதை நுணுக்கமாகப் பார்.#மூடர்கள்இதனை முறையறிந்து செய்ய மாட்டார்கள் என்று திருவள்ளுவ நாயனார் பச்சை சிங்க வேதை முறையைப் பற்றிக் கூறி உள்ளார்கள்.மேலும் இது போன்ற செய்முறைகள் நூற்றுக் கணக்கில் சித்தர் நூல்களில் உள்ளன.உதாரணத்திற்காக இரண்டு முறைகளை மாத்திரம் இங்கே எடுத்துக் காட்டிஉள்ளேன்.
இது இரண்டாவது பாதரசம் ஆகும்.இதனை விந்து நீர் எனவும்,வெள்ளைப் பாதரசம் எனவும் பலவகையான பெயர்களில் அழைப்பர்.இந்த அமுரியானது எண்ணெய் வடிவம் கொண்டதாகவும், வெண்மை நிறமுடையதாகவும், பாகு போன்றும், தேன் போன்றும், இனிப்புச் சுவையுடையதாகவும், முகர்வதற்கு இனிமையான வாசனையுடையதாகவும், காற்றில் திறந்து வைக்க எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், வறண்ட நீர்மம் என்பதால் கையில் தொட்டால் ஒட்டாத தன்மை உடையதாகவும், ஈரமாகாததாகவும், ஐஸ் போன்ற ஜில் என்ற குளிர்ச்சித் தன்மை உடையதாகவும் காணப்படுகிறது
மேலும் பெனிடிக்டஸ் பிகுலஸ் எனும் ஞானி கூறுகிறார்
"அம் மருந்து தன் மூன்றாவது தயாரிப்பில் ஆவியாகக் கூடிய மிகவும் லேசான பொருளாகவும், எண்ணெய் வடிவம் கொண்டதாகவும், தன்னகத்தே இருந்த குறைபாடுகள் ஓரளவிற்கு நீங்கப் பெற்றதாகவும் , இந்த தயாரிப்பு நிலையில் அது தன் செயல் பாட்டில் அநேக அற்புதங்களை நிகழ்த்தப் போவதாகவும் அமைகிறது.மனித உடலுக்கு அது அழகையும், வலிமையையும் தருகிறது.உணவுடன் மிகச் சிறிய அளவு அதை சேர்த்து அருந்தினால் கல்லீரலில் ஏற்படும் மெலாங்கலி என்ற ரத்த உறைவு நோயை குணமாக்குகிறது.பித்தப்பையின் உஷ்ணத்தைக் குறைக்கிறது.உடலில் உள்ள ரத்தத்தின் அளவையும், இரத்த செல்களின் அளவையும் உயர்த்துகிறது.
எனவே உடலில் இருந்து இரத்தத்தில் உள்ள வேண்டாத, தேவைக்கு அதிகமான ரத்தத்தை வெளியேற்ற வேண்டியது அவசியமாகிறது. இம்மருந்து இரத்த நாளங்களை விரிவடையச் செய்து செயல் இழந்து போன மூட்டுக்களைக் குணமாக்குகிறது.
பார்வைக் குறைபாட்டை நீக்கி, கண்ணுக்கு மீண்டும் வலிமையைத் தருகிறது.
வளர்ந்து வரும் குழந்தைகளின் உடலில் உள்ள அவசியமற்றவைகளை நீக்குகிறது. மூட்டுப் பகுதிகளில் உள்ள குறைபாடுகளை சிறப்பாகப் போக்குகிறது." என கூறியுள்ளார்.மேலும் இதன் மூலம் குணமாகாத நோய்கள் என்று உலகில் எந்த நோயும் இல்லை.
இதற்கு மெர்க்குரி விடே என்றும், பாதரச உயிர்ச் சத்து என்றும் பெயர்கள் உண்டு.சகல லோகங்களையும் வெள்ளியாக்கும் ஆற்றலுடையது.வெள்ளியைத் தங்கமாக மாற்றக்கூடியது. மெய்ப்பொருளின் உப்புக்கள்(கந்தகம்) உஷ்ணத்தைத் தரக்கூடியவை.
மெய்ப்பொருளின் பாதரசங்கள் குளிர்ச்சியைத் தரக்கூடியவை ஆகும். இதனைப் பற்றி அகர ரகசியத்தில் முன்பே குறிப்பிட்டுவிட்டதால் இனி மூன்றாவது பாதரசம் பற்றிப் பார்ப்போம்.

இந்த மூன்றாவது பாதரசமே இறுதியானது.வாழ்வின் அமுதம் என்றம், நாதநீர் என்றும் கூறப்படும். இது தன்னகத்தே அதிக சக்தி உடையதாக இருக்கிறது.இறக்கும் தருவாயில் உள்ளவர்களைக் காப்பாற்றி மீண்டும் புத்துயிர் அளிக்கிறது.இந்த மருந்தை பார்லி அரிசி அளவு ஒயினில் கலக்கிக் கொடுத்தல், அது அவனுடைய வயிற்றைச் சென்றடைந்து ,பிறகு அவனுடைய இதயத்திற்குச் சென்று அவனுடைய உடலை உடனடியாகப் புதுப்பிக்கிறது.உடலில் முன்பிருந்த எல்லா குறைபாடுகளையும் நீக்கி ,அவனுடைய கல்லீரலை இயற்கையான வெப்பநிலையில் வைத்திருக்கும்.மிகச் சிறிய அளவில் ஒரு முதியவருக்குக் கொடுத்து வந்தால் , அவரின் எல்லா நோய்களையும் நீக்கி அவருக்கு இளமையான இருதயத்தையும், உடலையும் தரும்.ஆகவே இதனை வாழ்வின் அமுதம் என்றழைக்கிறோம்.
மேலும் கடைசியாகக் கிடைத்த இந்நீருக்கு #தங்கநீர் என்றும் பெயர். இந்நீர் எல்லா குஷ்ட நோய்களையும், மூலநோய்களையும் நீக்கும்.'ப்ரென்ச் டிசீஸ்' எனப்படும் பரங்கி நோயையும் குணமாக்கும்.உண்மையில் கூறப்போனால் அழுகிய நிலையில் உள்ள கண் நோய்களையும் நீக்கும்.
இந்நீர் கசப்பு, அல்லது காரச் சுவை உடைய நீர் அல்ல.அது எண்ணெய்யின் நிறம் போன்று இருக்கும் இனிப்பான குணமுடையதாகும்.இந்த மருந்தைக் கடலைப் பிரமாணம் எடுத்து ,சுத்த ஜலத்தில் கலந்து அருந்தி வர எல்லா வீக்கங்களும், கட்டிகளும் தீரும்.முடக்கு வாதம், இழுப்பு, வலிப்பு முதலிய நோய்களுக்கு மூன்று நாட்களுக்கு மூன்று சொட்டு தங்க நீரையும், ஒரு சொட்டு மூலப் புளியையும் கலந்து தரத் தீரும்.
இந்த நீரை நாளொன்றுக்கு மூன்று முறை உணவிற்கு முன் திராட்சை ரசத்தில் இரண்டு சொட்டு விட்டு கலந்து அருந்தி வரவேண்டும்.
முதன் முறையில் ஐந்து சொட்டுக்கள் வரை நாம் உட்கொண்டோமானால் .,
நமது ஆன்மீக சக்தியை அது வளர்க்கும்.தொடர்ந்து அருந்தி வர மனிதன் இதுவரை கேள்விப்படாத, உலகத்தில் உள்ள உன்னதமான, இனிமையான பல ரகசியங்கள் விளங்க ஆரம்பிக்கும்.அதை உட்கொண்ட உடனே உன்னிடத்தில் மாறுதல்கள் உண்டாகும்.அண்டசராசரத்தில் உள்ள உலகங்களும், நட்சத்திரங்களும் உன் உடலில் இயங்கும் விதத்தை நீ புரிந்து கொள்வாய். ஒரு கனவு கலைவதைப் போல உனது பகுத்தறிவு விழித்தெழும்.உலகத்தில் உள்ள எல்லா ரகசிய கலைகளும் உனக்குப் புரிய ஆரம்பிக்கும். ஆயினும், இவை எல்லாவற்றிலும் உயர்வானது எது என்றால் , இயற்கையை அதன் நிலையை நீ தெரிந்து கொள்வதே ஆகும்.அதனால் நம்மைப் படைத்த இறைவனை உண்மையாகப் புரிந்து கொள்ளும்படிக்கு உதவும்.
மற்றவர்கள் கூறுவதைப் போல இம்மருந்து தாழ்ந்த உலோகங்களைத் தங்கமாக மாற்றுவதற்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக இவ்வுயர்ந்த வஸ்துவானது அண்டசராசரத்துக்கும், தத்துவ ரகசியங்களுக்கும் ஆதாரமானது.
இதோடு மூன்றாவது ஆர்கானம் முடிவடைகிறது. அடுத்த பதிவில் நான்காவது ஆர்கானம் பற்றி எழுதுகிறேன்.
Image may contain: drinkImage may contain: 1 person
No photo description available.No photo description available.

புற அமுதம் பிரபஞ்ச சக்திகள் முழுவதும் அடங்கிய வஸ்து ஒன்று இவ்வுலகில் இருப்பதாக ஞானிகள் கூறுகின்றனர் இதையே அண்டம் orpic egg என்கின்றனர் இப்பொருளாகிய அண்டம் ஞானிகளால் பரிபாஷை கரவு மொழியால் மறைக்கப்பட்டுள்ளது இவ்வண்டப் பொருளைக் கொண்டு அமுரி என்ற புறஅமுதம் தயாரிக்கின்றனர் இதை alkahest என்றும்water of life என்றும் அழைக்கின்றனர் ஞானிகளின் பாதரசம் ஆகிய இப்புற அமுதம் உடலின் ஆறு ஆதாரங்களையும் தொண்ணுற்றாறு தத்துவங்களையும் கசடு நீங்கி சுத்த தேகம் ஆக்குவதாக ஞானிகள் பகர்கின்ரனர் இக்தே அமுரி எனப்படுகிறது இந்த அமுரியாகிய புறஅமுதம் துணையின்றி இரசவாதம் சித்தி ஆகாது
Dr.KuppusamySiddha mgpt: நமது மெய்ப்பொருள் பூமியை ஒப்பிடத் தக்கதாக உள்ளது.பூமிப்பொருளில் அல்லது பூமியில் நீரும் நிலமும் இரண்டாக இருந்தாலும் ,இரண்டும் சேர்ந்து பூமி என்ற ஒரே பொருளாக உள்ளது.அப்படிப்பட்ட ஒரு சிறந்த பாத்திரமாக உள்ளது பூமி.ஏனெனில் அந்த பாத்திரத்திற்குள்ளிருந்து நீரானது ஆவியாகி போய்விடாமல் பூமியிலேயே இருக்கிறது.ஈர்ப்பு விசையை உடைத்துக் கொண்டு நீராவி வெளியேருவதில்லை.அப்படிப்பட்ட சிறந்த பாத்திரமாக இருக்கும் பொருளை ஒரு பூமி வடிவ பாத்திரத்தில் எடுக்க வேண்டும். அப்போதுதான் அது சரியாக வரும்.பூமி பாத்திரம் எப்போதும் வெப்பத்தால் ஒருபோதும் உடைந்துபோவதில்லைஅல்லவா. ஆகவே நமது செய்முறை இயற்கையை பின்பற்றுவதாக இருக்க வேண்டும்.பூமியிலிருந்து , ஒருபோதும் நீரோ ,நிலமோ பூமிக்கு வெளியே எடுக்கப்படுவதில்லை.பூமிக்கு உள்ளேயே வாலை வடிக்கப்படுகிறது.அதனால் மண் போஷிக்கப்படுகிறது.அதனாலேயே விதைகள் பெருக்கமடைகின்றன.இந்த இயற்கை விதியையே நாமும் பின்பற்ற வேண்டும்.இல்லை எனில் தவறான பாதையில் சென்றுவிடுவோம்.
Dr.KuppusamySiddha mgpt: பூமிக்கு வெளியே இருந்து பார்த்தால் அது ஒன்றாகவும்,பூமிக்கு உள்ளே (வந்து ) பார்த்தால் நீரும்,நிலமுமாக இரண்டாக உள்ளது புரியும்.அது போல்தான் முட்டையும் வெளியே பார்க்க ஒரு பொருளானாலும் உள்ளே இரண்டாக உள்ளது காண்க.இந்த இரண்டையும் பிரித்து பின் சேர்ப்பதே செய்முறை என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஆகவே பூமியைப் போன்ற வட்ட வடிவமான அந்த அண்டக்கல்லைத் தேடுங்கள்.
அண்டம் என்பது ஒன்றல்ல. அதாவது இறைவன் எப்போதும் இரண்டாக இருக்கிறார்.ஆண்பெண்ணாக. அல்லது பாசிட்டிவ் நெகட்டிவ் எனர்ஜியாக.ஒன்று உப்பு மற்றது அப்பு.இதில் அப்பு வோலடைல் ஆவியாகக் கூடியது.உப்பு நிலையானது.உப்பானது மண் பூதமும் நீர் பூதமும் இணைந்தது.அப்பு காற்றும் நெருப்பும் சேர்ந்தது. உப்பு வானது நீரும் மண்ணும் சேர்வதால் உண்டவது.பாதரசம் எனும் அமுரி தண்ணீரும் காற்றும் இணைவதால் உண்டாவது.கந்தகம் எனும் நாதம்(அண்டக்கல், முப்பு) காற்றும் நெருப்பும் இணைவதால் உண்டாகிறது.அதாவது முதலில் தண்ணீராக உள்ளது பிறகு செய்முறையில் திடப்பொருளாக, அண்டக் கல்லாக மாறுகிறது. திடப்பொருளாக, உப்பாக இருப்பது பிறகு செய்முறையில் நீராக, பாதரசமாக மாறுகிறது. திடப்பொருள் திரவப்பொருளாகவும், திரவப்பொருள் திடப்பொருளாகவும் தலைகீழாக மாறுகிறது. அதாவது சிவம் சக்தியாகவும், சக்தி சிவமாகவும் அல்லது ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் பாசிட்டிவ் நெகடிவ் ஆகவும், நெகட்டிவ் பாசிட்டிவ் ஆகவும்,பாதரசம் கந்தகமாகவும்,கந்தகம் பாதரசமாகவும் மாறுகிறது.இறுதியில் இதில் இல்லாத ஒரு விவரமும் தருகிறேன் என்னவெனில் ரசமும் கந்தியும் உப்பும் இணைவதால் நாதவிந்து நீராகிய மகரம் கிடைக்கும்.மீண்டும் ஆரம்பநிலை.ஆனால் முதல் பொருள்அழியக்கூடியது.இறுதிப்பொருள் அழியாதது.நெருப்பிற்கு ஜெயிக்கும்.
பிரைமா மெட்டீரியா கருப்பும் வெள்ளையும் கலந்து இருந்தாலும் தனித்தனியாக உள்ளதை கவனியுங்கள்.ஆனால் இறுதிப் பொருள் இரண்டும் கலந்து பிரிக்க முடியாதவாறு இருக்கும்.முதல் பொருளில் இரண்டும் தனித்தனியாக இருப்பதால் எளிதில் பிரிக்கலாம். ஆகவே இரண்டிற்கும் ஒரே பெயர் வைத்துள்ளனர்.
 No photo description available. Image may contain: 1 person











Image may contain: 1 person


#அகரரகசியம் - பகுதி 10 (விரிவானது)
#மகரம்.
The true Spirt of all things.

