Thursday, 30 August 2018

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-4)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-4)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

மனமும் தமிழும் ஓர் ஆய்வு
***************

(அந்த கரணங்களில் ஒன்றான சித்த பதிவுகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு)

சித்தம் என்பது கடவுள் மனம் என சித்தர்கள் அழைக்கிறார்கள்.உடலுக்கும் தமிழுக்கும் சம்பந்தம் உள்ளதை பார்த்து வருகிறோம்.

அதுபோலவே தமிழுக்கும் மனதுக்கும் தொடர்பு உள்ளது
அந்த கரணங்களில் மனம், புத்தி, அகங்காரம், சித்தம்.

 இதில் மனதுக்கு பெரும் பகுதி சித்தத்துடன் தொடர்பு உள்ளதால் சித்தம் பற்றி ஆராயுங்கள். மனம் என்பது கருவி மட்டுமே அதை செயல் படுத்துவது சித்தம் ஆகும்.

அதாவது நடக்கும் எல்லா பதிவுகளும் சித்தம் சேமிக்கிறது தேவை என்றால் மனம் விரித்து காட்டுகிறது.

உங்களுடைய ஆன்மா பரமாத்மாவிடம் இருந்து வரும்போது நீங்கள் மீண்டும் எப்படி பரமாத்மாவிடம் சேரவேண்டும் என்பதை பரமாத்மா பதிவு செய்து தான் அனுப்புகிறார்.

ஆனால் நீங்கள் பூமியில் வந்த அனுபவம் மற்றும் சம்பவங்களின் பதிவுகளை மட்டுமே எடுப்பதால் கடவுளிடம் சேரமுடியவில்லை.

இந்த பதிவுகளை பதிவு செய்து மற்றும் விரித்து காட்டும் சக்தி இந்த மனதிற்க்கு உண்டு.
இந்த மனதை சரியான முறையில் இயக்க தெரிந்தால் சித்தபதிவுகளை மாற்ற முடியும்.

ஆழ்நிலையில் உள்ள கடவுள் என்பவர் போட்ட பதிவுகளை திறந்து அவரிடம் செல்லமுடியும்
சமஸ்கிருத வார்த்தையில் சொல்லாமல் புரியும்படியாக சொல்லவேண்டுமானால்
கிளிஜோசியம் தெரியுமல்லவா அது தான் இந்த சித்த பதிவு வெளிவரும் முறை

அதாவது கிளி ஜோசியம் பார்க்கும்போது என்ன நடக்கும் யோசிக்கவும்
நீங்கள் கிளிஜோதிடரிடம் போய் “எனக்கு ஒரு சீட்டு எடுத்து கிளியை போட சொல்லும் அய்யா!“ என்பீர்கள்.பின் அந்த கிளிகூண்டு திறக்கவேண்டும், கிளிக்கு முன் சில சீட்டு கட்டுகள் அடுக்கி இருக்கும்.கிளி வெளியே வரும் சுற்றும் முற்றும் பார்க்கும் உங்களையும் பார்க்கும் பல சீட்டுகள் தள்ளி ஒரு சீட்டு எடுத்து கொடுத்து உள்ளே சென்று அது இருக்கும். அதன் பின் சீட்டை பிரித்து நடக்கவேண்டியதை ஜோதிடர் கூறுவார் நீங்கள் கேட்பீர்கள்.
இது தான் சித்தபதிவு

 வெளியேரும் கருத்து,
அதாவது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பதிவு தான் சீட்டுகட்டு , கிளி தான் மனம், ஜோதிடர் தான் சூழ்நிலை, நீங்கள் சும்மா இல்லாமல் சூழ்நிலையில் சிக்கும்போது அது மனம் எனும் கிளியின் கூட்டை திறக்கும் வெளியே வந்த மனம்(கிளி) உங்கள் காலநேரம் கணித்து, அதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என பார்த்து ஏற்கனவே உள்ள பதிவுகளை ஆராய்ந்து ஒரு பதிவை வெளியிடும். இந்த பதிவு சூழ்நிலையின்(ஜோதிடர் வார்த்தையில்) கைக்கு போய் அப்படியே செயல்படும் இது தான் சித்தபதிவு வெளிபடும் முறை .

