ஜபம்
திடீருன்னு இதைபத்தி சொல்லனுமுன்னு தோணித்து....
ஜபம் சம்பந்தமா ஒரு ஐந்து பேருக்குள்ள நடந்த உரையாடலை உதாரணமா சொல்லறாங்க... உதாரணம்னா ஒரு விதின்னு வெச்சுக்கோங்களேன்.
அந்த ஐந்து பேர் யாருன்னா?
1) ப்ராம்மணன் 2) யமன் 3) காலன் 4) மிருத்தியு 5) இஷ்வாகு
இவங்க உரையாடல் சுருக்கம் என்னான்னா....
ஞானம் யோகம் இந்த ரெண்டு மார்க்கத்திலும் ஜப யக்ஞம் சொல்லப்பட்டிருக்கு.... இதில் ஜனங்களில்லா இடம், அக்னி பூஜை, அடக்கம், பொறுமை,கணக்குள்ள ஆகாரம், அஸூஸை, மிதவசனம்,இந்திரிய அடக்கம் ஜபத்திற்க்கான பலன் கொடுக்கும்.
( வாய்க்கு வந்தபடி பேசிட்டு மவுனம் இல்லாமல் இருந்துட்டு கண்டதை சாப்பிட்டு இருந்தா ஜபம் பலிக்கறது கஷ்டம்).
சில இடத்தில் குசப்புல் அப்படிங்கறதையும் மனிதன் தரிப்பவனா இருக்கனுமுன்னு சொல்லறாங்க.
( தலை, கால் இப்படின்னு அளவு கணக்குண்டு).
எவன் சமபுத்தி உடையவனாக வந்து பிரம்மத்தை தியானிப்பவனாகவும் ஆகி பின் ஸமாதியில் நிலைபெற்றால் அவன் ஜபத்தை விலக்கி கொள்ளலாம்.
( பிறகு ஜபம் அவசியமில்லை)
சாதாரண மனிதன், இஷ்டமந்திரத்தை பிரவணத்துடன் ஜபிக்க வேண்டும்.எந்த வஸ்து பிரியமுள்ளதோ அதில் மனம் ஒன்ற வேண்டும். இதே போல காயத்திரி ஜபிக்க வேண்டும். தவத்தால் பரிசுத்த மனம் பெறவேண்டும். அடக்கமுள்ள மனமாகவும் பகையையும் ஸ்னேக்த்தையும் விலக்கியும் ஆசையும் அவிவேகமற்றவனும் குளிர்வெப்ப முதலிய தத்துவத்தில் பற்றுக்கொள்ளாமல் சோக்த்தையும் ஒதுக்கியவனுக்கு ஜபம் பிடிபடும்.
அதே போல தியானம் செய்வதை காரியமாக கொண்டும் அந்த தியானத்தால் நிச்சயமான ஞானமுள்ளவனுமாகி பிறகு அதில் ஸமாதியை உண்டுபண்ணிக்கொண்டு அந்த தியானத்தையும் விடவேண்டும்.
இப்படிப்பட்ட யோகியே பிரம்ம ரூபமான சரீரத்தை அடைவான். ஸமாதியுள்ளவன் மரணமடைவதாக நினைத்து நிர்விகல்ப சமாதியில் இருக்க வேண்டும்
இவன் எல்லா லோகத்தையும் கடந்து பரமாத்மாவை அடைவான் அல்லது சமாதியில் பிரம்ம ரூப அனுபவத்தை விரும்பாமல் போனால் பிரம்மலோகத்திற்க்கு கிளம்பபோவான். வேறு ஓரிடத்திலும் பிறக்க மாட்டான்.
இப்படிப்பட்டவனே மோக்ஷ ரூபமான சுத்த ஆத்மாவை அடைகிறான்.
இப்படியாக நினைத்தே ஜபம் ஆரம்பிக்க வேண்டும் என்பது விதி.
( நாம என்ன நினைத்து பண்ணறோம்ன்னு தெரியல.. FBல லைக் வாங்கறக்கு கூட பண்ணுவோம்)
என் அனுபவப்படி ஜபத்துக்கு முன்னாடி சில பெரியவங்கள மானசீகமா நினைத்துக்கோங்க.... நல்லது நடக்கும். அவிங்க யாருன்னா?
1) தியாக பிரம்மம் - தினமும் 125000 முறை ராம நாம ஜபம் பண்ணி 21 வருசத்தில் 96 கோடி ஜபம் முடிச்சார்.
2) ஆத்ம போதாந்திராள் : காஞ்சி பீடாதிபதி. தினமு 108000 முறை ராம நாம ஜபம் பண்ணி ராம நாமாவே ஆயிட்டார்.
3) மருத நல்லூர் ஸ்வாமிகள் - எத்தனை தடவைன்னே தெரியலை. ராமரே இவர்தான் அப்படி சொல்லற அளவுக்கு ராம சுபாவம் வந்திருச்சு.
4) கோடகனல்லூர் சுந்தர ஸ்வாமிகள் : தினமும் 100000 பஞ்சாட்சரம் ஜபிப்பார். பரமயோகி. தரையில் இல்லாமல் தரைக்கு மேலே 1 அடி அந்தரத்தில் உட்காரகூடிய யோகி.
Pl note
ஒரு நாளைக்கே 86400 செக்கண்டுதான்.... ஆனா இவிக பண்ணுனது லட்சத்துக்கும் மேலே.... தெய்வானுகிரகம்...
இப்படியாக பல மஹான்கள் இருக்காங்க.... அதில் சிலரை சொன்னேன்.... ஜபம் மனசும் பகவானும் சம்பந்தப்பட்டது. ரகசியமானது.
#மஹாபாரதம்
#ஜபம்
ராம ராம ராம
No comments:
Post a Comment