Monday, 17 December 2018

சூரியனில் இருந்து வெளிவரும் ஒளியானது 8 நிமிடத்தில் பூமியை அடைகிறது.

சூரியனில் இருந்து வெளிவரும் ஒளியானது 8 நிமிடத்தில் பூமியை அடைகிறது.
நமது 2 கண்களுக்குள் உள்ள கண்ணின் பாவை வழியாக
( அதிகாலை சூரிய ஒளியில் அடங்கியுள்ள நீலநிற ஒளிக்கதிரின் 470nm ஒளி அலையானது ) ஊடுருவிச் செல்கிறது.
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை வருகின்ற சூரிய ஒளிக் கதிர்கள் மூலையின் நடுப்பகுதியில் உள்ள பீனியல்
சுரப்பியை இயங்கச் செய்கிறது. சூரிய ஒளிக் கதிர்கள் உடல்மீது படும்படியும், கண்களுக்கு
நீலநிற வானத்தின் ஒளிக்கதிர்கள்
தெரியும்படியான நடைப்பயிற்சி
செய்யும்போதுதான் பீனியல் சுரப்பி இயங்குகிறது. பீனியல் சுரப்பியிலிருந்து
மெலடினின் என்ற திரவம் சுரக்கிறது. காலை
6.00 மணிக்கு பிறகு பீனியல் சுரப்பியிலிருந்து
மெலடினின் என்ற திரவம் சுரப்பது நின்று விடுகிறது.
அதிகாலையில் முதல் முதலாக நமது உடலில்
சுரக்கும் இந்த திரவமே மூலைக்கும் இருதயத்திற்கும், மூலைக்கும் தண்டுவடத்திற்கும், மூலைக்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது.
மின்சாரம் மற்றும் மின்காந்த ஆற்றல்களை உடல் முழுவதும் உள்ள செல்களுக்கும்,
நரம்பு இணைப்புகளுக்கும் கிடைக்கச் செய்கிறது. மெலடினின் என்ற திரவமே 24
மணி நேரமும் உடலில் நடைபெறும் அனைத்து
செயல்களையும் நடுநிலைப்படுத்துகிறது.
தோலின் நுனிப் பகுதியின் உணர்வு
அலைகளை மூலையானது அறிந்து கொள்ள காரணமாக உள்ளது. மனிதர்கள் ஓய்வாக
உறங்கும்போது“இரவு 9.00 மணி முதல் 10.00 மணிக்குள்”உடலானது தன்னைத்தானே
சரிசெய்து கொள்ள மெலடினின் என்ற திரவமே
காரணமாக உள்ளது. இந்த நேரத்தில்
(உறங்காமல் கண்கள் திறந்திருப்பதும், 5
WATTS க்கும் அதிகமான வெளிச்சம் உடல்மீது
படும்படியாக இருப்பது) மெலடினின் திரவம்
உடலினை நடுநிலைப்படுத்த
தடையாகின்றது.
தினசரி உடல் ஆரோக்கியம் அனைத்திற்கும்
மெலடினின் திரவ உற்பத்தியே முதல்
காரணமாக உள்ளது. இதனை நமது சித்தர்
பெருமக்கள் உணர்ந்து உருவாக்கியதுதான்
“தினசரி வாழ்க்கை முறைகள்”என்பது மறுக்க
முடியாத உண்மையாகும்.
தனிமனிதர் உடல் ஆரோக்கியம் என்பது அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
சூரிய ஒளியில் நடைப்பயிற்சி
செய்யும்போதும், இரவு 9.00 மணிக்கு முன்பே உறங்குவதால் 50% அதிகமாக
மெலடினின் திரவத்தினால் உருவாக்கப்படுவதாகும்.
எட்டும் , இரண்டும் பத்தடா என்றால் 8+ 2 =10
இல்லை , தமிழில் இதை
அ + உ = ய இதுவும் இல்லை .