இந்த மகரம் என்ற ஆர்கானமே இறுதியானது.இது அகரஉகரம் என்ற நாதமும் விந்தும் இணைந்தது.இது இரு பொருளாக ஒன்றிணைந்து செயல்படும்.இது வெள்ளியையும், மற்ற உலோகங்களையும் தங்கமாக்கும் வல்லமையுடையது. மனித உடலில் உள்ள மாசுக்களை அகற்றி, தூய்மையாக்கி , மகத்தான ஞானியாக்கி என்றும் சிரஞ்சீவியாக வாழ வைக்கிறது. இது இறைவனின் சக்தியையும்,விண்மீன்களின் வியக்கத்தக்க சக்திகளையும், மெக்னீசியா லாபிஸ் பிளாஸ்பரமும் கொண்டு , பெரும் மதிப்புள்ளதும், வணங்கத்தக்க பொருளாகவும் காட்சியளிக்கிறது.
இந்த மகரம் பற்றி கருணாகர சாமிகள் தனது அகர ஆய்வு எனும் நூலில் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார்.
குருஉபதேசமின்றி அமுதம் அணுவாய்ப் பிரியா
விரித்துரைக்கில் சத்திசிவம் உருத்திரராய்ப் பிரிந்திடுமே
திரிமூர்த்தி தரிசனத்தைக் கண்ட மனம் கலிதீர
பிரிந்து சத்திசிவம் தானே கால்மாறி நடம் புரிவர்.
திரித்துவமாய் அமுதிதனை பிரித்தெடுக்கும் போதினிலே
உருத்திரனாய் பிரிந்து நிற்கும் அலித்திரவம் நடுவினிலே
ஒன்றி நிற்கும் அலித்திரவம் இரண்டாய்ப் பிரிந்தவுடன்
மன்றுள் சிவசக்தி கால்மாறி நடம் புரியும்
அணுத்திரவம் பெற்றிருக்கும் உயிர்த்துடிப்பு மேல்கீழாய்
முனைமாறும் விதம் அதனை வாய்விண்டு கூறார் சித்தர்.
நொந்துமனம் நடனம் காண சிந்தையுற்றோம் வெகுகாலம்
விந்தையாய் விளையாடலுற்றார் நித்யானந்தமுற்று.
என்ன தவம் செய்தேனே இக்காட்சி தனைக்காண
பின்னமில்லை கண்டவர்க்கே என்று மறை கூறுமப்பா.
இக்காட்சி தனைக்கண்டால் விஞ்ஞானிகளும் மெச்சிடுவர்
பக்குவர்க்கு இக்காட்சி தம்கண் விட்டகலாதே.
முதல் செய்முறையில் நமக்குக் கிடைத்தது உகரம் என்ற அண்டக்கல் உப்பு. அதன் பிறகு இரண்டாவதாக அகரம் என்ற பாதரசம்.பின் மூன்றாவதாக நமக்குக் கிடைத்தது அகரஉகரம் இணைந்த மகரமாகிய மகாமுப்புத் திராவகம் ஆகும்.இதுவே விஷம் நீக்கப்பட்ட அமுதமாம்.இவ்வமிர்தமே மகரமென்றும், வாலைதிராவகமென்றும், வாலைபூசையென்றும் சித்தர்கள் கூறுவதாகும்.இதுவே கல்பமும் ஆகும்.இது சரீரம் பூராவும் பரவி சரீரத்தை சுண்ணமாக்கும் வல்லமையுடையது.இந்த நீரைச் சிறப்பித்தே,
"தண்ணீராஞ் சிவகங்கை சுத்தகங்கை
தாயான பிராணனுமே சந்திரபானம்
தண்ணீராம் சத்தியெனு நாதத்துள்ளே
கலந்த பரப்பிரமவிந்து கலந்ததானால்
ஒன்றான சுக்கிலமுங் குருவுமாச்சு
ஓகோகோ தங்கரத முதித்ததம்மா
மண்ணோடு புல்முதலா ஏமமாச்சு
மாறாமல் இந்திரன் போல் வாழ்வுண்டாச்சே"
-என அகத்தியர் பாடியுள்ளார்.
இதனால் அகரஉகரமகரங்கள் எப்படி ஒன்றைஒன்று நெருங்கி பிணைந்திருக்கின்றன என்பது புலனாகிறது. இம்மூன்றும் சேர்ந்திருப்பதற்கே "ஏகவஸ்து" என்று கூறுவதும் உண்டு.இந்த திராவகத்தை வானுலகத்தின் கீழ் எவராலும் பிரிக்கவே முடியாது.திருமூர்த்தி சொரூபமாகி விட்டது.
இது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகவும்,ஔிரும் பொருளாகவும் தோற்றமளிக்கிறது.தங்கம் மற்றும் வெள்ளி போன்று பிரகாசிக்கிறது. தன்னகத்தே உள்ள அனைத்துச் சக்திகளைப் பெற்றும்,அதனுடைய நோய் நீக்கும் வலிமை பெருமளவில் பெருகியும், மேலும் பல அற்புதங்களைச் செய்யத்தக்கதாய் உள்ளது.காய்ந்து இறந்துபட்ட மரங்களின் வேர்களில் இம்மருந்தைக் கொடுத்தால் அவை புத்துயுர் பெற்று இலைகளையும் கனிகளையும் தரும்.விளக்கு எரியும் எண்ணெய்யோடு இம் மருந்தின் நீர்மப்பகுதியை சிறிதளவு கலந்து எரிய விட்டால், அது எப்பொழுதும் ஔி குன்றாமல் எரிந்து கொண்டிருக்கும்.
சாதாரண ஸ்படிக கற்களை பல ஔிகளுடன் கூடி பிரகாசிக்கிற விலையுயர்ந்த ரத்தினங்களாக மாற்றும்.அவைசுரங்கங்களிலிருந்து
வெட்டிஎடுக்கும் ரத்தினங்களுக்கு ஈடான தரம் வாய்ந்ததாகவே இருக்கும். இம்மருந்து பெற்றிருக்கும் மற்ற சக்திகளைப் பற்றிக் கூறப் புகுவோமானால் அதன் அற்புதங்களை நம்பவே முடியாது. தகுதி இல்லாதவர்களின் கைகளில் இம் மருந்து போய்ச் சேரக்கூடாது என்ற எண்ணத்தில் ,அவற்றைப் பற்றி இங்கே வெளிப்படுத்தவில்லை.
வேறு எந்த விதமான மருந்துகளின் கலப்பில்லாமல் , இறந்துபட்ட எல்லா உயிர்களையும் அது புதுப்பிக்கிறது.
இம் மருந்தானது வான் மண்டலத்தில் உள்ள எல்லா சக்திகளையும் ஒன்று சேர்த்து உருவாக்கி அவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.இந்த நறுமண மருந்து பூமியிலும், சமுத்திரத்திலும் உள்ள எல்லா #புதையல்களையும்வெளிப்படுத்தும் சக்தி கொண்டது.
தரம் தாழ்ந்த எல்லா உலோகங்களையும் தங்கமாக மாற்றக்கூடியது.சொர்க்கத்தில் உள்ள எந்தப் பொருளும் இந்த மருந்துக்கு நிகர் ஆகாது. இந்த உயிர் மருந்து இரகசியமானது.அது ஆரம்பத்திலிருந்தே மறைக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், எல்லாம் வல்ல இறைவனால் புனித மானிடர் சிலருக்கு இம் மருந்து வெளிப்படுத்தப்பட்டது. இறைவனின் ஆத்மாவே இம் மருந்தாகும்.அது தன்னுடைய ஆரம்ப கட்டத்தில் பூமியை அடைந்து, தண்ணீருடன் இணைந்து வளர்கிறது.அதை இந்த தெய்வீக ஆவியானவரின் அன்பில்லாமலும்,அவரின் வழி நடத்துதல் இல்லாமலும், அப் பொருள்களை பாடுபட்டுத் தேடி கண்டடைந்த ஞானிகளின் உபதேசம் இல்லாமலும், இவ்வுலகில் உள்ள எவரும் அப்பொருளைப் புரிந்துகொள்ள முடியாது.அதன் அபரிமிதமான சக்திகளுக்காக அப்பொருளை அடைய இந்த உலகமே ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது கிரகங்களை வழிநடத்துகிறது.மேகங்களை உயர்த்துகிறது.பனித்துளிகளை விரட்டுகிறது.எல்லாப் பொருள்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிறது.எல்லாப் பொருள்களையும்
சூரியனாகவும், சந்திரனாகவும் மாற்றுகிறது.நல்ல ஆரோக்கியத்தையும்,இணையில்லா செல்வங்களையும் அளிக்கிறது. குஷ்டநோயாளியைக் குணப்படுத்துகிறது.பொதுவாக எல்லா அனைத்து நோய்களையும் குணமாக்குகிறது. மிகவும் #நீண்ட#செய்முறைகளின் மூலம் இந்த உயிர் மருந்தானது சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த செய்முறைகளின் வழியாகவே அவர்கள் மருந்தை முடித்து அனைத்து செல்வங்களையும் அடைந்தனர். அதே வழிமுறைகளின்படி மோசஸ் அவர்கள் தமது கப்பல் முழுவதும் தங்கப் பாத்திரங்களைப் படைத்தார்.சாலமன் ராஜா இறைவனை மகிமைப்படுத்த பல நற்காரியங்களைச் செய்தார். இப்பொருளின் மூலமாகத்தான் மோசஸ் 'டபர்னேக்கல் ' என்ற பெரிய ஆலயத்தைக் கட்டினார். நோவா கப்பலையும்,சாலமன் கோவிலையும் அடையப் பெற்றனர்.எஸ்ரா என்பவர் இப்பொருளின் மூலம் தமது கட்டளைகளைப் புதுப்பித்துக் கொண்டார். மோசஸ் அவர்களின் தங்கை மிரியம் அவர்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினார்.
எல்லா சித்தர்களும் கடவுளின் பரிசைப் பெற்றிருந்தார்கள். தங்கம் மற்றும் வெள்ளியை விடவும் இதனை கையகப்படுத்துதல் மிகவும் கடினமானது.நமது மெய்ப்பொருள் உலகில் உள்ள மற்ற அனைத்துப் பொருட்களை விடவும் உயர்ந்தது.இவ்வுலகில் மனிதன் அடைய ஆசைப்படும் எல்லாப் பொருட்களும் அழியக்கூடியவை.எந்தப் பொருளையும் இம் மெய்ப்பொருளுடன் ஒப்பிட முடியாது.
உண்மையானது இந்தப் பொருளில் மட்டுமே உள்ளது.எனவே அப்பொருள்'கல்'என்றும்,உண்மைப்பொருளின் சாராயம் என்றும்அழைக்கப்பட்டது. அப்பொருளின் சக்தியைக் குறித்து என்னால் பேச இயலாது.ஏனெனில் அப் பொருளின் நற்பண்புகளும்,ஆக்கச் சக்திகளும் மனிதனின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.அதைப் பற்றி மனிதர்கள் தங்கள் நாக்கின் மூலம் சொற்களால் வர்ணிக்க முடியாது.அப்பொருளினுள் ஏனைய எல்லாப் பொருள்களின் சக்திகளும் அடங்கியுள்ளன.ஆம் , இயற்கை படைத்த பொருள்களுள் இப்பொருளைப் போல முதன்மை பெற்றதும்,ஆழ்ந்த உண்மையுடையதுமான பொருள் வேறெதுவும் இல்லை.
எளிதில் புரிந்து கொள்ள முடியாததும்,ஆழங்காண முடியாததுமான ஓ! இறைவனின் ஞானப் பொருளே, அதே இறைவன் உன்னுள் மிகுந்த சக்தியையும்,ஆற்றலையும் ஒருங்கிணைத்து உயிர்ப் பொருள்களின் சக்திகளையும் பெற்று இருக்கின்ற ஏகவஸ்துவிலிருந்து உருவான உயிர் மருந்தே! அழியக்கூடிய மனிதனுக்கு ,எண்ணிலடங்கா மதிப்பையும் சந்தோசத்தையும் வழங்கிய,அழிந்து போகக் கூடிய உலகப் பொருள்களுள் இணையில்லாத சக்தியைப் பெற்றிருக்கிற, வாய்விட்டுச் சொல்லக்கூடாத ஓ! பெரும்பொருளே ! மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட இரகசியங்களின் இரகசியமே, மறைக்கப்பட்ட பொருள்களுள் முதன்மை பெற்ற பொருளே! எல்லா வியாதிகளையும் போக்குகிற ஓ மகா மருந்தே! பாராட்டத் தக்க அதிசயங்களைப் பெற்றிருக்கிற புனிதமான உயிர் மருந்தே ! எல்லாவித மகிழ்ச்சிகளையும் , செழிப்பான வாழ்வையும் தருவதுவே ! எல்லா கலைகளிலும் சிறந்த கலையே ! உன்னை உபதேசமாக நான் பெற்றுக்கொண்டவுடன், புற உலகுக்குத் தேவையான எல்லா மகிழ்ச்சிகளையும் எனக்களித்த மெய்ப்பொருளே ! ஓ...எல்லோராலும் தேடப்படுகிற ஞானப்பொருளே, சந்திரனின் ஔிவட்டத்திற்குக் கீழே படைக்கப்பட்டிருக்கிற எல்லாப் பொருள்களிலும் முதன்மையான பொருளே ! இயற்கையை பலப்படுத்துகிற பொருளே ! மானிட இருதயத்தையும், உட்பகுதிகளையும் புதுப்பிக்கின்ற வஸ்துவே ! இளமையைக்காக்கவும்,முதுமையை விரட்டவும் ,பெலமின்மையை அழிப்பதுமான பொருளே! ஓ....புனிதமான மூலப் பொருளே! அன்பான வான் பொருளே! உன்னுடைய அதிசய ஆற்றலால் எல்லா உலகுக்கும் சக்தியாய் நின்ற ஓ பரம்பொருளே! ஓ மறைவாய் இருக்கின்ற வல்லமையே, எல்லாவற்றிலும் உயர்ந்ததுவே,மனிதர்களின் அறியாமையால் புரிந்துகொள்ள முடியாத ,எல்லோராலும் வெறுத்து ஒதுக்கித் தள்ளப்பட்டதுவே, இருந்தாலும் ஞானவான்களால் பெரும்பாடுபட்டு கண்டடையப் பெற்ற விலைமதிக்க முடியாத கௌரவம் மிக்க வெற்றியைத் தருகிற பொருளே, இறந்தவர்களையும் நீ எழுப்புவாய் என்று சொன்னால் மற்றவர் அதை நம்பாமல் கேலிக்கு ஆளாகும் பொருளே! நோய்களை வெளியேற்றி இறப்பவர்களின் கூக்குரலைக் கேட்டு அவர்களைக் காக்கும் பொருளே! ஓ..புதையலுக்குப் புதையலே! இரகசியங்களுள் இரகசியமே! ஞானி அவிசென்னாவால் 'வெளியே சொல்ல முடியாத மூலப்பொருள்' எனப் பெயர் பெற்றதுவே. இவ்வுலகத்தின் மிக உயர்ந்த ஆன்மிகப்பொருளே! உனக்கு நிகரான வேறு பொருளே இல்லை.ஆழங்காண முடியாத இயற்கைச் சக்தியே! செயல்பாடுகளிலும், வலிமையிலும் மிகச் சிறந்த பொருளே! உலகில் படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களுக்கும் நிகராக விளங்குவதுவே! சொர்க்கத்தின் கீழே படைக்கப்பட்ட எல்லா உடல்களின் மூலச் சக்தியே! வியாதிகளை நீக்குகின்ற எண்ணெய்ப் பதமுள்ள தேனே! இந்த ஞானத்தைப் பெற்றிருக்கிற அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் ,இறைவனுக்குப் பயந்து வாழ்கின்றவர்களுக்கும்,தூய்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்று நிச்சயிக்கப்பட்டவர்களுக்கும் இறைவன் இந்த பொக்கிஷத்தை அளித்தது குறித்து , இறைவனை நன்றியோடு மகிமைப் படுத்துவோருக்கு மட்டும் இக் கலையை வெளிப்படுத்துங்கள். மற்ற யாருக்கும் இதைத் தெரிவிக்க வேண்டாம் என்பதே.பலர் தேடினார்கள்.சிலருக்குத்தான் இது கிடைத்தது.தூய்மை இல்லாதவர்களும்,ஒழுக்க நெறியில் வாழாதவர்களும் இக்கலைக்குத் தகுதியானவர்கள் அல்ல.இறைவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு மட்டும் இக்கலையைப் பற்றிக் கூறுங்கள்.ஏனென்றால் இக்கலை விலை கொடுத்து வாங்க முடியாதது. நான் இறைவனின் முன் அறிக்கையிடுவது என்னவென்றால்,நான் பொய்யைக் கூறவில்லை, முட்டாள்கள் இக்கலையை அறிவது கடினம். ஏனென்றால் இயற்கையை இந்த அளவுக்குத் தேடுபவர்கள் அவர்களில் யாருமில்லை. இறைவனுக்குப் பயந்து வாழ்பவர்களுக்கு மட்டும் இக்கலையை வெளிப்படுத்துவோம்.
உப்பு என்பது மெய்ப்பொருள் என்ற அண்டத்தில் இருந்து எடுக்கப்படும் பொருள்.இது கனிம இனமாகவும், தாது வர்க்கமாகவும், பஞ்சபூத தத்துவமாகவும் உள்ளது.இவ்வுப்பை விட்டால் கற்பமும்,வாதமும் சித்தியாகாது.இந்த ஆதி உப்பைக் கட்டி வாதம் புரிவதற்கு ஏழு வகை தாதுக்கள் கொண்ட, வானவில்லின் நிறம் பெற்ற, பால்-ஐ அறிய வேண்டும்.இதன் மூலம் உப்பின் மாசுக்கள் எல்லாம் நீக்கப்படும் போது சுத்தம் செய்யப்பட்ட நிலையில் மகரமாகக்(முப்பு) கிடைக்கிறது.
"அப்பு உப்பு என்று சொல்லும் அறிய சூத சுத்த நீர்
இப்புவிச் சரக்குகட்கு ஏமனா யிருக்கையில்
வைப்பு வைத்த உப்பை விட்டு வல்லமைகள் பேசினால்
தப்புண்டாகும் பொய்மை இல்லை சயிலநீறிந்திடே"
-என்றார் நாயனார்.அகர,உகர உப்புக்களால் வடிக்கப்பட்ட திராவகத்தை- நெருப்பிற்கு ஓடக்கூடிய பாசாண சரக்குகளை கரி நெருப்பில் வைத்து- சுருக்குக் கொடுக்க நெருப்பிற்கு ஜெயித்து கட்டுப்பட்டு நெருப்புடன் நெருப்பாக இருக்கும். இதன் உண்மை உணராது மனம் போனவாறு செய்தால் தப்பு ஏற்பட்டு விடும் என்பது நாயனார் கருத்து. இயற்கைத் தோற்றத்துள் #மண்ணும்#தண்ணீரும் மட்டும் கண்ணுக்குப் புலனாகிறது.அதே போல் அமுத கலசத்துள்ளும் அல்லது சித்தர் உலகத்துள்ளும் கோசபீசம் தண்ணீராகவும், மண்ணாகவும் கொள்ளப்படுகிறது.இந்த மண்ணும்(உப்பு), தண்ணீருமே சிவமும்,சக்தியாகவும், பெண்ணும் ஆணாகவும், காரசாரமாகவும் கருதப்படுகிறது.மண்ணில் நெருப்பு மறைந்து இருத்தல் போல , பிரணவ கலசத்துள்ளிருக்கும் ஆதிசேஷனாகிய சர்ப்பத்துள் நெருப்பாகிய அண்டக்கல் உப்பு மறைந்திருக்கிறது.தண்ணீருடன் காற்று உறவாகிய தன்மைபோல் அமுதத்திலும் காற்று கூடி இரண்டும் கட்டுப்பட்ட நிலையில் அமுதகலசத்துள் இருக்கிறது. காற்றும் நெருப்பும் கண்ணுக்குத் தோன்றாதன.சிவத்தன்மையுடையது.மண்ணும்,தண்ணீரும் கண்ணுக்குத் தோன்றுவன.சக்தியின் தன்மையுடையன.
"ஓமெனும் பிரணவத்துளுதித்த ஐந்தெழுத்துமாகி
ஆமெனும் மகாரபீடத்தமர்ந்திடும் வாசிகண்டு
ஊமெனும் மௌனமுற்று ஊறிடும் மதிப்பாலுண்டு
தாமெனும் நாகை நாதர் தாண்டவம் பார்ப்பாய் நெஞ்சே"
ஓம் என்ற பிரணவமே ஆதி வஸ்துவாம்."ஆமென்று ஆடினது ஓங்காரந்தான்.அடிமுடியாய் நின்றதுவும் ஓங்காரந்தான்" என்று அகத்தியர் கூறுகிறா்.இதையே கருவூரார்
"ஆமெனவும் ஊமெனவும் மிரண்டுங் கூட்டி
அப்பனே ஓமென்ற மூன்றும் ஒன்றாய்
நாமெனவும் தாமெனவு மொன்றேயாகும்
நல்லவர்கள் அறிவார்கள் காமி காணார்"
- என்றார்.
ஓம் என்றாலும், பிரணவம் என்றாலும், பஞ்ச பூதம் அல்லது ஐந்தெழுத்தென்றாலும் ஒரே வஸ்த்துவை குறிப்பிடுகிறது.அகரத்துடன் லயமாய் அமர்ந்திருக்கும் வாசியும்.,அமுதமும் மூன்றும் ஒன்றாக்கி வாலையின் வழியே வழிந்திடும் மதிப்பாலை உண்டு காயசித்தி பெற்றதும் உஸ்வாச நிஸ்வாசமற்றுவிடும்.அப்பொழுது வாசி லயம் செய்தால் சந்திர மண்டலம் இளகி இறைவனின் ஔி கண்டு களிப்புற்றிரு என்று நெஞ்சரி விளக்கம் கூறுகிறது.
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே"
ஊஷரமாகிய உப்பை பானயிலிட்டுத் தீ மூட்டியதும் அதிலிருந்து வியாபிக்கும் சோம பானத்தை மேலெழப் பிடித்து, அடியிலிருக்கும் சூரியகாரத்துடன் கலக்கி இருகாலும் ஓருருவாக வியாபித்த காற்றை கைவசப்படுத்தும் உபாயமறிவாரில்லைஅதைப்பிடிக்குந் தந்திரம் அறிந்தவர்க்கு எமனை வெல்லக்கூடிய வல்லமை உண்டு.
"மேல் கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்து
பாலாம் இரேசகத் தானுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே"
சோமனாதியைப் பானையிலிட்டு எரித்து, பூரிக்கச் செய்து அதில் எழும் பாலாகிய சோமபானத்தை , அடியிலிருக்கும் சூரியனில் கலக்கி உறையச் செய்து எடுக்க,அவர் ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானின் கிருபை படைத்தவராவார்.
தாய்மார்களுக்கு உடலில் உள்ள இரத்தத்தை பாலாக மாற்றி, அமுதமாக குழந்தைககு ஊற்றி உயிரை நிலை பெறச் செய்ய ஆண்டவர் விந்தை செய்து அருளுகிறார்.இதைப் போல் ஞானிகளின் இரத்தமானது வெண்மையான விந்தாக(பாலாக) மாறி பிறகு அமுதமாக உறுப்பெறுகிறது.அது போன்றே உடல் முழுவதும் பால் உள்ள மரங்களே மனிதனின் வழிபாட்டில் முதன்மை பெறுகிறது.
வேப்ப மரத்தில் பால் வடிந்தால் இறை அம்சம் கொண்டு, அது முக்தி நிலை பெற்றதாக- வழிபாட்டிற்குறிய மரமாக- கொண்டாடப்படுகிறது. பால் சுரப்பது விசேசம்.அதுவும் சிரஞ்சீவியாக சிரத்தில் உயிர் ஜீவிக்க வேண்டும்.அதில் பால் ஊறல் வரவேண்டும்.அதுவே அமுத ஊற்று.பின்னர் உடல் எல்லாம் பாலாக மாற்றிட இறைநிலை பெறலாம் என்பதுவே முன்னோர்களின் வழிகாட்டல். அவ்வழியே நம்மை நீடூழி காலம் சிரஞ்சீவியாக்கும். இதனை யாவரும் அறிந்து , பேரின்பமுற்று வாழ்க சிரஞ்சீவியாகவே.  அருள்!
No photo description available.No photo description available.No photo description available.


