சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.
சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!
இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.
பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார். இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.
சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய முகங்கள்:
சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய முகங்கள்:
லிங்கோத்பவர்
சுகாசனர்
உமாமகேசர்
அரிஹரர்
அர்த்தநாரி
சுகாசனர்
உமாமகேசர்
அரிஹரர்
அர்த்தநாரி
வாமதேவம்:
மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே வாமதேவம் எனப்படும்.
வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:
கங்காதரர்
சக்ரவரதர்
கஜாந்திகர்
சண்டேசானுக்கிரகர்
ஏகபாதர்
தத்புருஷம்:
அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும். பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார். காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.
தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
பிட்சாடனர்
காமாரி
காலாரி
சலந்தராரி
திரிபுராரி
அகோரம்:
பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பினையும், வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.
அகோர முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
கஜசம்ஹாரர்
வீரபத்திரர்
தக்ஷிணாமூர்த்தி
கிராதமூர்த்தி
நீலகண்டர்
ஈசானன்:
கடைசியாக பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார். இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும். அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள். மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.
ஈசான முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
சோமாஸ்கந்தர்
நடராசர்
ரிஷபாரூடர்
கல்யாணசுந்தரர்
கல்யாணசுந்தரர்
சந்திரசேகரர்
இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்.
சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்பார்கள். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்பன அவ் ஐந்து முகங்கள். ‘நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! - என்று மணிவாசகர் குறிப்பிடுகிறார்.
நடுவில் இருக்கும் ஈசானம் - பளிங்கு நிறம், கிழக்கு முகமான தத்புருஷம் - பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்-கருமை, வடக்கு முகமாகிய வாமதேவம்-சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம் - வெண்மை என ஆதி சிவனுக்கு நிறங்களும் ஐந்தே.
அவர் நடனம் ஆடுவது ஐந்து சபைகளில்: சிதம்பரம்: தங்க சபை, மதுரை-வெற்றி அம்பலம் திருஆலங்காடு - ரத்தின சபை, திருநெல்வேலி- தாமிர சபை. குற்றாலம் - சித்திர சபை.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என சிவபிரானுக்கு ஐந்தொழில்கள்.
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்தும் பஞ்சபுராணம் எனும் சிறப்புடன் சிவ சந்நிதிகளில் ஓதப்படுகிறது. சிவனை அர்ச்சிக்க விசேஷமாக பஞ்ச வில்வம் என வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கை, கிளுவை என ஐந்து பத்திரங்கள் சிறப்பு பெறுகின்றன.
‘ஐந்தெழுத்து - நமசிவய’ நாமம் சொல்லி வழிபட வேண்டும். அவ்ஐந்தெழுத்து மந்திரத்தையும் சிவயநம, மசிவயந, நமசிவய, யநமசிவ, வயநமசி என ஐந்து வகையாக உச்சரித்து உருவேற்ற, உள்ளளி பெருகும் என உரைக்கிறது திருப்புகழ்.
சிவராத்திரி பொழுதில்... விபூதி பூசிக் கொள்ளுதல், ருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் ஜபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறைப் பாடல்கள் பயிலுதல் ஆகிய ஐந்து காரியங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.
சிவனின் குணங்கள்
சிவபெருமான் இல்லறத்தில் யோகியாக வாழ்பவராகவும், கையிலையிலும், மயானத்திலும் வசிப்பவராகவும், அரக்கர்கள் தேவர்கள் என தன்னை நினைத்து தியானிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் கேட்கும் வரங்களை கொடுப்பவராகவும், பாவங்களில் பெரிய பாவமான பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கும் வல்லமை உடையவராகவும் கூறப்படுகிறார்.
சிவ வழிபாடு
காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.
சிவனின் ஐந்து தொழில்கள்
ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றலை குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்)
ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்
இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலை குறிக்கும்
இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலை குறிக்கும்
தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.
சிவபெருமானின் 19 அவதாரங்கள்! – இது எவரும் அறிந்திடாத அரிய தகவல்!
சிவபெருமானை பற்றி பார்க்கையில், வெகு சிலருக் கே அவரின் 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெரு மானின் ஒவ்வொரு அவதாரமும் சிறப்பு முக்கியத்து வத்தை கொண்டுள்ளது. அவரின் இந்த 19 அவதாரங் களுக்கும் குறிப்பிட்ட காரணங்கள் இருந்தது. அதன் உட்சபட்ச நோக்கம் மனித இனத்தின் நலனே.
அவதாரம் 1 – பிப்லாட் அவதாரம்
தாதிச்சி துறவியின் வீட்டில் பிப்லாட்டாக பிறந்தார் சிவபெருமா ன். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே அத்துறவி அவர் வீட்டை விட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியி ல்லாமல் இருந்ததால் தன் தந்தை வீட்டை விட்டு வெளியேறி னார் என்பதை பிப்லாட் வளரும் போது தெரிந்து கொண்டான். அதனால் சனியை பிப்லாட் சபித்து, தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தான். பின்னர் 16 வயது ஆவ தற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிப ந்தனையோடு சனியை மன்னித்தான். அதனால் பிப்லாட் வடிவி லான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
அவதாரம் 2 – நந்தி அவதாரம்
நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்ற மாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். மந்தைகளின் பாதுகாவலனாக சிவபெரு மானின் நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது. நான்கு கைகளை கொண்ட காளை யாக அவர் தீட்டப்பட்டுள்ளா ர். கோடரி மற்றும் மானை இரண்டு கைகள் கொண்டிருக்கும். மற்ற இரண்டா கை கள் ஒன்றாக சேர்த்திருக்கும்.
அவதாரம் 3 – வீரபத்திர அவதாரம்
டக்ஷ்ணா யாகத்தில் சதி தேவி தன்னை பலியாக்கி கொண்டதா ல், சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தன் தலையில் இருந்து சிறிது முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அதிலிருந்து பிறந்தவர்கள் தான் வீரபத்திரர் மற்றும் ருத்ரகாளி. சிவபெருமானின் கடுமையான அவதாரம் இதுவே. மூன்று கடுஞ் சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருக்கும் கருமையான கடவுளாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத் தில் டக்ஷ்ணாவின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும்.
அவதாரம் 4 – பைரவ அவதாரம்
பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் யார் சிறந்தவர்கள் என்ற சண் டை எழுந்த போது, சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார். தன் உயர்வானநிலையை பிரம்மன் மறைத்த போது, சிவபெருமா ன் பைரவ வடிவத்தை எடுத்து பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தான். துண்டித்த பிரம்மனின் தலை பார்த்த போது, ஒரு பிராமணனை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு ஏற்பட் டது. அதனால் 12 வருடத்திற்கு ஒரு பிக்ஷாடனாவாக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து அவர் அவர் சுற்றி திரிய வேண்டி இருந் தது. இந்த வடிவத்தில் அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமா ன் காத்து வந்தார் என்று நம்பப்படுகிறது.
அவதாரம் 5 – அஸ்வத்ஹமா
பாற்கடலை கடைந்த போது, சிவபெருமான் கொடிய நஞ்சை உட் கொண்ட நேரத்திகுள்நேரத்தில், அந்த நஞ்சு அவர் தொண்டையி ல் எரியத் தொடங்கியது. சிவபெருமானின் உள்ளிருந்த விஷ் புரு ஷ் வெளிவந்தது. அதற்கு கடவுள் ஒரு வரத்தையும் அளித்தார். அதன் படி, பூமியில் துரோணரின் மகனாக பிறந்து எதிர்த்து நின்ற அனைத்து சத்ரியர்களையும் கொள்வான் விஷ் புருஷ். அதனால் அஸ்வத்ஹமாவாக பிறந்தான் விஷ் புருஷ்.
அவதாரம் 6 – ஷரபா அவதாரம்
ஷரபா வடிவத்திலான சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பார். சிவ புராணத்தின் படி, விஷ்ணுவின் பாதி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்க ஷரபா வடிவத்தை எடுத்தார் சிவபெருமான்.
அவதாரம் 7 – க்ரஹபதி அவதாரம்
விஸ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் அவரது மகனாக பிற ந்தார் சிவபெருமான். அவருக்கு க்ரஹபதி என பெயரிட்டார் விஸ் வனார். க்ரஹபதிக்கு 9 வயதான போது, அவர் இறக்க போகிறார் என்று அவரது பெற்றோரிடம் தெரிவித்தார் நாரதர். அதனால் மர ணத்தை ஜெயித்திட காசிக்கு சென்றான் க்ரஹபதி. அங்கே சிவ பெருமானிடம் ஆசி பெற்றதால் மரணத்தை ஜெயித்தான் க்ரஹப தி
அவதாரம் 8 – துர்வாசா
அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க இந்த வடிவத் தை எடுத்தார் சிவபெருமான். துர்வாசா என்பவர் முன் கோபத்தி ற்கு பெயர் போன மிகப்பெரிய துறவியாவார்.