அதாவது அகாரத்தையும் உகாரத்தையும் கெட்டியாகப்
பிடித்துக் கொள் என்று அர்த்தம் .
சூரிய கலையில் மூச்சு நடக்கும்போது அதிக
ஆற்றல் உண்டாகி சக்தி பெருகும் . எனவே அறிவு வளரும் . அதே மூச்சு தலையில்
உள்ள புருவ மத்தியில் ஏறிச் சென்று உச்சியில் நடன மாடினால் ஞானம் பிறக்கும் .
இதில் நாடு நிலை என்று சொல்லப் பட்டது
முதுகுத் தண்டின் மத்தியில் உள்ள
வெற்றிடத்தைக் குறிக்கும் , அதில் பிராண சக்தி , மின்சார சக்தி இயக்க சக்தி , காந்த சக்தி
, இச்சா சக்தி போன்ற சக்தி ஓட்டங்கள் இதில் ஓடுகிறது
அண்டத்தையும் பிண்டத்தையும் அன்பு இணைக்கிறது
அ என்றால் அண்டம் அதாவது சிற்றண்டம்
ன் என்றால் இணைக்கும் சக்தி
பு என்றால் புவி அல்லது பூமி
ன அல்லது நா என்றால் நாதம் இங்கே வாய்வு
அல்லது காற்று ஆகும்
ன் என்ற சப்தத்துடம் அல்லது சக்தியுடன்
காற்று இயங்குகிறது .
இதுவும் ஒரு கல்வி முறையைப் போன்றது
.இந்த மண்ணில் தோன்றிய உயிர்களில் மனித
இனம் உயர்வான ஓன்று .
இறைவனின் சாயல்
கொண்டது நமது உடம்பு , அறியும் திறன்
அதிகம் உள்ள இனம் மனித இனம் .கொஞ்சம்
சீர்தூக்கிப் பாருங்கள் அன்புகளே எது வேண்டும் என்று .நமது அறிவு எது நோக்கிச்
செல்ல வேண்டும் என்று .
நமது இயக்கங்களுக்கு முக்கிய காரணம் பிசுட்டரி சுரப்பியும் பீனியல் சுரப்பியும்
ஆகும் .நமது மூச்சு 2 1/2 நாளிகை வலது
நாசியிலும் 2 1/2 நாளிகை இடது நாசியிலும்
ஓடும் .ஒவ்வொரு நாள் துவங்கும்போது எந்த
நாடியில் கலை நடக்க வேண்டும் என்று உள்ளது , இதை மாற்றிய யோகிகளுக்கு சித்திக்கும் வல்லமை பெற்றது .
இது ரகசியமாக பிரணவ உச்சியின் வலது பக்கத்தில் சந்திரனையும் இடது பக்கம் சூரியனையும் மாற்றி ,தண்டத்தால் செய்யும்
முறை ஆகும் சூரிய சந்திரர்களை மாற்றி மாற்றி ஒரு வருடம் தொடர்ந்து விடாமல்
செய்து வர வேண்டும் .மரணத்தை வென்றபின் அழகு பொருந்திய இந்த அணிமாவானது
சித்திக்கும் .
பின்பு இந்த சாதனையுடன் திரிபுர
சக்திகளுடன் சேர்ந்து செய்ய வேண்டும்,ஐந்து
வருட பயிற்சியால் ஞான தத்துவங்கள் தானாக
வந்து சேரும் , தொடர்ந்து இதையே
பரிபாலித்துக் கொண்டு வந்தால் லகிமாவும்
அதன் சக்தியைக் கொடுக்கும் .