#அகர #ரகசியம்- பகுதி-11
(விரிவானது)
வான் சிறப்பு
திருவள்ளுவர் இறை வணக்கத்திற்கு அடுத்து வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைத்துள்ளார்.இது ஏன் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்ய வேண்டும்.
உலகிற்கு ஆதியாய் அறிவாய் உயிராய் உள்ள இறைவன் பூதங்களில் நீர் வடிவினன்.அது கற்பம் என்பர் சித்தர்.இதனை அகரம் என்றனர்.இது வானில் இருந்து மழையாகி வருகிறது.
அந்த நீருக்கு இருப்பிடம் கடல் என்பதால் அறவாழி என்றார்.உலகிற்கு உயிர் வழங்கி வாழச் செய்வது. மழைச் சிறப்பு என்றோ நீர்ச் சிறப்பு என்றோ மாரிச்சிறப்பு என்றோ குறிக்கவில்லை.
மாறாக வான் சிறப்பு என்றது ஏன்?
இதனை வேறு வகையில் காணலாம்
செய் நன்றி பற்றிக் கூறும் போது
"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானக மும் ஆற்றலறிது."
இதில் வானம் என்று குறித்துள்ளார்.
இவர் சித்தர் மரபு ஆனதால் "ஆதி உப்பு விண்ணிலே" என்பதற்கிணங்க வான் என்றே குறித்தார்.
"வானின்று வழங்கி வருதலால் தான்
அமிர்தம் என்றுணரற் பாற்று"
உலகம் வானால் வாழ்கிறது எனில் மழை என்பது குறிப்பால் பெறப்படும் பொருள்.அமிழ்தம் என்பதையும் குறிப்பாக நோக்கவும்.
உணவும் அமுதம் பாலும் அமுதம் .அவை குறித்த காலம் உயிருக்கு ஆதாரமாகி நிற்பது.ஆனால் நீடூழி வாழ அமிர்தம் வேண்டும்.அதனைக் குறிப்பது நீரை
மழையை அமிர்தம் என்றார் ஏன் என சிந்திக்கவேண்டும்.
சித்தர்கள் நீர் மழை கங்கை அமிர்தம் என்பர்.அதை குறிப்பாக அறியும் விதமாக பாடல் உள்ளது.
"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூவும் மழை"
இங்கு மழை என்றார்.உணவு ஆகி உணவை உண்டாக்கி தானே உணவு ஆகியது.
கருணாகர சாமி
"ஏட்டுச் சுரக்காய் என இங்கெடுத்து யாம் கூறோம் கூட்டுக் கறிக்காகுமிதனால் குடும்பம் எல்லாம்.பிழைத்திடுமே" என்றார்.
வள்ளலார்
"வல்லார்க்கும் மாட்டார்க்கும்
வரமளிக்கும் வரமே"என்றார்.
வரம் அளிப்பதும் வரம் ஆவதும் ஒன்றே என்பது;உணவு ஆவதும் உணவு ஆக்குவதும் ஒன்றே.மருந்தும் விருந்தும் ஆவது ஒன்றே அது போன்றது தான்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் எனில் அண்டத்தில் கிரகம் நட்சத்திரம் உண்டு.ஐம்பூதம் உண்டு.பிண்டத்திலும் அப்படித்தான்.எனவே வான் என்று வெளியைக் குறித்தாலும் வான் சித்தர் பொருளும் என குறிக்கின்றனர்.
ரசவாத மருந்தாகிய முப்புவை நான்கு நாட்களில் செய்து முடித்து விடலாம் என்று கருணாகரசாமிகள்-பலராமையா நூலில்-கூறியது உண்மை தான் போல் தெரிகிறது.
அவர் கூறியது முதல் கட்ட செய்முறையாக இருக்கலாம்.
மொத்த செய்முறையும் 180-270 நாளில் செய்து முடித்து விடலாம் என தெரிகிறது.அன்னபேதி செந்தூரம் அல்லது ஒரு சாதாரண சூரணம் ஒன்றை செய்வதை விட முப்பு செய்முறை மிகவும் எளிமையானது.
என்கிறார்கள் சித்தர்கள்.
இந்த செய்முறையை பெண்களின் வேலை என்கிறார்கள்.பெண்களின் வேலை என்றால் என்ன? பெண்களின் வேலை சமைப்பது.
சமைப்பது என்றால் கொதிக்கவைப்பது.அரிசியயில் மூன்றுக்கு ஒன்று அல்லது நான்குக்கு ஒன்று என்ற அளவில் தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைத்து சரியான அளவு தீயில் கொதிக்க வைத்தால் ஒரு கட்டத்தில் தண்ணீர் காணாமல் போய் நமக்கு சாதமாக கிடைக்கிறது. அரிசியில் ஊற்றிய தண்ணீர் எங்கே போனது? அரிசியானது நீரை உட்கொண்டு வளர்ந்து சாதமாக மாறியது.
இயற்கையிலும் அவ்வாறு தானே நடக்கிறது. பூமியில் ஒரு விதை ஊன்றப்பட்டால் சூரியனின் வெப்பமும் பூமியின் வெப்பமும் சேர்ந்து 24 மணி நேரமும் ஒரு இதமான வெப்ப நிலையில் விதையானது இருக்கிறது.
மேலும் மழை பொழிவதன் மூலம் விதைக்கு ஒரு ஈரப்பதம் கிடைத்து அந்த நீரை உண்டு வளர்ந்து மரமாகி பிஞ்சாகி காயாகி கனியாகிறது. இந்த கனியை நாம் சுவைத்து மகிழ்கிறோம்.
இவ்வாறு நமது இயற்கையான மெய்ப்பொருளும் ஒரு விதைப் பொருள் ஆகையினால் இயற்கையான முறையின் மூலம் மட்டுமே நமது பொருளானது வளர்ச்சி அடையும்.வேறு எவ்வகையிலும் நமது விதையானது வளராது. கனிகளைத் தராது.
ஆகவே நமது விதையை வளர்க்க இயற்கையை பின்பற்றுங்கள்.இயற்கையின் வழியில் செல்லுங்கள்.இயற்கையைப் புரிந்து கொள்ளுங்கள்அது வே ஞானத்திற்கு முதல் படி. இதுவே சரியான வழி.ஆகவே இயற்கையை ஆராயுங்கள்.இயற்கையை உணருங்கள்.அவ்வாறு உணர்ந்து ,புரிந்து, தெரிந்து கொண்டபின்பு நமது செய்முறையை தொடங்குங்கள்.அதற்கு முன் ஒரு போதும் செய்முறையை செய்யாதீர்கள்.செய்தீர்களே ஆனால் வெற்றி கிடைக்காது.வீண் முயற்சியாகத்தான் அது இருக்கும்.
எனவே நண்பர்களே, இக்கலையை ஆய்வு செய்யும் மாணவர்களே, முதலில் நமது விதையை சரியாக தேர்ந்தெடுப்பதில் கவனம் வையுங்கள்.ஏனெனி்ல் உங்களின்(நமது) மொத்த அறிவும் நம் விதையை தேர்தெடுப்பதில் தான் உள்ளது.
நாம் விதையை சரியாக தேர்தெடுத்து விட்டால் பிறகு அதனை வளர்ப்பது எளிது.இயற்கையை அப்படியே காப்பி அடித்துக் கொள்ளலாம்.மேலும் காப்பி அடிப்பது என்பது மிகவும் எளிதான சிரமமில்லாத வேலை அல்லவா?
அந்த ஒரே ஒரு சரியான செய்முறையை நீங்கள் செய்யும் போது கைபாகம் தவறினாலும் (நெருப்பின் விகல்ப்பத்தால்)நமது விதை தனது வளர்ச்சி நிலையில் உலோக மாறுபாட்டை ஏற்படுத்தாவிட்டாலும் மருந்திற்கு பயன்படாமல் போகாது.அது ஒரு சிறந்த மருந்தாக இருக்கும் நோயை குணப்படுத்துவதில் எந்த குறைபாடும் வராது.இம்மருந்திற்கு நிகர் இதுவே.வேறு எதுவும் நிகராகாது.
சரியான வளர்ச்சிக்கு சரியான நெருப்பு அவசியம்.அதற்கு நீங்கள் தற்காலத்தில் கிடைக்கும் லேப்களில் பயன்படுத்தப்படுகிற எலக்டிரிக்கல் ஹீட்டரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
ஆகவே நண்பர்களே நமது செய்முறையானது ஒருவழிச் செய்முறையாகும்.நாம் ஒரே ஒரு விதையில் இருந்து தான் நமது செய்முறையை செய்யவும் வேண்டும்.இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்டவைகளில் இருந்து அல்ல.மேலும் நமது ரசவாத செய்முறைக்கு தேவை ஒரு ரசவாத பாத்திரம் (குடுவை) ஒன்றே ஒன்று மட்டுமே.
அதற்குள்ளேயே நமது பொருள் வளர்கிறது. பிரிகிறது ,கரைகிறது,பதங்கமாகிறது,சுண்ணமாகிறது,காடியாகிறது,உறிஞ்சுகிறது,இணைகிறது.பின் காய்கனிகளைத் தருகிறது. பிறகு அதனை நாம் ருசிக்கலாம்.உலோகங்களை உருமாற்றலாம்.படிக கற்களை வைரம் வைடூர்யமாக்கலாம்.தண்ணீருடன் கலந்து விளக்கு எரிக்கலாம்.நோய்களைத் தீர்க்கலாம். மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆனந்தமான மனநிலை பெறலாம்.மேலும் முதுமையையும் மரணத்தையும் வெல்லலாம்.பிறவிப்பிணியைப் போக்கலாம்.ஏழைககு அன்னமிடலாம்.சகலத்திலும் வெற்றி பெற்று யாராலும் வெல்ல முடியாத கடவுளாய் இருக்கலாம்.
சரியான முறையில் நமது பொருள் வளர்ச்சி அடைந்தால் முதன் முதலில் விதையானது பூமி அம்ச பொருளாக மாறும்.இந்த நிலைமாற்றமானது முதலில் கருப்பு நிறமாகி பின் பிரவுன் நிறமாகி பின் வெளுக்கும்.இந்நிலையில் நமது கல் குணமாக்கும் நோய்களை பெனிடிக்டஸ் பிகுளஸ் அவர்களின் இயற்கை அற்புதங்களின் தங்கப் பெட்டகம் எனும் நூலில் இருந்து காணலாம்.(அயல் நாட்டுச் சித்தர்களின் முப்பு ரகசியம் -அமிர்தராஜன் வேலூர் -தாமரை நூலகம் சென்னை)
அப்பொருள் தன் முதல் நிலைத் தன்மையில் சுத்தம் இல்லாத மண் அம்சம் உள்ள உடலைப் பெற்றுள்ளது.அது முழுவதும் ஒழுங்கற்றதாக உள்ளது.மேலும் அது பூமியின் இயல்பைப் பெற்று அனைத்து நோய்களையும் நீக்கக் கூடியதாகவும் காயங்களையும் மனிதனுக்கு வரும் குடல் நோய்களை தீர்ப்பதாகவும் சிறப்பானவைகளை (தேவையானவற்றை ) உருவாக்குவதாகவும் உடலில் குடிகொண்டுள்ள துர் நாற்றத்தை வெளியேற்றுவதாகவும் மற்றும் உடலின் அக புற நோய்களை பொதுவாக நீக்கி குணம் செய்வதாகவும் உள்ளது.
அம் மருந்து தன் இரண்டாவது தயாரிப்பில் தண்ணீர் உடலுடன் தோற்றமளிக்கிறது.முதலில் இருந்ததைக் காட்டிலும் சிறிது அழகுடைய பொருளாகவும் இருக்கிறது.அதன் குணம் உயர்த்தப்பட்டுள்ளது.அது உண்மை நிலைக்கு சற்று அருகில் உள்ளது.குணமாக்குவதில் அதிக சக்தி உடையதாய் இருக்கிறது.இந்த வடிவத் தன்மையில் அம்மருந்து சளி மற்றும் சூட்டினால் வரும்அனைத்து காய்ச்சல்களையும் நீக்கும்.(7 times distilled mercury பச்சை சிங்கம்.)மேலும் அது எல்லா விதமான விஷங்களையும் முறிப்பதில் நிச்சயமான மருந்தாக இருக்கிறது.அது நுரையீரலில் இருந்தும் இதயத்திலிருந்தும் செயல்படுகிறது.
அடிபட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் குணமாக்குகிறது.இரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது.இதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர அனைத்து நோய்களையும் சிறப்பாக குணமாக்குகிறது.
அம்மருந்து தன் மூன்றாவது நிலையில் ஆவியாகக் கூடிய மிகவும் லேசான பொருளாகவும் எண்ணெய் வடிவம் கொண்டதாகவும் உள்ளது.
இதனை ஞானிகளின் பாதரசம் எனவும் மெர்க்குறி விடே எனவும் பாதரச உயிர்ச் சத்து எனவும் அமுரி என்றும் சாரநீர் என்றும் பலபபல பெயர்களில் குறிப்பர். மேலும் இதன் இலச்சணங்களும் நிறமும் சுவையும் தீர்க்கும் நோய்களைப் பற்றியும் எழுத நிறைய விடயங்கள் உள்ளதால் அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
        No photo description available.
#அகர #ரகசியம்- பகுதி 12 (விரிவானது)
இயற்கையானது உலோகங்கள் வளர்வதற்கும்,நிறைவடைவதற்கும் ஒரே ஒரு பொருளையே தனது வேலைக்குப் பயன்படுத்துகிறது. இந்த செய்முறைக்குத் தேவையான அனைத்துமே, இப் பொருளின் உள்ளாக அடங்கி உள்ளது.நமது பொருளுக்கு சிறப்பான தனிப்பட்ட செய்முறை என்று ஏதுமில்லை. விதிவிலக்காக மென்மையான வெப்பத்திலேயே நமது பொருள் ஜீரணிக்கக் கூடியதாகவும்,மிகச் சிறந்த உயர்ந்த சரியான வளர்ச்சி அடையும் வரையிலும் இந்த செயல் தொடர்ந்து நடைபெறுவதாகவும் உள்ளது.தந்திரக்கார சித்தர்கள், இந்த எளிய வெப்பப்படுத்தும் செயலுக்கு மற்றாக, கரைத்தல், உறைதல், சுண்ணமாக்குதல், அழுகுதல், பதங்கமாக்குதல், மற்றும் வேறு அற்புதமான மாறுபாடான செய்முறைகளையும் கூறுகின்றனர்.இவ்வாறான மாறுபட்ட பெயர்கள் அனைத்திற்கும் ஒரே அர்த்தம் தான்.இந்த எளிய வெப்பப் படுத்தும் செய்முறையில் நமது பொருள் ஆயிரக்கணக்கான மடங்கு பெருக்கமடைகிறது.இந்த செயல் முடிவு பெறும் போது அப்பொருள் கடினமானதாகவும், அழிவுண்டாக்கக் கூடியதாகவும், வலிமையானதாகவும் இருக்கிறது.இதன் மூலம் வெறுப்பு,பொறாமை இல்லாமல் மற்றவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தலாம்.அல்லது கெட்ட வழிக்கும் பயன்படுத்தலாம்.ஆனால் இதை கெட்ட வழிில் நடத்திச் சென்றால் அவர்கள் கடவுளின் முன் விசாரிக்கப்படுவார்கள்.
நமது பொருளை வெப்பப் படுத்தும் போது அழுகிப் போனால் தான் மாற்றம் உண்டாகும்.அந்த மாற்றத்தை எதனுடன் ஒப்பிடுகிறார்கள் என்றால் கோதுமை தானியத்தின் வளர்ச்சியடன் ஒப்பிடப்படுகிறது. கோதுமை தானியத்தின் வளர்ச்சிக்கு மழையும், சூரிய வெளிச்சமும் முக்கியம்.இதன் மூலம் இந்த தானியம் பூமிக்குள் அழிவுக்கு உட்பட்டு பின் வளரத் தொடங்குகிறது.அது போன்றே உலோகங்களும் வளர்கிறது.இந்த செய்முறைக்குத் தான் அழுகுதல், முடிவுறுதல் என்று பெயர்.நமது பொருளை திரும்பவும் வெப்பப்படுத்தும் போது, பொருளும் சேர்ந்து பதங்கமாகிறது.இந்த வெப்பப்படுத்தும் செயலின் மூலம் தான் நமது பொருள் பதங்கமாகிறது.மற்றும் பெருக்கமடைகிறது.எனவே இந்தச் செயல்,ஒரு சாதாரண மனிதனை தவறான பாதையில் போகச் செய்ய வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு வெப்பப்படுத்தும் போது உறைதல் ஏற்படுகிறது.உறைதல் நடக்கும் போது ஈரமானது நெருப்பாக மாற்றம் அடைகிறது.இந்த செயல் நடைபெறும் போது ஆவியாவது தடைபடுவதை நம்மால் உணர முடியும்.இதனை எப்படி அழைக்கிறார்கள் என்றால் "சுற்றோட்டம்" என்றும் "இணைதல்" என்றும், " நீரும் நெருப்பும் ஒன்றாகி முழுவதும் எரிந்து போவதில் இருந்து தடை செய்கிறது" எனவும் அழைப்பர்.இதைத் தான் பல வகையான பெயர்களால் அழைக்கிறார்கள்.அது உண்மையே,, ஆனால் அது ஒரே ஒரு எளிமையான வெப்பப்படுத்தும் செய்முறையே ஆகும்.
The only true way. எனும் நூலில் இருந்து.
மாணாக்கனே, இந்த விலைமதிக்க முடியாத கல்லைத் தயாரிக்க விரும்பினால் நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை. உங்களுக்கு கிடைப்பது ஓய்வு நேரங்களே.நமக்குத் தேவை பயம் இல்லாத ஒரு சரியான இடம் மட்டுமே.நமது ஒற்றைப் பொருளை பொடியாகக் குறைக்க வேண்டும்.மேலும் அதனை ,அதன் நீரில் கலக்கவும் வேண்டும்.பின் அக்கலவையை நன்கு மூடிய ஒரு குடுவையில் இட்டு , மிதமான வெப்பத்தில் வைக்கவும். இந்த செயலைச் செய்து முடித்த பின் தான் அது செயல்படத் தொடங்குகிறது.இந்த செயல் நடக்கும் போது தான், ஈரம் அழுகுவதற்குத் துணையாக இருக்கிறது.
The Demonstration of Nature.என்ற நூலில் இருந்து.
