உலகில் எந்த ஒரு பொருளையும் உண்டா? இல்லையா? என நாம அறிந்து, அப்பால் அப்பொருளைப் பற்றிக்கொண்டு, அதனாலாகிய பயனை அடைந்து அனுபவிக்க வேண்டியுள்ளோம்.இப்படி ஒரு பொருளை உண்டு எனக் கொள்ளுவதற்கும், இல்லை எனத் தள்ளுவதற்கும் சில அறிவுப்படிகள் எவராலும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அறிவுப்படிகளை அளவைகள் என்று கூறுவர் சான்றோர்கள்.Logical Methods என்று அளவைகளை ஆங்கிலத்திலும், பிரமாணங்கள் என்று வடமொழியிலும் கூறுகின்றனர்.அளவைகள் பல வகைப்படும். அவற்றை,
காட்சி (observation and experiment)
கருதல் (inference)
உரை (testimony or authority)
இன்மை (non-existence)
பொருள் (deduction)
ஒப்பு (analogy)
ஒழிபு (inference by exception)
உண்மை ( co-existence)
ஐதிகம் (tradition)
இயல்பு (natural inference)
கருதல் (inference)
உரை (testimony or authority)
இன்மை (non-existence)
பொருள் (deduction)
ஒப்பு (analogy)
ஒழிபு (inference by exception)
உண்மை ( co-existence)
ஐதிகம் (tradition)
இயல்பு (natural inference)
என்று வழங்குவர் பெரியோர். இவற்றை முறையே பிரத்தியக்ஷம் - அனுமானம் - ஆகமம் - அபாவம் - அருத்தாபத்தி - உபமானம் - பாரிசேஷம் - சம்பவம் - ஐதிகம் - சுவாபலிங்கம் என ஸம்ஸ்க்ருத மொழியாளர் கூறுவர். இந்த அளவைகளின் இலக்கணம் பற்றித் தருக்கநூல்களால் நன்கறியலாம்.மேலைநாட்டாரும் அளவைகளைக்காட்டிலும் விரிவாகவும், சித்தாந்தப்படுத்துவதாகவும், உண்மையைக் கொள்ளுவதாகவும் உள்ளன என்கின்றனர்.மேலைநாட்டு அளவைகளும் கொள்ளத்தக்கனவே. இவை, பொருள்களின் பெயர்களையும், வடிவுகளையும், அமைப்புகளையும் பற்றி நடப்பனவாகும். சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த வேறுபாட்டினை ஆங்கில வாசகத்தில்,
" The essential distinction between western and eastern logic has to be borne in mind, namely, that the former deals with names and propositions and syllogisms(all forms) whereas the latter deals with concepts and real argumentation". எனக் கூறப்படுதல் காணலாம்.
திருக்கயிலாயபரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து வெளியீடான "உண்டா? இல்லையா? " (1965) என்னும் நூலில் இருந்து...
நன்றி; J Karthik
அளவைகளின் வகைகள்
சைவசந்தானாச்சாரியரான அருள்நந்திதேவநாயனார், தமது சிவஞானசித்தியார் நூலில் (சுபக்கம்) பத்துவகை அளவைகளை விளக்குகிறார்.
அளவை காண்டல் கருதல் உரை அபாவம் பொருள் ஒப்பு ஆறு என்பர்.
அளவை மேலும் ஒழிபு உண்மை ஐதீகத்தோடு இயல்பு என நான்கு அளவை
காண்பர்; அவையிற்றின்மேலும் அறைவா; அவைஎல்லாம்
அளவை காண்டல் கருதல் உரை என்ற இம்மூன்றில் அடங்கிடுமே
அளவை மேலும் ஒழிபு உண்மை ஐதீகத்தோடு இயல்பு என நான்கு அளவை
காண்பர்; அவையிற்றின்மேலும் அறைவா; அவைஎல்லாம்
அளவை காண்டல் கருதல் உரை என்ற இம்மூன்றில் அடங்கிடுமே
என்பதாக அந்த விளக்கப்பாடல் அமையும்.