பிரகாசத்தைக் கண்ட ஞானிகள் எல்லோராலும் காணக் கூடிய மணிபூரக ஸ்தானத்தை உந்திக்
கமலத்தில் கண்டு ,அந்த பிரகாச சக்தியை எல்லா திக்கிற்கும் பரவச் செய்து பரவசமடைவர் .அந்த ஒளி சதா காலமும் பிரகாசித்து ஒன்றைக் கலக்கும் வரை சாதனை
தொடர வேண்டும் .அப்பியாசிக்கு ஒரு வருட காலத்தில் சித்திக்கும் . மகா சக்தியானவள்
வெளிப்பட்டு ஒன்றாய் கலந்து விடுவாள்.இது
அப்பியாசியின் இஷ்டம்போல் நடப்பதற்கு உதவும் மகிமா ஆகும
ஓம் என்ற பிரணவம் இரு பிரிவாக பிரிந்து இரு செயல்களாக மாறி
ஓர் நிலையில் உள்ள இரு உடம்பில்
செயல்படுகிறது. கணவன், மனைவி கூட நினைக்கும் போது. மனது என்ற விசையின் மூலம் வெளிப்படுகிறது அதை நாம் காமன் விடும் பானம் என்கிறோம்.
பின் இரு சக்தி ஓட்டங்களாக பிரிந்து
பெண்ணின் சுரோனிதத்திலும், ஆணின் விந்துவிலும் செயல் படுகிறது. ஆண், பெண்
சேர்கை நாத விந்து சேர்க்கையாக மாறுகிறது
பின்னால் இந்த நாத விந்து சேர்கை
பிரணவமாக மாறி செயல் புரிய ஆரம்பிக்கும்.
அதனால்தான் திருமணத்தை வை போகம் என்கிறோம். கல்யாணத்தை எல்லோரும்
ஆசிர்வதிக்க அழைக்கிறோம். கலவியின் போது
கருவறைக்குள் செல்ல
அவ்விடத்தில் உள்ள பூத கணங்கள்
உதவுகின்றன, அதன் பொருட்டு நாம் பூத கணங்களை வணங்குகிறோம். நாத, விந்து
சக்தி பெற்று மரு
என்ற புள்ளியாக அல்லது செல்களாக மாறும்.
பெண்ணின் மாதவிடாய்
வெளியேறாமல் பிண்டமாக உருவெடுக்கும், பின்னர் செல்ல்களாக மாறும் பின் ஒவ்வொரு
வாய்வாக உள்ளை செல்லும் பூத
கணங்கள்உதவி புரியும் முதலில் சென்ற
வாய்வு பிராணன் என்ற
நிலையில் உயிராக மாறும். இந்த வாய்வுதான்
இறக்கும் போது கடைசியில் வெளியேறும்.
மூலாதாரத்தை முதலில் உருவாக்கி மற்ற
வாய்வுக்கள் செயல் பட கணங்கள் உதவி செய்யும். கணங்களின்
அதிபதி கணபதி என்ற விநாயகர்
மூலாதாரத்தில் இருந்து செயல்
படுகிறார். பிள்ளை யார் என்று அவர் தீர்மானிக்கிறார். ஆணா பெண்ணா என்று மூலாதாரக் கணபதி தீர்மானிக்கிறார்.
அவரை பிள்ளையார்
என்றும் மூலக் கடவுள் என்றும், சிவனின் முதல் மகன் என்றும் பார்க்கிறோம். பிரபஞ்ச
அணுவின் சக்தியை எடுத்து பிள்ளையாக உருவகம் பிடித்து கொடுக்கிறார். தாயின்
பத்து மாத வெளியேற்றப்படாத மாதவிடாய் என்ற
தூய்மை தான் நம் உடல்.
பிள்ளை யார் என்ற வினாவிற்கு தாய்மையான பெண் தனது படுக்கும் முறை கையை
வைத்து எழும் முறை போன்ற செயல்களால் வெளிப் படுத்துவாள் பத்து மாதம் வரை மூலாதாரத்தில் இருந்து தொப்பிள் கொடி மூலம் சக்தியை கொடுத்து
குழந்தையை காக்கிறார்.
