Monday, 14 January 2019

சப்த பிரம்ம யோகம்

சப்த பிரம்ம யோகம் !!
------------------------------
சிவயோகத்தில் "சப்த பிரம்ம யோகம் " என்ற
தவமுறை உள்ளது , இது சிவனால் சக்திக்கு
நேரிடையாக சொல்லிகொடுத்த தவ
முறையாகும் . இதை எந்த வயதினரும்
செய்யலாம் . திடமான மனம் மட்டும் போதும் .
செய்முறை : நீராடி உடல் சுத்ததோடு தீபம்
ஏற்றி பின் குருவருள் கேட்டு ( யோக குரு
இல்லாதோர் ஈசனை குருவாக ஏற்க்கலாம் )
சிவபக்தியுடன் சுகாசனத்தில் அமர்த்தல்
வேண்டும் . பின்பு " தர்ஜனீ " என்று
சொல்லப்படும் மோதிர விரலால் இரண்டு
காது துவாரங்களையும் அடைத்துக்கொள்ள
வேண்டும் . கண்கள் மூடிய நிலையில்
இருக்கும்போது இம்ம்ம் எனும் சப்தம் கேட்கும்.
இந்த சப்தத்ததையே மனம் கவனித்தல்
வேண்டும் . இதே போல் தினமும் 10
நிடங்களில் ஆரம்பித்து 48 நிமிடங்கள் வரை
நேரம் உயர்த்த வேண்டும் . பின்பு தினமும் 48
நிமிடம் 6 மாதம் சரியாக செய்தாலே யோகம்
கைகூடும் . இந்த 6 மாதமும் சம்சார பந்தம்
விலக கூடாது . இந்த தவம் கைகூடும்போது
ஈசா சக்தியானது அடி வயிற்றில்
ஜடாரக்னீயாய் சூழல ஆரம்பிக்கும்.
அப்போது
இந்த சக்தியோடு குண்டலினியும் சேர்ந்து 9
ஓசை களாக தவம் செய்வோர்க்கு ஈசன் அருள்
புரிவான் .அப்போது அங்கே " சப்த பிரம்ம
ஞானம்" உண்டாகும் . இந்த எளிமையான
முறையை எல்லோரும் செய்யலாம் . இந்த
தவம் செய்யும் போது ஈசன் 9 ஓசை
இந்த
யோகமுறையை சரியாக அப்பியாசம்
செய்பவர்களின் உடலில் ஈசன் 9 வகை
சப்தங்களாக சாதர்களுக்கு தன்னை
உணர்த்துவான் .
1.கோஷம் : இந்த சப்தநிலை கேட்டு தவம்
செய்பவர்க்கு சர்வ ரோகங்களிலும் இருந்து
விடுதலை பெறுவான். ஆத்ம சுத்தம் வசீகரம்
முதலிய சிததிகளை ஈசன் அருளுவான் .
2.காம்ஸ்யம் : இந்த சப்தநிலை கேட்டு தவம்
செய்பவர்க்கு பூதங்கள் பேய் பிசாசுகளை யும்
எல்லாவித ஜீவ வசியமும் ஈசன் அருளுவான் .
.
3. சிருங்கம் : என்கிற கொம்பின் நாதத்தை
அப்பியாசிப்பவன் சத்த்துருக்களை அழிக்கவும்
தனது இஷ்டப்படி எல்லோரயும் நடக்க
வைக்கவும் சித்தியை ஈசன் வழங்குவான் .
4. கண்டாமணி : இந்த சப்தம் கேட்டு
அப்பியாசிப்பவனுக்கு தேவர்களை தன்னிடம்
வரவழைக்கும் சித்தியை அருளுவான் .
5. வீணா : இந்த சப்தத்தை கேட்டு அப்பியாசம்
செய்பவர்க்கு ஈசன் தூர திருஷ்டி வல்லமை
தருவான் .
6. புல்லாங்குழல் : இந்த ஓசையை கேட்டு
தவம் செய்பவர்க்கு சர்வ ஞானியாவான் .
7. தூந்துபி : இந்த ஓசை கேட்டு தவம்
செய்பவன் ஈசானால் ஜனன மரண பந்தம்
விலக்குவான் .
8. சங்க நாதம் : இந்த ஓசை கேட்டு தவம்
செய்பவனுக்கு வேற்று உடலில் இயங்கும்
சக்தி அருளுவான் .
9. மேக நாதம் : இந்த ஓசை கேட்டு தவம்
செய்பவர்க்கு ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சித்தி
அருளுவான் .