எனக்குத் தெரியும் , இந்த எளிமையான செய்முறையைத்தான் பல சித்தர்களும் அதிக எண்ணிக்கையிலான, குழப்பமான பெயர்களைச் சொல்லி தவறாக வழி நடத்துகின்றனர். இந்த குழப்பமான பெயரிடும் முறை எதற்கு எனில், உண்மையை முகமூடி போட்டு மறைப்பதற்குத் தானே தவிர வேறில்லை.இந்த செய்முறை எளிதானது.அது சமைப்பது அல்லது கொதிக்க வைப்பது தான்.
A very Brief Tract concerning the philosophical stone.என்ற நூலில் இருந்து.
அப்பொருள் தன்னைத் தானே உறைய வைத்துக் கொள்கிறது. தன்னைத் தானே கரைத்துக் கொள்கிறது. எல்லா வண்ணங்ளும் கடந்து செல்கிறது. இந்த நல்ல செயலினால் அதனுள் உள்ள கந்தகமோ, அல்லது நெருப்போ -அதற்கு எதுவும் தேவையில்லை. ஆனால் அது கிளர்ச்சி அடைய வேண்டும்.நான் வெளிப்படையாக சொல்வதானால் அது எளிய இயற்கையான சமைத்தல் (வெப்பம்)ஆகும்.
The House of Light என்ற நூலில் இருந்து.
எந்த இடையீட்டாளரும் இல்லாமலேயே, ஒரே கிழங்கில் இருந்து வெள்ளை மற்றும் சிவப்பு அண்டக்கல் உருவாகிறது. அது தன்னைத் தானே கரைத்துக் கொள்கிறது.தானே புணர்ச்சியில் ஈடுபடுகிறது.வெண்மையாக வளர்கிறது.மற்றும் சிவப்பாக வளர்கிறது.வெண்மையும் சிவப்பும் கலந்த நிறமாக உருவாகிறது.மேலும் தானே கருப்பு நிறமாகிறது.தானே திருமணம் செய்து கொள்கிறது. தானே கர்ப்பமாகிறது. இதனால் அது வடிநீராகிறது.நெருப்பில் சுட்டது போல் இருக்கிறது. இணைந்திருக்கிறது. மேலேறுகிறது.கீழிறங்குகிறது. இந்த எல்லா செய்முறைகளும் ஒரே
ஒரு ஒற்றைச் செய்முறை தான்.(ஒரே செய்முறை) இவை அனைத்தும் வெப்பத்தினால் மட்டுமே உருவாக்கப்படுகிறது.
The Aurora of the Philosophers
என்ற நூலில் இருந்து.
நிறைவடையாத பொருளைக் கொண்டு நிறைவான வளர்ச்சியை அடைய- ஒரே இனமான பொருளை மென்மையாக ஜீரணிக்கச் செய்ய- நமது பொருள் தன் முழு நிறைவை அடைகிறது.
The Metamorphosis of Metals என்ற நூலில் இருந்து.
ஒரு விவரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.இந்த கல்லை அடைய கூறரிவு வேண்டும். ஒரே வழி மட்டுமே உண்டு.மற்றும் ஒரே பாத்திரத்தில் கொதிக்க வைத்தால், அது தனது முழு மேன்மை நிலையை அடைகிறது.
முற்றிலும் மாறுபட்ட நிலையிலும் சித்தர்கள் தந்திரமாக, மறைமுகமான,குழூக்குறியான குறிப்புகளைக் கூறுகின்றனர்.அந்த குறிப்புகள் விடுகதை போலவும்,புதிர் போலவும்,உள்ளீடற்ற சொற்றொடர்களாகவும் கூறுகின்றனர்.இறுதியாக, அவர்களது கலை மறைக்கப்படாமல் தொடர்ந்து கொண்டுள்ளது.ஆகவே போற்றுதலுக்குறியதாக இந்த கலை உள்ளது.அவர்களின் அறிவுரை என்னவெனில் கொதிக்கவைப்பது, ஒன்றாக கலப்பது, மற்றும் இணைப்பது, பதங்கமாக்குவது, சுடுவது,அரைப்பது,உறைவது, சமமாக்குவது, அழுகுவது, வெண்மையாக்குவது, சிவப்பாக்குவது இந்த எல்லா செயலுமே ஒரே செயலைக் குறிப்பது தான்.இவை அனைத்தும் கொதிக்க வைத்தல் என்ற செயலினால் தான் நடக்கிறது.
ஜீரணித்தல் மீண்டும் ஜீரணித்தல் இப்படி எத்தனை முறை நடந்தாலும் சோர்வு (ஏற்படுவதில்லை) இருப்பதில்லை.கூறரிவு வாய்ந்த கடுமையாக உழைக்கும் கலைஞன் கூட முழுநிறைவை அடைய முடியாது. ஏனெனில் அவன் பதட்டமும், அவசரமும் உள்ளவனாக இருப்பதால் தான். ஆனால் நீண்ட, தொடந்த கொதிக்க வைத்தல், ஜீரணித்தல் இவை இயற்கையில் செய்யப்படும் வேலைகள் ஆகும். இந்த கலைக்கு நாம் கண்டிப்பாக இயற்கையைப் பின்பற்ற வேண்டும்.
நமது கல் ஒரு பொருளில் இருந்து மட்டும் வருவது. மேற்கூறியவாறு, கொதிக்க வைத்தலுடன், ஒரே ஒரு வேலை, ஒரே ஒரு செயலின் மூலம் தான் நமது கல் செய்யப்படுகிறது. அந்த ஒற்றைச் செயலின் மூலம் அல்லது ஜீரணித்தல் மூலம் நமது பொருள் முதலில் கருமை நிறமடைகிறது. வெண்மை நிறமடைகிறது. மூன்றாவதாக சிவப்பு நிறமடைகிறது.
The root of the world என்ற நூலில் இருந்து.
கரைதல்,சுண்ணமாதல், நிறம் அடைதல்,வெண்மையாதல், புதுப்பித்தல் , குளித்தல், கழுவுதல், உறைதல், உறிஞ்சுதல், கொதிக்க வைத்தல்,நிலைப்படுத்தல், அரைத்தல், உலர்த்தல், வாலைவடித்தல் இவை அனைத்தும் ஒன்றே. ஒரே வேலைதான். இவை அனைத்தும் எதனைக் குறிப்பிடுகிறது எனில் இயற்கையின் திட்டமிடுதலையே.இந்த செயல் எதுவரை நடக்கிறது எனில் முழு நிறைவை அடையும் வரை தொடர்ந்து நடக்கிறது.
The true book of the learned Greek Abbot synesius.என்ற நூலில் இருந்து.
"துல்லியமான சரியான வெப்பத்தில் ,மென்மையாக சமைத்தால் நமது பொருள் ஜீரணிக்கும்.சமைத்தலுக்கு (சூடுபடுத்தலுக்கு) நமது பொருளை உட்படுத்தினால், மற்ற அனைத்து செயல்களும் இயற்கையாகவே நிகழும்".
மேற்கூறியவாறு,கொதிக்க வைத்தல் என்ற - ஒரு வேலை-ஒரு செயலின்-மூலம் தான் நமது கல் செய்யப்படுகிறது.மற்றும் நமது பொருள் முதலில் கருபபாக மாறுகிறது.பிறகு வெண்மையாகிறது.மூன்றாவதாக சிவப்பாகிறது.இது எதன் மூலம் எனில் ஒற்றைச் செயல் எனப்படும் ஜீரணித்தல் மூலம்தான்.
ஒரு பொருளில் இருந்து தான் நமது கல்லை உருவாக்குகிறோம்.
ஒரு பாத்திரத்தில், ஒரு பொருள், அதன் நான்கு தனிமங்கள் சேர்ந்து ஒரே எசன்ஸ் ஆகி, ஒரு செயலின் மூலமாகத் தான், வேலை தொடங்கி பின் நிறைவடைகிறது. அப்பனே, சொல்கிறேன் கேள், நீங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை.ஆனால் நாம் அதற்கு சிறிய வெப்பம் மட்டும் கொடுத்தால் போதும்.உங்களது அறிவுக்கு ஓய்வு கொடுத்து விடுங்கள்.இந்த கலைக்குத் தேவையான அனைத்தும் நமது பொருளில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது. பரிபூரணத்தில், தொடக்கத்தில், நடுத்தர மற்றும் இறுதியில், முழு மனிதனும், முழு மிருகமும், முழு பூவும் ஒவ்வொன்றும் சரியான விதைகளில் அடங்கியுள்ளது. இப்போது, மனித விதைகளில் அதன் குறிப்பிட்ட விதைகளில் ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மையும் அடங்கி உள்ளது.சதை, இரத்தம், தலைமுடி மற்றும் பல. இவ்வாறு, ஒவ்வொரு விதையும் அதன் இனங்களின் அனைத்து தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கிறது.இந்த முழு உலகிலும் மனித விதையிலிருந்து மனிதனும், தாவரத்திலிருந்து தாவரமும், விலங்கிலிருந்து விலங்கும் தோன்றின. இப்போது, எனக்கு தெரியும், விதையானது ஒரு பாத்திரத்தில் இணைக்கப்படும் போது - எந்த பிரச்சனையும் இல்லை அல்லது கையால் வேலை செய்ய வேண்டியதில்லை.அனைத்து வேலைகளும் அமைதியான செயலின் மூலம் படிப்படியாகவும், முழுமையாகவும் முடிக்கப்படுகின்றன.மற்றும் கல்லின் தலைமுறை இதே போன்ற முறையில் முடிக்கப்படுகிறது.குறுகிய காலத்தில் இந்த வேலை முடிவதற்கு தேவையான எல்லாமே - காற்று, தண்ணீர், மற்றும் நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய-ஒரே ஒரு பொருள் தான் தேவைப்படுகிறது.எந்தவொரு வகையிலும் எந்தவிதமான கைவேலையும் அவசியமில்லை.
மற்றும் உட்புற வெப்பத்தைத் தூண்டுவதற்கு மென்மையான நெருப்பு போதுமானது, கருப்பையில் உள்ள ஒரு கர்ப்பம் இயற்கை வெப்பத்தால் செதுக்கப்படுவது போலவே.நமது பொருளுக்கு ஒரே ஒரு உதவி மட்டுமே தேவை.முதலில் பொருளை தேவையான அளவு தயார்படுத்துதல், அதில் ஏதாவது மூன்றாவது பகுதிப் பொருள் இருந்தால் நீக்குதல் பின் நமது எளிய மண்ணை, ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடைய தண்ணீருடன் இணைத்து, பின் அடைத்து மூடி வைக்கவும்.இவ்வாறு,சரியான காற்று புக முடியாத பாத்திரத்தில் பொருளை எடுத்து மென்மையான வெப்பப்படுத்தும் செயலுக்கு உட்படுத்தினால் நமது பொருள் செயல்படத் தொடங்கும்.
A Demonstration of Nature.என்ற நூலில் இருந்து.
இந்த கலை முழுவதற்கும்..., அல்லது மொத்த வேலைக்கும் தன்னந்தனி வெப்பம் மட்டும் போதும்.
The Aurora of the Philosophers என்ற நூலில் இருந்து.
நமது கலையின் முதல் கொள்கை நெருப்பு ஆகும்.இயற்கை தனது வேலையை நடத்த வெப்பத்தையே தூண்டுகோலாக பயன்படுத்துகிறது.அதனுடைய செயலால் உடல், உயிர்(ஆவி), ஆன்மா வெளிப்படுகிறது.அது தான் மண்ணும், தண்ணீரும் ஆகும்.
The glory of the world.or Table of paradise. என்ற நூலில் இருந்து.
இயற்கையான முட்டையில் மூன்று பொருட்கள் உள்ளன. ஒன்று ஓடு,இரண்டாவது வெள்ளைக்கரு, மூன்றாவது மஞ்சள் கரு. இது போன்று நமது ஞானிக் கல்லிலும் மூன்று பொருட்கள் உள்ளன.ஒன்று கண்ணாடி போன்ற பாத்திரம், வெண்மையான நீர்மம், மூன்றாவது எலுமிச்சை நிற உடல். மற்றும் வெள்ளைக்கருவும், மஞ்சள் கருவும் எளிய வெப்பத்தால் இணைந்து,ஒரு பறவை உருவாகிறது.இந்த பறவை வெளியில் வரும் வரை அந்த ஓடு அதனை பாதுகாக்கிறது. ஆகவே, இந்த வேலை தான் ஞானிக்கல் தயாரித்தலுக்கான வேலையும் ஆகும்.
ஒரு மிதமான அல்லது மென்மையான வெப்பத்தை தொடர்ந்து கொடுத்தால், தூய்மையான மற்றும் துல்லியமான உடலை கண்டிப்பாக (நிச்சயமாக) நீ அடைவாய்.
The root of the world.என்ற நூலில் இருந்து.
நமது வேதியியல் செய்முறைக்கு ஒழுங்கு படுத்தப்பட்ட தீயை கொடுக்கும் போது மிக கவனமாகவும்,.பொறுமையாகவும் வெப்பத்தைப் பயன்படுத்திச் சமைக்க வேண்டும்.ஏனெனில் பொருளின் சரியான ஜீரணித்தலுக்கு வெப்பமே மிக முக்கியமான ஒன்றாகும்.
The water stone of the wise.என்ற நூலில் இருந்து.
No photo description available.  
Image may contain: drawing
Image may contain: one or more peopleரசவாதம் செய்வது எப்படி?
வள்ளலாரின் வாழ்க்கைச் சம்பவம் மூலம் ’ரசவாதம்’ என்பது எல்லோருக்குமானதல்ல. தங்கத்தின் மீதான ஆசை ஒழித்தவருக்கே கை வரும் என்பது புலனாகிறது.
திருமந்திரத்தில் திருமூலரும்,
“செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே”
என்கிறார்
இந்தியாவில் மட்டுமல்ல; பழங்காலத்தில் கிரீஸ், சைனா, எகிப்து மற்றும் அரேபியா போன்ற நாடுகளில் இவ்வகை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றிக் கொண்டுள்ளனர் என்பது பழங்கால நூல் குறிப்புக்களிலிருந்து தெரிய வருகிறது. 1403 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி ரசவாதப் பயிற்சியை தடைசெய்தார். அப்பயிற்சிகளை மேற்கொண்டோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அதேசமயம் இரண்டாம் ருடால்ஃப் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருவில் உள்ள தன்னுடைய அரண்மனையில் பல்வேறு ரசவாதிகளை வர வழைத்து, அவர்களை சோதனைகள் செய்ய வைத்து, அவர்களது பணிக்காக பல்வேறு பரிசுகளை அளித்து கௌரவித்திருக்கிறார்.
ரசவாதம் என்பது சாதாரண உலோகங்களை மதிப்புமிக்க தங்கமாக மாற்றச்செய்கின்ற ஒரு முயற்சி. ஆனால் அது பல்வேறு ஆபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதால் உலகெங்கும் அது வெளிப்படையாக நிகழவில்லை.
விஞ்ஞானிகளும் எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை. அந்த அணுக்களின் மூலக் கூறுகளின் அமைப்பை மாற்றியமைப்பதனால் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்ற முடியும் என்பது உண்மைதான். ஆனால் இரும்பை அந்த முறையில் தங்கமாக மாற்றுதல் சாத்தியமில்லை என்கின்றனர். ஆனால் பாதரசம், காரீயம், பிலட்டினம், வெள்ளி ஆகியவற்றின் அணுத் தொகுப்பை, மூலக்கூறு அணுவை, அணுச் சிதைவு மூலம் மாற்றியமைத்துத் தங்கமாக்கலாம் என்ற ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆனால் அவை சாத்தியமில்லை. அவ்வாறு தங்கம் செய்வதற்கு பல ஆண்டுகால மனித உழைப்பு விரயமாவதுடன், பலகோடி டாலர்கள் செலவிட வேண்டிவரும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அக்காலத்தில் பாதரசம் இந்தச் செயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகித்ததாலேயே இக்கலையை தமிழில் ‘ரசவாதம்’ என்று அழைத்தனர். நீர்ம வடிவத்தில் இருக்கும் பாதரசத்தை திடப்பொருளாக்கும் கலையிலும் அக்காலச் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவற்றை லிங்க உருவாக்கி வழிபட்டனர். பல ஆலயங்களிலும் மக்கள் வழிபாட்டிற்காக ஸ்தாபித்தனர்.
இரும்பை முதலில் செம்பாக மாற்றுதல். பின்னர் செம்பை தங்கமாக மாற்றுதல் என்று இருகூறுகளை உடையதாக ரசவாதக் கலைப் பயிற்சிகள் அக்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
வெள்ளியை தங்கமாக மாற்றும் முறைகளையும் ஆய்வு செய்திருந்தனர். ஆனால் அதற்கான வழிமுறைகளை அவர்கள் ரகசியமாகவே வைத்திருந்தனர். சித்தர்களின் பழங்கால ஓலைச்சுவடிகளிலும், பழங்கால வேதங்களிலும் ரசவாதம் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
இந்த ஆற்றல்கள் பெற்ற சித்தர்களில் பல வகையான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களில் சிலர் செம்பைப் பொன்னாக்கினர் .சிலர் பாதரசத்தையும், வேறு சிலர் காரீயத்தையும் பொன்னாக்கினர். சிலர் மூலிகைச் சாறுகளையும் பயன்படுத்தினர். வேறு சிலரோ மந்திரங்களைப் பயன்படுத்தினர்.
இந்த ரகசியமான ரசவாத ஆய்வுகள் இன்னமும் ரகசியமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நன்றி-இணையம்.

