மிளகு பயன்கள்..
மிளகு அது கருப்பு; அத்தனை பிரபஞ்ச சக்தியை தண்ணுள்ளே ஈர்த்து வைத்திருக்கும் ஒரு மாபொரும் சக்தி என்பதனை மனதில் நிறுத்தி கிழே உள்ள வற்றை வாசிக்க தொடங்குங்கள்.
நூறு மிளகு நுகரு மமுரியில் வேறு மருந்தென்ன இக்காய சித்திக்குத் தேறியிதனைச் செலுத்தவல் லாருக்கு மாறி மயிரு மறுமயி ராகுமே என்கிறார் போகர்
சித்த மருத்துவத்தில் கருப்பாக உள்ள மூலிகைகளை, உயர்வாகப் போற்றுகிறார்கள், கருந்துளசி, கருநெல்லி, கருநொச்சி,கருமஞ்சள் போன்ற மூலிகைகள், காயகற்ப மூலிகைகளைப்போல, அளவற்ற நன்மைகள் தருமென்கிறார்கள்.இதன் வரிசையில் மிளகும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
காளி,காலன் என்பவை கருப்பைத்தான் குறிக்கும்.. அதனால் தான் காளியை வணங்கி ஒருவர் ஈடுமருந்து வைத்தால் அதை யாரும் எடுக்க பயப்படுவார்கள்..ஆனால் பைரவரை வணங்குபவர்கள் எடுக்க முயற்சிப்பார்கள்..சிலர் சொல்வார்கள் காளி ஒரு பைத்தியக்காரி அவள் எப்போது எப்படி இருப்பாள் என்ன செய்வாள் என்றே தெரியாது என்பர்.
பத்து மிளகு(கறி) இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மூத்தோர் சொல்..
பதினைந்தாம் நூற்றாண்டு வரை மிளகைத்தான் நம்ம முன்னோர்கள் கார்ப்பு சுவைக்காக பயன்படுத்தி வந்தனர்.அதன் பின் போர்ச்சுக்கீசியர்களினால் புகுத்தப்பட்டது தான் மிளகாய்.சிகப்பு என்றுமே ஆபத்து தான்.
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி இதன் பொருள் உழவு நட்பில்லாத நிலமும், மிளகு நட்பில்லாத கறியும் வழவழ. மிளகை போகர் பல பரிபாஷை பெயர்களால் கூறிப்பிட்டிருப்பதை காணலாம்.முதிர், திரைபோக்கி, அரிசி, வலசம், தீட்சணம், வன்மாஞ்சி, சியாமம், உஷ்ணம், பத்துவனேஷம், மஞ்சரம், தனியம் .
என்னை பொருத்த வரை மிளகு இல்லாத மருந்துவம் என்பது உப்பில்லாத உணவை போன்றது.. மிளகை பற்றி ஏற்கனவே ஏராளமானனோர் வெளிதரையிட்டி காட்டிவிட்டார்கள் ஆதலால் அதை பற்றி காணாமல் அதை மையாக கொண்ட சில சூச்சமத்தை காணலாம்.
எப்போது பிறவிப் பாஷாணங்களை பயன்படுத்த வேண்டும் எப்போது வைப்புப் பாஷாணங்களை பிரையோகிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். மிளகும் உஷ்ணம் பூண்டும் உஷ்ணம் இந்த இரண்டை தகுந்த அனுபானத்துடன் கொடுத்தால் உடல் குளிர்ச்சியடையும்.எதனுடன் சேர்த்து அனுபானமாக கொடுத்தால் குளிர்ச்சி எதை எதனுடன் சேர்த்தால் என்ன விழைவு உண்டாகும் என்ற சூத்திரத்தை நாம் முதலில் கற்று உணர வேண்டும்.
ஐம்புலன்களுக்கு அப்பாலுள்ளதை அறியமுயலுதல் மற்றும் சிந்தித்து பகுத்தறிவை கொண்டு ஆய்ந்து அதன் முடிவுகளை கருத்துக்களை ஏற்று ஆராய்வதே சித்தம்..அதுவே மருத்துவம்.
