காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் மகத்துவம்
பதிவு - 1
🕉காமாட்சி அம்மன் பெயர் விளக்கம்
அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி. காம என்றால் அன்பு, கருணை. அட்ச என்றால் கண்.
எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள். அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது.
எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள். அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது.
🕉அன்னையின் எழில் தோற்றம்
அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று. அவை:
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி திருக்கோயில்களே அவை. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது. புண்ணிய பூமியான பாரத தேசத்தில் (இந்தியாவில்) உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான்.
அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள். இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சிமாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது.
🕉கோவில் ஸ்தல வரலாறு
🕉பந்தகாசூரன் பெற்ற வரம்
முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான். அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான்.
ஙபந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், ” அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குத்தான் உள்ளது ” என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.
அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள். தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள்.
அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.
🕉பந்தகாசுரன் வதம்
பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர்.
அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள். அத்தரிசனம் கண்டு, மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த தேவர்களும், முனிவர்களும் அவளைப் பலவாறும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.
அப்போது, அன்னை அவர்களைப் பார்த்து, அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டுமாறும், பந்தகாசுரனை அந்தப் பள்ளத்தில் இட்டுப் புதைத்து, புதைத்த இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை நிறுவுமாறும் கூறினாள்.
🕉மல்லக அரக்கனுடனான போர்
அன்னையின் கட்டளைப்படி தேவர்கள் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டியபோது, மல்லகன் என்ற கொடிய அரக்கன் அங்கே மறைந்திருப்பதைக் கண்டார்கள்.
அந்த அரக்கனை அழித்துத் தங்களைக் காக்கும்படி, மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள். தேவர்களின் கோரிக்கையை ஏற்று, மகாவிஷ்ணுவும் மல்லகனுடன் போரிட்டார். ஆனால், மல்லகனின் உடலிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒரு அரக்கனாக உருமாறிப் போர் புரிந்தது.
இவ்வாறு அங்கே மாபெரும் அரக்கர் படையன்று உருவாக்கி மகாவிஷ்ணுவுடன் கடுமையான போர் புரிந்தது. அரக்கனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் ஒரு அரக்கனாக உருவெடுப்பதைக் கண்ட மகாவிஷ்ணு, தம் உதவிக்குச் சிவபெருமானை அழைத்தார்.
சிவபெருமான் போர்க்கோலத்தில், ருத்ர மூர்த்தியாக அங்கே வந்தார். அவர் இரண்டு பூதங்களை உருவாக்கி, மல்லகனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் எல்லாவற்றையும் பூமியில் விழாதபடி குடிக்கும்படி கட்டளையிட்டார். பூதங்கள் அப்படியே செய்தன. இவ்வாறு, மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுத்ததும், மகாவிஷ்ணு தம் சக்கராயுதத்தால் அந்த அரக்கனை அழித்தார்.
அதன்பின், அன்னை கட்டளையிட்டபடி, பந்தகாசுறனைப் புதைத்த இடத்திற்கருகில், இருபத்து நான்கு தூண்களை நிறுவி, காயத்ரி மண்டபம் அமைத்து, அந்த மண்டபத்தினுள்ளே, அழகிய பீடம் அமைத்து, அன்னையின் உருவம் ஒன்றைச் செய்து வைத்து வணங்கினார்கள். பின்னர், கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து அன்னையைத் துதித்துக் கொண்டிருந்தார்கள்.
🕉காயத்ரி மண்டபத்தில் அன்னையின்
அழகிய திருக்கோலம்
அழகிய திருக்கோலம்
மறுநாள் அதிகாலை, சூரியன் உதய வேளையில், மிகுந்த பயபக்தியுடன் அவர்கள் அந்தக் கதவைத் திறந்தார்கள். என்ன ஆச்சரியம்? அங்கே அவர்கள் கண்ட அற்புதமான காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்து, மகிழ்ந்து நின்றார்கள். ஆம், அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில், அவர்கள் நிறுவிய சிலை உருவத்துக்குப் பதிலாக, அன்னை காமாட்சி தேவி அழகிய திருக்கோலத்தில் காட்சியளித்தாள்.
அந்த நன்னாள், நடக்கும் இந்த கல்பத்தில் ஸ்வயம்புவாய மனுவந்திரத்தில், கிருத யுகத்தில், ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில், பிரதமை திதியும், பூர நட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை நாள் ஆகும். எல்லையில்லாக் கருணை வடிவம் கொண்ட ராஜ ராஜேஸ்வரியாக காமாட்சி அன்னை காட்சியளித்தாள்.
அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலியன காணப்பட்டன.
அன்னையின் அழகையும், கருணையையும் கண்டு பக்திப் பரவசமாகி மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், அன்னையை நோக்கி, அங்கேயே அமர்ந்து உலகம் வாழ அருள் புரியுமாறு வேண்டிக்கொண்டார்கள். அவர்களின் பிரார்த்தனைக்கிணங்கி, காமாட்சி அன்னை, இருபத்து நான்கு தூண்களாலான அந்தக் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அழகிய பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றாள்.
🕉அன்னையின் அருள் வடிவங்கள்
தற்போது, அன்னை காமாட்சி திருக்கோயில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடன், கண்களையும், உள்ளத்தையும் பக்திப் பரவசமாக்கும் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக எழுந்து நிற்கின்றது. அன்னை காமாட்சி இத்திருக்கோயிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள்.
(பெரும்பாலான கோயில்களில் இவற்றில் ஒன்றிரண்டு வடிவில்தான் அன்னை காட்சியளிப்பாள்.) அந்த மூவகை வடிவங்களாவன:
காமகோடி காமாட்சி (ஸ்தூல வடிவம்) (மூல விக்கிரக உருவில்)
அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்)
காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்)காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.
அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்)
காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்)காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.
காஞ்சிபுரம் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை.
அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.
ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.
🕉70 கிலோ தங்கத்தில் கருவறை விமானம் :
நகரங்களில் சிறந்தது காஞ்சி என்பது முதுமொழி. ஏராளமான புண்ணியம் தரும் கோவில்களை தன்னகத்தே கொண்ட இந்த நகருக்கு தினந்தோறும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சாமிகும்பிட்டு செல்வர். இங்கு தனிகோயிலில் பராசக்தியாய் எழுந்தருளி இருக்கும் உமைக்கு காமாட்சி என பெயர். இத் திருக்கோவில் உலகபிரசித்திபெற்றதாகும்.
காஞ்சிபுரத்தில் எண்ணற்ற சிவாலயங்கள் இருந்தாலும் எந்த கோவிலிலுமே அம்மாள் மூலஸ்தான சன்னதி கிடையாது. காஞ்சியில் காமாட்சியம்மாள் தவக்கோலத்தில் இருப்பதால் தான் இங்கிருக்கும் சிவன் கோவில்களில் அம்மாளுக்கு தனி சன்னதி கிடையாது என கூறுவர். இத்தகைய பெறுமைபெற்ற காமாட்சியம்மாள் திருக்கோவிலின் கும்பாபிஷேம் ஸ்ரீதுர்முகி வருடம் தைமாதம் 27ம் தேதி (பிப்&9) வியாழக்கிழமை அன்று காலை 9 முதல் 10.00 மணிக்குள் மீன லக்னத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆகியோரால் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்படுகிறது.
இத்திருக்கோவிலில் 1841, 1944, 1976, 1995 ஆகிய வருடங்களில் கும்பாபிஷேம் நடத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது திருக்கோவில் முழுவரும் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. 70 கிலோ தங்கம் கொண்டு காமாட்சி மூலஸ்தான கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சிரமமின்றி சாமி கும்பிட கோவிலை சுற்றி பிரகார மண்டபங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கோவிலில் உள்ள ஆதிசங்கரர் மண்டபம் முழுவதும் கருங்கற்கலை கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் உள்ள மடாதிபதிகளும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
கும்பகோணம் தினகர சர்மா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வேதவிற்பனர்கள் யாகசாலையில் சிறப்பு பூஜைகளை வைதீக முறைப்படி செய்து வருகின்றனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ள இத்திருக்கோவி கள்வர் பெருமாள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ள இத்திருக்கோவி கள்வர் பெருமாள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதி சங்கரர் வருகை, ஸ்ரீ சக்கரம் உருவான விதம், ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்தல், கள்வர் பெருமாள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம.
ஓம் சிவசக்தி ஐக்கிய ரூபிண்யை நம.
ஓம் சிவசக்தி ஐக்கிய ரூபிண்யை நம.