கருவறையில் இருந்து
வெளிவந்த குழந்தையை பச்சை மண் என்கிறோம். காரணம் குயவன் களி மண்ணை
கொண்டு பானை செய்து வைத்தவுடன் தொட்டுப் பார்த்தல் விரல் பதியும் அதே போல்
பிறந்த குழந்தையும் மிக மென்மையாக இருக்கும். சிசு இந்த உலகில் பிறக்கும்போது வானில் அதற்குரிய நட்சத்திரம் தோன்றும
பிரம ஸ்தானத்தில் ஒளியை சாதகர்கள் அனைவரும் காணலாம் .
வித்தியார்த்தி முதற்கொண்டு சதா பயிர்ச்சி எடுக்கும் சாதகன் வரை ஒளியை காண்கின்றனர் , பல
வண்ணங்களில் தோன்றும் ஒளியானது ஒவ்வொரு பயிற்சியிலும் மாறும் ,கரு
வண்ணம் முதல் கரு நீலம், நீலம்
வெளிர் நீலம் ,கரும் பச்சை , அடர்பச்சை , பச்சை , வெளிர் பச்சை வரும் பின்பு பச்சை
கலந்த அடர் மஞ்சள் , சிகப்பு கலந்த மஞ்சள் , மஞ்சள் நிறங்கள் காணும் , அதன் பிறகே
வெள்ளை நிறம் காணும் . இவை வருவதற்குள் உடம்பில் நிறைய மாற்றங்கள் வரும் ,அதற்க்கு
அறிகுறியாக ஒவ்வொரு நோய்கள் தோன்றி சாதகனை சோதிக்கும் , இறைவனே கதி என்று
இருப்போரன்றி மற்றவர்கள் பின் வாங்கிச் செல்வர் ,அதற்குள் சில சக்திகள் கிடைத்திருக்கும் அதை வைத்துக் கொண்டு
உலகியலில் இருந்து மாண்டு போவர் , இருப்பினும் அவர் செய்த சாதனை மட்டும்
அடுத்த பிறவிக்கும் வந்து அவரை கரை சேர்க்கும் ,
இப்போ கிரிமா அடைவதைப் பாப்போம்
பிரம ஸ்தானத்தில் உண்டாகும் ஒளி தோன்றி மறையும் தன்மை உடையது வைராக்கியத்தால் அதைப் பிடித்து வைத்து
சதா காலமும் அங்கே நிலைத்து இருக்கும்படி செய்ய வேண்டும் . உலகத் தோற்றத்தை
இருந்த படியே காணலாம் .வெளி சக்திகள் எல்லாம் ஓன்று கூடி பூத சக்தியாக மாறி
சரீரத்தில் நிலை கொண்டு இருக்கும்
சாவை வென்ற பின் இது கிடைக்கும் இதை
கிரிமா என்றனர பிரிதிவி , சரீரத்தில் உள்ள மாமிசம் எலும்பு
நரம்பு, குடல் வயிறு இவற்றிலும் . நீர் , வாய் இரத்தம் குடலின் உட்பகுதிலும் ,அக்கினி இரு
நேந்திரங்களையும் மார்பின் இடப் பக்கம் இதய கமலத்திற்கு மேல் இருந்து எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கும் , வாய்வு
சிரசு நுரையீரல் பெருங்குடல் போன்ற இடங்களிலும் ஆகாயம் இரு காதுகளிலும் கண்ணுக்கு ஒளியை கொடுத்ததும் சிரசின்
தென் மூலையில் அடியில் பொய் , மெய் வாய் கண் மூக்கு செவிகளை இயக்கும்.
உருண்டை வடிவமான இப்புவியில் மண்ணின்
உள்ளேயும் ( உட்புறம் ) வெளியே யும் இந்த ஐம் பூதங்களும் இயங்கிக் கொண்டு இருக்கும்
வெளி உலகில் கோடான கோடி பரம அணுக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன ,உடலுக்கும்
உலகுக்கும் பாலமாக இருப்பது காற்று மண்டலத்தில் உள்ள வாய்வு ஆகும் .இதுவே
சங்கு சக்கரம் எனப்படும் .
