குழந்தைப் பேறில்லாதவர்களுக்கு :-
குழந்தை பேறில்லாமல் துயரத்தில் அழுந்தும் தம்பதியரின் குறை தீர்க்கும் எளிய வழி ஒன்றினை அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார்.
இருந்துகொண்டு குருபரனைத் தியானம்பண்ணி
இன்பமுடன் ஓம் றீங் அங் வங் கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில்மைந்தா
மார்க்கமுடன் ஆயிரத்தெட்டு உருவேசெய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடனே பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பார்பாரே.
இன்பமுடன் ஓம் றீங் அங் வங் கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில்மைந்தா
மார்க்கமுடன் ஆயிரத்தெட்டு உருவேசெய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடனே பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பார்பாரே.
பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் யன்பதுக்குள் கெர்ப்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
நேர்மையுள்ள ரகசியமது சந்தானவித்தை
ஆரப்பா அறிவார்கள் சந்தானகரணி
அறிந்துமன துரிமையனா லடக்கம்பண்ணி
சாரப்பா சாகரத்தில் தவசுபண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்துவாழே.
பக்குவமாய் யன்பதுக்குள் கெர்ப்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
நேர்மையுள்ள ரகசியமது சந்தானவித்தை
ஆரப்பா அறிவார்கள் சந்தானகரணி
அறிந்துமன துரிமையனா லடக்கம்பண்ணி
சாரப்பா சாகரத்தில் தவசுபண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்துவாழே.
- அகத்தியர்.
வெள்ளியினால் ஆன ஒரு கிண்ணத்தில், ஒரு கழஞ்சு தேன் விட்டு அதனை வலது கையில் ஏந்திக் கொள்ள வேண்டுமாம். பின்னர் கிழக்கு முகமாய் அமர்ந்து/இருந்து கிண்ணத்தில் இருக்கும் தேனை கவனக் குவிப்புடன் பார்த்துக் கொண்டே “ஓம் றீங் அங் வங்” என ஆயிரத்து எட்டு தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம். இந்த செயல்முறையை குழந்தை பேறு வேண்டும் தம்பதியரில் கணவனே செய்திட வேண்டும் என்கிறார்.
இவ்வாறு செபித்த தேனை மனைவியியானவள் மாத விலக்கு முடிந்து தலை முழுகிய பின்னர், உண்ண்க் கொடுத்து இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்கும் என்கிறார் அகத்தியர். இந்த முறைக்கு எவ்விதமான பத்தியமும் கூறப் படவில்லை. மலடு என சொல்லப் பட்டவர்களுக்கும் இந்த முறையினால் கருத் தரிக்கும் என்கிறார் அகத்தியர்.
ஆச்சர்யமான தகவல்தானே!, தேவையிருப்பவர்கள் குருவினை வணங்கி முயற்சிக்கலாம். தேவையுள்ளோருக்கு இந்த தகவலை அறியத் தரலாம். என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி
No comments:
Post a Comment