Sunday, 2 December 2018

பாதவெடிப்புக்கு மெழுகு (OINTMENT)

பாதவெடிப்புக்கு மெழுகு (OINTMENT)
பொருட்கள்:
தேன்மெழுகு (மஞ்சள்) -100 கிராம் 
இந்துப்பு -100 "
குக்குலு -100 "
முல்தானி மெட்டி -100 "
வெல்லம் -100 "
பசுநெய் -100 "
சுத்தமானதேன் -60 "
சுத்தமானகற்பூரம். -6 "
(வெள்ளாட்டுப் புழுக்கை 50 கிராம் பிடித்தவர்களுக்கு மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்)
செய்முறை:
இந்துப்பு,குக்குலு,முல்தானி மெட்டி,வெல்லம்,கற்பூரம் இவற்றை தனித்தனியாக பௌடர் செய்யவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில்வைத்து சூடானதும்.அதில் தேன்மெழுகை போடவும்.மெழுகு உருகும் போது நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கலந்துகொண்டே இருக்கவும்.முழுவதும் கரைந்தபிறகு அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியபிறகு அனைத்துப் பொடிகளையும் வரிசை பிறகாரம் ஒவ்வொன்றாக கலக்கவும்.நன்றாக மெழுகு பத்தில் கலந்து கண்ணாடி புட்டில் வைக்கவும்.
உபயோகிக்கும் முறை:
இரவு படுக்கும் பொழுது பாத வெடிப்புகளில் பூசக் குணம் காணும்.
தொடை & அக்குளில் உள்ள கருமைக்கும் பூசக் குணம் காணும்.
சுபன் சித்தா.
பரம்பரை சித்த வைத்தியர்

No comments:

Post a Comment