இரத்த சுத்தி முறைகள்
***************************
ஒவ்வொரு மாற்று மருத்துவ முறையிலும் இரத்த சுத்தி முறைகள் இருக்கின்றன. ஆனால், ஆங்கில மருத்துவத்திலோ இரத்தத்தில் இரசாயனக் கழிவை அதிகரிக்கும் சிகிச்சை முறையைத்தான் கொண்டுள்ளது. நீங்கள் எந்தப் பக்கம்? இரத்த சுத்தி முறை பக்கமா? அல்லது இரசாயனத்தின் பக்கமா? அன்பு நண்பர்களே! மாற்று மருத்துவ இரத்த சுத்தி முறைகளை ஒவ்வொன்றாக இனிப் பாப்போம்.
1. இயற்கை மருத்துவம்:
*****************************
குடல் சுத்தம் உடலையும் இரத்தத்தையும் சுத்தமாக்க வழிதரும் என்பதால் இயற்கை அகிம்சை எனிமாவை இயற்கை மருத்துவம் பரிந்துரைக்கிறது. காலைக்கடன் முடித்தாலும் முடிக்க முடியாவிட்டாலும் எனிமாவை தினமும் எடுத்தால் இரத்தத்தில் மலக்கழிவு சேருவதைக் குறைக்கும். அப்புறம் தினமும் ஒரு டீஸ்பூன் அறுகம்புல் பொடி ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் இரத்தத்தில் உள்ள நீர்(சளி)க் கழிவுகள் வெளியேற்றப்படும். தினமும் இரவு படுக்கப்போகும் முன் அதேமாதிரி ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான வெண்ணீரில் கலந்து அருந்தினால், இரத்தத்தின் கொழுப்புக் கழிவுகள் வெளியேற்றப்படும்.
2. சித்த மருத்துவம்:
************************
ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் 20 மிளகை உடைத்து போட்டு கொதிக்கவிடவும். அரை டம்ளர் நீராகும் வரை கொதிக்கவைத்துச் சிறிது இயற்கை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து வடிகட்டி பதமான சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். நம் உணவுகளில் மிளகாய்க்கு பதில் மிளகை பயன்படுத்தினால் இரத்த சுத்தி இயல்பாக தினப்படி நிகழும்.
3. ஹோமியோபதி மருத்துவம்:
*************************************
நம் இரத்தம் சுத்தமாக ஹோமியோபதியில் உப்புக் கழிவுகள் நீங்க நாட்ரம் முர் (Natrum mur), நுண் கிருமிக் கழிவுகள் நீங்க நக்ஸ் வோமிக்கா (Nux vomica) மற்றும் ரஸ் டாக்ஸ் (Rhus tox), செரிமானக் கழிவு நீங்க கார்போ வெஜ் (Carbo veg), விஷக்கடி நீங்க ஏபிஸ் மெல் (Apis mel) மற்றும் காந்தாரிஸ் (Cantharis) உள்ளிட்ட ஏராளமான மருந்துகள் உள்ளன.
4. மலர் மருத்துவம்:
************************
நம் இரத்தம் சுத்தமாக சில மலர் மருந்துகள் உதவும். உதாரணமாக தோல் நோய் இருப்பவர்களுக்கு திடக் கழிவு நீங்க கிராப் ஆப்பிளும் (Crab apple), இரசாயனக் நீர்க் கழிவு நீங்க ராக் ரோஸும் (Rock rose), கொழுப்பு உஷ்ணக் கழிவுகள் நீங்க செரி பிளமும் (Cherry plum), வாய்வுக் கழிவுகள் நீங்க கிளமேட்டிஸ் (Clematis) மற்றும் பித்த ஆகாசக் கழிவு நீங்க (White chestnut) ஆகிய மலர் மருந்துகள் மிக உதவியாக இருக்கும்.
5. சத்துணவு மருத்துவம்:
******************************
நீரில் கரையும் நார்ச் சத்து நம் இரத்தத்தில் உள்ள திடக் கழிவுகளை நீக்கும். சி-உயிர்ச் சத்து (Vitamin C) இரத்தத்தில் உள்ள நீரில் கரையும் மற்றும் சளிக் கழிவுகளை நீக்கவல்லது. ஈ-உயிர்ச் சத்து (Vitamin E) இரத்தத்தில் உள்ள கொழுப்பில் கரையும் கழிவுகளை நீக்க வல்லது. கரோட்டின் (Carotene) தாவரச் சத்து நம் இரத்தத்தில் உள்ள எதிர்வினைப் புரியக்கூடிய இரசாயனக் கழிவுகளை நீக்க வல்லது. பக்குவப் பூண்டுச் சத்து வாய்வுக் கழிவுகளை நீக்கும். தியோபிளாவின் (Theoflavin) மற்றும் கேட்சின் (Catechin) தாவரச் சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ரால் கழிவுகளை நீக்கும்.
6. மூச்சு பயிற்சிகள்:
************************
ஆழமான, அதே சமயம் நிதானமான மூச்சுப் பயிற்சியானது நம் உடல் முழுமைக்கும் பாயும் இரத்தத்தில் பிரான வாய்வை (Oxygen) உள் செலுத்தி சக்தியாக்கம் செய்துவிட்டு (Oxidation), பின்னர் பிரான வாய்வானது கரியமில வாய்வாக (Carbondioxide) உருமாற்றமாகி வெளிப்படுகிறது. நாம் விடும் மூச்சானது முழுமையாகவும் ஆழமாகவும் இருக்கும் போதுதான், இந்தப் பிரான சக்தியாக்கம் தரமாக நிகழ்ந்து கழிவாக வெளிப்படும் கரியமில வாய்வு முழுமையாக வெளியேற்றமாகிறது. உண்மையில் ஆழமான மூச்சு பயிற்சியால்தான் நம் உடலின் 40 சதவீத கழிவுகள் வெளியேற்றமாகிறது. ஆகவே, நாம் ஆழமான மற்றும் சீரான மூச்சு பயிற்சியை தவறாமல் செய்து வருவதன் மூலமும் நம் இரத்தத்தை செலவில்லாமல் சுத்திகரிக்கலாம்.
மாற்று மருத்துவ இரத்த சுத்தி முறைகளைக் கையாண்டு மாசற்ற இரத்தத்தை நாம் கைகொள்ளப் பெறுவோமாக!
No comments:
Post a Comment