Sunday, 7 April 2019

ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது கிடைக்கும் பலன்கள்

எண்ணய தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்…
அவ்வளவுதான்…
இதென்ன பெரிய விசயமா?
இதுக்கு ஒரு பதிவா…?’’
என முடித்துவிடும் விசயம் அல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம். அவ்வளவு விசயம் இருக்கு இதில்.
எத்தனை நாளுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
என்ன எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும்?
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்?
யார் யாரெல்லாம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது?
எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் என்னவெல்லாம் செய்யக்கூடாது?
எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் என்ன
உணவுகளை தவிர்க்க வேண்டும்?
எண்ணெய் தேய்த்து குளித்த பின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
என்னென்ன நோய் உள்ளவர்கள் என்னென்ன தைலங்களைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்
போன்ற நுணுக்கமான காரியங்களை சித்த மருத்துவம் மிகத் தெளிவாக விளக்கும்.
எத்தனை நாளுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்?
நம் நாடு வெப்பமான பருவநிலை உடையது. இந்த வகை பருவநிலைக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆனால் எதாவது பண்டிகை வந்தால் தான் எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஞாபகம் வரும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஒன்றும்
சடங்கல்ல.
என்றாவது ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அனேக கலோரிகள் சக்தி வீணாகும். எனவே எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று உடல் மிகவும் சோர்வடையும். பண்டிகை நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன்
உற்சாகமாக இருக்க வேண்டிய வேளையில் சோர்வுறுவது நல்லதா?
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் வரும் பலன்கள்:
உடல் சூடு குறையும். (நம் நாடு வெப்பமண்டலப் பகுதியில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தாலே உடல் வெப்பமாவதைத் தடுக்க முடியும். இதனால் உடல் இயக்கம் சார்ந்த அனேக நோய்கள் வராமல் தடுக்கலாம்). உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதால் ஆயுள் காலம் கூடும்.
★தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
★தோலில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.
★தோல் மென்மையாகும்
★தோல் சுருக்கம் ஏற்படாது. எனவே முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும்.
★தோலின் செயல்திறன் அதிகரிக்கும்.
★தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
★கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும்.
★கண் பார்வை பாதுகாக்கப்படும்.
★தலைமுடி நன்கு வளரும்.
உடல் வறட்சி மாறும்.
★தலைக்கு பலம் உண்டாகும்.
★முழங்கால் மூட்டுகள் பலமடையும்.
★குரல் வளம் பாதுகாக்கப்படும்.
★உடல் அசதி தீரும்.
★தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் உண்டாகும்.
★நோய் எதிர்ப்பு சக்தி கூடும்-.
★நரம்பு மண்டலம் பலப்படும்.
★குறைமாதத்தில் பிறந்த
★குழந்தைகளுக்கும் எடை குறைவாகபிறந்த குழந்தைகளுக்கும் வரும் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிசார்ந்த பிரச்னைகள் தீரும்.
எண்ணெய் என்ற வார்த்தையின் வரலாறு:
1. எண்ணெய் என்ற சொல்லின் பொருளே எள்+நெய் என்பதுதான் நெய்ப்புத்தன்மையுள்ள பொருள் நெய். பொதுவாக நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். திலம் என்றால் எள்ளிலிருந்து எள்ளிலிருந்து எடுக்கும் நெய் என்பதால் தைலம் என பெயர் வந்தது. நல்லெண்ணெய் எல்லா காலங்களுக்கும் ஏற்றது.
பசு நெய்யையும் தேய்த்துக் குளிக்கலாம் (சித்த மருத்துவ அறிவியலை கூறுகிறேன். உண்பதற்கே நெய் வாங்க வழியில்லாதவர்கள் உள்ள நாட்டில் இதற்கு மனசாட்சி எப்படி இடம் தருமோ)
2. பசு நெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது குழந்தைகளுக்கு நல்லது. மேலும் இரத்தக் கொதிப்பு மூளை சம்பத்தப்பட்ட நோய்கள், அதிக தாகம் போன்ற பிரச்னைகள் உள்ள வயதானவர்களுக்கு நெய் தேய்த்து குளிப்பது நல்லது.
3. வெப்பமான காலங்களில் பசு நெய் ஒரு பங்கு மட்டும் எடுத்து அந்த அளவுக்கு இன்னொரு பங்கு விளக்கெண்ணெயும் இன்னொரு பங்கு நல்லெண்ணெயும் சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து
பயன்படுத்தலாம். பசுவின் நெய்யை நன்றாக உச்சி முதல் பாதம் வரை தேய்க்க வேண்டும். ஆனால் சூடு பரக்க தேய்க்கக் கூடாது. தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளிக்க வேண்டும்.
எண்ணெய்
தேய்த்தபின் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். வெந்நீர் போடும்போது அதில் சில மாவிலைகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்த வெந்நீரைப் பயன்படுத்துவது நல்லது.
★நெல்லிக்காய் பருப்பு _ 1- 1/4 பங்கு
★வெண்மிளகு _ 1 பங்கு
★கஸ்தூரி மஞ்சள் _ 3/4 பங்கு
★கடுக்காய் தோல் _ 1/2 பங்கு
★வேப்பம் விதை _ 1/4 பங்கு
இவைகளைப் பொடித்து தூளாக்கி தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். (எல்லாவற்றையும் மருத்துவர் ஆலோசனை பெற்றே செய்யவும் அல்லது மருத்துவரிடம் உங்கள் உடலுக்குத் தகுந்த குளியல் பொடிகளை ஆலோசித்து வாங்கிப் பயன்படுத்துங்கள். புண் உள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
பசுவின் நெய் தேய்த்துக் குளிக்கும்போது பச்சைப்பயறு தேய்த்துக்
குளிக்கலாம்.
