Tuesday, 20 November 2018

சுக்கு மல்லி காபி

சுக்கு மல்லி காபி :
* நாட்டுக் கொத்துமல்லி - 200 கி
எலுமிச்சை - 4 - 6
சுக்கு - 100 கி
பனங்கருப்பட்டி - தேவைப்படும் அளவு
* வர கொத்துமல்லியை எலுமிச்சை சாறில் ஊற வைத்து காயவிடவும்.பிறகு பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
*சுக்கு செய்முறை முந்தைய பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது, பதிவில் உள்ளது போல் செய்து பொடித்துக் கொள்ளவும்.
* மல்லிப் பொடி, சுக்கு பொடி, இரண்டையும் நன்றாக கலந்து உபயோகிக்கவும்.
* தேவையானளவு பொடி எடுத்து, இனிப்பு சுவைக்கு ஏற்ப பனங்கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்தலாம்.
*சுக்கையும் (காரம்), பனங்கருப்பட்டியும் (இனிப்பு) அதிகமாகவோ (அ) குறைவாகவோ அவர் அவர் தேவைக்கேற்ப்ப சேர்க்கலாம்.
* தினமும் காலையில் சுக்கு மல்லி காபி பருகுவதால் உங்கள் உடலில்லுள்ள வாதம், பித்தம், கபம் இவை மூன்றையும் சீர் படுத்தும். வாதம், பித்தம், கபம் சம்மந்தமான நோய்கள் வராதுங்க.
* மல்லி, சுக்கு, பனங்கருப்பட்டி, இம்மூன்றையும் இங்கு குறிப்பிட்டுள்ள படியே செய்து பயன்படுத்தவும். இத்துடன் வேறு எந்த பொருளையும் சேர்க்க கூடாதுங்க. சுத்தமான பனங்கருப்பட்டியை மட்டுமே பயன்படுத்துங்கள்.
Image may contain: fruit and food
No automatic alt text available.Image may contain: food

No comments:

Post a Comment