Wednesday 22 August 2018

வாசி

Image may contain: 1 person

வாசி - யினால்
பார் கடலைக் கடையுங்கள்
******** ********** *********
பார்கடலை எப்படி கடைய வேண்டும் கடைந்தால் என்ன நடக்கும் என்பதை சூட்சம கதையின் மூலம் வியாசர் விளக்கியுள்ளார்.
அதை நமக்குள் ஆராய்ந்து தெளிய வேண்டும்.
என்னப்பன் நந்தீசர் எமக்கு அருளிய விளக்கத்தை தங்களுக்கும் தருகிறேன்...
வாதம், பித்தம், சிலேத்துமம் எனும் மூன்றுதான் சந்திர,சூரிய சூட்சும கலைகளாகிறது.
வாசுகி எனும் சுவாசப் பாம்பின் ஒருபுறமான வலது நாசி எனும் சூரியகலை சுவாசமானது தேவர்களாகவும்
மறு புறமான இடது நாசி எனும் சந்திர கலை சுவாசமானது அசுரர்களாகவும் சூழுமுனை எனும் சூட்சம கலை சுவாசத்தை மத்தாகக் கொண்டு (சந்திர சூரிய நாடி சுழுமுனை நாடியை மத்தை சுற்றிய பாம்பு போல் இருக்கும்)
கூர்மம் எனும் ஆமை தனது 4 கால் மற்றும் தலை என 5 உறுப்புகளையும் உடலுக்குள் அடக்கிக் கொள்வது போல நமது ஐம்புலன்களையும் அடக்கி
சந்திர, சூரிய சுவாசக் கலைகள் மூலம் மாற்றி மாற்றி வாசி வித்தை கொண்டு கடைந்தால்
மூலாததாரத்தில் ஐம் பூத கணங்களுக்கும் அதிபதியான கணபதி தரிசனம் கிடைக்கும்
கடல் அலை ஓசை இங்கு கேட்கும்
இங்கே முக்கோண பெட்டகத்திற்கு உள்ளே உள்ள தனஞ்செயன் எனும் வீங்கல் காற்று பாம்பு போல சீறி மேலே பாயும்.
சுவாதிஷ்டான சக்கரத்தில் முட்டி நிற்கும். அங்கு மண்ணை ஆதாரமாகக் கொண்டு பிரம்ம தேவனும் சரஸ்வதியும் காட்சி தருவார்கள்.
பின் அந்த பாம்பானது சுக்கிலம் அல்லது சுரோனிதத்தில் உள்ள வித்தைக் (விதை) கொண்டு மேல் நோக்கி சீறும்
மணிபூரகத்தில் நீரை பூத ஆதாரமாகக் கொண்டு திருமாலும் மஹா லட்சுமியும் ஆசி வழங்குவர்
இங்கே புல்லாங் குழலின் ஓசை கேட்கும்.
அடுத்து வாசிப் பாம்பானது அனாகத சக்கரத்தில் சீறி பாயும். அங்கே ருத்ர சிவமும் பார் (உலக) அதிபதி பார்வதியும் ஆசி வழங்குவார்கள் இங்கு சலங்கை ஒலிக்கும்.
இப்போது நாம் கணபதி, சரஸ்வதி,லஷ்மி ,பார்வதி என நான்கு தேவர்களின் ஆசி பெற்றோம்.
அதன் பிறகே விசுக்தி கண்டத்தில் நாம் முற் பிறவிகள் மற்றும் இப்பிறவி என அனைத்து பிறவிகளிலும் செய்த ஒட்டு மொத்த பாவ புண்ணிய கர்ம வினைகளும் விஷமாக பிரிந்து நிற்கும்.
(தயிரைக் கடையும் போது வெண்ணை தனியாக வருவது போல சுத்த ஆன்மா தனித்தும் ஆன்மாவிலுள்ள பாவ புண்ணிய கர்மாக்கள் விஷமாகவும் நிற்கும்.)
இந்த ஆலகால விஷத்தையே
மஹாதேவர் உண்டு நம்மை தூய ஆன்மாவாக ஆக்குகிறார்.
இதுவே பிரதோசக் காலம்.
இங்கே சங்கநாதம் ஒலிக்கும்
இதன் பிறகே உண்ணா முலையில் கங்கை எனும் அமிர்தப் பால் சுரக்கும். அதை நாம் உண்டு அழுக்கற்ற தூய ஆன்மாவாக ஆகிறோம்.
இதுவே சிவ தாண்டவமான நடராச பஞ்ச தாண்டவத்தைக் காணும் பக்குவம்.
5 ஆதாரங்கள் தாண்டி ஆறாவதாக ஆக்ஞா சக்ரத்தில் நடராஜ தாண்டவம் வேல் வடிவில் ஜோதியாய் தெரியும்.
இதுவே ஆறுமுகம் (ஞான சக்தி)
இப்போது முத் தீ எனும் சந்திர சூரிய அக்னி மண்டலங்களை நாம் காண்கிறோம்.
இதுவே முத்தி (கிரியா சக்தி)
இதன் பிறகு சிவத்தின் மீது மட்டும் இச்சை (ஆசை) வரும். அப்போது தீவிர மௌன தவம் ஊசிமுனை தவம் என சொல்லப் படும் தவத்தால் சிவத்தோடு கலப்பதே சித்தியாகும்.
பத்தாம் வாசலில் சகஸ்கார தளமானஇருதயக்கமலமான ,
சுழுமுனை எனும் வெட்டவெளியில் சிவசக்தியாய் பரசிவத்தோடு கலத்தல்
இதுவே சித்தி ( இச்சா சக்தி)
இதுவே சித்தர் கலை.
இதற்கு மெய் பொருள் எனும் இறைவன் நம்முள் இருக்கும் பத்தாம் வாசல்.
ஓரெழுத்து ஊமை மந்திரம்
அதாவது
மணி, மந்திரம்,ஔசதம் எனும் முப்பொருளையும் சிறந்தகுருநாதர் மூலம் அறிந்து செயல் பட்டாலே கைகூடும்.
குரு இல்லா வித்தைப் பாழ்...
அண்டத்திற் கப்பால அகன்ற சுடரினை
பிண்டத்துள் பார்பாயடிக் குதம்பாம்
பிண்டத்துள் பார்ப்பாயடி...
வாசி வாசி வாசி
ஓம் வாலைத்தாயே போற்றி...
சிவமே
சக்தி முத்தி சித்தி...
சிவசிவ சிவமே சிவசிவ
சிவ செம்பொன் ...
சிவ யோகம் (வாசி)
**************#####
சிவா திருப்பிப் போட்டால் வாசி யோகம்.
நாம் சந்திர கலை சூரிய கலை எனும் வாத பித்த நாடிகளிலேயே சுவாசத்தை முடித்துக் கொள்கிறோம்.
இதை சித்தர்கள் சங்கநாதம் என கூறுகிறார்கள்.
இதைத் தாண்டி குரு உபதேசப்படி இவ்விரு சங்காலும் உள்ளிளுத்த சுவாசத்தை அடக்கி பின் சிலேத்துமநாடி எனப்படும் நடு நாடியாம்
சூட்சம நாடி வழியாக ஏற்றுவதைத் தாரை ஊதல் என சித்தர்கள் கூறுகின்றனர்.
இதற்கு சித்தர் ரகசிய சூட்சம பஞ்சாட்சர மந்திரம் ,எந்திரம்,தந்திரம் மூன்றும் ஒருசேர செயல்பட வேண்டும்.
அவ்வாறு தாரை ஊத வல்லவர்கள் சிவசக்தி சகிதமாய் சிவமாகவே ஆவார்.
இதை அறியாமலையே கோடான கோடி மாந்தர்கள் செத்து செத்து பிறக்கின்றனர் என்கிறார் சிவவாக்கியர்.
நாமென்ற ஒன்று நம் எண்ணங்களே. அது மனதோடு சம்பந்தப் பட்டது. அது 96 தத்துவங்களில் 43தத்துவங்களை தன்னகத்தே கொண்டு பயணிக்கும்.
பிறகு நானென்ற மனமானது சுக்கல் சுக்கலாகி காணாமல் போய் தானாகி நிற்பான் சிவம்.
"ஊனுக்குள் நீ நின்று உலவினது பாராமல் நானென்று நலமிழந்தேன் பூரணமே .."
"யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாகி நின்றது தற்பரமே..."
உயிரை உடலாகக் கொண்டு இவ்வாண்மாவைப் பக்குவ நெறி படுத்த பலகோடி அணுக்களான உடலை தந்து ஒவ்வொரு அணுவிலும் சிவமே நிறைந்து
நாம் என்ற ஆணவம் தந்து மனம் எனும் நம்மை கருவியாகக் கொண்டு இவ்வாண்மாக்களை மேல் நெறிப் படுத்துகிறார்.
இதில் தெளியும் நானென்ற மனம் 43 த்துவங்களைக் கடக்கும் போது காணாமல் போய் அனைத்தும் சிவமாகவே ஆகிறது.
சிவசிவ சிவமே சிவசிவ
சிவ செம்பொன் ...
சங்கிரண்டு தாரையொன்று
சன்னல் பின்னலாகையால்
மங்கி மாழுதே உலகில்
மானிடங்கள் எத்தனை
சங்கிரெண்டையும் தவிர்ந்து
தாரையூத வல்லீரேல்
கொங்கை மங்கை பங்கரோடு
கூடி வாழலாகுமே...
நினைப்பதொன்று கண்டிலேன்
நீயலாது வேறில்லை
நினைப்புமாய் மறைப்புமாய்
நின்ற மாயை மாயையே
அனைத்துமாய் அண்டமாய்
அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான்
இருக்குமாறு எங்கனே...
சிவவாக்கியர்...
பிராணனை பிரானாக்கு
************ ************
பிராணனை அதாவது காற்றை அகத் தவப் பயிற்சியின் மூலம் உள்ளே
பூரகம்(உள்ளிளுப்பது) :
16 மாத்திரை
கும்பகம் ( அடக்குவது)
64;மாத்திரை
ரேசகம் ( வெளியிடுவது)
32 மாத்திரை
எனும் மாத்திரைக் கணக்குப் படி மூச்சுப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் வாசி எனும் சிவ யோகப் பாதையானது மென்மையாகும்.
இவ்வாறு காற்றை அடக்கி ஆளும் கணக்கை அறிந்தவர்கள் சிவ பெருமானாரின் திருவருளால் எமனையே எட்டி உதைக்கும் தகுதியுள்ள சாகாக் கலையைக் கற்றவர் ஆகிறார்..
இதில் சி என்பது 1 மாத்திரை
சிவ. என்பது 2 :மாத்திரை அளவு ஆகும்
முதலில் 2:8:4 பின்
4:16:8 என
படிப்படியாகப் பயிற்சியை மேற் கொள்ள வேண்டும்.
இது வாசி எனும் சிவ யோகத்தின் முன்னோடியாகும்
பயிற்சி நேரம் அதி தகாலை பிரம்ம முகூர்த்தம் 4.30 முதல் 6
இடம்: காற்றோட்டமான இடம்.
சிவசிவ சிவமே சிவசிவ
சிவ செம்பொன் ...
மந்திரம்
********
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார்
இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்கு
கூற்றையுதைக்கும் குறியதுவாமே
திருமந்திரம்
திருமூலர்...

No comments:

Post a Comment