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்?
+ சித்திரை, வைகாசி மாதங்களில் (ஏப்ரல் பாதியிலிருந்து ஜூன் பாதிவரை) காலை சூரிய உதயத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள்.
+ ஆனி, ஆடி மாதங்களில் (ஜூன் பாதியிலிருந்து ஆகஸ்ட் பாதிவரை) சூரிய உதயத்திலிருந்து மூன்றேகால் மணி நேரத்திற்குள்.
+ ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் (ஆகஸ்ட் பாதியிலிருந்து டிசம்பர் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள்.
+ மார்கழி, தை மாதங்களில் (டிசம்பர் பாதியிலிருந்து பிப்ரவரி பாதி வரை) ஒரு மணி நேரத்திற்குள்.
+ மாசி, பங்குனி மாதங்களில் (பிப்ரவரி பாதியிலிருந்து ஏப்ரல் பாதி வரை) ஒன்றேகால் மணி நேரத்திற்குள். எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
+ யாரெல்லாம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
பதார்த்த குண சிந்தாமணி என்னும் புத்தகம்.
சித்த மருத்துவத்தில் நோய்களை மூன்று பிரிவுகளாகப்பிரிப்போம்.
1. வாத நோய்கள்
2. பித்த நோய்கள்.
3. கப நோய்கள்.
இதில் கப நோயாளிகள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.
செரியாமை (அஜீரணம்) உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.
மேலும் சில சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது (தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே செய்யலாம்)
எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் செய்யக்கூடாதவை:
★கடுமையான வேலைகள் செய்யக் கூடாது.
★வெயிலில் சுற்றக்கூடாது.
★உடலுறவு கூடாது.
★பகலில் உறங்கக்கூடாது.
★அதிகம் காற்று வீசக்கூடிய இடத்தில் இருக்கக்கூடாது.
★எண்ணெய் தேய்த்து குளித்தபின் இவைகளைச் செய்தால் உடல் நிலை பாதிக்கப்படும்.
எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
★கீரைத்தண்டு.
★அறு கீரை.
★மாவுப்பொருளால் ஆன உணவுப்பண்டங்கள்.
★வெல்லம்.
★பூசணிக்காய்.
★மாங்காய்.
★தேங்காய்.
★அகத்திக்கீரை.
★கசப்பான சுவையுள்ள பொருட்கள். .
★பழங்கள்.
★இளநீர்.
★சேம்பு,
★கத்தரிக்காய்,
★கொத்தவரை, மொச்சை.
★நண்டு, மீன், கோழிக்கறி,
★ஆட்டுக்கறி, பன்றிக்கறி.
★எள், கொள்ளு, உளுந்து,
★கடலை.
★பால், தயிர், குளிர்ந்தபானங்கள்.
★வெங்காயம்.
இவைகளை எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளில் தவிர்ப்பது நல்லது.
எண்ணெய் தேய்த்துக் குளித்த பின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
எண்ணெய் தேய்த்துக் குளித்தபின் மீன், மட்டன், சிக்கன் சாப்பிடக்கூடாது என்று சொன்னதால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டவர்களுக்கு
முதலில் சொல்லி விடுகிறேன், ஏரி மீன் சாப்பிடலாம், அயிரைமீன், சுறா சாப்பிடலாம்.
காடை, கவுதாரி, முயல் சாப்பிடலாம் (வழக்கொழிந்து போன இந்த உணவுகள் இப்போது மட்டன் சிக்கன் கடைகளில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது)
தயிர், பால் சாப்பிடக்கூடாது. ஆனால் நெய் சாப்பிடலாம்.
கீரைகளில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை கறிவேப்பிலை சாப்பிடலாம்.
மோர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு சட்டியில் உப்பை போட்டு வறுத்து உப்பை எடுத்துவிட்டு அந்த சூடான சட்டியில் மோரை ஊற்றி முறித்து அந்த மோரைப் பயன்படுத்தலாம்.
காய்கறிகளைப் பொறுத்தவரை இளம் பிஞ்சானதாக சமைத்து உண்ண வேண்டும்
என்னென்ன நோயினர் என்னென்ன தைலங்களைத்தேய்த்துக் குளிக்க வேண்டும்?
ஒவ்வொரு நோய் நிலையிலும் தேய்த்துக்குளிப்பதற்கென்று அனேக தைலங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இதைக் கண்டிப்பாக சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே
பயன்படுத்த வேண்டும். என்னென்ன நோய்களில், அதற்கான மருந்து தைலங்களை தேய்த்துக் குளிப்பதால் குணமாக்கலாம் என்பதை மட்டும் ஒரு சிறிய அறிமுகத்திற்காக சொல்கிறேன்.
★★சில கண் நோய்கள்.
★★காது நோய்கள், மூக்கு நோய்கள், தொண்டை நோய்கள் (ENT).
★★பீனிச நோய்கள்(sinusitis).
★★இரத்தக் கொதிப்பு.
★★சில தலை நோய்கள்.
★★ஒற்றை தலைவலி.
★★சில உடல் வலிகள்.
★★சில வாத நோய்கள்.
★★மூளை நோய்கள்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ஒரு
#சடங்கு_போல பண்டிகைக்கு மட்டும் செய்யாமல், அதை ஒரு ஆரோக்கிய முறையாக கடைபிடிக்க வேண்டும்.
ஆக ஆரோக்கியமாக இருக்க வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment