Wednesday 22 August 2018

அதர்வணவேதம்.

இந்துக்களுக்கு நான்கு வேதங்கள் உண்டு: ருக், யஜூர், சாமம், அதர்வணம்.
இதில் வெள்ளைக்காரகள் கணக்குப்படி ரிக் வேதம் பழமையானது: சிலர் 6000 ஆண்டு பழமை என்பர்; இன்னும் சிலர் 3200 ஆண்டுகள் பழமை என்பர். அதர்வண வேதம் பிற்காலத்தியது என்பர். ஆனால் இந்துக்கள் இதை ஏற்பத்தில்லை அவர்கள் கணக்குப்படி எல்லா வேதங்களும் கி.மு.3102 ஐ ஒட்டி வியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டவையே ; அதாவது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முன்னரே 4 வேதங்களும் இருந்தன.
உண்மையில் இந்துக்களுக்கு இரண்டே வேதங்கள்தான்; அதாவது ரிக் வேத மந்திரங்களே பெரும்பாலும் யஜூர், சாம வேதங்களில்உள்ளன. அதர்வண வேதத்திலோ பெரும்பாலும் புதிய மந்திரங்கள்.
சங்க காலம் முதல் தமிழர்கள் சொல்லுவது நான்மறை; அதாவது 4 வேதங்கள். ஆனால் மனு முதலானோர் சில இடங்களில் த்ரயீ வேத = மூன்று வேதம் என்பதால் வெள்ளையர்களுக்கு சிறு குழப்பம்; அவர்களுக்கு தமிழும் தெரியாது. ஆகையால் அதர்வண வேதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர்; உண்மையில் அதர்வண வேதம் என்பது அன்றாடம் பயன்படும் மருத்துவம், தாயத்து, பேய் ஓட்டல், விஷங்களை இறக்கல், தாய் மொழி, தாய் நாடு, “பூமி என்னும் அன்னை”, எதிரிகளை ஒழிப்பது எப்படி என்பது பற்றிப் பேசுவதால் அதைச் சமயச் சடங்குகள் பற்றிப் பேசும் மூன்று வேதங்களுடன் சேர்க்காமல் பேசினர்.
பிராமணர்களின் ஆயுதம் அதர்வண வேதம் என்று மனு சொல்லுவார். கோபத பிராமணமோ எனில் நான்கு வேத புரோகிதர்களும் யாக யக்ஞங்களில் கலந்து கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஆகையால் வெளிநாட்டினர் சொல்வதை நம்ப வேண்டியதில்லை.

அதர்வணவேதம்...
********************
அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் எவை என்று தெரியவில்லை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர்.
அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு காண்டத்திலும் எது சம்பந்தமான மந்திரங்கள் உள்ளன என்று சுருக்கமாகக் காண்போம்; இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே அவர்கள் சிறந்த நாகரீகமும் உயர்ந்த சிந்தனையும் உடையவரகள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.
முதல் காண்டம்:
******************
முதல் காண்டத்தின் முதல் மந்திரமே வாசஸ்பதி என்னும் வாக் (பேச்சு) தேவனையும் வசோஸ்பதி என்னும் செல்வ தேவனையும் வணங்கும் மந்திரம் ஆகும்.
கல்விக்கான மந்திரங்கள்
வெற்றிக்கான மந்திரங்கள்
எதிரிகளை அழிப்பதற்கான மந்திரங்கள்
நோயை அகற்றுவதற்கான மந்திரங்கள்
தண்ணீர் தேவதை பற்றிய மந்திரங்கள்
வரங்களைப் பெறும் மந்திரங்கள்
தர்மம் தொடர்பான மந்திரங்கள்
இதில் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 மந்திரங்களைக் கொண்ட
35 துதிகள் முதல் காண்டத்தில் காணப்படுகின்றன.
2 ஆம் காண்டம்:
******************
இதில் ஒவ்வொன்றிலும் 5 மந்திரங்களைக் கொண்ட 36 துதிகள் காணப்படுகின்றன.
நோயைக் குணப்படுத்தும் மந்திரங்கள்
ஜங்கிடா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்
அக்னி, இந்திரன், பரப் பிரம்மம் பற்றிய துதிகள்
இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
ஜங்கிடா மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!
3 ஆம் காண்டம்:
******************
ரிக் வேதத்தில் இடம்பெற்ற வசிஷ்ட மஹரிஷியின் முக்கிய மந்திரம், கொஞ்சம் மாறுதல்களுடன் இதில் உள்ளது. இது செல்வத்தை வேண்டும் மந்திரமாகும்.
எதிரிகளத் தோற்கடிப்பதற்காக்ன மந்திரம்
தேச ஒற்றுமைக்கான மந்திரம்
பட்டாபிஷேக மந்திரம்
பர்ண மணி என்னும் அபூர்வ தாயத்து மந்திரம் — இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
பர்ண மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!
இதில் ஒவ்வொன்றிலும் 6 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.
4 ஆம் காண்டம்:
******************
இதில் ஒவ்வொன்றிலும் 7 மந்திரங்களைக் கொண்ட 40 துதிகள் காணப்படுகின்றன.
ரிக் வேதத்தில் உள்ள யார்? என்னும் மந்திரம் இதில் இடம்பெறுகிறது. யார் என்றால் சம்ஸ்கிருதத்தில் க:– இது பிரம்மாவுக்கும் பெயர்! அதாவது ஓரெழுத்துச் சொல். இதை வைத்து யாரை வணங்குவது என்று மந்திரம் முழுதும் திரும்பத் திரும்ப வரும்.

இதில் அதிசய ஒற்றுமை என்ன வென்றால் தமிழ் “க” பிராமி லிபியிலிருந்து வந்தது. அந்த “க” பிராமியில் சிலுவை வடிவில் இருக்கும். அது எகிப்தில் கடவுளைக் குறிக்கும் சித்திர எழுத்து. ஆனால் வெறும் சிலுவையாக இல்லாமல் இரு புறமும் கைகளை உயரத் தூக்கிய மனிதன் போல மேல் நோக்கிய கோடுகளுடன் இருக்கும்.
விஷத்தை அகற்றும் மந்திரம்
எதிரிகளை நாடு கடத்தும் மந்திரம்
பலத்தை அதிகரிக்கும் மந்திரம்
தூக்கமின்மையை அகற்றும் மந்திரம்
சங்கு கிழிஞ்சல்களைக் கொண்டு தாயத்து செய்யும் மந்திரம்
மரங்கள், மழையை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்
மூலிகைகள் பசுக்களை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்
பாவங்களைப் போக்கும் மந்திரங்கள்
புழுக்களை அகற்றும் மந்திரங்கள்
சக்தியை அதிகரிக்கும் மந்திரங்கள்
என உள்ளன......

1 comment:

  1. இந்த புத்தகம் தேவை
    7708057886

    ReplyDelete