Sunday, 5 April 2020

அத்திப்பழம் நன்மைகள்

அத்திப் பூத்தாப்போல இருக்கே?’ என்று ஒரு பழமொழி உண்டு.  உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று தமிழில் ஆரோக்ய மொழி ஒன்று உண்டு.  ஆனால் இந்த பழமொழிக்கேற்ப யாராவது வாழ்வார்களா… என்று தேடிப்பார்த்தால் ஒருவர் கிடைப்பது கூட அபூர்வம் என்ற நிலையில் தான் இன்றைக்கு மனித வாழ்வு உள்ளது.
ஒட்டு மொத்தமாக இயற்கை வாழ்வை மறந்து செயற்கை வாழ்வை மக்கள் தேர்ந்தெடுத்து ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன.

பல ஆயிரம் ஆண்டுகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த மனித இனம் செயற்கையை சில ஆண்டுகள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் திணற துவங்கி விட்டது.

இருப்பிடம், உணவு, உடை, அழகியல் என்று எல்லாமும் செயற்கையாகி விட்ட நிலையில் மனிதனை சுற்றி அழிவின் பள்ளத்தாக்குகள் விரிவடைந்து வருகின்றன.

இந்த அபாயத்தை உணர்ந்தவர்கள் செயற்கையை ஓரளவாவது ஒதுக்கி – ஒதுங்கி வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

எனக்கு கிடைத்த காட்டு அத்திப்பழத்தை தேனில் ஊர வைத்துள்ளேன். பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். இது எனக்கு எப்படி கிடைத்தது என்றால்,எனது தேடல் வாழ்க்கை முறை எல்லாமே இயற்கையை சார்ந்து உள்ளது.காட்டில் மட்டும் அல்ல இது எல்லா இடத்திலும் சாதாரனமாக கானக்கிடைக்கும் மரம் . கண் இருந்தும் குருடர்களாய் காதிருந்தும் செவிடர்களாய் வாழ்க்கை எனும் தேடல் இருந்தால் கண் முன்னே எது இருந்தாலும் அதன் பயன் நமக்கு தெரியாமல் தான் போகும்.நானும் ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்தவன் தான். பின் அது மாயை என்று உணர்ந்துக்கெண்டேன் (புரிந்துக்கொள்வது, தெரிந்துக்கொள்வது,உணர்ந்துக்கொள்வது என்ற மூன்றுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது).

அத்திப்பழத்தின் பயன்கள் சொல்ல வேண்டும் என்றால் ஏராளம். மூல நோய், ரத்தக்கொதிப்பு, கேன்சர், மாதவிடாய் பிரச்சினை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.பயன்கள் உங்களுக்கு வலைதளங்களில் தேடினால் ஏராளமாய் கிடைக்கும்.எல்லோரும் பயன்களை பற்றி சொல்வார்கள் நான் அதை பற்றி சொல்ல வரவில்லை.உங்கள் கடுகளவாவது சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

மார்கட்டில் உலர்ந்த அத்திப்பழம் என்று நீங்கள் வாங்கும் பழம் மரபணு மாற்ற பெற்றது..உண்மையானது கிடையாது.. இயற்கையை வியாபாரம் ஆக்க முடியாது..

சிங்கம் புலி என மினிதனை தவிர எந்த உயிரனங்களாக இருந்தாலும் எந்த இரை தானாக வந்து உணவாக கிடைப்பதில்லை. தானாக சிரமமே இல்லாமல் இரை(உணவு) கிடைக்கிறது என்றால் ஒன்று அதற்கு அடிப்பட்டிருக்கும்,அல்லது நோய் தொற்று ஏற்பட்டிருக்கும்..

இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.சிறு உதாரணம்...மூத்தோர்கள் முட்டை சாப்பிட்டால் நல்லது என்றார்கள் அது இப்போது கடைகளில் கிடைக்கும் பிராய்லர் எனும் விச கோழியுடைய முட்டை இல்லை. பால் நல்லது தான் என்று சொன்னார்கள் ஆடு மாடு காட்டில் மேட்டில் இருக்கு பல மூலிகை தாவரங்களை உண்டதால். வியாபாரம் ஆனதன் பிறகு அதை கட்டிப்போட்டு மசால் பில் மட்டும் போட்டு இப்போதும் பால் நல்லது என்று குடித்துக்கொண்டு இருக்கிறோம். 
நாட்டு மரம் பூத்து காய் காய்க ஐந்திலிருந்து ஆறு வருடங்கள் ஆகும்.அதுவும் வருடத்திற்கு ஒரு முறை தான்(அத்திப்பழம், மாம்பழம்,நெல்லிக்காய், பழாப்பழம் etc..).இதன் வாழ்வாதாரம் இயற்கையோடு இனைத்தே இருக்கும்.ஆனால் இதையே மரபணு முறையில் மாற்றம் செய்தால் இயற்கைக்கு எதிராக செயல் புரிந்து இரண்டு அல்லது மூன்று வருடங்களிலேயே காய்த்து பூக்கும்.இந்த பருவம் தான் என்று இல்லை எல்லா பருவத்திலும் நமக்கு கிடைக்கும்.

இதை உண்ணும் பெண்களுக்கும் ஆண்களுக்கு உடலில் இயற்கையாய் எந்த வயதில் என்ன உடல் மாற்ற வர வேண்டுமோ அது நிகலாமல் எல்லாம் மாறி மாறி நடக்கும்.எல்லாவற்றுக்கும் நாம் தான் காரணம். அதாவது ஒவ்வொரு தனிமனிதன் தான் காரணம். உதாரணம் நெல்லிக்காய் ஒருவர் நல்லது உலுக்கு குளிர்ச்சி
என்று சொல்லிவிட்டால் போதும் உடனே வருடம் முழுவது அதையே சாப்பிடுவோம்.ஆனால் நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டியது இயற்கை உங்களுக்கு உணர்த்துவது என்ன என்றால்,நாட்டு நெல்லிக்காய் சித்திரை மாதத்தில் தான் காய்கும் ஏன் என்றால் சித்திரையை ஒட்டி வரும் மாதங்கள் எல்லாம் உஷ்ணம் உடையவை. கடவுள் அதாவது இயற்கை நமக்கு உணர்த்துவது குளிர்ச்சியான 
நெல்லிக்காய் உஷ்ணமான காலங்களில் நாம் உண்டால் உடலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அடைந்து உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வராமல் தம்மை காக்கும் என்பதற்காக.ஆனால் மூடர்களாகிய நாம் நமது பகுத்தறிவை பயன்படுத்துவதே இல்லை.இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

மனிதனுக்கு பணத்தை வீசி எறிந்தால் எல்லாம் கிடைத்து விடும் என்ற இருமாப்பு..உங்களுக்கு வேண்டும் என்றால் தேடித்தான் போக வேண்டும். இயற்றை என்ற மாயை இருக்கும் மார்கட்டுக்கு அல்ல .. இயற்கை எங்கு இருக்குமோ அங்கு போங்கள்..உங்கள் ஆனவம், தலைகனம், பணத்திமிரு, பணத்தால் எதையும் வாங்க முடியும் என்ற எண்ணம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு  போங்கள் .. இயற்கை உங்களை பட்டுக்கம்பலம் விரித்து வரவேற்க தயாராக உள்ளது..

சொல்ல வேண்டியது எத்தனையோ உள்ளது.மக்களாகிய மூடர்களுக்கு சொல்லி என்ன பயன் என்ற வெறுப்பும் சேர்ந்தே உள்ளது..அதனால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

ஒரு தீப்பொறியை தான் உங்களுக்கு கொடுக்க அல்லது காட்ட முடியுமே தவிர.அதை எதற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கொல்லிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொண்ட பின் தலை எரிகிறது அது எரிகிறது இது எரிகிறது என்று சொன்னால் எதுவும் செய்ய முடியாது..

நன்றி; சரவணன்

No comments:

Post a Comment