இப்படிபட்ட சித்த பதிவுகளை மாற்றலாம் அல்லது மேல்பதிவு செய்யலாம்.

இந்த சித்தத்தில் கடவுள் பதிவை திறந்தவர்கள் ஞானிகள்,சித்தர்கள்,மகான்கள் இன்னும் என்ன பேரோ அவர்கள் எல்லாம் அடங்குவர்.
அப்படியானால் நீங்களும் ஞானி தான் இன்னும் அந்த பதிவை திறக்கவில்லை.

இதை தான் ஞானம் என்பது உனக்குள் இருந்து வருவது என்பார்கள். புறகாரணிகள் அனைத்தும் தூண்டுதல் மட்டுமே.

இப்படி சித்தத்தை வைத்து அஷ்டமா சித்து செய்வது,சித்தர் ஆவது,கடவுள் ஆவது(கடவுளோடு கலப்பது) என அனைத்தும் முடியும்.

இப்படி பட்ட கடவுள் தன்மை அடையவைக்கும் சித்தத்தை எப்படி திறப்பது,
சூழ்நிலையை எப்படி அமைப்பது,
இதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி! இதை ஞாபகம் வைக்க
சரி இன்று சித்தத்திற்க்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு ஆராய்வோம்.

ஆரம்பத்தில் பரமாத்மா ஒரு பதிவு போட்டு அனுபுவார் என்றேன் அல்லவா, அந்த பதிவு தமிழில் தான் போட்டு அனுப்புவார். ஆன்மாவுக்கு மனம் என்னும் கருவி கிடைப்பது மானுடதேகத்தில் அந்த தேகம் ஆன்மா எடுக்கும் போது சித்தம் அதன் செயல்பாட்டை தொடர இந்த தமிழ் பேசும் இடத்தில் தான் முதலில் பிறக்கிறது. அது உலகில் எங்கும் இருக்கலாம் ஆனால் தமிழ் மொழி பேசும் இடத்தில் தான் சென்றடையும்.
கடவுள் சித்தம் தமிழில் பதியபட்டதால் அது தானகவே அங்கு சென்று முக்திக்காக பிறக்கும் ஆனால் சில ஆன்மாக்கள் விஷய வாசனைகளில் ஈடுபட்டு இது மறக்கிறது. அடுத்தடுத்த பிறப்பு மேற்கொண்டு மீண்டும் தமிழுக்கு வருகிறது(மேற்கண்ட விஷயம் சித்தர் நூல்களில் திரட்டிய தொகுப்பு)

இயேசு கூட தமிழ் கற்ற பின் யோகக்கலை பயின்று சென்றார் என குறிப்பு உள்ளது ஆராய்க.

இது அனுபவத்தில் கூறவேண்டுமானல் அறிதுயில்(hypnotize)யோக கலையில் ஆன்மாவின் பூர்வ ஜென்ம பதிவில் ஆராயும்போது 90 விழுக்காடு, முதல் மனித பிறப்பு ஆன்மா எடுக்கும் இடம் தமிழ் மொழி பேசும் இடத்தில் தான்.

சந்தேகம் இருந்தால்இதை அனைத்து அறிதுயில்(hyponotizem) யோககலை செய்பவர்களும் ஆய்வு செய்து பார்க்கவும்.

ஆனால் அறிதுயிலின் போது ஆன்மா திரும்ப செல்லும் வழியை அதாவது கடவுள் போட்ட பதிவை காண இயலாது(இது மறைக்கபட்ட விடயம்).

இந்த கருத்தை யாரெல்லாம் மறைமுகமாக சொல்லுகிறார்கள் என காணவும்

தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்,
இன்பத் தமிழ்
எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
----பாவேந்தர் பாரதிதாசன்

பாரப்பா புலத்தியனே கேள்! முத்திக்கு
வித்தாகும் முத்தமிழால் உரைகின்றேன்---அகத்தியர்

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை ------திருமூலர்

இப்படி ஆன்மா தனக்கான சித்தபதிவை திறக்கும் நேரம் சூழ்நிலை என்ன என ஆராயம் போது இது பற்றி தமிழ் இலக்கண நூலில் மறைப்பாக சொல்லபட்டுள்ளது
இசை தமிழ் தான் இந்த பகுதிக்கு மிகவும் உதவுகிறது.

