பேய்பூதகண தோஷங்களுக்கு வேப்பிலையைக் கொண்டு மந்திரித்து அடிப்பதைப் போல் பேய் மிரட்டி இலைகளையும் கத்தையாகக் கட்டிக் கொண்டு அடிப்பது வழக்கம் ஆகையால் இது பேய் மிரட்டி எனக் கூறப்பட்டது..
பேய்மிரட்டியின் பச்சிலையை அகல் விளக்கின் திரியாகப் போட்டு விளக்கேற்றி வைத்தால் பச்சை இலை எறிகிறது. உண்மைதான். சித்தர் பாடல்
பேய்மிரட்டியின் பச்சிலையை அகல் விளக்கின் திரியாகப் போட்டு விளக்கேற்றி வைத்தால் பச்சை இலை எறிகிறது. உண்மைதான். சித்தர் பாடல்
பேய்மிரட்டி
மாந்தக கணங்கழிச்சல் மாறா வயிற்றுவலி
சேர்த்து வரும் கரப்பான் றீச்சுரமும்-பேர்த்துவிடும்
வேய்மிரட்டுந் தோலுடைய மெல்லியலே ராசியமாய்
பேய்மிரட்டி என்றொருகாற் பேசு
மாந்தக கணங்கழிச்சல் மாறா வயிற்றுவலி
சேர்த்து வரும் கரப்பான் றீச்சுரமும்-பேர்த்துவிடும்
வேய்மிரட்டுந் தோலுடைய மெல்லியலே ராசியமாய்
பேய்மிரட்டி என்றொருகாற் பேசு
இதுவுமது
ஏக்கமுறு கழிச்சல் மாந்த சுரம்
வீக்கம் வயிற்று வலி விட்டோடும்-தாக்குகின்ற
பேய்மிரட்டும் பாதகமும் பேருலகில் அஞ்சிவிடும்
பேய்மிரட்டி நற்குணத்தை பேசு
ஏக்கமுறு கழிச்சல் மாந்த சுரம்
வீக்கம் வயிற்று வலி விட்டோடும்-தாக்குகின்ற
பேய்மிரட்டும் பாதகமும் பேருலகில் அஞ்சிவிடும்
பேய்மிரட்டி நற்குணத்தை பேசு
பேய்மிரட்டியிலை
வெள்ளடுப்பு சீதம் வெதும்பல் சுரத்துடனே
யள்ளடுக்கு மாந்த மதிவாதந்-தெள்ளு மொழி
மாதே வெதுப்படக்கி வன்றழையுற் காய்ச்சலோடு
கோதேறி ரத்தமும் போக்கும்.
வெள்ளடுப்பு சீதம் வெதும்பல் சுரத்துடனே
யள்ளடுக்கு மாந்த மதிவாதந்-தெள்ளு மொழி
மாதே வெதுப்படக்கி வன்றழையுற் காய்ச்சலோடு
கோதேறி ரத்தமும் போக்கும்.
ஓர் அரிய அஷ்ட கர்ம மூலிகை பேய் மிரட்டி என்னும் இரட்டைப் பிரமட்டை
ஓர் அரிய மூலிகை அஷ்ட கர்ம மூலிகைகளில் ஒன்றான பேய் மிரட்டி என்னும் இரட்டைப் பிரமட்டை என்னும் பெருந்தும்பை
பேய் மிரட்டிபேய் மிரட்டி
மாந்தக கணங்கழிச்சல் மாறா வயிற்றுவலி
சேர்த்து வரும் கரப்பான் றீச்சுரமும் – பேர்த்துவிடும்
வேய்மிரட்டுந் தோலுடைய மெல்லியலே ராசியமாய்
பேய்மிரட்டி என்றொருகாற் பேசு
- ( பதார்த்த குண விளக்கம் )-
குணம்:- பேய்மிரட்டியினால் கணமாந்தம் , பேதி , வயிற்று நோய் , கரப்பான் , கோர சுரம் , ஆகிய இவைகள் போம் என்க.
( இதுவுமது )
ஏக்கமுறு கழிச்சல் மாந்த சுரம்
வீக்கம் வயிற்று வலி விட்டோடும் -தாக்குகின்ற
பேய்மிரட்டும் பாதகமும் பேருலகில் அஞ்சிவிடும்
பேய்மிரட்டி நற்குணத்தைப் பேசு
- ( பதார்த்த குண விளக்கம் )-
( இ – ள் ) பேய்மிரட்டி பூண்டால் கழிச்சல் , மாந்த சுரம் , வீக்கம் , வயிற்று வலி , பேய் மிரட்டு என்னும் படியான கிரக தோஷம் முதலியவைகள் போம் என்க .
