Tuesday, 20 November 2018

Homemade Soaps குளியல் கட்டி செய்முறை

Homemade Soaps:
தேங்காய் எண்ணை - 910 g
விளக்கெண்ணை - 50 g
காஸ்டிக் சோடா - 135 g
தண்ணீர் - 560 ml
எஸ்சன்ஸ் _ 10ml (தேவையெனில்)
தண்ணீருக்கு பதில் ஆட்டுப்பால் (அ) மூலிகை சாறு பயன்படுத்தலாம். ஆனா நீங்க அத ப்ரிஜீல் வைத்து ஐஸ்கட்டி ஆனதும் எடுத்து உபயோக்க வேண்டும் ( காரணம் பால் திரிந்து விடும்). மூலிகைச் சாறு ஐஸ்கட்டியானதும் அதில் காஸ்டிக் சோடாவை போட்டு கரையும் வரை கைவிடாமல் நீளமான கரண்டி கொண்டு கலக்கவும் இல்லையென்றால் சுண்ணாம்பு கட்டி போலாகிவிடும்.
முழுவதும் கரைந்ததும் வெதுவெதுப்பாக சூடு இருக்கும் போது எண்ணையை சேர்த்து கலக்கவும் க்ரீம் (தோசை மாவு பதம்) பதம் வந்ததும் எஸ்சன்ஸ் தேவைப்பட்டால் சேர்த்து லைட்டா கலந்துவிடவும்,பிறகு அச்சில் ஊற்றவும்.24 மணி நேரம் கழித்து அச்சில்லிருந்து எடுத்து 30-50 நாட்கள் நிழலில் காய வைத்து பிறகு பயன்படுத்தலாம்.
* விளக்கெண்ணைக்கு பதில் வேப்ப எண்ணை,புங்க எண்ணை,புன்னை எண்ணை, இலுப்பை எண்ணை பயன்படுத்தலாம்.
* குப்பை மேனி, சோற்றுக் கற்றாழை, சந்தனம், சீமை அகத்தி, வெப்பாலை... போன்ற மூலிகைகள் பயன்படுத்தலாம்.
* 30-50 நாட்களுக்கு பிறகு காஸ்டிக் சோடாவின் தன்மை சிறிது குறைந்திருக்கும்.
***** காஸ்டிக் சோடாவை கையால்வதில் மிகந்த கவனம் தேவை. குழந்தைகள் அருகில் இருக்க கூடாதுங்க. அப்போதைக்கு கண்களுக்கு கண்ணாடி போடவும், கைக்கு உறை அணியவும், மூக்கிற்கு துணி கட்டவும், நீளமான கரண்டி கொண்டு கலக்கவும். மீதமான காஸ்டிக் சோடாவை குழந்தைகள் கைகளுக்கு எட்டாதவாரு வைக்கவும்.
* இன்றைய மார்கெட்டில் கிடைக்கும் சோப்பிற்க்கு இந்த தேங்காய் எண்ணை சோப் சிறந்ததுங்க.
* * * ஆனாலும் மூலிகை குளியல் பொடியே சிறந்ததுங்க.
*100 கிராம் சோப்புனா ஒரு 14 சோப்பு வரும்ங்க. ஒரு சோப்பின் அடக்க விலை 25 ரூபாய்க்குள் வரும்.
* இதில் பதம் ரொம்ப ரொம்ப முக்கியம்ங்க. காரணம் சிறிது தவறினாலும், சோப்பு சரியா வராது. சோப்பின் மேல் எண்ணை, பூத்தாற் போல் நிற்கும்,காய்ந்ததும் வெள்ளை நிற உப்பு போல் சோப்பின் மேல் படியும், சரியாக காயாது, சரியான வடிவம் வராதுங்க. இப்படி இருந்தால் விற்பனை செய்ய இயலாதுங்க.
* நானும் செய்து பழகும் போது கிட்டதட்ட 8 - 10 லிட்டர் எண்ணை வீண்ணாதுங்க.
* வியாபாரத்துக்குனா தயவு செய்து நல்லா சோப் செய்யத் தெரிந்தவற்களிடம் சென்று கற்றுக்கொள்ளவும.இல்லையெனில் கஷ்டம்ங்க,பொருள் நஷ்டமாகும்... .சோப் செய்ய கற்றுத் தருவபவர்களிடம் சென்று கற்றுக் கொள்ளுங்கள் அவர்களால் மட்டுமே பொருட்களை எவ்வாறு கையால்வது என்று நுணுக்கமாக சொல்லித் தருவார்கள்.

No comments:

Post a Comment