Thursday, 20 December 2018

ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி
ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு ;
வளர்பிறை கூடிய சனிக்கிழமை யன்று பச்சரிசியை ஒரு கைபிடி அளவு அள்ளி சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை வேண்டி வணங்கிவிட்டு அந்த அரிசியை உங்கள் வீட்டின் அருகில் உள்ள எறும்புப் புற்றை சுற்றிப் போட்டுவுடவும். அப்படிப் போட்ட அரிசியை எறும்புகள் தூக்கிச் செல்லும். அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டு விலகி்விடும்.
அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி யை எறும்புகள் தமது மழைக் காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசியின் மீது பட்டதுமே அதன் கெடும் தன்மை நீங்கி விடும். இந்த அரிசிகளை எறும்புகள் சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.
இப்படி இரண்டரை வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்துபோய்விடும்.
இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி யை எறும்புக்கு உணவாகப்போட்டு வருவதால் அதை ஓர் எறும்பு சாப்பிட்டால் 100- ஏழைகள் சாப்பிட்டதற்குச் சமமாகும்.
இப்படி செய்து வருவதால் சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மைத் தாக்காது .
(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி முதலிய எல்லா சனிதோஷமும் இதில் அடங்கும்).
என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி
Image may contain: food

No comments:

Post a Comment