Thursday, 30 August 2018

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-13)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-13)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்தும் மந்திரமா?

கவி பாடினால் உயிர்போகுமா அது எப்படி?

தமிழை இசையோடு பாடுவதால் அற்புதங்கள் நடந்ததா அது எப்படி?

தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மந்திரமாக வேலை செய்யுமா? என்றால், ஒரே பதில் செய்யும்.
இது பற்றி அகத்தியர் மாந்திரீக காவியம்,அகத்தியார் அஷ்டமாசித்து என்னும் மாந்திரீக ஜோதி.பிருகு முனிவர் மாந்திரீகம் 100 என்ற நூல்களில் விரிவாக சொல்லியுள்ளது.

பிருகு முனிவர் மாந்திரீகத்தில் பாடல் 41 முதல் 50 வரை தமிழில் உள்ள முப்பத்தியொரு எழுத்துகளில் ஏறக்குறைய 25 எழுத்துக்ளை துணை பீஜத்தோடு சொன்னால் மந்திரமாக வேலை செய்வதை கூறுகிறார் அதை ஒவ்வொரு எழுத்தாக விளக்கினால் பதிவு நீளும் என்பதால் நூலின் பாடல் எண் மேலே கொடுத்துள்ளேன்.

இதில் ம்" என்ற பீஜத்தை கடைசியில் சேர்ப்பதால் சித்தியை தரும். அதாவது, எந்த எழுத்தோடு சேர்ந்து கூறபடுகிறதோ அதற்கான ஆற்றலை கொடுக்கும். "ங்" என்ற பீஜம் கடைசியில் சேர்த்தால் முக்திக்கான ஞானத்தை அளிக்கும் என பிருகுமுனிவர் கூறுகிறார்.

பாடலை கீழே காண்க
"வைப்பதுவால் சித்தி முத்தி ரெண்டுமாகும்
வகையான ம் கார மந்தம் சித்தி காட்டும்
கைப்பொருளாம் ங் கார மந்தம் முத்தியாம்
கசடில்லை என்வாக்கில் கூர்ந்து நோக்க"
பிருகு மாந்திரீகம் 100ல்-44

உதாரணம் : ஓம் அம் நமக என ஜபம் செய்தால் மரணத்தை வெல்லலாம்.
இதன் விளக்கம் யாதெனில் இயற்கை மரணம் என்பது அறிவியல் ரீதியாக சளி கீழே இறங்கினால் மூச்சு அடைக்கும் மரணம் வரும். தலைக்குள் அம் என்று அதிர்வு ஏற்பட்டால் சளி கசடுகள் வெளியேருவதையே குறிக்கும் அதை கீழே துப்பிவிடவேண்டும். இதனால் மரணம் தள்ளிபோடபடும் என்கிறார் சித்தர்.

மேற்கண்ட ம் , ங் பீஜம் பிராணனை உடலில் சேர்க்கவும்,பிராணனை அதிகபடுத்தவும் பயன்படுத்தபடுகிறது.
ஒவ்வொரு எழுத்தும் உச்சரிப்பு விதம் என்பது அதன் இலக்கண வரையறையை பொருத்து உடனே பலிதமாகும் வேலையை செய்கிறது. மற்ற மந்திரகளை சொல்லும் போது அதை அதிகபடியாக உரு ஏற்றி சொன்னால் பலிதமாகும் என கூறபடும்.

 ஆனால், தமிழில் அதை பாடலாக வடித்து குறிப்பிட்ட ஒலியோடு பயணம் செய்ய வைத்து அதை உடனே பலிதமாகுமாறு புலவர்கள் செய்கிறார்கள்.

ஒலியலைகளை பற்றிய சிறிய விடயத்தை தெரிந்துகொள்வோம் 20 ஹெர்ட்ஸ் மேல் மற்றும் 20,000 ஹெர்ட்ஸ் வரை உள்ள அதிர்வெண்களை தான் கேட்க முடியும்

 அதற்குமேல் முடியாது. இப்படி இதற்கு மேல் மற்றும் இதற்குள் உள்ள அலைவரிசையை கொண்டு மந்திரங்கள்,பாடல்கள் உருவாக்கபட்டன. 20க்கு கீழ் உள்ளதை இன்ப்ராசோனிக் என்றும் 20000 மேல் உள்ளதை அல்ட்ராசோனிக் என்றும் ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.

