Sunday, 7 April 2019

குடல்வால் நோய் சிகிச்சை முறைகள்

அப்பெண்டிசிடிஸ் அவதிக்கு ஆபரேசனின்றித் தீர்வு
டாக்டர் வெங்கடாசலம் [www.dinamani.com]
பேராசிரியர் மோசஸ் வயிற்றுவலி தாளாமல் துடித்துக் கொண்டிருந்தார். காத்திருப்போர் அறையிலிருந்த நோயாளிகள் அனைவரும் ஒருவித பதற்றத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
மருத்துவமனைக்கு வந்த சில நிமிடங்களுக்குள் இரண்டு முறை குமட்டலும், வாந்தியுமாய் வாஷ்பேசினை நோக்கி விரைந்திருக்கிறார். அவசர நோயாளியாகக் கருதி அவரை உடனடியாகப் பார்க்க வேண்டியதாயிற்று.
முதல் நாள் கல்லூரியிலிருந்து திரும்பிய மாலை நேரத்திலேயே தொப்புள் பகுதியில் வலி ஏற்பட்டது.
இரவு லேசான குளிர் சுரம், பசியில்லை, குமட்டல் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததால் ஆங்கில மருத்துவர் ஒருவரை அணுகியிருக்கிறார். அவரது அறிகுறிகளைச் சந்தேகத்து ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு குடல்வால் வீக்கம் உள்ளதாகவும் உடனடியாக ஆபரேஷன் செய்துகொள்வது நல்லது என்றும் மருத்துவர் கூறியிருக்கிறார். ஊசி மாத்திரைகள் எடுத்துக் கொண்டு, அடுத்த நாள் வருவதாகக் கூறி விட்டு வீடு திரும்பிய வருக்கு இரவெல்லாம் விட்டு விட்டு வலி ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்.
ஆபரேசனை தவிர்க்க நினைத்து காலையில் ஹோமி யோபதி சிகிச்சைக்கு வந்துவிட்டார். நேற்று தொப்புள் பகுதியில் வலித்ததாகவும் இன்று வலது அடிப்பக்க வயிற்றில் கருமையான வலி இருப்பதாகவும் குமட்டலும், வாந்தியும் வந்து கொண்டே இருப்பதாகவும் காலையில் ஒருமுறை வயிறுப் போக்கு ஏற்பட்ட தாகவும், பசியே இல்லை எனும் பலவித அறிகுறிகளை மிகுந்த சிரமத்துடன் தெரியப்படுத்தினார்.
உடற்பரிசோதனை செய்த பின், ஸ்கேன் அறிக்கையை பார்த்து விட்டு ஹோமியோபதி மருந்து டயஸ்கோரியா தாய் திரவத்தில் சில சொட்டுக்களை நீரில் கலந்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் அளவு அருந்துமாறு கூறினேன். பேராசிரியர் மோசஸ் 30 நிமிடங்களில் மீண்டும் என் அறைக்கு வந்தார். வயிற்றுவலி பெருமளவு குறைந்திருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் அவருக்கு தொடர் மருந்துகள் தரப்பட்டன.
ஒரு வாரம் கழித்து மீண்டும் முழுநிவாரணத்துடன் வந்தார். அதற்குப் பிறகு அவருக்கு மருந்தே தேவைப் படவில்லை. 10 வருடங்களுக்கு முன் நடந்த சிகிச்சை இது. இப்போது வரை பேராசிரியர் அவர்களும் அவரது குடும்பத்தினரும் ஹோமியோபதி மீது ஆழமான நம்பிக்கையும் பற்றும் உள்ளவர்களாய் இருக்கின்றனர்.
பெருங்குடலும் சிறுகுடலும் செருமிடத்திற்குச் சற்று கீழே பெருங்குடலின் வாயில் அருகே மூன்று அங்குல நீளமுள்ள சிறிய ஒட்டுக்குடல் போல் தொங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு குடல்வால். இதன் மேல்பகுதி திறந்த நிலையில் பெருங்குடலுடன் இணைந்து உள்ளது. கீழ்ப்பகுதி மூடப்பட்டுள்ளது. மேல்பகுதி திறந்த நிலையில் பெருங்குடலுடன் இணைந்துள்ளது. மலக்குடலுக்கு வரும் மலம், கழிவுகள் போன்றவை இங்கு தங்கி விடக் கூடும். அப்போது அழற்சி ஏற்பட்டு சீழ்பிடிக்கிறது. இந்நிலையில் அடிவயிற்றின் வலது பக்கம் வலி ஏற்படும்.
குமட்டல் வாந்தியுடன் கூடிய தொடர்வலி இருக்குமானால் குடல்வாலில் ஏற்பட்ட நோய் (Appendicitis) என்று அறியலாம். இந்நோய் தாக்கியவர்களுக்கு ரத்த வெள்ளையணுக்கள் (WBC) அடஹிகமாகி 15000 – 2000 CU.MM வரை உயர்கிறது. (சரியான அளவு 1000-1100 CU.MM).
