Tuesday, 8 January 2019

ரோஜா பன்னீர் தயாரிப்பு

ரோஜா பன்னீர் தயாரிப்பு :
நாட்டுரோஜா இதழ்கள் - 1/4 கிலோ
மழை நீர் - 1/2 +1/4 லி (அ) பானை நீர்
* புது மண்பானையில் ஒரு 1/2 லி தண்ணீர் விட்டு நடுவில் ஒரு Stand வைத்து அதன் மேல் ஒரு கப் வைத்து கப்பை சுற்றிலும் ரோஜா இதழ்களை போட்டு குழிதட்டைக் கொண்டு மூடி விடவும்.அந்த குழி தட்டில் 1/4 லி தண்ணீர் ஊற்றவும்ங்க.
* பின்பு அடுப்பை வைத்து காய்ச்சவும், மேல் தட்டில்லுள்ள நீர் வற்றும் வரை சுமார் ஒரு 20 நிமிடம்.முடிவில் பானைக்குள் உள்ள கப்பில் நீர் சேர்ந்திருக்கும்.அதுவே தூய்மையான பன்னீர்.
* ரோஸ் மில்க் தயாரிக்க இந்த பன்னீரை உபயோகிக்கலாம். அவ்வளவு சீக்கிரம் கொடாதுங்க. இது போல எல்லா பூக்களிலும் இவ்வாறு எசன்ஸ் எடுக்கலாம்ங்க.
* மல்லி, முல்லை, செண்பகம், மனோரஞ்சிதம், லெமன் கிராஸ், மருகு, மரிக்கொழுந்து, நல்ல வாசனை உள்ள(இலை -பூ -பழம் ) அனைத்திலும் எசன்ஸ் எடுக்கலாம்ங்க.
செய்முறை 2:
*காய்ந்த ரோஜா இதழ்களை சுத்தம் செய்து இரவு முழுவதும் மழை நீரில் ( Ro water) ஊற வைத்து மறுநாள் காலை மீண்டும் கொஞ்சம் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிக்கவும்,இதை ரோஸ் மில்க்,சோப்,செய்யப் பயன்படுத்தலாம்ங்க. திரும்பவும் தண்ணீர் சேர்த்து இதே போல் கொதிக்க வைத்து வடித்துக் குளியல் பொடியில் கலந்து குளிக்க பயன்படுத்தலாம்ங்க.
நன்றி : ஜமுனா ராஜேஷ் 
No photo description available.
No photo description available.
Image may contain: fire
Image may contain: plant

No comments:

Post a Comment