அவதாரம் 9 – அனுமான்
அவதாரம் 9 – அனுமான்
குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் ஒரு அவ தாரமாகும். ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு சேவை புரிந் திடவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார்.
அவதாரம் 10 – ரிஷப அவதாரம்
பாற்கடல் கடைதலுக்கு பிறகு, கீழோகத்திற்கு சென்றார் விஷ் ணு பகவான். அங்கே ஒரு அழகிய பெண்ணின் பார்த்து மயங்கி னார். அங்கே தங்கியிருந்த போது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரத்தனத்துடன் கொடியவர்களாக இருந்தனர். அனைத்து கட வுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைக ளை அளித்து வந்தனர். அப்போது சிவபெருமான் காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து விஷ்ணு பகவானின் அனைத்து கொடி ய மகன்களையும் கொன்றார். காளையுடன் சண்டையிட விஷ் ணு பகவான் வந்த போது அது சிவபெருமானின் அவதாரம் என் பதை அவர் உணர்ந்து அவர் இடத்திற்கே சென்று விட்டார்.
அவதாரம் 11 – யாதிநாத் அவதாரம்
ஒரு முறை ஆஹுக் என்று பழங்குடியை சேர்ந்த ஒருவன் வாழ்ந் து வந்தான். அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள் ஆ வார்கள். ஒரு முறை யாதிநாத் வடிவில் சிவபெருமான் அவர்க ளை சந்தித்தார். இரண்டு பேர் மட்டுமே இருக்க கூடிய சின்ன குடி சையில் அவர்கள் இருந்ததால், விருந்தாளியை உள்ளே தங்க வைத்து தான் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆஹுக். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று இரவு ஒரு வனவிலங்கால் கொல்லப் பட்டான் ஆஹுக். மறுநாள் காலை, ஆஹுக் இறந்திருப்பதை கண்டு அவன் மனைவியும் சாக நினைத்தால். அப்போது தன் உண்மையான ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளு க்கு ஒரு வரமளித்தார். அதன் படி, அவளும் அவள் கணவனும் நளன் மற்றும் தமயந்தியாக மீண்டும் பிறப்பார்கள். அவர்களை சிவபெருமானே சேர்த்து வைப்பார்.
அவதாரம் 12 – கிருஷ்ண தர்ஷன் அவதாரம்
ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத் துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
அவதாரம் 13 – பிக்ஷுவர்யா அவதாரம்
அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை காக் கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
அவதாரம் 14 – சுரேஷ்வர் அவதாரம்
தன் பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவை ஒரு முறை எடுத் தார் சிவபெருமான். அதனால் தான் அவரை சுரேஷ்வர் என்று அழைக்கிறோம்.
அவதாரம் 15 – கீரத் அவதாரம்
அர்ஜுனன் தவத்தில் இருந்த போது கீரத் அல்லது வேட்டைக்கா ரன் வடிவை எடுத்தார் சிவபெருமான். அர்ஜுனனை கொல்ல மூக் கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தார் துரியோதனன். காட்டுப் பன்றி போல் தன்னை மாற்றிக்கொண்டான் மூக்கா. ஆழ்ந்த தியா னத்தில் இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் சிதறியது. அவன் கண்ணை திறந்து மூக்காவை பார்த்தான். அந்த காட்டுப்பன்றியை அர்ஜுனனும் கீரத்தும் தங்களின் அம்புகளால் வீழ்த்தினார்கள். பின் யார் அந்த காட்டுப்பன்றியை முதலில் வீழ் த்தியது என்ற சண்டை கீரத்திற்கும் அர்ஜுனனுக்கும் பிறந்தது. கீர த் வடிவில் இருந்த சிவபெருமானை சண்டைக்கு வரச்சொல்லி சவால் விசுத்தான் அர்ஜுனன். அர்ஜுனின் வீரத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு தன்னுடைய பஷுபதா ஆயுதத்தை பரிசளித்தார்
அவதாரம் 16 – சுண்டன்டர்கா அவதாரம்
திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை ஹிமாலயாவி டம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடுத்தார்.
அவதாரம் 17 – பிரமச்சாரி அவதாரம்
சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க இந்த அவதாரத் தை எடுத்தார் சிவபெருமான்.
அவதாரம் 18 – யக்சேஷ்வர் அவதாரம்
கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகங்காரத் தை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.
அவதாரம் 19 – அவதுட் அவதாரம்
இந்திரனின் இறுமாப்பை அழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தர் சிவபெருமான்.
நன்றி .
© சித்தர் மலர் 2017
மிக விரிவான, பல செய்திகளை உள்ளடக்கிய பதிவு. நன்றி.
ReplyDelete