காஞ்சி காமாட்சி அம்மன்
கோவில் மகத்துவம்
கோவில் மகத்துவம்
கடந்த பதிவில் கோவில் உருவான வரலாறை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீ சக்கரம் எவ்வாறு உருவானது என காணலாம்
பதிவு -2
ஸ்ரீ சக்கரம் தோற்றம்
பந்தகாசூரனை கொன்ற அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக்கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து சாந்தமடையச் செய்தார் என்கிறது தேவி புராணம். அதனை ஆதாரமாக கொண்டு நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்படுத்தினர்.
பந்தகாசூரனை கொன்ற அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக்கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து சாந்தமடையச் செய்தார் என்கிறது தேவி புராணம். அதனை ஆதாரமாக கொண்டு நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்படுத்தினர்.
குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.
அத்தகைய மகத்துவம் பெற ஸ்ரீ சக்கரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது பார்க்கலாம்
அத்தகைய மகத்துவம் பெற ஸ்ரீ சக்கரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது பார்க்கலாம்
ஸ்ரீசக்கரத்தின் மகிமை
மேரு மலையின் மீது புஷ்பதந்தர்ஸ்ரீ என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான் அதை கிரஹித்து ஆதி சங்கரருக்கு உபதேசித்தருளினார் எனவும், சிவ பெருமான் அன்னையின் சக்தியை ஒருங்கிணைத்து உருவாக்கிய சக்தி வடிவத்தை ஆதாரமாக கொண்டு ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தை உருவாக்கினார் எனவும் கூறப்படுகிறது.
ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பு
மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீசக்கர வரைமுறை விதியை லக்ஷ்மீதரரும் கைவல்யாச்ரமரும் சிறு மாறுதல்களுடன் வரைந்து காட்டினர். சௌபாக்கியவர்த்தினி என்ற விதி நூலின்படி பிந்து, முக்கோணம், எண்கோணம், இருபத்து கோணம், பதினான்கு கோணம், எட்டு தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று வரைகோட்டுப் பூபுரம் என்று ஸ்ரீசக்கர அமைப்பு வடிவமைக்கப்பட்டது.
ஸ்ரீ சக்கரம் மகத்துவம்
யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். தேவர்களில் உயாந்தவர் ஹரி. யானைகளில் உயர்ந்தது ஐராவதம். குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி.
பசுக்களில் உயர்ந்தது காமதேனு. மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம். பெண்களில் உயர்ந்தவர் ஸீதை. அது போல யந்திரங்களில் உயர்ந்தது சக்ரம் எனப்படும் ;ஸ்ரீ சக்ரபூர்ணமகாமேரு. விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி. முருகன் இருக்கிமிடம் ஸ்கந்தலோகம். ப்ரமன் இருக்குமிடம் ஸத்யலோகம். நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம.; இந்திரன்இருக்குமிடம் தேவலோகம். சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம்.
அது போல அன்னை ஜகன் மாதாஅம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம் ஸ்ரீபுரம் எனக்கூறப்படும் ஸ்ரீசக்ர பூர்ணமகாமேரு பீடம் என்னுமிடமாகும்.
அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படுகிறது.காஞ்சி காமாட்சி ஆலயத்தில் காணப்படுவது அதேபோன்ற மகாமேருவாகும்
அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது. அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பது போல் தேவியின் ஸ்ரீ சக்ரபுரம் என்னும் கோட்டையைச் சுற்றி 9 கோட்டைகள் உண்டு. ஒவ்வொரு கோட்டையையும் சேனாதிபதிகள் காப்பது போல பெண் சேனாதிபதிகள் காவல் காக்கின்றனர்.ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது.
1 :முதலில் சதுரக் கோட்டை த்ரைலோக்கிய மோகனசசக்கரம் எனறு பெயர். இதனை ப்ரகடயோகினி முதலான 8 தேவியர் காவல்புரிகின்றனர்.
2 : தாமரை இதழ்போன்ற 16 அமைப்புக்கள் கொண்ட பரிபூரக சக்ரம் என்னும் கோட்டை. இதை குப்தயோகின்p முதலான 16 தேவியர் காவல் புரி;கின்றனர்.
3 தாமரை இதழ் போன்ற அமைப்பபைக் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கோட்டை இதற்கு ஸர்வரரேஸம்சேஷரபன சக்ரம் என்ற பெயர். இதனை குப்தரயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர்.
4. 14 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வ ஸொபாக்கியதாயக சக்ரம் என்ற பெயரைக் கொண்டது இதனை ஸம்ப்ரதாய யோகினி முதலான 14 தேவதைகள் காவல் புரிகின்றனர்.
5. 10 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதை குலோத்தீரண யோகினி முதலான 10 தேவதைகள் காவல் புரிகின்றனர்.
6. 10 முக்கோணங்களைக் கொண்ட சர்வரஷாகர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை நிகர்ப்பயோகினி முதலான பத்து தேவதைகள் காவல் புரிகிpன்றனர்.
7. முக்கோணங்களைக் கொண்ட ஸாவரோககர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை ரஹஸ்ய யோகினி முதலான 8 தேவதைகள் காவல்புரிகின்றனர்.
8. ஒரே முக்கோணம் ஸாவஸித்தப் பிரதாயக சக்கரம்என்ற பெயரைக் கொண்டது. இதனை அதிரஹஸ்ய யோகினி முதலான தேவதைகள் காக்கின்றனர்.
9. பிந்துஸ்தானம் எனப்படும் ஸர்வானந்தமய சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இது ஒரு புள்ளி போன்ற இடமாகும். இதில் பரதேவதையான அம்பிகை ஸ்ரீ லலிதா மகாத்ருபர சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். லலிதா மஹாத்ருபுர சந்தரியாக இருந்த கொண்டு அருள் பாலிக்கின்றாள்.
மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.
பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் ஸ்ரீசக்கரத்தின் மூலம் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீசக்கரத்தை வழிபட்டு மக்கள் அனைவரும் மேன்மை பெற வேண்டும் என்பதற்காக காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் ஆதிசங்கரரால் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு அன்னையின் அருள்கொடை.
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.
பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புணுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.
கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.
ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.
சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரத்தால் தணிக்கப்பட்டது.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்கர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள்ளார். அதன் பின்னரே தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார். கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்கரமே
காஞ்சி காமாட்சி அம்மன்
கோவில் மகத்துவம்.
கோவில் மகத்துவம்.
பதிவு - 3
கோவில்களில் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ சக்கரத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்மா என்று கேட்டு இருந்த நண்பர்களுக்காக இந்த பதிவு.
ஸ்ரீ சக்கரத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.அதற்கான வழிமுறைகளை ஒன்றன் பின் ஒன்றாக காணலாம்.
ஸ்ரீசக்கர வழிபாட்டு முறை
ஸ்ரீசக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம்.
ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும். பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம். பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும்.
வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும்.
பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.
ஸ்ரீ சக்கர பூஜையின்போது, முதலில் குரு வந்தனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும். ஆத்மதத்வம் சோதயாமி, வித்யா தத்வம் சோதயாமி, சிவதத்வம் சோதயாமி, சர்வ தத்வம் சோதயாமி என்று நான்கு முறை தீர்த்தம் உட்கொள்ள வேண்டும். அன்றைய திதி-வாரம்-நட்சத்திரம் சொல்லிக்கொண்டு, மம குடும்ப சௌபாக்ய தனவிருத்தியர்த்தம் ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரி அனுக்ரஹ ப்ரசாத சித்யர்த்தம் ஸ்ரீசக்ர பூஜாம் கரிஷ்யே என்று மலர் எடுத்து ஸ்ரீசக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்ததாக,
தீபதேவி மகாதேவி சுபம் பவதுமே
ஸதா யாவத் பூஜா ஸமாப்தி:
ஸ்யாத் தாவத் ப்ரஜ்வல ஸுஸ்திரா:
ஸதா யாவத் பூஜா ஸமாப்தி:
ஸ்யாத் தாவத் ப்ரஜ்வல ஸுஸ்திரா:
என்று அருகில் உள்ள குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் மலர் சமர்ப்பிக்க வேண்டும்.
சுத்தமான தாம்பாளத்தில் ஸ்ரீ சக்கரத்தை வைத்து மஞ்சள் பொடி, அரிசி மாவுப்பொடி அபிஷேகப்பொடி, எலுமிச்சம்பழம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்து பட்டுத்துணியால் சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சாற்றி தயாராக வைக்கவும். கைகளைக் கூப்பியபடி தியானம் செய்யவேண்டும்.
அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம் த்ருத
பாசாங்குசபுஷ்பபாணசாபாம்
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை: அஹமித்யேவ விபாவயே பவானீம்
மகாபத்ம வனாந்தஸ்தே தாரணா நந்த விக்ரணே
சர்வபூத ஹிதே மாத: ஏகி யேகி பரமேஸ்வரி
ஸ்ரீலலிதா மகா த்ரிபுர சுந்தரீம் சௌபாக்ய லக்ஷ்மி ஸ்வரூபிணீம் யந்திர ஸ்தானே
ஆவாகயாமி ஸ்வாகதம் தர்ஸயாமி.