இதற்கு அடிப்படைத் தேவை உயிர்கள் மேல் அன்பு, கொல்லாமை என்னும் விரதம் ஆகியவை அடிப்படை அவசியத் தேவைகளாகும்.மேலும் பஞ்சமகா பாதகங்களை நீக்கி தர்மத்தின் வழியில் வாழ்தல் என்பவையே ரசவாத வெற்றிக்கு அடிகோலும். அதனை அனைத்து சமயங்களும் வற்புறுத்துவதை கீழ்க்கண்ட சித்தர் பாடல் மூலம் அறியலாம்.
Image may contain: text

#அகர #ரகசியம் -பகுதி 13
பரிபூரணத்திற்கும், நிறைவற்ற நிலைக்கும் இடைப்பட்ட -இடைநிலையில்-நம் தங்கத்தை நீங்கள் தேடுவீர்களேயானால், அதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.நேரடியாக தங்க, வெள்ளிப் பொருட்களில் தேடினால் நமது பொருள் கிடைக்காது.ஆனால் அப்படியில்லாமல் இடைப் பொருளில் தேடினால் நாம் தேடும் பொருள் கிடைக்கும்.முதலில் கூறியதை தேர்ந்தெடுத்தால், அதற்கு மென்மையான வெப்பத்தைத் தான் கொடுக்க வேண்டும். இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தால், மிகவும் கொடூரமான வெப்பம் தேவையாக இருக்கும். நீ உன் சரியான வழியை அறியாமலிருந்தால், இந்த புதிரான சுற்றுவட்டப் பாதையிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் போய்விடும். நீங்கள் நமது தங்கத்தை எடுத்துக் கொண்டாலும், அல்லது பொதுவான தங்கத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்கு தொடர்ந்த சரியான வெப்பம் அவசியம் தேவை. நீங்கள் நமது தங்கத்தை எடுத்துக் கொண்டால் சில மாதங்களிலேயே நமது வேலை நிறைவடைந்து விடும். நமது தங்கத்தில் இருந்து தயாரிக்கப்படும் அமுதம், பொதுவான தங்கத்திலிருந்து தயாரிப்பதை விடவும் 1000 மடங்கு அதிக மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். நமது தங்கத்துடன் நாம் வேலை செய்தால் சுண்ணம் ஆக்குவதற்கும், அழுக வைப்பதற்கும், வெண்மையாக்குவதற்கும், மென்மையான உள்ளார்ந்த இயற்கையான வெப்பமே உதவியாக இருக்கும்.ஆனால் பொதுவான தங்கத்தை நாம் பயன்படுத்தினால், மூன்றாவது பொருளின் மூலம் தான் வெப்பம் தர வேண்டி இருக்கும். எனவே இப்பொருளை நாம் புத்தம் புதிய தூய பாலுடன் ஒப்பிட முடியும்.எந்த பொருளாக இருப்பினும், நமது தங்கமோ, அல்லது பொதுவான தங்கமோ, எதுவாயினும் வெப்பத்தின் உதவியால் தான் அனைத்து செயல்களும் நடைபெறும்.
இந்த நிலையில் தொடர்ந்த சரியான வெப்பம் தருவது இன்றியமையாததாக உள்ளது. மேற்படி நிலையில் கடுமையான வெப்பம் கொடுத்தால், பதங்கமாகி மீட்டெடுக்க முடியாத அளவுக்கு பொருள் சிதைந்துவிடும். இந்தப் பொருளை் 40 நாள் பகல், 40 நாள் இரவு சிறையில் இருப்பது போல் வைத்து அதற்கு மென்மையான வெப்பத்தை மட்டும் கொடு.
நமது தூய்மையான, சமச்சீரான, ஒரு படித்தான பாதரசம் உள்ளே உள்ள கந்தகத்தினால் -நமது கலையின் மூலம்- மிதமான வெளிப்புற வெப்பத்தின் விளைவால் தானாகவே இணைந்து கர்ப்பமடையும் போது அது பால் கிரீம் போல் ஆகிறது-- ஒரு நுட்பமான பூமி தண்ணீரின் மேல் மிதந்து கொண்டுள்ளது. அது சூரியனுடன் இணையும் போது, தான் மட்டும் உறைவதில்லை.மாறாக பலபொருள்கூறு கொண்ட நமது பொருளும் நாளுக்கு நாள் மென்மைத் தன்மையை அடைகிறது. உடல் பெரும்பாலும் கரைந்துவிட்டது.மற்றும் ஆன்மா ஒரு கருப்பு நிறத்துடன் உறையத் தொடங்குகிறது.
தொடக்க நிலையில் நமது பொருள் ஈரப்பதத்துடன் இருக்கிறது.நெருப்பு மிகவும் கோரமாக இருந்தால் நீர்மமானது (தண்ணீர்) வற்றி உலர்ந்து போக ஆரம்பிக்கிறது. மற்றும் இதன் மூலம் நீங்கள் பெறும் பொருள் முழுமை அடைவதற்கு முன்னதாகவே வறண்ட உலர்ந்த காய்ந்த சிவப்பு நிறமான பொருளாக இருக்கும். எனவே இதனால் நமது வாழ்வின் குறிக்கோள் லட்சியம் காற்றில் பறந்து விடுகிறது. மற்றும் நெருப்பு போதுமானதாக இல்லாமல் இருந்தால் பொருளானது முழுமை அடையாமல் போய்விடும். மிகவும் ஆற்றல் மிக்க வெப்பம் பொருளின் உண்மையான ஒன்றிணைவைத் தடுத்துவிடும். இரண்டு உடல்கள் மோதிக் கொள்ளும்.ஆனால் இணையாது.உண்மையான ஒன்றிணைவு என்பது தண்ணீரில் மட்டுமே நடக்கும். ஆன்மா அல்லது ஆவி மற்றும் தண்ணீர் மட்டுமே அதனுடைய பொருளுடன் உண்மையாக இணைய முடியும்.இதன் விளைவாக, நம்முடைய சமச்சீரான, ஒருபடித்தான உலோகம் சார்ந்த தண்ணீர் அதனுடைய வேலையை ஒழுங்காகச் செய்ய அனுமதிக்கிறது.
இயற்கையான முறையில் முழுமையான, பரஸ்பரமான உறிஞ்சுதல் நடைபெறும் வரையில் அது உலர்ந்து விடுவதில்லை.முழுமை அடைவதற்கு முன் உலர்தல் ஏற்பட்டால் வாழ்வின் கரு அழிந்து விடுகிறது.
மிகவும் கடூரமான வெப்பம் உங்களது பொருளை கரைக்க முடியாதவாறு செய்துவிடுகிறது. மேலும் சிறு மணிகளாக உருவாகும் செய்கையை தடுத்துவிடுகிறது.
An open entrance to the closed palace of the king என்ற நூலில் இருந்து.
நுட்பமாக இணைந்த பூமி மற்றும் தண்ணீரிலிருந்து, சிறு மூலிகைகளும், பூக்களும், அனைத்து சிறு மரங்களும் உருவாக்கி வைத்துள்ளதே நமக்கு தெளிவாக உணரத் தக்கதாக இருக்கிறது. மேலும், ஒரு மரத்தையோ அல்லது மூலிகையையோ உருவாக்க நினைத்தால், நீங்கள் ஒருபோதும் மண்ணையோ, தண்ணீரையோ எடுத்துக்கொள்ளக் கூடாது.ஆனால் அவைகள் எதிலிருந்து எனில் ஐயத்துக்கிடமின்றி,(இன்னும் சொல்லப் போனால்)எல்லாப் பொருளுக்கும் பெற்றோராக இருக்கக் கூடிய, மற்றும் பூமியின் மையத்தில் உறுதியாக இருக்கும் ஒரு விதை அல்லது ஒரு தலைமுறை (வாரிசு) யைத் தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு மரம் அல்லது ஒரு மூலிகை இனம், பூமியின் பரப்புகளில் சரியான நேரத்தில் நுழைந்து, மற்றும் சூரிய ஔியில் உலா வருவதன் மூலம் நேசத்துக்குரிய அதன் சொந்த இயற்கையில் இருந்தே அதற்கான சத்துணவைப் பெற்றுக் கொள்கிறது.
இதே போல ஒரு முழுமையான உடலில் இருந்து ஒரு விதையை எப்படி எடுக்க வேண்டும் என்பதை சித்தர்களின் தெய்வீக ரசவாதக் கலை நமக்கு போதிக்கிறது. நமது கலையின் மூலம்- எதில் வைத்து தத்துவரீதியிலான மண் உருவாக்கப்படுகிறது எனில் தொடர்ந்த சரியான வெப்பத்தில் தொடச்சியாக சூடுபடுத்துவதால் வெள்ளை, சிவப்பு பொடிகள் கிடைக்கின்றன.இதன் மூலம் கீழ்நிலையில் உள்ள நமது உடல் இயற்கையின் மேம்பட்ட உடலாக மாற்றம் பெறுகிறது.
நமது பாத்திரத்தில் உள்ளடங்கி உள்ள பொருள் கொதித்து வரும்போது, பாத்திரம் விரிசல் விடும் என்ற அச்சத்தினால், முதலிலிருந்தே வெப்பத்தை எச்சரிக்கையுடன் தரவேண்டும். ஆகவே அந்த ஈரப்பதமானது மாறி மாறி வெண் புகையுடன் சுழற்சியாக மேலெழுகிறது. பின் கீழே உறைகிறது. இது ஒரு மாதத்திற்குத் தொடரும். அல்லது இரண்டு மற்றும் அதற்கும் கூடுதலான மாதங்களுக்குத் தொடரும். பிறகு மற்றொரு டிகிரிக்கு வெப்பம் படிப்படியாக உயர்கிறது. ஆகவே நீராவியானது தொடர்ந்த நீண்ட இடைவெளிகளிலேயே உள்ளடங்குகிறது. மற்றும் குறைந்த அளவே உயர்கிறது. எனவே உங்களுடைய பொருள் தனது இயற்கை சுபாவமான நிலைப்படுதலை கண்டடைகிறது. (ஆவியாகாமல் நிலையாக இருக்கும் நிலையை) அப்போது உருவாகும் சாம்பல் நிறம் அல்லது மற்ற கருநிற நிறபேதங்களும் ஒரு இடைநிலையாகக் கருதப்படும். முழுமையான கருப்பு நிலை என்பது எங்கள் அறுவடையின் முதல் விரும்பத்தக்க நிலையாகும். நமது செயலின் இந்த பகுதியில் மற்ற நிறங்களும் ஆபத்தில்லாமல் கண்காட்சி ஆகலாம். அந்த மற்ற நிறங்கள் தற்காலிகமாக தோன்றி மறைகின்றன. ஆனால் மக்காச்சோளம் போன்ற விரும்பத்தக்க மயக்கும் சிவப்பு நிறம் தொடர்கிறது. நெருப்பானது நமது பொருளை ஆபத்தான கண்ணாடியைப் போல் ஆக்குவதற்கு பொறுமையற்ற நிலையிலிருந்து தொடர்ந்து தூண்டிக் கொண்டிருக்கிறது. அல்லது ஈரப்பதம் போதுமானதாக இல்லாமல் இருக்கும்போது கண்ணாடி போல் நமது பொருள் மாறுகிறது. ஒரு அறிவற்ற கலைஞன் இந்த செயலுக்கு தீர்வாக அவனது பாத்திரத்தைத் திறந்து சரியான அளவு பாதரசத்தை அதனுடன் சேர்த்து முன்போலவே மூடி முத்திரை இடுவான். இந்தக் கலையில் அனுபவமற்ற புதிய மாணவன் அவனது பொருளின் புறத்தோற்றங்களின்படி, அவனது நெருப்பின் ஆட்சியின் மூலம் (ஆட்சி செய்யும் நெருப்பின் மூலம்) தவறான செயல்களைத் தடுக்க வேண்டும். எப்படி எனில் பொறுமையுடனும் தீர்வை வரையறுத்துக் கொண்டும் செயல்பட வேண்டும். வெப்பம் அதிகரிக்கிறது... ஈரப்பதம் அதன் மேலாதிக்கத்தை நீண்டகாலமாக வெளிப்படுத்தினால், தளர்ந்த நிலப்பகுதி மேம்படுகிறது. அப்போது நீராவியானது கருப்பாக வருகிறது. அந்தக் கருப்பு நிறம் சிறிது காலத்திற்கு நீடிக்கும். ஒரு சவ்வு
போன்ற படலம் நமது பொருளின் மீது மிதக்கும். இந்த நிலை அது நிலைப்படுவதற்கான வெளிப்படையான காட்சி அல்லது அதன் இயற்கை பண்பு ஆகும். அதன் மேற்பகுதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் இடைவெளியின் மூலம் சிறைபிடிக்கப்பட்ட நீராவி சில நேரங்களில் கருமேகங்களில் தக்க வைத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் அது விரைவாக அழிந்து விடும் அல்லது அந்நிலை மாறிவிடும். அளவில் குறைவாக இருப்பதே அதன் வளர்ச்சியாகும். முழு பொருளும் உருகிய பிசினைப் போன்று தோற்றத்தில் ஒத்திருக்கும். அல்லது புகை நிறைந்த -தரத்தில் குறைந்த- நிலக்கரி போன்று இருக்கும். நமது பொருள்முழு கருப்பு நிறமாகி கண்ணாடி பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும். அப்போது நீர்க் குமிழ்கள் வருவது குறைந்து குறைந்து நின்று விடும். இந்த நிலைக்குத்தான் கறுப்பின் கருப்பு, மற்றும் அண்டங் காக்கையின் தலை என்று மேலும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதுதான் நமது ரசவாதத் தலைமுறையின் விரும்பத்தக்க நிலையாகக் கருதப் படுகிறது. எதிர்கால வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நற்பண்பு கொண்ட புகழ்பெற்ற வெளிப்படுத்துதல் மூலம் நமது விதை முழுமையாக அழுகி இருக்கும் நிலை நீண்ட காலத்துக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
On the philosophers stone.என்ற நூலில் இருந்து.
 