அக்கினியில் சம்பந்தப் பட்ட பரமணுவானது சக்கரத்தின் உருவைப் பெற்றும்,ஆகாயத்தில்
கலந்து சக்தி பீடமாக வெளிப்படும் .
வாயுவில் சம்பந்தப் பட்ட அணுவானது தட்டையான பூமியில் பட்டு உருண்டு மேல்
எழும்பி சங்காக வெளிப்பட்டு ,சங்கின் நாதத்தை வெளிப்படுத்தும் ..
மனிதர்களில் மூக்கின் வழியே சந்திர சூரியர்களாகவும்
பரத்தில் சூரியனும் சந்திரனுமாக இருந்து பிரவர்த்திக் கொண்டு வருகிறார்கள
ஒதாக் கல்வியா ஓதும் கல்வியா என்று
ஓடும் கல்வியா உதவும் கல்வியா என்று
சித்தர்கள் சொல்லும் 8, 2 இதற்கு பல
விளக்கங்கள் உள்ளது .
அ(8) + உ (2) = ய (10)
மானிட உருவங்கொண்ட நீவீர் ஆன்ம நேய ஒருமைப்பாடு உடைய மாமனிதராக விளங்க வேண்டும் என்பது எம் அவா.
கிடைத்தற்கரிய மானிட தேகம் பெற்ற நீவீர், பெறுதற்கரிய பிறவிப் பயனாகிய பேரின்ப பெருவாழ்வு பெறவேண்டாமா? மரணமிலா பெருவாழ்வு - மோட்சப் பிராப்தி அடைய வேண்டாமா?!
அதற்கு வழி, யுகம், யூகமாக நம் நாட்டில் வழங்கி வரும் சனாதன தர்ம நெறியேயாகும்!? இது மதம் அல்ல!? குறிப்பிட்ட வர்களுக்கு உரியதல்ல! உலகம் முழுமைக்கும் பொதுவான, மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டும் உயர்ந்த உன்னத நெறி!
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பல்லாயிரம் கோயில்கள்! பற்பல ஞானிகளால், சித்தர்களால், மகான்களால் உருவானது! வெவ்வேறு உருவங்களில் வெவ்வேறு பெயர்களில் தோன்றியது! "ஓர் உருவம் ஒரு நாமம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டோமே" என்றார் மாணிக்க வாசகர் திருவாசகத்தில்! இது தான் ஞானம்!!
கடவுள் ஒருவரே! அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த அனுவுக்கு அணுவாக ஒளியே கடவுள்! பிரபஞ்சமெங்கும் நிறைந்த அந்த பேரொளியே பரம்பொருள்!
எங்கும் நிறைந்த பரமாத்மாவை கல்லிலும் செம்பிலும் மரத்திலும் நினைத்தபடி கற்பனையால், கண்டும் வடித்தும் பெயரும் சூட்டி வணங்கினர் பக்தியாக!! உருவம் பல! பெயர் பல! என்றாலும் கடவுள் ஒருவரே! ஒளியே! என்றனர் உணர்ந்த ஞானிகள்!
உலகில் 700 கோடி மனிதர்கள் எவ்வளவோ வேற்றுமைகள்!
ஆனால் அனைவரும் மனிதன் தானே! 700 கோடி ஜீவாத்மாக்கள் தானே! 700 கோடி ஜீவாத்மாக்கள் தானே! பசுவாகியே சீவாத்மா தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் பாசமாகியே மும்மலத்தை நீக்கி விட்டால் பதியாகிய நம் தலைவனை பரமாத்மாவை அடையலாம்! இது தான் ஞானம்!
"வம்மின் உலகியலீர் மரணமில பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்" என கூவி அலைக்கின்றார் வள்ளலார்!
