****** பலாப்பழம் நன்மைகள் ****
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம்.கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டுள்ளது.பழங்களின் அரசன் என்ற பெருமைக்குரியது பலாப்பழம். கெம்புத்தேன் தொட்டு சாப்பிடுவதே ஒரு அலாதியான சுவைத்தான்.
தித்திக்கும் வாத சிலேஷ்மபித்தம் உண்டாக்கும் மெத்தக் கரப்பான் விளைவிக்கும் சத்தியமாய்ச் சேராப் பிணியை எலாஞ் சேர்ப்பிக்கும் ஓர்நொடியில் பாராய்ப் பலாவின் பழம்..
நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும். தேனில் ஊறிய பலா பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது. உடல் பலம் பெறும். வெறும் பலாப்பலத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.
இது, சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.
இதிலுள்ள பொட்டாசியம் சத்து, குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு நோய் வராமல் தவிர்க்கப்படுகிறது. கொழுப்புச்சத்து இல்லை என்பதால், இதய நோயாளிகளும் சாப்பிடலாம். இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தக்குறைபாடு வராமல் தடுக்கிறது.
விட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், பலா மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.
பலாவில் உள்ள லிக்னன்ஸ், ஆர்கானிக் கூட்டுத்தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்று நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. தவிர, உடல் முதிர்ச்சி ஏற்படாமல் இளமையாகத் தோன்றவும் உதவுகிறது.
செரிமானக்கோளாறு மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதில் பலா நன்கு செயலாற்றுகிறது. இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுத்து, மலம் இலகுவாக வெளியேறவும் உதவுகிறது. பெருங்குடலையும் சுத்தமாக வைக்கிறது.
பலாப்பழத்திலுள்ள விட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது.
எலும்புகள் பலமின்றி இருத்தல், எலும்புருக்கி நோய் உள்ளோர், பலா சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும். மக்னீசியம் மற்றம் கால்சியம் சத்துக்கள் இதற்கு உதவுகின்றன. பிள்ளைகளுக்குச் சாப்பிடக் கொடுத்தால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
மனித இயக்கத்திற்கு உதவும் தைராய்டு ஹார்மோன் உடலில் உற்பத்தியாகவும், அதை உட்கிரகிக்கவும் தாமிரச் சத்து அவசியம். பலாவிலுள்ள தாமிரச்சத்து இதற்கு உதவி செய்கிறது.
இப்படிப்பட்ட பழத்தை தேன் அல்லது நெய் கலந்து உண்ட பின் அதன் கொட்டையை சுட்டு குழம்பாக்கி படத்தில் காட்டியது போல சாப்பிட அத்தனையும் பிணியும் நீங்கும்.
நன்றி; சரவணன்
No comments:
Post a Comment