அகர ரகசியம்-பகுதி 14 (விரிவானது)
திருவள்ளுவர் ஒரு சித்தர் என்ற நூலில் இருந்து.....Dr. kuppusamy siddha.
உலகம் எதில் தோன்றியதோ அதிலேயே ஒடுங்கும்.ஆதியை முதலாகக் கொண்ட உலகம் ஆதியிலேயே ஒடுங்கும்.
கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்
வாலறிவன் என்பது சித்தர்களுக்கே உரிய சொல்.(பரிபாசை)
ஞானம்-அம்பிகை=ஞானாம்பிகை.
வாலை-அம்பிகை=வாலாம்பிகை.
அதுபோல்,
வாலை-அறிவன்=வாலறிவன்
இது ஆண்பால் சொல்.
வாலாம்பிகை-நாதம்,பெண்.
வாலறிவன்-விந்து,ஆண்.
இதன் மூலம் ஞான சித்தி பெற்று அகஔி கண்ணில் அறிய இயலும்.
ஆகவே உண்மை அறிவு வாலையால் பெறப்படுவதால் வாலறிவன் என்று கூறப்பட்டுள்ளது.
வாலறிவன்-இறைவன் இருகால்.விந்து நாதம்.-அதனை ரவி மதி என்பர்.ரவி-சூரியன்.ஆண்.
மதி-சந்திரன்.பெண். இருளில் இருபாதம்.அதனை அறிந்து உண்டால் ஞானம் சித்தியாகும்.அறிவைக் காண உதவும் பொருள் அறிவு சொரூபமானது.விளக்கு ஔியில் பொருளை அறியலாம்.இருட்டு பொருளைக் காட்டாது போல் இதுவும்.
கொண்டலிலே குடியிருந்து சில நாட் சென்று ....
-அகத்தியர்.
கொண்டல் எனில் மேகம்.
காரில்லா மாரி உண்டோ
-திருவள்ளுவர்.
மேகம் மழைநீர்.மழைநீர் தான் பொருளா எனில் அதுவும் அல்ல.குறிப்பால் உணர்த்துவது அது.சித்தர்கள் கூறியது உண்மை.
உலக மாந்தர் அறிந்ததைக் கூறி மறைத்து விட்டனர்.பல ஆயிரம் ஆண்டுகள் சித்த மருத்துவர் இச் சொற்களை அறிந்தும் உண்மை அறிந்தவர் மிகச் சிலரே எனலாம்.
உலகம் அறிந்த, அவர்களிடை உள்ள உண்ணும் ஒரு பொருளை அவர்களே அறியாமல் செய்ததே அவர்கள் சித்தர் என்ற பெருமைக்குச் சான்று.
வணங்குதல் என்பது சேர்ப்பது, உண்பது ஆகும்.மருத்துவத்தில் 'குப்பி குலுக்கி சேவித்தல்' எனில் மருந்தை கலக்கி உண்ணுதல் என்று பொருள்.இது போல் சித்தர் நூல்களில் செபித்தல் வணங்குதல் என்பன மேற்குறித்த பொருளைக் காட்டும்.
"மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்,"
நீடுவாழ்வர் என்ற கொள்கை சித்தர்களுக்கே உரியது.மரணம் என்பது இறைவன் செயல் அது விதி என்று பொதுவாக கூறினாலும் இதனை சித்தர் குறிப்பாக மறுப்பர்.இது சாகாக் கல்வி.சாகா மருந்து.சித்தர்களுக்கு உரியது.
"இந்திரியமாமமுரி இருதயத்திலுமிருக்க,"
-திருவள்ளுவர்.
இருதயத்தில் இருப்பது ரத்தம்.அது உயிருடன் இருக்கச் செய்வது.எனவே காக்கும் கடவுள் எனப்பட்டார்.
இந்திரியம் ,அமுரி என்பன வெள்ளை நிறம்.இருதயத்தில் அது சிவப்பு.ஒன்று மற்றதாக மாறும்.சித்தர் குறிக்கும் இரத்தம் வெண்மையாக உள்ளது.ஒரு இடம் ஒரு பொருள் என்பது குறிப்பு.இதயம் என்பது அதனைக் குறிப்பால் உணர்த்தும்.அவர்கள் சொன்னதை நேர் பொருளாகக் கொண்டால் கொலை தான் செய்யனும்.அது உண்மையல்ல.அந்த உண்மைப் பொருளை அறிந்தால் அவன் நீடு வாழ்வான்.
"உப்பு மயம் அப்பு மயம்
ஓகோகோ திருமாலின் மயம் இப்புவி எலாம் செனித்த
இந்திரிய வாழ்க்கை மயம்."
"உப்பு மயம் அப்பு மயம்
நாத விந்து மயம்""
-ஞானவெட்டி.
உப்பு,அப்பு ,நாதம் ,விந்து எல்லாம் ஒரே பொருளைக் குறிப்பது.பாற்கடலில் விஷ்ணு உள்ளார்.அக்கடல் வெண்மை.நாம் தாய்ப்பால் ,ஆட்டுப்பால்,
மாட்டுப்பால் குடிக்கிறோம்.அதுவே இதயத்தில் ரத்தமாக ஓடுகிறது.
மாலான அப்பு
மால் தேவி உப்பு
இதய நோய்க்கு செம்பருத்திப்பூ மருந்தாகிறது.அதே போல் மான் கொம்பிலும் அம்மருந்து உள்ளது.நோய் ஒன்று மருந்து பலரூபம்.ஆனால் ஒரே குணம்.அது போன்று பிறவிப்பிணி ஒன்று அதை நீக்க மருந்து ஒன்று.அதைக் குறிப்பிட பல சொற்கள்.
"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று"
சாவா மருந்து என்பது சித்தர் சொல்.இது நடைமுறையில் புராணத்தில் கூறப்பட்டது.செயல்முறையில் சித்தர்கள் கூறி உள்ளனர்.புராணத்தில் கூறிய அமுதம் உண்ண வழி காட்டியவர்கள் நம் சித்தர்களே.
"கூற்றம் குதித்தலும் கைகூடும் "
என்ற வாக்கு இதனால் வந்ததே.
'வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல'
அடி என்பது பாதம், தாள்.சித்தர்கள் வாயு ,கால்,வாசி,முப்பு என்பர்.இது அமுரி-காற்று. மலரினும் மென்மை.இறைவன் பாதம் அப்படியே.
"ஆலகால விஷம் அமுரி
அதுதான் பானமும் சீலமாக
அதன் நஞ்சு நீக்கியே தெளிவதாக....."
விஷம் அமுதம் இணைந்தது பாற்கடல். ஒரேபொருள் விஷம் நீங்கினால் அமுதம் ,கெட்டால் நஞ்சு.விஷம்.; அமுதம் விஷம் ஆயிற்று.இரண்டும் ஒன்று.இறைவன் இப்படி உள்ளான்.ஒருவன் வேண்டுதல் வேண்டாமை உள்ளவன்.மனிதன் மனதால் பிரிக்கப்படுகிறது.
"காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே"
-வள்ளலார்.
ஞானக் கல்வி கற்று அகக் காட்சி பெற்றவர்க்கும், அப்படிக் கல்லாதவர் புறக் கண் பெற்றும் உள்ளனர்.இருவருக்கும் கண் ஒன்றே.காட்சி வேறு.சித்தர் கூறும் பொருள் இவைகளை அறியச் செய்வதால் ,அவற்றை தாய்,தெய்வம் என வழங்குவதால் அதனை வேண்டுதல் வேண்டாமை என்றனர்.அடி என்பது ரவி, மதி.
சிவம் சத்தி இரண்டும் இருகால் என்பது குறிப்பு.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர்
புகழ் புரிந்தார் மாட்டு.
சித்தர் கூறிய பொருளைத் தாய், இறைவன் என வணங்குவதால்
அப்பொருள் அக இருளை நீக்கி ஞான ஔி தருவதால் அந்தப் பெருமையுடைய பொருளை உடலில் சேர்த்தால் இரு வினைகளையும் மாற்றும்
"பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய் நீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வர்"
நிலமிசை நீடு வாழ்வர் என முன்பு கூறினார்.இங்கும் அதனைக் கூறி உள்ளார்.இந்திரியம் என்பது விந்து.அதுவே 'பொறி' என்ற ஐந்து உறுப்புகளையும் குறிக்கும்.ஏன்?
விந்து உடலான போது பொறிகள் தோன்றும்.அந்தப் பொருளை அறிந்து அதனை அவித்தால்,மாற்றி உண்டால் அது பொய்யை நீக்கும்.மெய் ஒழுக்கம் காட்டும்.அந் நெறிப்பட்டோர் நரை,திரை நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.
(மீதி அடுத்த பகுதியில்)