அப்படியானால் எல்லோரும் ஞானம் பெறலாம் என்றுதானே பொருள்! ஆம்! இதுவரை உலகில் தோன்றிய ஞானிகள் இதைதான் கூறியிருக்கிறார்கள்
சிறியவன் ஆனவன் பெரியவன் ஆவதை போல் பக்தியில் இருந்து ஞானத்திற்கு வரணும்! வினைப்பயன், பெரும்பாலோர் உருவத்தில் பெரிதாக வளர்ந்தாலும் அறிவில் குழந்தைகளே! கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றே வாழ்ந்து வீழ்ந்து விடுகிறார்கள்!
இன்றைய பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவவில்லை! ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சும்மாவா சொன்னார்கள்?
ஞானம் - அறிவு வேண்டுமாயின் ஆன்மீக நூற்களை படியுங்கள்!
ஞான சற்குருவை நாடி உபதேசம் கேளுங்கள்! தவம்செய்யுங்கள்! பெறலாம்!
ஞானம் பெற எட்டும் இரண்டும் பத்து என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால் உணர்ந்தால் போதும்!
"எண்ணும் எழுத்தும் கண் என தகும்"" அவ்வை கூறிய இதையே திருவள்ளுவர் கூறிகிறார் எப்படி?
"எண்னென்ப எனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிருக்கு"
அதாவது உயிர் வாழ வேண்டுமானால் செத்து போகாமல் இருக்க வேண்டுமானால் எண்ணும் எழுத்தும் இரு கண்கள் என்பதை அறிவாயாக! உணர்வாயாக!
எண்ணாகவும் "8'' ஆகவும் ''அ" வாகவும் திகழ்வது '"கண்"' என அவ்வையார் கூறினார்!
அதைதானே திருவள்ளுவரும் ஆமோதித்தார்! இது தான் ஞானம்! பரிபாசை! தமிழில் எட்டாவது எண்ணுக்கு ''அ"' என்பதே! குறியீடு! அ என்றால் எட்டு!
அதுபோலே உ என்றால் 2! இதை தக்க குருமூலம் அறிந்து உணர வேண்டும்!
இந்த அ என்பதே நம் வலது கண்!! இதுவே சூரிய கலை என்றும் சிவம் என்றும் கூறுவார் ஞானியர்! உ என்பது இடது கண்! இதுவே சந்திர கலை என்றும் சக்தி என்றும் கூறுவார் ஞானியர் பரிபாசையாக!
நமது இரு கண்களில் துலங்கும் ஒளியே சூரிய சந்திர ஒளியே, எட்டும் இரண்டும் நம் சிரசின் உள்ளே நடுவில் பத்தான அக்னி கலையின் நம் ஆன்ம ஒளியின் விளக்கமாகும்!
நாம் நம் இரு கண் ஒளியையும் 8+2 சேர்த்தால் 10-ய வான நம் ஆத்மஸ்தானமான சிர நாடு உள் போய் சேரலாம்! எட்டும் இரண்டும் சேர்ப்பதே ஞான தவம்! இதுவே ஞான ரகசியம்!
இந்த எட்டும் இரண்டும் பற்றி பாடாத சித்தர்களே ஞானிகளே இல்லை என்று கூறலாம் !
"'எட்டினோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அரியர் '" என்றார் ஒரு ஞான வள்ளல்! பொருளை எண்ணிக்கையில் சொல்லவில்லை ? அருள் பெற திருவடியை எண்ணி "பார்க்க" சொன்னார்கள்!
எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே - திருமந்திரம் 986
தமிழ் வேதம் திருமூலர் திருமந்திரம், எட்டும் இரண்டுமே சித்தாந்த சன்மார்க்க பாதம் என அறிதியிட்டுக் கூறுகிறார்!
பதம் திருவடி மெய்ப்பொருள் நம் கண்களே!! தக்க ஆச்சாரியனை நாடி உபதேசம் தீட்சை பெற்று உங்கள் நடுக்கண்ணை திறந்து விழித்திருந்து தவம் செய்! ஞானம் கிட்டும் !