இந்த 9 நிலைகளிலும் மயங்கி விழாமல் பற்று
இல்லாமல் சிவமே வேண்டும் என தவம்
செய்வோர்க்கு சிவசக்தி ரூப தரிசனம் கிட்டும்
.
இந்த சப்த பிரம்ம யோகம் செய்யும்போது
உடலில் ஏற்படும் உபாதைகள் அதில்
விடுபடு வடிவங்களாய் உங்களுக்குள்
நிற்பான்.
பொதுவாக
எல்லோர்க்கும் உடல் எதிர்ப்பு சக்தி அளவு
நம் உடலில் உயிர் சக்தியின் இருப்பு அளவை
பொறுத்தே அமையும் . அதிலும் எந்தமுறை
யோகம் செய்தாலும் இது முக்கியமான ஒன்று
.
1. பிரம்ம சரிய அனுஸ்ட்டானத்தால் உயிர்
சக்தியை கூட்டிக் கொள்ளுதல் .
2. மோதிர விரல்களை அதிகம் அழுத்த கூடாது
, குறிப்பிட்ட நேரத்திற்க்கு ஒருமுறை
விரல்களை எடுத்து வெளி காற்று காதில்
உட்புக வாய்ப்பு தரவேண்டும் . முழங்கை வழி
இருக்கும் குறிப்பிட்ட நேரம் கடந்து ( 10
நிமிடம் ) கைகளை நீட்டி மடக்க வேண்டும் ,
கண்டிப்பாக சுகாசன முறையே பின்பற்றுதல்
வேண்டும் . கீழே அமர இயலாதோர்
இருக்கையில் அமரலாம் .
3. காதுகளில் நீர் ஏற விடுதல் , சுத்தமின்மை
ஆகாது .காது உஷ்ணம் நமக்கு தெரிய
வரும்போது விரல்களை அகற்ற வேண்டும் ,
அப்போதே தியானம் களையலாம் , கொஞ்சம்
கொஞ்ச மாக நேரத்தை கூட்டலாம் ,இதனால்
காதில் சீல் கட்டுதல் இருக்காது .
4. எந்தவகை தியானத்திலும் காற்றை எந்த
இடத்தில் அதிகம் அதிக நேரம் நிறுத்தி
வைக்கிறீர்களோ அந்த இடத்தில் உஷ்ணம் அதிக
மாக்கும் . ஆதலால் அந்த இடம் சிரமத்திற்க்கு
ஆளாகும் . காது தியான உஷ்ணம்
ஏற்றுக்கொள்ளும் வரை கொஞ்சம் கொஞ்ச மாக
நேரம் கூட்டலாம் .
5. தியானம் கலைந்ததும் வலது பக்க காதை
அடைத்துக்கொண்டு மூச்சை நன்றாக இழுத்து
வெளியிட வேண்டும் . பின்பு இடது காதை
அடைத்து மூச்சை நன்றாக இழுத்து
வெளியிட வேண்டும் . இப்படி 3 - 3 முறை
செய்தால் தியானம் முடிந்ததும் காதில் இருக்க
தன்மை இருக்காது .
6. காதில் மோதிரவிராலால் அடைத்து
தியானம் செய்யும்போது ஏற்படும் சப்தத்தை
வயிற்று பகுதியில் ( மணிப்பூரகம்-
தொப்பிள் ) சப்தம் ஏற்படுவது போல் மனத்தை
அங்கேயே கவனிக்க வேண்டும் .
7. கண்டிப்பாக பிரம்ம சரிய விரதம்
கடைபிடித்தால் 90 % உடல் உபாதைகள் வராது
,
8. வாரத்தில் சனிக்கிழமை மட்டும்
தியானத்தில் காதுகளை அடைக்காமல்
சாதாரண மாக அமர்ந்தால் போதும் ( அப்படி
அமர்த்தாலும் உங்களுக்கு சப்தம் தானாகவே
கேட்கும் ) அதை கவனித்தால் போதும் .
9. காதுகளில் சப்தங்களை கேட்கும் கருவிக்கு
தட்சினா மூர்த்தியே அதிபதியும்
பாதுகாவலரும் ஆவார் ஆதலால் இந்த யோக
முறைக்கு ஈசனுக்கே குரு வணக்கம் செலுத்த
வேண்டும் .
மற்ற யோக முறை யைக்காட்டிலும் இதில்
விதிமுறைகள் வெகு சுலப மானது . இந்த
யோகமுறை சிவன் பார்வதிக்க பிரத்தியோகமாக
கற்று தந்ததால் இது பெண்களுக்கு மிகவும்
சிறந்த யோக மாகும் பெண்கள் எல்லா
நாட்களிலும் செய்யலாம் . குடும்பத்தில்
கணவன் மனைவி இருவரும் செய்தால்
இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் .