’’குடல்வால் ஓர் உபயோகமற்ற உறுப்பு. அடிக்கடி அழற்சி ஏற்பட்டு வேதனை தருமானால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவது நல்லது. அப்படி நீக்கிவிடுவதால் எந்தவித இழப்புமில்லை’’ என்று ஆங்கில மருத்துவம் கூறுகின்றது. தொண்டைச் சதைக் கோள வீக்கத்திலும் (Tonsilitis) அவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவதே நல்லது. அதனால் எந்தப் பாதிப்போ, நஷ்டமோ கிடையாது என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.
ஆனால் மாற்றுமுறை மருத்துவங்கள் குடல்வால், டான்சில் போன்ற உறுப்புகள் உபயோகமற்றவை என்ற கருத்தை ஏற்கவில்லை. டான்சில் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் கூட குளிர்ச்சியால் ஏற்படும் ஒவ்வாமையும் இதரத் தொந்தரவுகளும் தொடர்ந்து நீடிப்பதைக் காணலாம். குடல்வால் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் அதே இடத்தில் வலி தோன்றி துயரப்படுத்துவதையும் காணலாம்.
குடல்வாலில் ஒரு வகை திரவம் இயற்கையாகவே சுரக்கிறது. இந்தத் திரவப்பசையின் உதவியால் கழிவுகள் மலக்குடலுக்குள் இலகுவாகத் தள்ளப்படுகின்றன. அறுவைச் சிகிச்சை செய்து குடல்வாலை அகற்றி விட்டால் கழிவுகள் சீராக நகர்வதில்லை. அதனால் ஒருவித நச்சுத்தன்மை பெருங்குடலில் ஏற்படுகிறது.
அறுவைச் சிகிச்சையில்லாமல் குடல்வால் நோயைக் குணமாக்கக் கூடிய வாய்ப்புக்கள் மாற்றுமுறை மருத்துவங்களில் அதிகம் உள்ளன. இருப்பினும் முற்றிய குடல்வால் அழற்சியில் சீழ்பிடித்துத் துளை விழுந்து வெடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையிலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்நோய் தாக்குதலால் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும் அறுவை சிகிச்சை தேவப்படலாம். மற்ற அனைத்து நிலைகளிலும் அறுவை சிகிச்சை அவசியமற்றது.
இந்நோய் தாக்குதலின் போது வெளிப்படும் குறிகளின் அடிப்படையில் கீழ்கண்ட ஹோமியோபதி மருந்துகளில் உரிய மருந்தைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை மேற்கொண் டால் விரைவான நிவாரணமும், முழுநலமும் கிடைக்கும்.
பெல்லடோனா :
குடல்வால் அழறசி ஆரம்பக் குறிகள். திடீரெனத் தோன்றும் கடுமையான வலியுடன் காய்ச்சலும், தலைவலியும் சேர்ந்து வருதல், தூக்கக் கலக்கமிருந்தாலும் தூங்க இயலாது.
பிரையோனியா :
குத்தும் வலி, காலை மடக்கி மல்லாக்கப்படுத்திருத்தல், அசைந்தால் தாங்க முடியாத வலி, கடுமையான தாகமும், மலச்சிக்கலும் இருத்தல்.
டயஸ்கோரியா :
நீடித்த வலி, பின்பக்கம் உடலை வளைத்தால் வலி சற்று சமனப்படுதல் (தாய் திரவத்தை நீரில் கரைத்துச் சாப்பிட்டால் உடனடியாக வலி குறையும்)
ஐரிஸ்டெனாக்ஸ் :
தொடமுடியாதளவு பயங்கரமான வலி (மிக முக்கியமான மருந்து) வாந்தியுடன் வலி
மெர்க்கரோசிவ் :
குடல்வால் பகுதியில் புண் உள்ளது போன்ற வலி. வலது பக்கம் படுத்தாலோ, இரவிலோ அதிகரித்தல், ஏராளமாக வியர்த்தாலும் நிவாரணம் கிடைக்காது.
ஆர்ச்சனிகம் ஆல்பம் :
சீழ் பிடித்த நிலை, அமைதியின்மை, பதற்றம், கடும் பலவீனம், சில்லிப்பு, குத்தும் வலி, வயிற்றுப்போக்கு.
லாச்சஸிஸ் :
குத்தும் வலி, கூருணர்ச்சி காரணமாக வலியுள்ள இடத்தில் ஆடைப்பட்டால் கூட தாங்க இயலாது. வலி தொடை, முதுகுப் பகுதிகளுக்கு ஊடுருவிப் பாயும்.
ரஸ்டாக்ஸ் :
வலியால் அதிக அமைதியின்மை, வீக்கம், டைபாய்டு குறிகள், ஓய்வில் வலி அதிகரிக்கும். அசைவினால் வலி சமனப்படும். It is a homoeopathic Knife in case of Appendicitis என்று ரஸ்டாக்ஸ் புகழப்பட்டுகிறது.
லைகோபோடியம் & சோரினம் :
தீவிர நிலை குறிகள் நீங்கி வலி குறைந்த பின் திரும்ப வராமலிருக்க தடுப்பு மருந்தாக மாதம் ஒருமுறை தரவேண்டிய மருந்துகள்.
மேலும் சல்பர், கோலோசிந்திஸ், பாப்டீஸியா, எக்னேஷியா, பைரோஜன், வெராட்ரம் விரைட் போன்ற மருந்துகளும் குடல்வால் பாதிப்பைக் குணப்படுத்தப் பயன்படும்.

No comments:

Post a Comment