Thursday 30 August 2018

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-2)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-2)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

தமிழில் நெடில் எழுத்துகள்
***************

நெடில் எழுத்துக்கள் நாம் ஏற்கனவே பார்த்ததுதான்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
இந்த ஏழு எழுத்துகளும் சித்துகள் என நாம் சொல்லும் வேலையை செய்யவல்லது.

சித்து வேலைகள் இப்போது நமக்கு தேவையில்லை அதனால் இதை கருத்தில் கொள்ளவேண்டாம்.

குறிப்பிட்ட ஓசையுடன் இந்த எழுத்துகள் இசைதமிழில் பயன்படுத்தபடுகிறது.

ஏழிசை எழுத்துகள் இவைதான் இதை கர்நாடிக் சங்கீதத்தில் ச ரி க ம ப த நி என்பார்களே அது போல தான் இதுவும்.

இந்த நெடில் எழுத்துகளை பயன் படுத்துவதில் ஒரு சிக்கல் பிராணா சக்தி அதிகமாக வெளியே செல்லும் அதை சித்துவேலை செய்வதற்கு ஒரு சிலர் பயன்படுத்துகிறார்கள்
அதாவது குறில் எழுத்து சொன்னால் ஒரு மாத்திரை வீதம் செலவு நெடிலாகில் இரண்டு மாத்திரை வீதம் செலவு.

இது அதிகபட்சமாக 4 மாத்திரை வரை நீளும் அது எழுப்புகிற ஒலியை பற்றியது.
ஆண் என்பவன் அதிகபடியான பிராணணை இழக்கிறான் அவன் நெடிலில் வருகிறான்

ஆண் - நெடில்
பெண் என்பவள் தன் பால் அனைத்து சக்தியும் சேகரிக்க தெரிந்தவள் அவள் பிராணனை அதிகம் இழப்பதில்லை,அவள் குறில் சொல்லில் அடக்கம்

பெண் - குறில்
அதிகபடியான நெடில் எழுத்துகள் இலக்கணமும் இசைதமிழும் பயன்படும் போது பிறர் மீது பிராணனை செலுத்தி எதிராளியை செயலிழக்கச் செய்ய முடியம்.
குறில் எழுத்தை பயன்படுத்தி பிராணை வழுபடுத்தி பிராணதேகத்தை வெளிபடுத்தலாம். இதற்கு மெய் எழுத்துக்கள் துணைபுரியும்.

இந்த ஏழு எழுத்துகளும் இசையாக நான்கு மாத்திரை நீட்ட குறிப்பிட்ட விலங்கின் ஒலியில் இருந்து எடுக்கபட்டது

மயில், மாடு, ஆடு, கிரவுஞ்சபறவை, பஞ்சமம்,

 குதிரை, யானை இந்த ஒலிகள் நெடிலுடன் ஒத்துபோவதால் இசைதமிழில் இது கொடுக்கபட்டது.

இசை தமிழில் இலக்கணம் மிக முக்கியம் இதை தவறாக ஒரு காலத்தில் பயன்படுத்தியதால் அந்த இலக்கணநூல் அழிக்கபட்டது.( இது பற்றி இசை தமிழில் விரிவாக காண்போம்)

தமிழ் எழுத்துகளில் உயிர் எழுத்துகள் பத்தில் ஐந்து எழுத்து பிராணை அதிகம் கொடுக்கவும் ஐந்து எழுத்துகள் பிராணனை நாம் யாருக்கு கொடுக்கவேண்டுமோ அவருக்கு கொடுக்க தந்திரத்தில் பயன்பட்டது
அந்த மீதி இரண்டு எழுத்துகள் ஆய்வில் உள்ளது அதை சித்தர்களின் அருள்  இருந்தால் மற்ற பதிவில் பார்ப்போம்.

இப்படி உயிர்கொடுக்கும் வேலை செய்வதால் உயிர் எழுத்து என வகைபடுத்தினர் இது எழுத்துக்கும்,மனிதனும் உயிர் கொடுக்கும் மொழி என்பதை நினைவில் நிறுத்தவும்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

         -  shiva shangar

1 comment:

  1. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ டயறர

    ReplyDelete