மந்திர யோகம்
--------------------
இறைவனை வழிபட பல்வேறு முறைகளை
முன்னோர் வகுத்துச் சென்றிருக்கின்றனர்.
பெரும்பாலாவர்கள் அறிந்ததும், பிரபலமனது
ஆலயங்களில் நடைபெறும் உருவ வழிபாடு
இறைவனை அட்சர வடிவமாக அதாவது
எழுத்துருவில் எழுந்தருள செய்து வழிபாடும்
முறையானது சக்கர வழிபாடாகும். இது
அத்தனை பிரபலம் இல்லா விட்டாலும்
மிகவும் சக்தி வாய்ந்த ஒருமுறையாகும்.
இந்த சக்கர வழிபாட்டில் ஸ்ரீ சக்கரம்,
திருவம்பல சக்கரம், புவனாபதி சக்கரம்,
சாம்பவி மண்டல சக்கரம், நவாங்கரி சக்கரம்,
நீல கண்ட சக்கரம் போன்றவை அதி சக்தி
வாய்ந்தவையாகவும், சிறப்பானதாகவும்
கருதப் படுகிறது.
மற்றொரு முறையானது மந்திர யோகம் ஆகும்.
இதில் ஒலி வடிவாக உள்ள இறைவனை மந்திர
ஜெபத்தால் வழிபடுதலாகும்.
"மந்திரம்" என்ற சொல்லுக்கு மனதில் திறம்
அல்லது ஜெபிப்பவரை காக்கும் என்பதாக
பொருள் கூறப்படுகிறது.
"யோகம்" என்பதற்கு ஆன்மாவை
இறைவனோடு சேர்த்து வைத்தல் என்பது
பொருள்.
"மந்திர யோகம்" என்றால் மனமார்ந்த
அர்பணிப்புடன் மந்திரத்தை ஜெபிப்பவரை
காத்து இறைவனுடன் சேர்க்கும் என்பது
பொருள்.
இந்த மந்திரங்களில் தலையாயதும்
முதன்மையானதும் ஓம் என்னும் பிரணவ
மந்திரமாகும். மிரளும் பிரணவமாகிய ஓம்
என்பது எல்லா மந்திரங்களும் உச்சரிக்கும்
பொது முதலில் சேர்த்து உச்சரிக்க வேண்டிய
ஆதி மந்திரமாகும்.
இதனை தாரக மந்திரம் என்பார்கள்.
ஏன்? எதற்கு?
”ஓம்” என்கிற பிரணவ மந்திரத்தினை மற்ற
மந்திரங்களை உச்சரிக்கும் பொது முதலில்
சேர்த்து உச்சரிக்க வேண்டியது அவசியம்.
இதனை தாரக மந்திரம், பிரணவம் என்பார்கள்,
தாரகம் என்றால் ஒன்றை தாண்டச் செய்வது
என்று பொருள். கப்பலுக்கு தாரகம் என்று ஒரு
காரண பெயர் உண்டு. கப்பல் எப்படி கடலைக்
கடக்க மனிதர்களுக்கு உதவுகிறதோ, அது
போல பிறவிக் கடலை கடப்பதற்க்கு பிரணவ
மந்திரம் உதவுகிறதால் அதனை தாரக மந்திரம்
என்று அழைப்பர்.
பிரணவம் என்பதற்க்கு ப்ர - பிரபஞ்சம், ந
என்றால் இல்லை, வ - உங்களுக்கு அதாவது
இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு
பிரபஞ்சதிற்கான பந்தம் அற்றுவிடும் என்பது
பொருள்.
”ஓம்” என்னும் மூலத்திலிருந்தே எல்லா
வேதங்களும் மந்திரங்களும் பிறந்தது. என்றும்,
எனவே இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு
எல்லா மந்திரங்களும் ஜெபித்த பயன்
கிடைக்கும் என்று சொல்லப் படுகிறது.
பிரம்மா இந்த பிரணவ ஜெபம் செய்தே பிரம்ம
பட்டமடைந்ததாக ”காசிகாண்டம்”
குறிப்பிடுகிறது. பிரம்மனால் இந்த பிரணவ
மந்திரத்திற்கு பொருள் சொல்ல முடியாததால்
முருகனால் குட்டப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டதாக கந்த புராணம் சொல்கிறது.