சமஸ்த சக்ர சக்ரேசி யுதே தேவி நவாத்மிகே
ஆராத்திக மிதம் துப்யம் க்ருஹாண மம சித்தயே –
பாசாங்குசபுஷ்பபாணசாபாம்
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை: அஹமித்யேவ விபாவயே பவானீம்
மகாபத்ம வனாந்தஸ்தே தாரணா நந்த விக்ரணே
சர்வபூத ஹிதே மாத: ஏகி யேகி பரமேஸ்வரி
ஸ்ரீலலிதா மகா த்ரிபுர சுந்தரீம் சௌபாக்ய லக்ஷ்மி ஸ்வரூபிணீம் யந்திர ஸ்தானே
ஆவாகயாமி ஸ்வாகதம் தர்ஸயாமி.
சமஸ்த சக்ர சக்ரேசி யுதே தேவி நவாத்மிகே
ஆராத்திக மிதம் துப்யம் க்ருஹாண மம சித்தயே –
என்று சொல்லி வணங்கிய பிறகு, கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, குங்குமமும் சேர்த்து அர்ச்சனை செய்க. (ஸ்ரீ சக்கரத்தை முதலில் பிரதிஷ்டை செய்து வழிபட ஒன்பது ஆவரண பூஜை என்ற விதியில் அதிகமான மந்திரங்கள் இருப்பதால் அவற்றைத் தொகுத்து இலகுவான பூஜையாக இங்கே தந்துள்ளோம்)
ஓம் ஹ்ருதய தேவ்யை நம;
ஓம் சிரோ தேவ்யை நம:
ஓம் சிகா தேவ்யை நம:
ஓம் கவச தேவ்யை நம:
ஓம் நேத்ர தேவ்யை நம:
ஓம் அஸ்திர தேவ்யை நம:
ஓம் காமேஸ்வர்யை நம:
ஓம் பகமாலியை நம:
ஓம் நித்யக்லின்னாயை நம:
ஓம் பேருண்டாயை நம:
ஓம் வன்னிவாசின்யை நம:
ஓம் மகா வஜ்ரேஸ்வர்யை நம:
ஓம் சிவதூத்யை நம:
ஓம் த்வரிதாயை நம:
ஓம் குலசுந்தர்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நீல பாதகாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் சர்வ மங்களாயை நம:
ஓம் ஜ்வாலாமாலின்யை நம:
ஓம் சித்ராயை நம:
ஓம் லலிதா மகாநித்யாயை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சௌம் லலிதா
மகாதிரிபுர சுந்தரீ ஸ்ரீ சக்ர மாதாயை நம:
நானாவித பத்ரபுஷ்பாணி சமர்ப்பயாமி
ஓம் சிரோ தேவ்யை நம:
ஓம் சிகா தேவ்யை நம:
ஓம் கவச தேவ்யை நம:
ஓம் நேத்ர தேவ்யை நம:
ஓம் அஸ்திர தேவ்யை நம:
ஓம் காமேஸ்வர்யை நம:
ஓம் பகமாலியை நம:
ஓம் நித்யக்லின்னாயை நம:
ஓம் பேருண்டாயை நம:
ஓம் வன்னிவாசின்யை நம:
ஓம் மகா வஜ்ரேஸ்வர்யை நம:
ஓம் சிவதூத்யை நம:
ஓம் த்வரிதாயை நம:
ஓம் குலசுந்தர்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நீல பாதகாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் சர்வ மங்களாயை நம:
ஓம் ஜ்வாலாமாலின்யை நம:
ஓம் சித்ராயை நம:
ஓம் லலிதா மகாநித்யாயை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சௌம் லலிதா
மகாதிரிபுர சுந்தரீ ஸ்ரீ சக்ர மாதாயை நம:
நானாவித பத்ரபுஷ்பாணி சமர்ப்பயாமி
என்று கூறி தேவியை துதித்து, தூபதீபம் காட்டியபின் பழம் வைத்து நிவேதித்து, வாசனை மலர்களில் சந்தனம் தெளித்து கையில் எடுத்துக்கொண்டு சௌந்தர்ய லஹரியை முழுவதும் பாடிய பலனைத் தரும் ஒரு துதியைக் கூறவும்.