நமது முன்னோர்கள் அன்றுள்ள மானிடர்களுக்கு சொல்லி சென்ற மருத்துவத்தை அப்படியே இன்றுள்ள சிந்தனை செயல் உணவு வாழ்க்கைமுறை என்று எல்லாவற்றிலும் மாறிவிட்ட மனிதனுக்கு அந்த காலத்திற்கென வரையபாபட்ட சூத்திரத்தை இன்றுள்ள மனிதனுக்கு ஒப்பிட்டு நோய் தீர்க்கும் மருந்தாக கொடுப்பது என்பது எப்படி சாத்தியம் ஆகும்..
உதாரணத்திற்கு பேதி.நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி எடுக்க வேண்டும் என்பது நம் முன்னோர் சொல்..(சிற்றாமணுக்கு கொண்டு தயாரித்த பேதி எண்ணெய் மட்டுமே..மாத்திரை அல்ல).
அதைத்தான் அடர் நான்கு மதிக் கொருங்கால் நுகர்வோம் என்றார்கள்.ரசாயனமே இல்லாத உணவு, தூய காற்று, இயற்கை சூழலில் வாழ்ந்த அன்றைய மனிதனுக்கே நான்கு மாதம் என்றால் இந்த கால கட்டத்தில் வாழும் மனிதனுக்கு பழைய சூத்திரத்தையை பிரையோகம் செய்வது வீண்..பழைய சூத்திரத்தை கற்றுக்கொண்டு நமது மதிநுட்பத்தை பயன்படுத்தி நோய்க்கு தகுந்த தீர்வு காண முற்பட வேண்டும்..சுகமின்மை உள்ள சரிரத்தை ஆராய கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் தான் அதனால் நிரத்திர தீர்வு கிடைப்பெற்றால் நல்லது தானே.
ஒரு நோய் என்பதனை செடியாய் இருக்கும் போதே கவனித்து தீர்க்க வேண்டியது ஒன்று..அதுவே மரமாய் வேரூன்றி நிலைக்கொண்டு விதை தூவ ஆரம்பித்து விட்டால் விதி வலியது தான் என்பதை உணர்க..இருப்பினும் ஒரு கடைசி அஸ்திரம் என்று ஒன்று உண்டு. அது விதியை மதியால் வெல்லும் அஸ்திரம் தான்.கவனமுடம் பிரையோகிக்க வேண்டிய மிக அதி நுற்ப அஸ்திரமும் கூட.
மருத்துவமும் ஜோதிடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதை புலிப்பாணி வைத்திய காவியம் முலம் நாம் அறியலாம். ஆராய்ச்சியை திசைதிருப்ப வேண்டும் புதிய மருத்துவ அகராதியை உருவாக்க வேண்டிய சூழலில் இப்போது உள்ளோம்.
சிந்தனைக்கு
மிளகு என்பது செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த பொருள். தன்னுள் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்க தேய்பிறை அஷ்டமியில் வரும் செவ்வாய்கிழமையன்று மிளகு திபம் ஏற்றி அதன் ஒளியை கவனித்தும் அதன் வாசனையை நுகர்ந்தும் மனதை பங்குவப்படுத்தலாம்.ஆழ் மனசக்தியை வெளிக்கொண்டுவர எளிமையான வழி. செவ்வாய்க்கும் மிளகுக்கு நிறைய தொடர்ப்பு உண்டு.
எனது கிரந்தி நாயகம் பதிவை முழுவதும் படிக்கும் போது ஆராய்ச்சி என்பது எந்த நுணுக்கத்துடன் செய்வது சாலச்சிறந்தது என்பது புரியும்.பிரம்மாஸ்திரத்திற்கு பிரம்மாஸ் ஏவுகனைக்கு என்ன சம்பந்தமே அதே தான் மிளகுக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு.
பதினெட்டு சித்தர்கள் ஏன் ஒரு நோய்க்கு எல்லோரும் ஒரே மருந்தை பரிந்துரைக்க வில்லை?? எனது ஐயப்பாட்டை தீர்த்து வையுங்கள்
குறிப்பு
மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.
நன்றி ; சரவணன்..
No comments:
Post a Comment