அத்துடன் இந்த பிரணவ மந்திரத்தின்
பொருளை சிவபெருமானுக்கு உபதேசம் செய்த
முருகன் சுவாமிநாதர் என்னும் பேர்
பெற்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
உலக ஸ்ரிஷ்டிக்காகவும், நன்மைக்காகவும்,
சிவனின் கையில் இருக்கும் உடுக்கையும்,
விஷ்ணுவின் கையில் இருக்கும் பாஞ்ச சன்யம்
என்கிற சங்கும் எப்போதும் ஓங்கார ஒலியை
எழுப்பிக் கொண்டே இருக்கும்.
இந்த தாரக மந்திரத்தை சைவர்கள் ஆத்ம
பஞ்சாட்சரம் என்றும், வைணவர்கள் சூட்சும
சடாட்சரம் என்றும் சொல்வர். இந்த
ஓங்காரத்தின் பெருமையை சித்தர்களும்
வலியுறுத்தியுள்ளனர்.
"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!"
என்று திரு மூலரும் இந்த ஓங்காரத்தின்
பெருமையை உரைக்கிறார்..
பஞ்சாட்சரம் என்பது ஐந்து எழுத்துக்களால்
ஆனது என்று பொருள். இவை "நமசிவய"
என்பதாகும்.
இந்த எழுத்துக்களில், ந - பிருதிவியையும், ம
அப்புவையும், சி தேயுவையும், வ
வாயுவையும், ய - ஆகாயத்தையும்
குறிக்கும்.
மனித உடம்பில் சுவாதிஷ்டானம், மணிபூரகம்,
அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்கின்ற
ஆதாரங்கள் இந்த பஞ்சபூதங்களுக்கு உரிய
இடமாகும் என்கிறார் திருமூலர்.
மேலும், மனித உடம்பில் நமசிவாய என்பது, ந
- சுவாதிஷ்டானதில், ம - மணிபூரகத்தில், சி
அனாகதத்தில், வ - விசுத்தியில், ய -
ஆக்ஞையில் இருப்பதாக சொல்கிறார்.
திருஞான சம்பந்தர் நான்கு வேதங்களுக்கும்
மெய்பொருளாக விளங்குவது ”நமசிவய”
என்றும் இது எல்லாவற்றிற்குமான நாதன்
நாமம் என்றும் சொல்கிறார் .
"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவயவே "
திருஞான சம்பந்தர்
"நானேயோ தவம் செய்தேன் சிவயநம எனப்
பெற்றேன் " என்று பஞ்சாட்சர மகிமையை
மாணிக்க வாசகரும் கூறுகிறார்.
"அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே"
திருமூலர்
"சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே"
திருமூலர்
என்று திருமூலர் பஞ்சாட்சர மகிமையை
விளக்குகிறார்.
"சிவாய மென்ற அக்கரம் சிவனிருக்கும் அக்கரம்
உபாயம் என்று நம்புதற் குண்மை யான
அக்கரம்
கபாடம் அற்ற வாசலைக் கடந்து போன
வாயுவை
உபாயம் இல்ல ழைக்கும் சிவய அஞ்செ
ழுத்துமே"
சிவவாக்கியார்
என்று பஞ்சாட்சர மகிமையை உரைக்கிறார்
சிவவாக்கியார்.
தாய்மை வழிபாடு அல்லது சக்தி வழிபாடு
என்பது தொன்மையானதும் சக்தி வாய்ந்ததும்
ஆகும். இந்த சக்திக்குரிய மந்திரமாக "ஹ்ரீம்"
என்ற பீஜ மந்திரத்தை குறிப்பிடுகிறார்
திருமூலர்.
பிரணவ மந்திரம் எப்படி சிறப்பாக
விளங்குகிறதோ அது போலவே
"ஹ்ரீம்"சிறந்து விளங்குகிறது.
"ஓங்காரி யென்பா ளவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே யினித்தி ருந்தாளே"
திருமூலர்
பிரணவ வடிவான, பச்சை நிறத்தையுடைய
தேவி பஞ்ச கிருத்தியங்களுக்கும் படைக்க
முனைந்த பொழுதில், சதாசிவன், மகேஸ்வரன்,
ருத்திரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய ஐவரை
தனது அம்சமாக உருவாக்கிய பின்னர் "ஹ்ரீம்"
என்ற பீஜத்தில் எழுந்தருளினாள் என்கிறார்
திருமூலர்.
ஹ் + ர் + ஈ + ம் = "ஹ்ரீம்" என்பதாவது, சிவ
பீஜம் , அக்கினி பீஜம், மகாமாயை, விந்து
ஆகியவற்றைக் குறிக்கும். இது
புவனங்களுக்கேல்லாம் ஈஸ்வரியான
புவனேஸ்வரியின் வடிவமாகும்.
"ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி
மனதை அலைபாய விடாமல் ஒருமுக
படித்ததினால், முக்காலமும் உணர்ந்து,
மரணத்தை வென்று என்றும் ஜீவித்திருக்கலாம்
என்றும் சொல்கிறார் திருமூலர்.
அத்துடன்,
இந்த "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை
தியானிக்கும் போது மூலாதாரத்தில் ஹ் -
என்ற எழுத்தையும், இதயத்தில் ர் - என்ற
எழுத்தையும்,புருவ மத்தியில் ஈ - என்ற
எழுத்தையும், சிரசில் ம் - என்ற எழுத்தையும்
நியாசம் (தியானம்) செய்தால் அட்டமாசித்தும்
கைகூடி வரும் என்கிறார்.
அதனால் தேவி வழிபாட்டிற்கு உரிய
மூலமந்திரமான "ஹ்ரீம்" சிறப்பானதும்,
உயர்வானதும் ஆகும்.
குருமுகமாக உபதேசம்
பெற்று பயனடைந்திடலாம்.
இதுவரை
சொல்லப்பட்ட மந்திரங்களைப் போல மிக
சிறப்பானதும் சித்தர்களால் தங்கள் சீடர்களுக்கு
இரகசியமாக உபதேசிக்கப் பட்ட பஞ்சதசாட்சரி
மந்திரம் பற்றிய தெளிவுகள் சிலவற்றை
இப்போது பார்க்கலாம்.
இந்த மந்திரமானது பதினைந்து அட்சரங்களை
கொண்டதால், இதை பஞ்சதசாட்சரி மந்திரம்
என்று அழைக்கின்றனர்.
காலங்காலமாக இந்த மந்திரமானது
குருமுகமாகவே சொல்லப்பட்டு வந்துள்ளது.
சித்தர்களும் தங்கள் பாடல்களில் இதை
மறைத்தே பாடியுள்ளனர்.
"சுகாராதியோ ரைந்துங் கானிய பொன்மை
அகராதி யோரா றத்தமே போலும் வாக்பவம்
சகராதி யோர் நான்கும் தான் சுத்த வெண்மை
சுகாராதி மூவித்தை காவிய முத்தியே"
திருமூலர்
என்று திருமூலர் திருமந்திரத்தில்
குறிப்பிடுகிறார். இதில் வரும்,
சுகாராதி ஐந்து : க , ஏ , ஈ , ல , ஹ்ரீம்.
அகராதி ஆறு :- ஏ , ஹ , ஸ , க , ல , ஹ்ரீம்.
சகாராதி நான்கு :- ஸ , க , ல , ஹ்ரீம்.
மூவித்தை என்பது மூன்று கூடத்தைக்
குறிக்கும்
அவையாவன, வாக்பவ கூடம் , காமராஜ
கூடம், சக்தி கூடம். இந்த மூன்று
கூடத்திற்கும் மூன்று நிறங்கள் குறிக்கப்
படுகிறது, அவை முறையே பொன்னிறம்,
செந்நிறம், வெண்ணிறமாகும் என்று திரு
மூலர் குறிப்பிடுகிறார்.
இந்த அட்சரங்களை கொண்டு உருவாக்கப்
பட்டது தான் பஞ்சதசாட்சரி மந்திரம். இந்த
மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கும், இதை
புவனேஸ்வரி சக்கரத்தில் அமைத்து
வழிபடுபவர்களுக்கும் நினைத்ததெல்லாம்
உடனடியாக ஈடேறும் என்றும், அட்டமா
சித்துக்களும் கைவரப் பெரும் என்றும்
அகத்தியர் சொல்கிறார். ஆனால் அவரும் இந்த
மந்திரத்தை மறைத்தே பாடியுள்ளார்.
குருவருளை வேண்டி, முயற்சியுடன் கூடிய
தேடல் உள்ள எவருக்கும் இந்த மந்திரம்
கிடைக்கும். நான் அந்த மந்திரத்தை இங்கே
பகிர்ந்து கொள்ள இயலாதவளாக இருப்பதை
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இந்த மந்திரத்தை பற்றியும், அதன் பெருமை
பற்றியும் ஆனந்த லகரியும் சொல்கிறது.

1 comment:

  1. வெந்த மருந்து உடல் எற்று கொள்ளும்
    சுட்ட விதை முளைக்காது
    நெருப்பில் சுட்ட எந்த மருந்தும்
    வேதை ஆகாது

    ReplyDelete