நன்றி ; sidha madical care.
சக்தி சாரணை மூலிகை மருத்துவம்
இது வெள்ளைச் சாறடை , வெள்ளைச் சாரணை சாறடைக் கிழக்கு என்றும் அழைக்கப்படும்.
" வித்திரிதி மூலம் விழிப்படல மார்புநோய்
தத்து சுவாசந் தனிக் கருப்பை-யுற்ற
கருச்சிதறச் செய்சூதி காவாத மும்போம்
விருச்சிகத்தின் பேரை விரி"
முறை:
இதன் இலைச் சாற்றை முலைப்பாலில் கலந்து கண்களில் மை போல் தீட்டி வர நேத்திரத்தைப் பற்றிய பல ரோகங்கள் போம்.இதன் இலைச் சாறில் வேளைக்கு அரை அவுன்ஸ் பசும் பாலில் கலந்து சாப்பிட வீக்கம், கட்டி, குன்மம், வயிற்றுளைச்சல் இவைகள் தீரும்.இன்னும் சிறு தாவர விஷங்களையும், வாத, பித்த,கபம் இம்மூன்றின் ஏற்றத்தாழ்வுகளால் உண்டான நோய்கள் அனைத்தையும் போக்கும்.
இதன் இலைச் சாறுடன் சமம் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து மூட்டுக்களில் உண்டான வீக்கம்,வலிகளுக்கு தேய்த்து வர குணமாகும்.
பொதுவாக இம்மூலிகை கல்லீரல்,மண்ணீரல்,கணையம்,சிறுநீரகம்,நுரையீரல் போன்ற ராஜ உறுப்புகளில் செயல்பட்டு அந்த நோய்களை தீர்ப்பதில் நிகரற்ற மூலிகையாகும்.காயகற்ப மூலிகையில் இதுவுமொன்று.
No comments:
Post a Comment