கண்ணை மூடி தவம் செய்வதல்ல தவம்! புறக்கண்ணும் அகக்ண்ணும் திறக்கனும்! அதுவே ஞானம்! அதற்க்கு எட்டும் இரண்டும் தெரியனும்! ஞான குருவிடம் சென்று உபதேசம் கேட்டு தெளியனும்! தீட்சை பெற்று விழித்திருந்து ஞான தவம் செய்யணும்! உன் ஆன்மா கடைத்தேற விழித்திரு!
"உடம்புலே உத்தமன் கோயில் கொண்டான்" திருமந்திரம் 725
ஒவ்வொரு மனித உடலினுள்ளும் அந்த பரமாத்மாவே சீவாத்மாவாக கோயில் கொண்டுள்ளான்! நம் தலை உள் மத்தியிலே ஒளியாக - நம் உயிராக திகழ்பவன் எல்லாம் வல்ல இறைவனே! அவனை அடைய தடை மும்மலம்! நம் இரு கண் ஒளியைப் பெருக்கி மும்மலத்தை நீக்கினால் நம்முள் துலங்கும் நம் ஆத்ம ஜோதியை சாட்சாத் பரம்பொருளை நாமே தரிசிக்கிலாம்!! அடையலாம்!
ஞானம் பெறலாம்!! இதுதான் ஞானம்! இது தான் சனாதன தர்மம் கூறுவதும் சன்மார்க்கம் என வள்ளலார் உரைப்பதுமாகும்!
எல்லா சித்தர்களும் ஞானிகளும் கூறுவதும் இதையே! இது மதம் அல்ல! உலக மக்கள் அனைவருக்குமான ஒப்பற்ற , உன்னதமான வாழ்க்கை நெறி!
"உடம்பினைப் பெற்ற பயனாவததெல்லாம்
உடம்பினில் உத்தமனை காண் "
ஞானத்தாய் ஔவையார் கூறிய ஔவை குரள் இது!
"'ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்பட்டும்''
உலக பொதுமறை திருக்குறள் கூறும் ஞானம் இது!
ஒத்தது- ஒன்று போல் இருக்கும் மற்றொன்று! உலகில் இரட்டை பிள்ளைகளிலும் வித்தியாசம் உண்டு. மனித உடலில் வித்தியாசம் இல்லாதது நம் இருகண்களே! நாம் பிறந்தது முதல் 100 வயது ஆனாலும் நம் உடலில் வளர்ச்சி அடையாதாது நம் கண்கள் மட்டுமே! தாயின் கருவிலே முதன் முதலாக தோன்றும் உறுப்பு நம் கண்! கண் தானம் யாருக்கும் கொடுக்கலாம் அல்லவா!
அப்படியானால் கண் எல்லோருக்கும் ஒரு போலவே இருக்கிறது என அறியலாம் அல்லவா! உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஒன்று போலவே இருப்பது கண் மட்டுமே!! இதுதான் ஒத்து இருப்பது. ஒத்து இருக்கும் கண்ணை, எட்டும் இரண்டுமான கண்ணை , அதுதான் இறைவன் திருவடி மெய்ப்பொருள் -பதம் என எவன் அறிகிறானோ அவன் உணர்வான் அவன் உயிர் வாழ்வான்! இதை அறியாதவன் செத்து போவான்! இதை விட ஞானம் அறிய வேறொன்றும் வேண்டாம்!
செந்தமிழ் அருள்நெறியை வளர்க்கத்தான்! இலக்கணம் இலக்கியம் பேசி காலத்தை கொள்வதற்கல்ல!! படிப்பது பண்டுவதற்கே! வீண் வாதம் புரிவதற்கல்ல!
"'கற்றோர் என்போர் முகத்திரண்டு கண் உடையோரே"'
கண்ணின் மகத்துவம் அறியாதவன் குருடனே! இந்திய ஞான பூமியில் இருந்து கொண்டு ஞானம் அரியவில்லையெனில் அவன் இந்த பூமிக்கு பரமே!!

No comments:

Post a Comment