சரி இப்போது தமிழுக்கு வருவோம் தமிழ் மொழியால் இசைக்கபடும் அலைவரிசை நன்மைக்கும் பயன்படுத்தினர், தீமைக்கும் பயன்படுத்தபட்டது.
இதை பற்றி அகத்தியரின் சீடர் சிகண்டி என்பவர் இசைநுணுக்கம் என்ற நூலில் விரிவாக எழுதினார் என்றும் பின்னாளில் காலத்தின் நன்மை கருதி அந்நூல் அழிந்துபோனதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தமிழ் மொழி பிறர்மனதில் செல்லும் வேகம் என்பது, கண்ணாடி முன் இருக்கும் பிம்பம் கண்ணாடியில் தெரிவதுபோல, கண்ணாடிக்குள் செல்லும் மார்க்கம் எப்படி கண்ணுக்கு தெரியாமல் செல்லுமோ அப்படி இருக்கும் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
அந்த அளவு சிறியதாக இருக்கும் என கூறுகிறார்கள்.அதன் குறைந்த அதிர்வுகளையும் கணக்கு வைத்துள்ளார்கள்.
அதாவது இந்த அதிர்வுகளை மிகவும் துல்லியமாக அளந்து கூறினார்கள். இம்மி அளவு கூட சத்தம் வரகூடாது, அணு அளவும் சத்தம் கேட்கவில்லை என்பார்கள் அல்லவா, அதன் அளவை கூறுகிறார்கள் கவனிக்க
ஒன்று (1) என்பது அளவாக கொண்டால் அதிலிருந்து பிரித்தால் அதாவது ¾, ½ , ¼ என பிரித்தால் இம்மியின் அளவு 1 க்கு/ 21,50,400 ஆகும். மேலும் ஒரு அணு அளவு என்பது அதாவது 1க்கு /165580800 அணுவின் அளவுகள் ஆகும். _அணுவை தாண்டி குணம்,பந்தம்,பாகம்,விந்தம்,நாகவி
ந்தம்,சிந்தை,கதிர்முனை_ என்று இதையும் தாண்டி தான் நம் குரல்வளைபடி என்ற அளவு கிடைக்கிறது.

அதாவது குரல்வளையில் இருந்து கிடைக்கும் குறைந்தபட்ச அதிர்வுகளின் கணக்கீடு அணுவைதாண்டி உள்ள அளவுதான் அந்த அளவு மெல்லியது மிக குறைந்த அதிர்வு அலைகளை கொண்டது 1க்கு / 958524436480000 அளவுகளை கொண்டது.

    கீழே தமிழர்களின் குறைந்த பட்ச அளவுகளை கொண்ட பட்டியல் படத்தை காண்க

இப்படி குறைந்த அதிர்வுகளை கொண்டு குரல்வளையில் ஒலியெலுப்பினால் யாருக்கு தெரியும்.இந்த அளவு நம் குரல்வளையிலிருந்து வரும் சப்தம் என்பது கணக்குவைக்க நம்மிடம் கருவிகள் இப்போது இல்லை.

 இது மெளனத்தின் தொனியில் இருந்து கொடுக்கும் அளவு சப்தம் தான் இதன் அலைவரிசை

இந்த கணக்கு மற்றும் அறிவியல் எதற்கு கொடுத்தேன் என்றால் சித்தர் சாபம்,பெண்கள் சாபம் மற்றும் புலவர்கள் கவிபாடும்போது ஏற்படும் நிகழ்வில் உள்ள சம்பவங்களை விளக்கும்போது குறைந்த அதிர்வெண் எவ்வளவு என்பது உங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது, என்பதற்க்கு தான் விளக்கினேன்.

இன்றைய விஞ்ஞானம் அணுவுக்குள் உள்ள குவார்க் அளவுகளை தான் கண்டுபிடித்துள்ளது அதாவது குணம் என்ற அதிர்வில் உள்ள துகள் வரைதான் ஆனால் சித்தர்கள் அதையும் தாண்டி செல்கின்றனர் என்பதை காண்க.

அடுத்த பதிவில் தமிழ்மொழி சித்துக்கு விளையாடிய காலத்துக்கு சென்று எப்படியெல்லம் அற்புதம் செய்தது, சாபங்கள் எப்படியெல்லாம் பலித்தது என்பதை விளக்கமாக காண்போம்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

         -  shiva shangar

1 comment:

  1. இதன் தொடர்ச்சி வேறு எங்கு உள்ளது 13 உடன் நின்றுவிட்டது

    ReplyDelete