Monday, 5 November 2018

திருஞானசம்பந்தர் திரு நீற்றுப்பதிக வாக்கு

*நெற்றியில் மூன்று திருநீற்று கோடுகள்*
இவ்வுலகில் பிறந்து உயிரினங்க ள் யாவும் இறுதியில் தீயில் வெந்து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு.
காராம் பசுவின் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத் துவ நூல்கள் கூறுகின்றன.
திருநீறு உடலில் உள்ள நீர்த்தன் மையை உறிஞ்சவல்லது. நம்மை சுற்றியுள்ள அதிர்வலைகளில் நமக்கு நன்மை பயக்ககூடிய நல் ல அதிர்வலைகளை மட்டுமே உள்வாங்கும் தன்மையுடையது.
திருநீற்றை முக்குறியாக அணி கிறோம். ஏனென்றால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை வேரோடு நீக்கி னால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக் குறி உணர்த்துகிறது.
திருநீறு இன்னும் பற்பல நன் மைகளை நமக்கு அருள்கிறது.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே
என்பது திருஞானசம்பந்தர் திரு நீற்றுப்பதிக வாக்கு.Image may contain: one or more people and food

No comments:

Post a Comment