செய்கை:- சங்கோசனகாரி , ஜடராக்கினி வர்த்தினி , உதர வாத ஹரகாரி , சுவேதகாரி , சுர ஹரகாரி , அங்காகர்ஷண நாசினி .
உபயோகிக்கும் முறை:-பேய்மிரட்டிச் சமூலம் கசப்புச் சுவையுள்ளது . இதைக் கியாழமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி , இருமல் , சீத சுரம் இவைகள் போம் . ஒரு பலம் சமூலத்தை தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு அரைப்படி ஜலம் விட்டு , அரைக்கால் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் இரண்டு வேளை கொடுக்கலாம் அல்லது கால் ரூபாய் எடை ஓமத்தையும் , கால் ரூபாய் எடை மிளகையும் ஒரு புதுச் சட்டியில் போட்டு அடுப்பிலேற்றி வறுத்து கரியான சமயம் கால் படி ஜலம் விட்டு ஒரு பலம் பேய் மிரட்டி இலையை குறுக அரிந்தது போட்டு காலில் ஒன்றாக குறுக்கிக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் இரு வேளை கொடுக்கலாம் .இத்தகைய கியாழங்கள் குழந்தைகளுக்கு பல் முளைக்கும் சமயம் காணுகின்ற பேதியை குணப்படுத்த இன்றியமையாதது ஆகும் .இதன் சமூலத்தை ஒரு பெரிய பாண்டத்தில் போட்டு ஜலம் விட்டு கொதிக்க வைத்து வேது பிடிக்க ( ஆவி பிடிக்க ) சுரம் தலைவலி போகும் .
குறிப்பு இந்த இனத்தின் இலை நீளமாக இருப்பதை இரட்டைப் பேய் மிரட்டி , இலை வட்டமாக இருப்பதை ஒற்றைப் பேய் மிரட்டி என்றும் கூறுவது உண்டு. இவைகள் முறையே ஆண் பெண் என்று கருதப்படுகின்றன . ஆண் பிள்ளைகளுக்கு காணுகின்ற நோய்களுக்கு பெண் இலையும் பெண்களுக்கு காணுகின்ற நோய்களுக்கு ஆண் இலையும் சிகிச்சைக்கு ஏற்றது என்பது சில அறிவாளர்களின் கருத்து . பேய் பூத கண தோஷங்களுக்கு வேப்பிலையைக் கொண்டு மந்திரித்து அடிப்பதைப் போல் , பேய் மிரட்டி இலைகளையும் கத்தையாக கட்டிக் கொண்டு அடிப்பது நாட்டு வழக்கம் ஆகையாற்றான் பேய் மிரட்டி என்று கூறப்படுகிறது .
பேய்மிரட்டியிலை
வெள்ளெடுப்பு சீதம் வெதும்பல் சுரத்துடனே
யள்ளடுக்கு மாந்த மதிவாதந் – தெள்ளு மொழி
மாதே வெதுப்படக்கி வன்றழையுற் காய்ச்சலோடு
கோதேறி ரத்தமும் போக்கும் .
- ( பதார்த்த குண விளக்கம் )-
குணம்:-வெதுப்படக்கி என்னும் பேய்மிரட்டி இலையானது வெளுப்பான பேதி , சிலேஷ்ம கிரகணி , தாபம் , ருட்சை , அள்ளு மாந்தம் , வாதாதிக்கம் , உட்சுரம் , ரத்த தாதுவிலுண்டான மலினம் ஆகிய இவைகளைப் போக்கும் என்க .
செய்கை:-சங்கோசனகாரி , ஜடராக்கினி வர்த்தினி , உதர வாத ஹரகாரி , சுவேதகாரி ,
சுர ஹரகாரி
உபயோகிக்கும் முறை:-இதன் உபயோகம் முற்கூறப்பட்ட சமூலத்திற்கு உரித்தானது .
பேய்மிரட்டி இலையை பச்சையாகவே எடுத்து திரி போற் திரித்து நல்லெண்ணெய் , நெய் , ஐங்கூட்டு எண்ணெய் போன்றவை ஏதாவதொன்றில் போட்டு வீட்டில் விளக்கேற்றி வர ஏவல் , பில்லி சூனியம் , பேய் , பூதம் , குடும்ப ஒற்றுமை இல்லாத தன்மை , இவற்றை நிவாரணம் செய்யும் . கீழே பேய்மிரட்டி இலையை பச்சையாகவே எடுத்து திரி போற் திரித்து விளக்கேற்றும் காணொளிக்காட்சியைக் காணலாம் .இதிலிருந்து வெளிப்படும் அகச் சிவப்புக் கதிர்கள் சுவர்களையும் தாண்டி ஊடுருவிச் சென்று வீடு முழுவதும் மட்டுமல்ல , நம் தெரு வரையும் பரவி நன்மை அளிக்க வல்லது .
No comments:
Post a Comment