*** குழந்தை வளர்ப்பு இரகசியம் *** சிறு தொகுப்பு
அந்த காலத்தில் வீடுகளில் எண்ணெய் தேய்த்துக் குளிகப்பாட்டாத குழந்தைகள் இல்லை என்று சொல்லலாம்.எண்ணெய் குளியலின் போது குழந்தைகளுக்கு மூக்கிலும் காதிலும் கண்ணிலும் எண்ணெய் விடுவார்கள்..அந்த எண்ணெய் தொண்டை வழியாக நுரையீரலுக்குள் செல்லும்.
நுரையீரலுக்கு எண்ணெய் ஆகாது.அப்போது நுரையிரலில் இருக்கும் சளியானதும் வெளியேற்றப்படும்.
அதனால் தான் அந்த காலங்களில் குழந்தையை குளிப்பாட்டியதுமே சுத்தமான சாம்பிராணி புகைப்போடுவார்கள்..
அது நுரையிரலில் உள்ள சளியை சுலபமாக வெளியேற்ற உதவும்..ஆனால் இன்று இது எதுவுமே இல்லை..சுத்தமான சாம்பிராணி அந்த காலத்தில் காட்டில் இருந்து கொண்டு வந்து தருவார்கள்.. இப்போதும் எங்கள் பகுதிகளில் ஆதிவாசிகள் மரத்தில் இருந்து எடுத்துவந்த சாம்பிராணி கட்டியை கொண்டு வந்து தருவார்கள்..
குழந்தைகளுக்கு சளிப்பிடித்தால் பால் புகட்டும் தாய்மார்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சாதாரணமாகவே பால் புகட்டும் தாய்மார்கள் உணவில் உப்பு புளி காரம் இவைகளை அறவே தவிராப்பது நல்லது என்பது எனது கருத்து..
சில குழந்தைகளுக்கு சளி அடிக்கடி பிடிக்கும்..அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் இயல்பை விட குறைந்து இருக்கிறது என்று அர்த்தம்..
தொண்டையிலோ, காதிலோ, சைனஸ்லோ,டான்சில் பகுதியிலோ,நுரையீரலிலோ ஏற்பட்டுள்ள உபாதைகளை சரி செய்ய முடியாமல் திணறுகிறது என்று பொருள்..
அந்த சமையத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்..
சளிப்பிடித்தால் வாய் வழியாக சுவாசிக்க ஆரம்பிக்கும்..எந்நேரமும் வாயால் சுவாசித்துக்கொண்டே இருந்தால் வாய் முழுவதும் ஈரப்பசை இல்லாமல் உலர்ந்து போவதால் குழந்தைகள் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் இதனாலும் சளி நீங்காது..பேச்சு சரியாக வராது.அழுத்தமான வார்த்தைகளை பேச முடியாமல் போகும்..சிற்றாமணக்கு எண்ணெய்யை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஏற்படும் பல உபாதைகளுக்கு தீர்வு கண்டார்கள் நம் முன்னோர்கள்.
இப்போது யாருக்கும் முறையாக சிற்றாமணக்கு எண்ணெய்யை சுத்தி செய்து தயாரிக்க தெரிவதில்லை என்றே சொல்லாம்.
குழந்தை பிறந்ததும் ஆரோக்கியமாக வளர்ப்பது என்பது ஒருபுறம் இருந்தாலும்.கருவில் இருந்தே கரு உருவாவதற்கு முந்தைய காலத்தில் இருந்தே பெண்கள் ஆரோக்கியம் காத்தால் தான் ஆரோக்கியமான உயிர் ஜனிக்கும்
முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும் பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள் ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே என்கிறது சித்தர் பாடல்
நன்றி ; சரவண குமார்.
No comments:
Post a Comment