Sunday, 2 December 2018

தந்திர யோகம் கூறும் நெறிமுறை

★சூட்சும உடல், ★பருவுடல்-
என இரு உடல்கள் நமக்கு உள்ளன. நமது புலன்களால் உணரக்கூடியதே பருவுடல். பருவுடல் குறித்த உண்மை களை மிக நுட்பமாக நவீன விஞ்ஞா னம் ஆராய்ந்துவிட்டது. ஆனால் சூட்சும உடலின் ரகசியங்கள் இன்னமும் விஞ்ஞானத்திற்கு பிடிபடாத ஒன்றாகவே உள்ளது.
★விஞ்ஞானத்தால் இதுவரையில் கண்டுபிடிக்க முடியாத சூட்சும உடலின் ரகசியங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மெய்ஞ் ஞானத்தால்’ நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டனர். இந்த மெய்ஞ்ஞான உண்மைகளே தந்திர யோகப் பயிற்சிகள் அனைத் திற்கும் ஆதாரமாக உள்ளன. நீங்கள் தந்திர யோகம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் முதலில் நமது சூட்சும உடல் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். ✷
குண்டலினி சக்தி ✷ சக்கரங்கள் ✷ நாடிகள் ✷ சக்தி உடல்கள் ஆகியவை குறித்த முழுமையான புரிதல் இருந்தால் மட்டுமே தந்திர யோகப் பயிற்சிகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். ★சித்தர்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர். யோகமார்க்கத்தில் மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்வோர்களும் எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள். சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான்.
★நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள் பெறப்பட்டு உருவாவது இந்த தேகம். சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ற ஏழாகும். அதாவது இரசம், இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை, சுக்கிலம் என்றும் சொல்வார்கள். சாரம், செந்நீர், வெண்ணீர் இம்மூன்றும் ஒருநாள் ஒரு புல்லின் நுனியில் நிற்கும் பனித்துளி போல் திரண்டு நிற்கும் என்றும்,
★அத்திரட்சியே விந்து என்றும் இது 21 நாட்கள் வரை உடம்பில் வளரும் என்றும் திருமூலர் சொல்கிறார்
(திருமந்திரம் -1934). மனித உடலை உருவாக்குவது நாதபிந்துக்கள். இந்த நாதபிந்துக்களை உருவாக்குவது அன்னம். எனவேதான் இது அன்னத்தாலாகிய உடம்பாகிய அன்னமய கோசம் எனப்படுகிறது. ஆண்களுக்கு பிந்து நாதமும், பெண்களுக்கு சுரோணித நாதமும் உருவாகிறது. இந்த விந்தானது மூன்று நாட்கள் உடல் விந்தாகவும், பிறகு மன விந்தாகவும் மாற்றமடையும் என்றும், அதை கலையாகிய அறிவு விந்தாக அமைத்து புருவ மத்தியில் தியானித்து இருப்பவர்களுக்கு உடலைவிட்டு நீங்காது என்றும், உலக இல் வாழ்வில் பற்று கொண்டோர்களுக்கு மனதுடன் அழியும் அல்லது கழிவாகி வெளியேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
★அழிகின்ற விந்து அளவை யறியார் கழிகின்ற தன்னையுட் காக்கலுந் தேரார் அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர் அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே - (தி ம - 1936) ★

No comments:

Post a Comment