அதாவது கடவுள் பற்றிய சிந்தனை உங்களுக்கு கொண்டுவர இசை தமிழை மறைமுகமாக வைத்துள்ளனர்.

இசை தமிழில் உள்ள ராகங்கள்(பண்கள்) குறிப்பிட்ட நேரத்தில் பாடுவதாக வடிவமைத்து சில நுணுக்கமாக வைத்துள்ளனர் .

சித்தத்திற்க்கு கடவுள் பற்றிய பதிவை திறக்கும் ராகம் பூபாளம்(புள்ளாளம்) இதை தமிழிசையில் புறநீர்மை எனப்படும். இந்த இசை வேலை செய்யும் நேரம் அதிகாலை நேரம் 4 மணியிலிருந்து 8 மணிவரை இந்த சமயத்தில் கடவுள் சித்த பதிவை கொண்ட பாடலையோ அல்லது வேறு வகையான பாடலையோ பாடினால் அன்று முழுவதும் அந்த அலைவரிசயில் உங்கள் மனம் வேலை செய்யும்.

பூபாளம் நேரம் இசை இலக்கணபடி 6மணிவரைதான் அதற்கு அடுத்து பிலஹரி வரும் இருப்பினும் பிலஹரியும் சிறிது வேலை செய்கிறது(ஆய்வு செய்யபட்டது)

இது பற்றி இசைத்தமிழில் விரிவாக பின்னால் காண்போம்

இந்த இசை எப்படி வேலை செய்கிறது என்பதை அனுபவமாக சொல்லவேண்டுமானால், இந்த காலத்தில் 4 ல் இருந்து 8 மணிவரைக்கும் யாராவது தூங்கும்போது அவருக்கு தெரியாமல் மெல்லிய சப்தத்தில் ஒரு பாடலை ஒலிக்க செய்யவேண்டும் குறிப்பு அந்த பாடல் பாடுகிறது என அவருக்கு தெரியகூடாது அந்த அளவு அலைவரிசை இருக்கவேண்டும்.

பின் அவர் அந்த பாடலை அன்று முழுவதும் அவர் முனுமுனுத்து கொண்டே இருப்பார்.

இதுபோல் தான் நாம் கடவுள் சித்த பதிவு அலைவரிசையை தூண்டிவிட்டால் அது அன்று முழுவதும் அதற்க்கான அலைவரிசை உள்ள செயல்கள்,நபர்களை தொடர்புபடுத்தும்.

இதை சரியாக செய்தவர் மாணிக்கவாசகர். அவர் தன்னுடைய திருப்பள்ளி எழுச்சியில் சரியான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.இந்த பாடல் பாடபெறும் சிறுபொழுதுகளில் வைகறை அதாவது (2to6) அதிகாலை ஆகும்.இது பாவகையில் எண்சீர் ஆசிரிய விருத்தம் அதாவது உள்ளே உள்ள அறிவை தூண்டும் ஆசிரியர் போல அந்த விருத்தத்தில் பாடபெற்றது.இசை புறநீர்மை அதாங்க பூஆழம்(சித்தர்கள் உச்சரிப்பு)
இதை அறிந்த சைவ நெறியாளர்கள் மறைப்பாக முன்பனிகாலம் என்னும் மார்கழியில் மட்டும் வைகறையில் பாட அனுமதி தந்தனர். அந்த மாதம் பூ ஆழம்(பூபாளம்) என்கிற சஹஸ்ர இதழின் ஆழத்தில் உள்ள கடவுள் சித்த பதிவு தானாகவே வெளிவரும் அந்த நேரம் பாடுவதால் எளிதாக அமையும்.

மார்கழி மாதம் மட்டும் ஏன் சொர்க்க வாசல் திறக்கிறார்கள் என இப்போது உங்களுக்கு புரியும்.

அறிவியல் ரீதியாக சித்தத்தில் பதிவு செய்யும் முறை தக்க குருவின் துணை கொண்டு அறிக.

இங்கு மெய்ஞ்ஞான (பக்தி) வழியில் மட்டுமே கூறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

         -  shiva shangar

2 comments:

  1. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ ஙபள

    ReplyDelete
  2. சப் கான்ஷியஸ் மைண்ட் என்று சொல்லபடுவதுதான் சித்தமா

    ReplyDelete