Thursday, 30 August 2018

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் குரு பரிகாரதலம்


அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், குரு பரிகாரதலம், திட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

திட்டைக்கு வருக ! தி (கு)ருவருள் பெறுக !

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகத்தில் மகாப்ரளயம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பிரளம் ஜனத்தினரல் சூழப்பட்டது. உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அத்தகைய தருணத்தில் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரனின் திருவருளால் ஊழிப்பெருவெள்ளத்தின் மத்தியில் சுமார் பத்து மைல்கள் பரப்பளவுள்ள மேட்டுப் பகுதி மட்டும் நிலைத்திருத்தது. அம்மேட்டுப்பகுதியில் கோடி சூரியன் ஒரே சமயத்தில் உதையமானரற்போல் ஜோதிமயமான சிவலிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்திலிருந்து காட்சி தந்த சிவபெருமான் வேத வேதாந்த சாஸ்திர அறிவை அனைத்து உலகங்களுக்கும் தந்தருளினார். இறைவன் சுயம்புவாக அந்த மேட்டுப் பகுதியில் தோன்றியதால் ஸ்வயம்பூதேஸ்வர் (தான்தோன்றீஸ்வரர்) எனப் பூஜிக்கப்பட்டார். முதன் முதலில் வசிஷ்ட மகரிஷி இங்கு வந்து தவம் புரிந்து இறைவனைப் பூஜித்து பிரம்மஞானிகளில் முதன்மை பெற்றவராக விளங்கினார்.

வசிஷ்ட மகரிஷிக்கு அருள்புரிந்த காரணத்தினால் இத்திருத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்த இத்திருத்தலம் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற பெருமை பெற்ற தலமாகும். திருக்கயிலாயம், கேதாரம், காசி, ஷ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்புத் தலங்களின் வரிசையில் 22-வது சுயம்புத் தலமாக விளங்குவது தென்குடித்திட்டை. திட்டை என்ற சொல்லுக்கு திட்டு அல்லது மேடு என்பது பொருளாகும். தென்குடி என்பது மனித உடல் திட்டை என்பது ஞானமேடு. மனித உடலில் மூலாதாரம் முதல் ஆன்ஞை உள்ளிட்ட ஆறு ஆதாரங்கள் பொருந்தியுள்ளன. முதலில் இறைவனைப் பற்றிய ஐய உணர்வு போன்றிகிறது. ஐயம் தெளிந்தபின் மெய்யுணர்வு தோன்றியது. இப்படி ஊரின் பெயரிலேயே ஞானமார்க்கம் மறைந்திருப்பது உணரத்தக்கது.

சக்கர தீர்த்தம்

இத்திருக்கோயிலில் எதிரில் அமைந்துள்ள சக்கர தீர்த்தம் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தால் உருவாக்கப்பட்டது. அனைத்துப் பாவங்களையும் போக்கவல்லது இந்தச் சக்கர தீர்த்தம். தீர்த்தத்தில் பக்தியுடன் புனித நீராடினால் ஸ்ரீ மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய பெருமான்களின் பேரருளைப் பெறலாம்.

சூல தீர்த்தம்

முன்னொரு காலத்தில் தண்டகனத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. கதிரவனின் கடும் கிரணங்களினால் குளங்களும், குட்டைகளும் வறண்டன. மழை பொய்த்தது. தெய்வாதீனமாக இந்தத் திட்டை திருத்தலத்தை வந்தடைந்த பசு, குதிரை, ஆடு, மாடு, முதலிய மிருகங்கள் தாகத்தினால் தொண்டை வறண்டு துன்புற்று வாடியதைக் கண்ட சிவபெருமாள், தன் சூலத்தால் பூமியைத் தோண்டி குளம் ஒன்றை உருவாக்கி அதில் தனது சிரசிலிருந்து கங்கை நீரை விட்டு நிரப்பினார். இறைவனின் சூலத்தால் உருவாக்கப்பட்டால் இக்குளம் சூலதீர்த்தம் எனப் பூஜிக்கப்பட்டது. அம்பிகை - மங்களாம்பிகை தரிசித்துப் பூஜிப்பவர்களுக்கு அனைத்து மங்களங்களையும் தரக்கூடியவள். மாங்கல்ய பலத்திற்கும் குடும்ப ஒற்றுமைக்கும் ரப்பிரசாதி இந்த மங்களாம்பிகை.

சந்திரனின் அபிஷேகம்

மூலவர் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரனின் விமானத்தில் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. சந்திரனிடமிருந்து குளிர் கிரணங்களை அந்தக் கல் ஈர்த்து அந்தக் கிராணங்கள் நீராக மாறி 24 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சொட்டு தீர்த்தமாக இறைவன் மீது நித்ய அபிஷேகம் நடைபெறும் அதிசயத்தை இன்றும் காணலாம்.

சிறப்பு குருபகவான்

சுவாமிக்கும் அம்பிகைக்குமிடையில் தனிச்சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரங்களில் பூரண சுபக்கிரகமான குருபகவான்.

இறைவி உலக நாயகி

இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவி உலகநாயகி என்னும் மங்களாம்பிகை அனைத்து களங்களையும் தரக்கூடியவள். இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளாள். மாங்கல்ய பலத்திற்கும், குடும்ப ஒற்றுமைக்கும் வழிபட வேண்டிய அன்னை இவள். சிறப்பு மூர்த்தி குருபகவான் நவக்கிரங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர் குருபகவான். ஒருவரது ஜாதகத்தில் மிகக்கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளைக்கூடத் தனது சுபப்பார்வையினால் தடுத்து நிறுத்தும் வல்லமை பிரகஸ்பதி என்று அனைவராலும் போற்றப்படும் குருபகவானுக்கு உண்டு.

எல்லாச் சிவாலயங்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞானவடிவான ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி கோயில் கொண்டிருப்பார். சிவகுரு ஸ்தலங்களில் இந்த தெட்சிணாமூர்த்தியே குருவாகப் பாவித்து வழிப்படப்படுகிறார்.

ஆனால், தென்குடித்திட்டையில் ஸ்ரீ குருபகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் கிடையாது என்பதும் அறியத்தக்கது.

No comments:

Post a Comment