ஸ்ரீசக்ரத்திற்கு உரிய விசேட நவாவர்ண பூஜையை சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை, ஆடி, பௌர்ணமிகளில் கூட்டாகச் செய்யலாம்.
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜன விதி:
ஸீதா ஸீதேச் சந்த்ரோபல ஜலல வைராக்ய ரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸெளஹித்ய கரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவஜனனி வாசாம் ஸ்துதிரியம்
ஸீதா ஸீதேச் சந்த்ரோபல ஜலல வைராக்ய ரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸெளஹித்ய கரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவஜனனி வாசாம் ஸ்துதிரியம்
(இத்துதியில் ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் ஸெளபாக்யவர்த்தனீ இரகசியம் அடங்கி உள்ளதாக ஸ்ரீ சங்கரரே சொல்லி இருக்கிறார். இதை தினமும் மூன்று முறை ஸ்ரீசக்கரத்தை வணங்கிக் கூறலாம்).
அன்னையே போற்றி! ஞாலத்து அல்லலை ஒழிப்பாய் போற்றி!
துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து
நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி! நல்லோர்க்கு
உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!
துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து
நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி! நல்லோர்க்கு
உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!
மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.
சக்கர வழிபாடு சம்பூரணம்
சிவசக்கரம் ஒரு நான்கும்
வடதிசையை நோக்க
தேவியுடன் ஐந்து வட்டம்
தென்புறமே பார்க்க
பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட யோனியதுவாக
சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக
சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக
நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய்
நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய்
வடதிசையை நோக்க
தேவியுடன் ஐந்து வட்டம்
தென்புறமே பார்க்க
பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட யோனியதுவாக
சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக
சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக
நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய்
நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய்
என்று சக்கர மகிமையை பாடி
வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் இட்டுக் கொண்டு மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும்.அத்துடன் ஸ்ரீ சக்கர வழிபாடு முடிகிறது. ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்களே சேர்ந்திடும்.
வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் இட்டுக் கொண்டு மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும்.அத்துடன் ஸ்ரீ சக்கர வழிபாடு முடிகிறது. ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்களே சேர்ந்திடும்.
காஞ்சி காமாட்சி அம்மன்
கோவில் மகத்துவம்
கோவில் மகத்துவம்
பதிவு -4
ஸ்ரீசக்ர வழிபாடும்
காமாட்சி அம்மன் மகிமையும்
காமாட்சி அம்மன் மகிமையும்
காமாட்சி அம்மன் சிறப்பு
காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். “காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி” என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.
ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார். அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில்’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும்.காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்தும்.
காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.
சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.
அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர்.
இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.
இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.
இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.
காமாட்சி அம்மன் கோவிலில்
ஸ்ரீ சக்கர வழிபாடு
ஸ்ரீ சக்கர வழிபாடு
அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்.
ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.
பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும். இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.
நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும்.
அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பது ஐதீகம்.
அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.
இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கியசாலிதான். எனவே காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி தினத்தன்று நடக்கும் பூஜையை தவறவிடாதீர்கள்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் மகத்துவம்
பதிவு - 5
திரிசக்கர வழிபாடு தோன்ற காரணம்
வெவ்வேறு காரணங்களுக்காக காமாட்சி அம்மனே அந்த மூன்று ஸ்தலங்களிலும்
காட்சியளித்ததால் காஞ்சிபுரம் செல்ல இயலாத பக்தர்கள் இம்மூன்று தலங்களிலும் வழிபடுவதன் மூலம் காஞ்சி அன்னையை வழிபட்ட பலனை பெறுகிறார்கள்.அதற்கான வரலாறே அடுத்தடுத்த பதிவுகள்
காட்சியளித்ததால் காஞ்சிபுரம் செல்ல இயலாத பக்தர்கள் இம்மூன்று தலங்களிலும் வழிபடுவதன் மூலம் காஞ்சி அன்னையை வழிபட்ட பலனை பெறுகிறார்கள்.அதற்கான வரலாறே அடுத்தடுத்த பதிவுகள்
காஞ்சி காமாட்சி அம்மன் மாங்காடு காமாட்சி அம்மனாக அமர்ந்த அதிசய வரலாறு
அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம் மாமரங்கள் சூழ்ந்த வனப்பகுதி. இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கும் ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.
அன்னையின் தவக்கோலம் :
ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும் வலது காலை இடது காலின் தொடைக்கு மேற்புறமாயும் இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், அழகிய கண்களை மூடிய நிலையிலும் அம்பாள் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடு திருத்தலத்தில் கடும் தவம் புரிந்தார்.இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரியும் அற்புத காட்சி உற்சவ சிற்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்னை மாங்காடு வந்த காரணம்
கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. இதனால் சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். இத்தலத்தில் தவமிருந்து வழிபட, தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். ஈசன் அன்னையை, பூலோகத்திற்கு அனுப்பியபோது அவள் இங்கு தவமிருந்தாள். ஆனால், சிவனது தரிசனம் கிடைக்கவில்லை. எனவே, தீயின் மத்தியில் நின்று பார்த்தாள். அதற்கும் அவர் மசியவில்லை. பின்னர் ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று தவம் செய்ய ஆரம்பித்தார்.
இறைவனை கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என சிலர் விதண்டா வாதம் பேசுவர். இறைதரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஈசனின் மனைவியே அவரைப் பார்க்க ஒற்றைக்காலில் நிற்க வேண்டி இருக்கிறது என்றால், சாதாரண மானிடர்களான நமக்கு எவ்வளவோ பக்குவம் வேண்டும். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள். காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்கு சென்று தவமிருந்தாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு "ஆதி காமாட்சி தலம்' எனப்படுகிறது. அதன் காரணமாகவே மாங்காட்டிலும் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டது.
பக்தனுக்கு முதலிடம் தந்த பரமன்
திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார். அதைக்கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றி தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார். அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார். திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார். எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.
அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள். அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன்.பின்னரே அன்னைக்கு காட்சி தந்து தன்னுடன் இணைத்துக் கொண்டார்.
கணையாழியுடன் பெருமாள்
மாங்காட்டில் அம்பாள் சிவபெருமானைத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தவம் இருக்கிறாள். அவளுடைய தவத்துக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக தன்னுடைய கரத்தில் பிரயோக நிலையில் சக்கரத்தையும், தவம் கனிந்து திருமணம் நடைபெறும் வேளையில் சீதனமாகத் தருவதற்காக மோதிரமும் வைத்திருக்கிறார்' திருமால். சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே, தங்கையுடன் திருமாலும் கிளம்பினார். அப்போது மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப் பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார். இவரை, "சீர் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள். இதனால் தான் இன்றும் கூட மாங்காடு காமாட்சிஅம்மன் கோயிலுடன் சேர்ந்து வைகுண்ட பெருமாள் கோயில் மற்றும் வெள்ளீஸ்வரர் கோயில் நிர்வாகிக்கப் பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
நான்கு அம்பாள் தரிசனம்
மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள். இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மூலஸ்தானத்திலுள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பம்சம்.
நிறைமணி தரிசனம்
பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது. ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர். புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தபஸ் மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
அன்னை தவம் செய்த காலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது. மாங்காடு கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. இங்கு தான் சுக்ரீஸ்வரர் தவம் புரிந்து ஈசனிடம் பார்வை பெற்றார். இதனால் இந்த ஈஸ்வரன், நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாக அருளினார்.
ஏற்றம் தரும் ஆறு வார வழிபாடு
காஞ்சிபுரத்தைப் போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் (அதாவது ஒரு மண்டலம் ) வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது. அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர். ஆண்களுக்கும் இது பொருந்தும்.
புத்திர பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்கு தொட்டில் கட்ட அன்னை அருள் புரிவாள். பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர். உத்தியோக உயர்வு , உடல் சார்ந்த குறைகள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரம் வழிபாடு:
அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்கிரம்) புடவை சாத்துதல், பால் அபிசேகம்,அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், "அஷ்டகந்தம்' என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ சக்ரத்திற்கே முக்கிய பிராதானம்.மூலிகைகளால் ஆனதால் அபிசேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேசமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்.இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது..இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள்
முத்தேவியருடன் தங்கத்தேர் வலம்
தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி மூவரும் உலா வருகின்றனர். சப்தமாதர்களில் ஒருத்தியான பிராஹ்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள். தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர். மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது. இதற்கு இடதுபுறம் தபஸ் காமாட்சி சன்னதி உள்ளது. கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். இத்தலத்தில் தவமிருந்து வழிபட, தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள். காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு "ஆதி காமாட்சி தலம்' எனப்படுகிறது. அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம் பொதுவாக மூலஸ்தானத்தில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக (மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாக கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இங்கு தவம் புரிந்த அம்பாள், சிவனின் உத்தரவிற்கு பின்பு காஞ்சிபுரம் சென்றாள். அப்போது தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் சுற்றுப் பிரதேசங்களும் தீயின் வெம்மையால் வறண்டன. இந்நிலையில் தேசாந்திரம் செல்லும் போது ஆதி சங்கரர் மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் 8 மூலிகைகளால் ஆன ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்கிறார்.இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என வரலாறு கூறுகிறது. சித்திரைத் திருவிழா -10 நாட்கள் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர். இத்திருவிழா தவிர தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் தீபாவளி, பொங்கல் நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித்திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விசேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் இக்கோயில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிப்பது சிறப்பு.
