Thursday, 22 November 2018

மூலிகை மிட்டாய் :

மூலிகை மிட்டாய் :
பனங்கற்கண்டு - 100 கி
தண்ணீர் - 1 கப்
*அரைக்க வேண்டிய பொருட்கள்:
கற்பூரவல்லி - 2 இலைகள்
வெற்றிலை - 3
துளசி - 5
கருந்துளசி - 5
குப்பை மேனி - 2 இலைகள்
அருகம்புல் - 4
தூதுவளை - 6 இலைகள்
தூதுவளை - 6 பழம்
ஆடாதொடா -1/4 இலை
முசுமுசுக்கை_6 இலைகள்
தும்பை - 10 இலைகள்
நெல்லி - 1/2
கண்டங்கத்திரி பொடி - 1 சிட்டிகை
கண்டத்திப்பிலி & அரிசிதிப்பிலி - 1
ஏலக்காய் - 1
கிராம்பு - 4
பட்டை - 1 சிறு துண்டு
சித்திரத்தை - 1 சிறு துண்டு
வால் மிளகு - 10
மிளகு - 10
சுக்கு _ 1 சிறு துண்டு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
அதிமதுரம் - 1 சிறு துண்டு
*கடைசியில் சேர்க்க :
தேன் - 2 ஸ்பூன்
எலுமிச்சை - 1/2
* முதலில் தண்ணீரும் பனங்கற்கண்டையும் சேர்த்து வடிகட்டவும்.
* அரைக்க வேண்டிய பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து நன்றாக வடிகட்டவும்.
* பனங்கற்கண்டுடன் அரைத்து வடிகட்டிய நீரை சேர்த்துக் அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து கிளறவும்.
* பதம் தண்ணீரில்லுள்ள கப் விட்டால் உருட்டும் பதம் வர வேண்டும், உருட்டி எடுத்து கீழே போட்டால் நங்குனு சத்தம் வர போது இறக்கி ஆறவிடவும்.
* மிதமான சூடு உள்ள போது எலுமிச்சை சாறு, தேனையும் சேர்த்து கலக்கவும்.
* கை பொறுக்கும் சூட்டில் சிறு சுண்டைக்காய் அளவு அனைத்தையும் உருட்டி உருண்டை பிடிக்கவும். ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க பனங்கற்கண்டு பொடியுடன் தூவி கலந்து பத்திரபடுத்தவும்.
* ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
* இரண்டு வயதுக்கு மேல்லுள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சளி, இருமல், அஸ்துமா போன்றவைகளுக்கு....
* பெரியவர்களும் 1 கப் சூடான தண்ணீரில் கலந்து குடிக்கலாம். புத்துணர்ச்சி அளிக்கும், தொண்டைக்கு இதமாக இருக்கும்.
நன்றி: ஜமுனா ராஜேஷ்

No comments:

Post a Comment