தாயுமானவர்,
சொல்லாலும் பொருளாலும் அளவையாலும்
தொடரவொண்ணா அருள்நெறியைத் தொடர்ந்து நாடி
நல்லார்கள் அவையகத்தே இருக்க வைத்தாய் … (ஆசையெனும், 24)
தொடரவொண்ணா அருள்நெறியைத் தொடர்ந்து நாடி
நல்லார்கள் அவையகத்தே இருக்க வைத்தாய் … (ஆசையெனும், 24)
என்று அளவையால் தொடரவொண்ணாத பரம்பொருள் இறை என்பதனை உணரவைக்கிறார்.
1. காட்சியளவை
உலகப் பொருள்களைக் கண் முதலிய ஐம்பொறிகளால் கண்டுணர்தல்.
2. கருதல் அளவை
ஐம்பொறிகளால் உய்த்துணர்தல் - மறைந்துள்ள பொருள்களை அதனைவிட்டு நீங்காத ஏதுவைக் கொண்டு அறிதல். புகை கண்டவிடத்து, தீ உண்டு என அறிவு.
3. உரை
இறைவன், அவன் வழிவந்த அருளாளர்களால் கூறப்பட்ட அருள் மொழிகள்.
4. இன்மை (அபாவம்)
இதற்கு முன்பு இவ்வாறு நடக்கவில்லை. எனவே இப்போதும் எவ்வாறு நடக்கக் காரணமில்லை எனக் கூறுதல்
5. பொருள் (அருந்தாபத்தி)
இங்ஙனம் அன்றாயின் இது கூடாது எனறு உணர்வது; பகல் உண்ணான் பருத்திருப்பான் எனில் இரவு உண்பான் என உணர்தல்.
6. உவமை
காட்டுப் பசுவைக் காணாதவர்க்கு, அது வீட்டுப் பசுவைப் போலிருக்கும் என்று கூறி விளக்குதல்.
7. ஒழிவு (எஞ்சியது - பாரிசேடம்)
ஆயிரம் யானைகளின் பலமுடையவர்கள் சல்லியன், சராசந்தன், கீசகன், பீமசேனன் போன்றோர். இவர்களால் கீசகன் இறக்கும் போது, அங்கு சல்லியனும் சராசந்தனும் இல்லை. அப்படியானால் கீசகனை வதைத்தவன் பீமசேனன் தான் என்று அறிதல்.
8. ஐதிகம்
வழிவழியாகக் கூறப்படும் உண்மை கொண்டு அறிவது.
9. இயல்பு
வழக்கு, செய்யுள் என்ற இருவகையிலும் வரும் சொற்களுக்கு அந்தந்த காலமும் இடமும் அறிந்து பொருள் கொள்வது.
10. சம்பவம் (உண்மை)
முழுமையிலிருந்து அதன் பகுதியைப் பெறுதல். இவ்வாறு பத்துவகை அளவைகளைக் கூறினாலும், அவற்றையெல்லாம் ‘காட்சி, கருதல் உரை’ என்ற மூன்றில் அடக்கலாம்; எனினும் இம்மூன்றும் ஆன்ம சிற்சத்திக்கு உதவுபவை; எனவே ஆன்ம சிற்சத்தியே முடிவான பிரமாணம்; பிரமாணத்திற்குப் பிரமாணமாகும். எனவே, ஆன்மசிற்சத்தியே, பிரமாணம் என்ற சொல்லுக்கு உண்மையான பொருள்; பொருள்களைக் கண் அளக்கிறது. அந்த கண்ணையளப்பது ஆன்ம சிற்சத்தியாகிய உயிரறிவாகும்
பின்னூட்டம் நன்றி; Kalyan
No comments:
Post a Comment