சுப்பிரமணியக் கசாயம்
---------------- சளி , இருமல் -------------
முடிந்தவரை சளி இருமலை போக்கி
நுரையீரலை ஆரோக்யமாக வைத்துக் கொண்டால் "கிருமித்" தொற்றை தடுத்து விடலாம்.
சுக்கு
மிளகு
தனியா
திப்பிலி
அதிமதுரம்
சித்தரத்தை
அனைத்திலும் சம அளவு எடுத்து இடித்து சலித்து
ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து
தேவையான அளவு தண்ணீரில் போட்டு
நாலில் ஒரு பங்காகச் சுருங்கும் வரை கொதிக்க வைத்து
பனை வெல்லம் சேர்த்து
தேநீர் போல தினமும் குடித்து வர
எத்தகைய - சளி - இருமல் - இருந்தாலும் குணமாகும்
கை கண்ட அனுபவ மருந்து.
ஆரோக்யத்தில் விருப்பமுள்ளோர்
டீ,காப்பிக்குப் பதிலாக தினமும் பருகலாம்.
பயம் தேவையில்லை
அனைத்தும் பறிபோனதாய் தோன்றும் போது தான் அனைத்தும்
காப்பாற்றப்படும்.
கடவுளையோ,மனிதர்களையோ குறை சொல்வதை விட்டுவிடுவோம்.
விதைப்பதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
நமக்கு வரும் அனைத்து துன்பங்களுக்கும் நாம்தான் காரணம்.
No comments:
Post a Comment