No photo description available.


#அகர #ரகசியம்- பகுதி 15 (♪விரிவானது)
"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு."
உலகில் வாழ நீர் அவசியம் .வான் இன்றேல் ஒழுக்கம் அமையாது.நீர் ,அப்பு என அவர்கள் குறிக்கும் பொருளை வான் என்றும் விண் என்றும் குறிப்பர்.விண்ணிலிருந்து வரும் அப்பொருள் ஒருவனை ஞானியாக்க -அவன் ஒழுக்கமுடையவனாக உலகிற்கு வழி காட்டுகிறான்.அவனை உலகம் பின்பற்றுகிறது.விண்ணில் இருந்து பெறப்படும் அப்பொருள்"நீர் " வடிவம் உடையது என்பது உட்கிடையாக உள்ளது காண்க.
"சுவை,ஔி,ஊறு,ஓசை, நாற்றமெனும்
ஐந்தின்
வகை தெளிவான் கட்டே உலகு."
ஐம் பூதங்களின் வகை தெரிதல் என்ன?அவை பொறி வழியே இழுத்த மனதை ஆட்டுவிக்கும்.இந்த உண்மை அறிந்தவர் ,அதை அடக்க வழி தெரிய வேண்டும்.அதற்கு சித்தர் கூறிய ஐம்பூதம் அடங்கிய பொருள் தெரிதல் வேண்டும்.அந்த ஐம்பூதமே உடலாகி வருவது.எனவே அதனை அறிந்து , ஐந்தை அவித்தல் செய்தால் உலகின் அடிப்படை உண்மை அறியலாம் என்பது. மற்றவர்க்கு உலகில் உண்மை தெரியாது.
"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்."
விண்,மண் என்றும் அடி,முடி என்றும் கூறியவற்றில் நிலம் மண்ணாகும்.#அகரமது #பூமியாச்சு என்பர் சித்தர்.அதில் தான் அவர்கள் கூறும் பொருள் மறைந்துள்ளது.
அதனால் நிறைமொழி பெற்ற சான்றோர் அதனை மறைத்தனர். நிறைமொழி மாந்தர் கூறிய மறைப்பு அந்த பூமியை அறிய வெளிப்படும் என்பதுகருத்து.
"பஞ்சபூதம் ஒன்று கூடிப் பார்தனில் படிந்துமே
மஞ்சுலாவு வாசியோக வாழ்வினுக்கு ளாதியாய்
விஞ்சியே படர்ந்த மூலி வேதையிதற்கு மேகுமே
வஞ்சமு மறைப்புமில்லை வழலையின்றன் போக்கிதே."
-பஞ்சரத்தினம்
பார் எனில் பூமி. அதில் உள்ளது ஐம்பூதம்.மண்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்.அதுவே சித்தர்களுக்கு வாசியோகத்திற்கு ஆதியாக அமைந்துள்ளது.அதுவே ரசவாதத்திற்கும் ஆகும்.மறைப்பு இல்லை.
வஞ்சனை இல்லை என்பது யார்க்கு குறிப்பை உணர்ந்தவர்க்கு. உலகினர்க்கு அது வஞ்சனை ,மறைப்பு.
இங்கே மண் என்பதும் பூமி என்பதும் அகரத்தில் உள்ள மண் பூதம்.நாம்வாழும் பூமி அல்ல.
சித்தர்கள் கூறிய பூநீர் மேற்படி அகரமாகிய பூமியிலிருந்து வருவது.நாம் வாழும் பூமியிலிருந்து வரும் பூநீர் அல்ல.
"புத்தியில்லா பாவிகள் தான் பூநீர் வாங்கி
பூமி தண்ணிரால் கலக்கி வெளியில் வைத்து
சித்தமது தான் கலங்கி முப்பூவென்றும்
சிறந்த சரக்கத்தனையும் சுட்டுப் பார்த்து
பித்தமது தான் பிடித்து நோயால் மாய்ந்து
பிணமாகிச் சுடுகாடு போனார் தானே.,"
.. அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி.
குறளில் உள்ள மூன்று பெரும் பிரிவுகள் அறம் பொருள் இன்பம் என்பவையாகும்.அவை பால் என்று ஏன் கூறினார்.பிரிவு, வகுப்பு என்று ஏன் கூறவில்லை?
ஞானம் பெற உதவும் பொருளைப் பால் என்றும் அமுதம் என்றும் கூறுவர்.
அவற்றுள் உள்ளது மூன்று பொருள்.வாயு,நீர்,நெருப்பு.இவை ஒன்று படல் வேண்டும்.அ+உ=10; 8+உ=10; என இரண்டு பொருளால் மூன்றாம் பொருள் கிட்டும்.அ-ஆண்;உ-பெண் சேரச் சிற்றின்பம் சிறிது நேரம் உள்ளது.இதே நிலை யோகநிலையிலும் அனுபவமாக உணரலாம்.அது நீடித்தது எனவே பேரின்பம்.
எனவே அறத்துப் பாலைக் கற்று ,பொருட்பாலைக் கற்று முறைப்படி உலகில் வாழ இன்பம் வாய்க்கும்.
அறத்துப்பால் அ, பொருட்பால் உ ,அ+உ= இன்பத்துப்பால்10.
இந்தப் பொருளை பிரம்மா,விஷ்ணு,சிவன் என்பர்.சரஸ்வதி,லட்சுமி,பார்வதி என்பர்.ஏன்.தாய்.,தந்தை ஆவதால்.
"முப்பொருளாய் நின்றிலங்கும் மதியே விந்து"
மதி-சந்திரன்-பெண். அதில் மூன்று பொருள் உள்ளது.அதுவே விந்துவுமாம்.
"பூருவத்தில் உதித்த கடல் கல்லுப்பும்
பூநீரின் உப்பும் அமுரி உப்பும்
வாரறிந்த முப்பொருளும் மூன்றுப்பாகும்,"
இதனையே,
"என்னவே வானத்திடியினி லொன்று
கன்னியமான கடல்தனில் ஒன்று
பொன்னெனப் பூத்த பூமியிலொன்று
முன்னவர் சொன்ன முப்பு இம்மூன்றே,"
வானம்-வான்பொருள்.
வான்பொருளில், இடி எனப்படும் நெருப்பினால் உண்டான நாதமாகிய கந்தகம் ஒன்று, அகரத்தில் கடலாக இருக்கும் விந்தாகிய ரசம் ஒன்று,
அண்டக்கல் என்ற பூமியில் உப்பு ஒன்று. இந்த மூன்றினால் உண்டாக்கப்பட்டது தான் முப்பாகும்.
"வெள்ளமுதை மூன்றுதினம் தின்றாயானால்
கள்ளமன்று தேகமது அருணன் போலாம்
கால்வலுக்கும் மேல்வலுக்கும் கண்துலங்கும்
காயசித்தியோக சித்தி கைக்குள்ளாகும்."
வெள்ளமுது-வெள்ளைநிற அமுதம்.
அமுரி கற்பம்.அதுவே விந்து தண்ணீர்.மூன்று நாள் சாப்பிட்டால் ஏற்படும் பலன்.அமுரியை சிறுநீர் என்பவர்கள் யோசிக்க வேண்டும்.
உலகம் தோன்றுவது எதில், ஒடுங்குவது எதில்.அதில் அதன் விதி முறை பற்றிச் சித்தர்கள் அறிந்தனர்.அந்த ஆதி நிலையும் அ, உ என்பர்.
தோற்றமாகி வந்த பின் பஞ்சபூத நிலைகளில் மூலப் பொருளும் அ, உ என்பர்.
உயிர்களின் தோற்றமானால் அதற்கும் முதற் பொருள் அ, உ என்பர்.
இந்த இருபொருளும் ஒன்றிலிருந்து தோன்றியது.உடலில் விந்து நாதம் என்பதும்; ஆண்,பெண் விந்து, நாதம் என்றும்;
சூரிய,சந்திரர் விந்து,நாதம் என்றும்;
மின்னல், இடி விந்து,நாதம் என்றும்;
அப்பும்,உப்பும் விந்து,நாதம் என்றும்
இடம், பொருள் கண்டு கூறிச் செல்வர்.இந்தப் பொருளை வாலை என்றும்,கற்பம் என்றும்,முப்பு என்றும் கூறுவர்.
உடல் உருவம் ஆகும் முன் புல் நுனியில் பனித்துளி போல் இருந்தது விந்து.நாதம் அது சூட்சும நிலை.ஒவ்வொரு விதையும் தன்னுள் இப்படி உள்ளது.இப்பொருளைக் கொண்டு மருந்து செய்து மனம் அடங்கி அஷ்டசித்தி பெற்றவர்கள் சித்தர்கள்.
"சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே"
என்பது தாயுமானவர் வாக்கு.இங்கு சித்-மனம் எனப்படுகிறது.சத்-சித்-ஆனந்தம் என்ற போது சித் என்பது அறிவு.ஒரே பொருள் மூன்று நிலை.
"எத்துனையுந் தாம் பேதமுறா
தெவ்வுயிரும் தம்முயிர் போல்உள்ளே
ஒத்துரிமை உடையார் யாவர்
அவருள்ளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான்
நடம் புரியும் இடம்..."
இறைவனைச் சித்துரு என்கிறார்.
,"சித்தான பஞ்சவர்கள் ஒடுங்கும் போது" காகபுசுண்டர் காவியம்.
இங்கே பஞ்சபூதம் சித்து எனக் குறிக்கின்றார்.
"சிவமான தேகமது மந்திர சித்தாச்சே," அகத்தியர்.
தேகம் -சித்து.
சித்து என்பது இறைவனைக் குறிப்பது.அது உடலிலும் உள்ளது.இதனை அறிந்து இணைத்தால் முக்தி.
உடல் எது?
"உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்
கடலில் சிறுகிணற் றேற்ற மிட்டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கிரைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலுமாமே"
"கரையருகே நின்ற கானல் உவரினை
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரை திரை நீக்கி நுகர வல்லார்க்கு
நரை திரை மாறு நமனங்கில்லையே"
அமுரி தாரணை என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள பாடல்.
இதனை உண்டால் மரணமில்லாப் பெருவாழ்வு. அகார,உகாரம் எனும் பொருள் எங்குள்ளது. அது உடலில் உள்ளது.எது உடல்.
"சித்தியென்ன பத்தாகு மாதமப்பா," -அகத்தியர்.
"மாதம் பத்தானால் விளைவுமாச்சு
மண்ணிலே வந்தவுடன்பசளையாச்சு,"
பத்துமாதம் என்பது கற்பம்.அது பிண்டம் .மண் என்பது கருத்து.பசளை என்பது குழந்தை. அ+உ=8+2=10
குழந்தையும் பத்து மாதம்.ஆகவே குழந்தை.பசளை என்பர்.
"கண்டுனர்வோர்க் கெய்தும்
நாத விந்துற்பத்தி காயத்திலே,"