காஞ்சி காமாட்சியம்மன் மகத்துவம்
பதிவு -6
1. காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சீபுரம்தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
2. மாங்காட்டில் காமாட்சி அம்மன் சிவனை நோக்கி தவம் இருக்கும் கோலத்தில் காட்சித் தருகிறாள்.
3. அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள். அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.
4. மாங்காடுக்கு வடமொழியில் “ஆம்ராரண்யம்” என்று பெயர். அம்ரம் என்றால் மாமரம். அரண்யம் என்றால் காடு. எனவே ஆம்ராரண்யம் என்று அழைக்கப்பட்டது.
5. காமாட்சி வருவதற்கு முன்பே மாங்காடு புண்ணிய பூமியாக இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6. மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர்.
7. மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள். அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.
8. விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியதுதான்.
9. இவ்வாலயத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு ஸ்ரீசக்கரமே மூலஸ்தானமாக உள்ளது.
10. இவ்வாலயத்தில் காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
11. மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
12. இத்திருக்கோவிலில் “எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு” பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
13. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
14. பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது. சென்னையில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வர மாநகர பஸ் வசதி உள்ளது.
15. மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.
16. மாங்காடு காமாட்சிக்கு ஆதிகாமாட்சி, தபஸ் காமாட்சி என்றும் பெயர்கள் உண்டு.
17. இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது.
18. மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை.
19. மாங்காடு கோவிலில் அரசர்கள் காலத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அந்த கல்வெட்டுகளில் 8 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
20. கல்வெட்டுகளில் மாங்காட்டின் பெயர் “அழகிய சோழ நல்லூர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
21. சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
22. அன்னை காமாட்சியை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடி விடும்.
23. இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும். இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.
24. மாங்காடு காமாட்சியை முன்பு பூஜை வைத்த ஏகாம்பரம் குருக்கள் பார்த்து இருப்பதாக செவி வழி செய்தி ஒன்றுள்ளது.
25. கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
காமாட்சியம்மன் விரதம்
பிரிந்து இருக்கும் கணவன், மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும்.
ஒரு முறை கயிலாயத்தில் அம்பாள் சிவபெருமானின் திருக்கண்களை விளையாட்டாக பொத்தினாள். ஆதியும், அந்தமுமான அருட்பெருட்ஜோதியான பரமேஸ்வரனின் கண்கள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பாவம் உமாதேவியை அடைய அவள் உருவம் மாறுகிறது. பாவ விமோசனத்துக்காக அன்னை காஞ்சிபுரம் வந்து ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார்.
அப்போது சிவபெருமான் திருவிளையாடலால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருந்துணைவரான சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்க காமாட்சி அம்மன் காரடையான் விரதத்தை மேற்கொள்கிறாள். இந்த விரதத்தை கண்டு மனம் மகிழ்ந்து சிவபெருமான் அன்னைக்கு தரிசனம் கொடுத்து காமாட்சியை மணந்து கொண்டார்.
ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் என்ற பெயர் ஏற்பட்டது.
காஞ்சி காமாட்சி அம்பாள் இந்துக்கள் அனைவருக்கும் தாய் வழி தெய்வமாகும் .
ReplyDeleteகாஞ்சி தாயின் வரலாற்றை
கற்றுணர்ந்து , குறிப்பாக பெண்கள் காரடையான் விரதத்த்தை கடைபிடித்து
உயர் எண்ணங்களோடு
உலகில் வாழ்வோம் .
அன்புடன்
எல்.தருமன்
18. பட்டி .