Monday, 13 April 2020

முலாம் பழம் பயன்கள்.

முலாம் பழம்.
இது இந்தியா மற்றும் ஈரானை தாயகமாக கொண்டது.
அதிக நீர்ச்சத்தும், இனிய நறுமணமும் கொண்டது. தாகத்தையும் களைப்பையும் உடனடியாக நீக்கி மகிழ்ச்சியை தரவல்லது.

அப்படியே சாப்பிடலாம். ஜூஸ் போட்டால் இனிப்பு ஏதும் கலக்காமல் அருந்தலாம்.

அதிக அளவு பொட்டாசியம் இருக்கு. இது இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
அதிக அளவு வைட்டமின் A உள்ளது. நமது பார்வைத் திறனை அதிகரிக்கும்.
அதிக அளவு வைட்டமின் C உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்று புண்ணை ஆற்றும்.
அதிக நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் இருப்பதால் மலச்சிக்கல் அகலும். கிட்னியை வலுப்படுத்தும். சிறுநீர் அடைப்பு அகலும். கற்கள் இருந்தால் கரைந்து போகும். கல்லீரல் வீக்கம் குறையும்.
சீரான விகித்தில் நார்ச்சத்து உள்ளது. இது நெரிழிவு நோயுள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நல்ல பலனை தரும்.
பொட்டாசியமும், நல்ல கொழுப்பும் சரியான விகிதத்தில் இருப்பதால் தேவையற்ற உடல் எடையை குறைக்கும்.
இதிலுள்ள போலிக் அமிலம் கருவுற்ற தாயின் உடலில் தேவையான நீர்ச்சத்தை தக்க வைக்கும். கூடுதல் சோடியம் ஐ குறைக்கும்.
மூளையின் நரம்பு மண்டலத்தை இலகுவாக்கி(Relax) தூக்கமின்மை தொடர்பான நோய்களை அகற்றும்.
மூளைக்கு செல்லவேண்டிய ஆக்சிஜனின் அளவை ஊக்கப்படுத்தி மனஅமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும்.
மாதவிடாய் சமயத்தில் உண்டால் வலி குறைந்து உதிர போக்கை கட்டுப்படுத்தும்.
கேன்சர் செல்களை அழித்து உடலில் கேன்சர் உருவாகாமல் காக்கும்.
தோலின் வனப்பை அதிகரித்து இளமையை அதிகரிக்கும். (Anti Aging Agent)
வைட்டமின் B மற்றும் அதனுடன் சரிவிகிதத்தில் கலந்துள்ள புரோட்டினும் இணைந்து தலைமுடியையும், விரல் நகத்தையும் நலமாக்கும்.
இதிலுள்ள அடினோசின் என்கிற பொருள் இரத்தத்தை மெலிதாக்கி இதய நோய்கள் வராமல் காக்கும்.

மேலே சொன்ன அத்தனை நலனும் வெறும் பாதி பழம் சாப்பிடும்போதே கிடைக்குதாம்.. அதுவும் எந்த பக்கவிளைவும் இல்லாமல்..

நன்றி ; கருணாமூர்த்தி

No comments:

Post a Comment