ஆகவே உடல் என்பது மனித உடல் அல்ல .
சித்தியாவது வெற்றி என்ற பொருளுடையது.மனதில் இறைவன் உள்ளான்.மனம் அடங்காது.அதை அடக்கக் கண்ட குறுக்கு வழி கற்பம்.
மனம் எங்கு உதித்தது அங்கு ஒடுங்கும்.அதனைச் சித்தர் உணர்ந்தனர்.அப்பொருளை அறிந்தனர்.அதனைக் கொண்டு சாதனை செய்தனர்.வெற்றி பெற்றனர்.
மனம் விரியும் போது சுவாசத் தொடர்பு உண்டாகிறது.ஒரு நாளின் சராசரி மூச்சு 21,600 ஆகும்.சுவாசம் குறையும் போது மனம் அடங்கும்.இதனை வாசியோகம்,பிராணாயாமம் என்று குறிப்பிட்டாலும் உலகம் கொள்ளும் பொருள் அல்ல எனக் கூறி உள்ளனர்.
(நான் இதனை ஏற்கனவே அகர ரகசியம் என்ற கட்டுரையில் கூறி உள்ளேன்.)
அதாவது மூக்கு வழியில் மூச்சை இழுத்து,நிறுத்தி ஒரு துளையிலிருந்து மறு துளையில் விடுவது உலகக் கருத்து.இதனை சித்தர்கள் மறுத்துள்ளனர்.
மறை என்பது தொழிற் பெயர்.மறைத்துவை என்பது பொருள்.தக்கவர் அல்லாதவர் அறியக் கூடாது. தக்கவர் தாமே அறிவர். அறிந்த பின் தகாதவர் முன் அதை வெளிப்படுத்துதல் உலகிற்கு இடையூராக முடியும். எனவே மறைத்து விடு.எனவே அவர்கள் கூறியது யாவும் குறிப்புப் பொருளாகவே பரிபாசையாகவே உள்ளது காண்க.
"யோகிக் காகும் உடற் குறிக் கற்பம்
போகிக்காகாப் பொருள் சித்தியில்லை காண்."
உலகினர்க்கு அது உதவாது.காரணம் உருவில் மனிதர்.உள்ளத்தில் வேறானவர்.
'சிவயோகி பார்த்தால் சித்தியாகும்.
அவயோகி பார்த்தால் அழிந்தே போகும்'
'பற்றற்றுப் பார்க்கும் பரம யோகிக்கே அல்லால் மற்றையோர் உற்றுற்றுப் பார்த்தாலும் உணர்வு தோன்றாது.'
ஆகவே உணர்ந்தோர் மறைப்பது
நன்று நன்று நன்று.
Image may contain: 1 person
Image may contain: indoor




No photo description available.






 அகர ரகசியம் பகுதி -16
முப்பு செய்முறை எனது அனுபவம்.
ஒரு, ஒரு லிட்டர் கண்ணாடி குடுவையில் நமது மெய்ப் பொருளை எடுத்துக்கொண்டு குடுவையை மூடியால் மென்மையாக மூடவும்.இந்த குடுவையை எலக்ட்ரிக்கல் ஹீட்டரில் அடியில் படாமல் வைத்து,அடிப்பகுதி சற்றே உயர்ந்திருக்குமாறு தூக்கி ஸ்டேன்டில் மாட்டி வைக்கவும்.பின் ஹீட்டரை ஆன் செய்து ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கவும்.இந்த வெப்பமானது அதிக அளவும் இல்லாமல், குறைந்த அளவும் இல்லாமல் மிகவும் சரியான அளவு இருக்கும் படி அமைக்க வேண்டும்.அப்படி எனில் எந்த அளவு வெப்பத்தில் வைக்க வேண்டும் ?என நீங்கள் கேட்பது புரிகிறது.அதாவது நமது பொருளின் நீரானது ஆவியாகிபின் மீண்டும் தண்ணீராகி கீழே இறங்கும் அளவு சரியான டிகிரி வெப்பநிலையில் இருக்க வேண்டும்.(It is very important to ensure the degree of heat is exactly right.What is the right degree is something that is known by understanding what you are currently trying to achieve in that particular stage of the work.Usually it's either the first point of dryness or the circulation of the moisture) குறைவான வெப்ப நிலையில் நீரானது ஆவியாக மாறாமல் நின்று விட்டால்நமது பொருள் எந்த மாற்றமும் அடையாது.(நீராக மாறாது) மாறாக,அதிக அளவு வெப்பம் தந்தால் குடுவை வெடித்துச் சிதறி விடும்.
எனவே சரியான வெப்பத்தில் நமது பொருளை வைத்தால் முதலில் குடுவையில் இருக்கும் காற்று வெப்பத்தால் விரிவடைந்து குறிப்பிட்ட அளவு மட்டும் 'டக்' என மூடியை திறந்து கொண்டு வெளியேறும்.உடனே மூடியானது வெளிக்காற்றின் அழுத்தத்தால் காற்று உட்புகாதவாறு உடனே மூடிக்கொள்ளும்.இவ்வாறு பல முறை நடைபெறும்போது, சில நேரங்களில் மூடியானது இறுக மூடிக்கொள்வதும் உண்டு.இதனால் காற்று வெளியேறமுடியாமல் போகும்.இவ்வாறு நேர்ந்தால் குடுவை வெடித்து விட ஏதுவாகும்.எனவே கவனமுடன் அருகில் அமர்ந்து கொண்டு மூடியை சற்று தளர்த்தி விட காற்று புஸ் என வெளியேறி விடும்.சில நேரங்களில் மூடி தெறித்து கீழேவிழுந்து விடும்.அவ்வாறு விழுந்தால் மீண்டும் மூடியை எடுத்து மென்மையாக மூடவேண்டும்.ஒரு கட்டத்தில் காற்று முழுவதும் வெளியேறிய பின்பு மூடியானது வெளிக்காற்றின் அழுத்தத்தால் தானகவே் இறுக மூடிக் கொள்ளும் இதனை் நிதானித்து மூடியை மேலும் இறுக மூடிவிடவும்.
இதன் பிறகு குடுவையில் காற்றில்லா வெற்றிடத்தில் நமது மெய்ப்பொருள் தனது நிலைத் தன்மையில் சிறிது சிறிதாக மாற ஆரம்பிக்கும்முதலில் பிஸ்கட் நிறமாகி பின் பிரவுன் நிறமாகி பின் கட்டிகளாகவும் நீராகவும் பிரிந்து நிற்கும்.இந்த நிலை மாற்றமானது 24 மணி நேரத்தில் நடைபெறும்.நடைபெறவேண்டும்.இல்லை எனில் எத்தனை நாள் வெப்பத்தில் வைத்திருந்தாலும் மாறாது.
கட்டிகள் குடுவையின் அடியிலும் நீரானது அதன் மேலும் நிற்கும்.இந்த கட்டிகள்பிரவுன் நிறத்திலிருந்து படிப்படியாக கருஞ்சிவப்பாகி பின் கருப்பு நிறத்திற்கு நிறமாற்றம் அடைய ஆரம்பிக்கும்.இந்த கருப்பு நிறத்தையே ஞானிகள் அண்டங்காக்கையின் தலை என்றும் டிராகன் பாம்பின் தலை என்றும் உருவகமாக கூறுவர்.இந்த மாற்றத்தின் போது 5,6 வது நாளில் டார்ச் அடித்துப் பார்த்தால் தண்ணீரானது பல வண்ண நிறங்களில் தோற்றமளிக்கும்.7,8 வது நாளில் பார்க்கும்பொழுது நிறங்கள் மாறி வேறு வேறு வண்ணங்களில் தோற்றமளிக்கும்.10,11 வது நாளில் மேலும் பல நிற மாற்றங்கள் இருக்கும்.14,15 வது நாளில் தண்ணீரானது இளஞ்சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்திற்கு நிற மாற்றம் அடைந்திருக்கும்.15 வது நாளிற்குப் பின் தண்ணீரானது தன் அளவில் குறையத் தொடங்கும்.எப்படி தண்ணீர் எங்கு போகிறது.? குடுவையோ கண்ணாடிக் குடுவை. மேல் மூடியானது காற்று ஊடுறுவ
இயலாதவாறு மூடப்பட்டுள்ளது.எனில் தண்ணீர் எப்படி குறைகிறது.குடுவையின் அடியில் கட்டிகட்டியாக உள்ள திடப்பொருளானது தண்ணீரைக் குடிக்க ஆரம்பிக்கும். அதாவது தண்ணீரானது கட்டியான பொருளாகவும் , கட்டிகள் தண்ணீராகவும் மாறும்.(You should also know that in our Art we distinguish two things -the body and the spirit: the former being constant, or fixed.while the other is volatile.These two must be changed,the one in to the other ; the body must become water and the water is body.Then again the body becomes water by its own internal operation,and the two,i.e., the dry and the liquid,mustonce more be joined together in an inseparable union.This conjunction could not take place if the two had not been obtained from one thing; for an abiding union is possible only between things of the same nature.Of this kind is the union which takes place in our Art; for the constituent part's of the matter are joined together by the operation of the nature, and not by any human hand.)
17,18வது நாளில் நீரானது80,90 சதம் குறைந்து போகும்.இந்நிலையில் குடுவையை சரியான வெப்பநிலையில் வைக்க வேண்டும்.இவ்வாறு வைக்காததால் எனது குடுவை 18ம் நாள் மாலை வெடித்துச் சிதறி விட்டது.
நான் ஏற்கனவே முப்பு செய்முறையில் கூறியது போல (அரிசி தண்ணீரை உட்கொண்டு சாதமாக மாறுகிறதே அதுபோல) நமது திடப்பொருளும் தண்ணீரை உட்கொண்டு அண்டக்கல்லாக மாறும்.இவ்வாறு அண்டக்கல்லை நாம் தான் தயாரிக்க வேண்டுமே அன்றி அண்டக்கல்லானது பூமியில் எங்கும் கிடையாது.நமது சித்தர்கள் முதல் பொருளுக்கும் அண்டக்கல் என பெயர் வைத்ததால் வந்த குழப்பம் இது.இங்கு கட்டியான பொருள் பெண்ணாகவும், தண்ணீர் ஆணாகவும் கொள்ளப்படும்.ஆண் பொருள் ஆவியாககூடியது.பெண் பொருள் நிலையானது.தண்ணீரே ரசம் என்றும் ஈரம் என்றும் ஆவி என்றும் ஆன்மா என்றும் கூறப்படும்.பெண் பொருள் உடல் என்றும் விதை என்றும் கல் என்றும் கந்தி என்றும் கூறப்படும். காரசாரம் எனப்படும் இவைகளை ஒரு பொருளில் இருந்து மட்டுமே எடுத்து பயன் படுத்த வேண்டுமேயன்றி வேறுவேறு தனித்தனி பொருள்களில் இருந்து அல்ல.T he two substances on which you operate are solid and liquid. The two must originate from the same source,the one ingredient that you started with. You cannot use the spirit from one substance and the body from another substance.
இந்த அண்டக்கல்லானது வெண்மையாகவும், கிரிஸ்டல் கிரிஸ்டலாகவும், வெண்பனி போன்றும் குடுவையின் உயரங்களிலும் பக்கங்களிலும் உருவாகி இருக்கும். A stone Crystalline,white as Snow ,rising from the bottom of the vessel sticking to the sides of it,the remainder of its resting in the bottom of the vessel.
ஹெர்மஸ் என்ற கிரேக்க ஞானி கூறுவது போல அந்த அண்டங்காக்கையின் தலையை வெட்டி நீக்கிய பின் மீதி என்ன இருக்கிறதோ அதுவே நம்முடைய கலையின் முதற் பொருளும் மூலப்பொருளுமாகும்.இந்த இடத்தில் முதற் பொருள் என்றது நாதவிந்தைக் குறிக்கும்.நாற்றம் வீசும் பகுதியை அதிலிருந்து பிரித்து எடுத்தால் (உண்மையில் எதையும் பிரித்து எடுப்பதுமில்லை சேர்ப்பதுமில்லை) நட்சத்திரங்கள் ஔிவிட்டுப் பிரகாசிக்கும் தன்மையைப் பெற்றிருக்கின்ற கல் உருவாகி இருக்கும்.இக் கல்லானது தன்னுடைய நாளத்தில் நீர்ப் பறவையின் ரத்தத்தைப் பெற்றிருக்கிறது. இந்தக் கல்லின் முதல் சுத்திகரிப்பு என்னவென்றால் இதை ஔிவிடும் வெண்மைக் கல்லாக மாற்றுவதுதான்.(அடுத்த செய்முறை) என்கிறார்.
இவ்வாறு மாற்றப்பட்ட வெள்ளைக் கல் அடியுப்பு என்றும் பூநீறு என்றும் மண் என்றும் பூமி என்றும் அழைக்கப்படும்.இதனை புனிதமான இயற்கை அற்புதங்களின் தங்கப் பெட்டகம் என்ற நூலில் பெனிடிக்டஸ் பிகுலஸ் அவர்கள் "அப்பொருள் தன் முதல் நிலைத் தன்மையில் சுத்தம் இல்லாத மண் அம்சமுள்ள உடலைப் பெற்றுள்ளது.அது முழுவதும் ஒழுங்கற்றதாக உள்ளது. மேலும் அது பூமியின் இயல்பைப் பெற்று அனைத்து நோய்களையும் நீக்கக் கூடியதாகவும், காயங்களையும் , மனிதனுக்கு வரும் அனைத்து குடல் நோய்களையும் தீர்க்கக்கூடியதாகவும், சிறப்பானவைகளை (தேவையானவற்றை) உருவாக்குவதாகவும், உடலில் குடிகொண்டு்ள்ள துர்நாற்றத்தை வெளியேற்றுவதாகவும் மற்றும் உடலின் அக புற நோய்களை பொதுவாக நீக்கி குணம் செய்வதாகவும் உள்ளது" என்றும் கூறுகிறார்.








5 comments:

  1. ஐயா இந்த பதிவு தேடினாலும் காணக்கிடைக்காதது. அற்புதம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான விளக்கம் நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா! தாங்கள் நீண்ட காலத்தைச் செலவழித்து பல ஆராய்ச்சிகள் செய்து பல ரகசியங்களை வெளிக்கொணர்ந்து தந்துள்ளீர்கள்.மன அமைதியுடன் ஆறுதலாக வாசித்தால் பல ரகசியங்களை அறியலாம். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
    சிறீலங்காவிலிருந்து சித்த மருத்துவர் த கிருஷ்ணபகவான்.

    ReplyDelete