Monday, 17 December 2018

சுவாசமும்! சக்தியும் !! கிரியா சக்தி மற்றும் இச்சா சக்தி பெரும் முறை

சுவாசமும்! சக்தியும் !!*
*************************
மனிதன்
*கிரியா சக்தியைப்பெற - 
சுவாசம் மூக்கின் வலது துவாரத்திலும்.
*இச்சா சக்தியைப்பெற -
சுவாசம் மூக்கின் இடது துவாரத்திலும் நடைபெற வேண்டும்...
இத்தத்துவமே
சிதம்பரத்தில் வலது கால் ஊன்றலும், மதுரையில் இடதுகால் ஊன்றலும்.
#கிரியாசக்தி என்பது செயல் மூலம் ( உழைப்பு) பலனை பெறுதல்.
#இச்சாசக்தி என்பது நினைத்த மாத்திரத்தில், ஆசைப்பட்டவுடன் அதனை அடைதல்...
வலது சுவாசம் - அறிவு
இடது சுவாசம் - மனம்
*ஆன்மீகத்திற்குள் சுவாச முறை!*
*************************************
1.ஒருவர் ஆரம்ப ஆன்மீக பயிற்சியில் இருக்கிறார் என்றால் ,
அவர் மனம் அலைபாயாமலிருக்க மனம் அடங்க ,-அறிவு விழிப்பாய் இருந்து எண்ணங்களையும் உணர்வுகளையும் கவனித்து நடக்க
சிதம்பர சுவாசம் செய்ய வேண்டும்.
*அதாவது இடது பக்கம் மூச்சை இழுத்து வலதுபக்கம் விடவேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
*மூச்சை இழுப்பதெல்லாம் இடதுபக்கமாகவும் மூச்சை விடுவதெல்லாம் வலதுபக்கமாகவும் செய்யவேண்டும்.
இதனால் அவரது சக்தி மேல்நோக்கி எழுப்பப்பட்டு ஆன்மதரிசனம் கிட்டும். கிரியாசக்தி கிட்டும்.
அதன்பிறகு அவர் வலதுபக்கம் மூச்சை இழுத்து இடதுபக்கம் விடவேண்டும் ( மதுரை ).
மூச்சை இழுப்பதெல்லாம் வலதுபக்கம், மூச்சை விடுவதெல்லாம் இடது பக்கம்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்ய இச்சாசக்தி கிட்டும்.
இதில் சுவாசத்தின் நான்கு நிலைகளில் எவ்வாறு சுவாசிக்க வேண்டும் என்பது தகுந்த குருவை அணுகி கற்கவும்.
இதனாலேயே
#சிதம்பரத்தில் (ஆத்ம தரிசனம் பெற்றநிலையில்) ஆனந்த நடனமிடும்) சிவன் ,
#மதுரையில் 64 இச்சாசக்தி சித்துக்கள் - 64 திருவிளையாடல் செய்தார்.
*வலது இடது சுவாச விளைவுகள் *
**************************************
#வலது பக்க சுவாசம் - அறிவு விருத்தி. (சிதம்பரம்) கிரியா சக்தி .
#இடது பக்க சுவாசம் - மனோ விருத்தி.
( மதுரை ) இச்சா சக்தி.
*ஒருவருக்கு அறிவு அதிகரிக்க - விழிப்புணர்வு அதிகரிக்க சிதம்பர சுவாசம் செய்யவும்.
*கற்பனை சார்ந்த பணியில் இருப்போர் மனதின் கற்பனா சக்தி அதிகரிக்க மதுரை சுவாசம் செய்யவும்.
*சுவாச முறையின் ஆரோக்கியம் *
*************************************
உடலின் வலபாகம் - உஷ்ணம் .பித்த தன்மை.
இடது பாகம் - குளிர்ச்சி. நீர் தன்மை.
பித்தம் உஷ்ணம் சார்ந்த நோய்களுக்கு - மதுரை சுவாசம் செய்யவும்.
கபம் நீர் சார்ந்த நோய்களுக்கு - சிதம்பர சுவாசம் செய்யவும்.
*சுவாசம் பற்றி வள்ளலார் பெருமான் கூற்று !*
*************************************************
ஆணியியல் அறிவும்
பெண்ணியியல் மனமும்
அன்னுற அமைத்த
அருட்பெருஞ்ஜோதி
- வள்ளலார்.
வலது சுவாசம் - ஆண் தன்மை - அறிவு
இடது சுவாசம் - பெண் தன்மை - மனம்.
இதன் பொருட்டே அறிவை வெளிப்படுத்தும் - வலது சுவாசத்தை ( ஆண் தன்மையை) கிரியா சக்தியை - சிதம்பர ஆட்சி என்றும்.
( சிதம்பரத்தில் - சிவன்)
மனதின் சக்தியை வெளிப்படுத்தும் - இடது சுவாசத்தை ( பெண்தன்மையை) இச்சாசக்தியை - மதுரை ஆட்சி என்றும் கூறினர்.( மதுரையில் - மீனாட்சி )

நன்றி : ரவி 

1 comment: