Sunday, 19 August 2018

விழித்திருப்பதன் அர்த்தம்

விழித்திருப்பதும், தூங்கியிருப்பதும் உயிரினங்களின் கட்டாயம் ஆகும்!
விழித்திருப்பதன் அர்த்தம் -
அறிவு, செயல் தளத்தில் இருக்கிறது என்பதுதான்!
தூங்கியிருப்பதின் அர்த்தம்-
அறிவு, செயலற்ற தளத்தில் இருப்பது என்பதுதான்!
விஷேசம் என்னவென்றால்-
விழித்திருக்கும் போது -
நாம் இருப்பதையும், நம்மைச் சுற்றி பிரபஞ்சப் பொருட்கள் இருப்பதையும் அறிந்து கொண்டிருக்கும் அறிவானது...
இந்த நிலைக்கு எதிரான, ஒரு எதிர் நிலை இருப்பதையும் லாஜிக்காக சரியாக உணர்கிறது!
அந்த நிலை 'தூக்க நிலை' ஆகும்!
இந்த நிலையில் -
நாம் இல்லை, பிரபஞ்சப் பொருட்கள் இல்லலை; என்பதையெல்லாம் விட...
"இருக்கு-இல்லை" என்ற இருமையை கடந்த அல்லது நம் அறிவினால் விளக்க முடியாத ஒரு நிலை அது!
ஆனாலும், இந்த, அந்த நிலையைப் பற்றிய உணர்தலும் கூட...
விழித்த நிலையின் போதுள்ள அறிவுப் பாட்டில்தான் கணக்கிடப் படுகிறதே ஒழிய...
தூக்கத்தில் இருக்கும் வரை-
"இருத்தல்" எனபது...
அறிவின் செயல் ஆங்கு இன்மையால் அது எதுவும் இல்லாத 'சூன்யமே'!
விழித்த பிறகுதான், நாம் இல்லாதிருந்தோம் என்ற கணக்கீடு, அறிவின் கூட்டல் கழித்தல் கணக்கீட்டால் வழங்கப் படுகிறது!
இந்த விழிப்பு நிலையில், அறிவானது, நம்மைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் தகவல்களைத் தருகிறது!
இந்தத் தகவல்கள் பூரணத்துவம் பெற்றதல்ல!
ஏனெனில்-
நமது இருத்தலின் பூரணமானது, நமது விழித்த அறிவு நிலையையும் -
தூக்க அறியாமை நிலையையும் -
சரிசமமாகக் கொண்டதே!
*தூக்கமோ அறியாமையின் மொத்த உருவம்!*
அதைப் பற்றி கிஞ்சித்தும் கூட நமக்கு எதுவும் தெரியாத போது...
விழிப்பு நிலையில் கிடைக்கும் அறிதலையும் அதன் ஞானத்தையும் மாத்திரம் சிறப்பென மெச்சுவது எங்ஙெனம் பூரணமாகும்?
எதார்த்த வாழ்க்கையில் கூட நாம் பார்த்துக் கொண்டிருக்கும் திசைதான் நம் அறிதலில் இருக்கும்; பார்க்க முடியாத நமது முதுகுபுற திசை நம் அறியாமையில் இருக்கும்!
எனவே,
"அறிவும் - அறியாமையும்"
சேர்ந்தே இருப்பதே இருத்தலின் தன்மையாகும்!
அறிதலும், அறியாமையும் சேர்ந்தால்தான்...
அது "பரிபூரணம்" ஆகிறது!
அறிதல் என்பது தராசின் ஒரு தட்டிலும், அறியாமை என்பது மற்றொரு தட்டிலும் சமமாக இருப்பதே வாழ்க்கையின் சமரசமாகும்.
விழிப்பு நிலை என்ற ஒன்றைப் பற்றி விலாவாரியாக தெரிந்து கொள்வது ஞானமன்று.
இதுகாறும் மதங்கள், குருமார்கள் எல்லாம் விழிப்பு நிலைக்குச் சொந்தமான அறிவையும் , அதன் கிரீடமான ஞானத்தையும் பற்றி பீற்றிக் கொள்வது, எப்படி சிறந்த, வாழ்க்கையின் அடையப்பட்டே ஆக வேண்டிய கட்டாயம் என்று ஆகும்...
நம்மால்,
*அறியாமையைக் கணக்கிட முடியாத..போது?*
ௐ நம சிவாய போற்றி ௐ

No comments:

Post a Comment