Thursday, 30 August 2018

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-8)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-8)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

சென்றைய பதிவுகளில்  சமஸ்கிருதத்தின் விளக்கம் கொடுக்கபட்டுள்ளது.

இனி தமிழில் மந்திரம் எப்படி எல்லாம் உள்ளது எனபதையும், ஆய்வின் தலைப்பை தமிழும் சமஸ்கிருதமும் என்பதை மாற்றி தமிழே ஓர் மந்திரமொழி என சொல்கிறேன்

இதற்கு குறைந்தது ஐந்து பதிவுகள் வரும் என கூறலாம்.அதற்கு மேலும் வரலாம் இருப்பினும் காலம் கருதி முடிக்கபடும்.
இந்த ஆய்வின், மூலம் ஒரே வரிதான் தமிழே மந்திரமாக செயல்படும் என்பது தான்

இந்த ஆய்வில்
1. சங்க காலத்திற்க்கு நாம் செல்ல வேண்டி வரும்.

2 மறைந்த நூல்களின் குறிப்புகளை அறிய வேண்டி வரும்

3. கடலுக்கடியில் இருக்கும் பல நகரங்களை சந்திக்க(தோண்ட) வேண்டி வரும்.

4. சங்க கால பெண்களின் சக்திகளை காண வரும்,

5. சங்க கால புலவரின் திறமை இருந்த விதம் வெளிப்படும்,

6. சித்தர்களின் தமிழ்மொழி பயன்பாடு
சங்க தமிழோடு இசை சேர்ந்து விளையாடிய விதம்

7. குறைந்த எழுத்துகளை கொண்ட மந்திரம்

என அனைத்தும் குறிப்புகளாக கூறி
காலத்தின் அருமை கருதி சில ரகசியங்களை வெளிபடுத்தியும், சிலதை விளக்காமல் அவரவர் அனுபவ ஆய்வுக்கே விட்டுவிட வேண்டியதால் பொறுத்தருள வேண்டும்

பல இடங்களில் மேற்கோள் பாடல்கள் காட்டபடும் அதை அன்பர்கள் படித்து ஆய்வு செய்ய ஏதுவாக இருக்கும். இதனால் பதிவின் நீளமும் அதிகமாக இருக்கும் என்பதை கூறிவிடுகிறேன்.

சில பதிவுகள் வேலை பளுவின் காரணமாக தாமதம் ஆகலாம், சற்று காத்திருக்க வேண்டுகிறேன்

எப்படி இருப்பினும் தமிழ் மொழி பற்றி மறைந்த பல உபயோகமான தகவல்கள் கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.

இதற்கு என் குருநாதர் அன்னை சித்தர் மூலிகை முனிவர் ராஜ்குமார் ஸ்வாமிகளின் ஆசிகளோடும் பதிவிடுகிறேன் என்பதை கூறிகொள்கிறேன்.

தமிழ் மொழி உச்சரிப்பு என்பது இலக்கண வரையறையோடு உச்சரிக்கபடும் போது மந்திரமாக வடிவம் எடுத்து நேரடியாக சென்று தாக்கும்.

பெரும்பாலும் மொழி மந்திரமாக உருமாறும்போது நெட்டலைகளாக உபயோகபடுத்த படுகிறது

இது பாடல் பாடும்போது ஏற்படும் அலையானது நேரடியாக சென்று தாக்குதல் புரிகிறது. இதனை மறைமுகமாக அந்த காலத்தில் வைத்துள்ளனர்.
இது பற்றி காணும் முன் தமிழின் திறம் பற்றி அறியவும் சங்க காலத்தில் இருந்து வருவோம்.

இப்பொழுது நாம் செல்லவேண்டிய காலம், தென்மதுரை இருந்த இடமான குமரிகண்டம் என்ற கண்டத்திற்க்கு இங்கு தான் முதல் தமிழ் சங்கம் இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடலியல் ஆதாரத்தின் படி இக்கண்டம் கி.மு 8000 என்கிறார்கள். ஆனால் நில ஆய்வாளர்கள் கி.மு 30,000 என்கிறார்கள். நாம் சங்கம் தொடங்கபட்ட காலத்தில் இருந்து செல்வோம்

அதாவது கி,மு 8000 த்திலிருந்து கி.மு 7000 க்குள் செல்வோம்.

பதிவு மந்திரம் குறித்து என்பதால் இத்தமிழ் மொழியில் உள்ள ஆற்றல் மட்டும் பார்ப்போம்.மேலும் அதை வடிவமைத்த நபர்களை பற்றியும் அறிவோம். முதலில், இந்த தமிழ் செவ்வனே வளர காரணமானவர்கள் சிவன் என்கிற இறையனார் (திரிபுரம் எரித்த விரிசடை கடவுள்), முருகபெருமான் ,  மற்றும் அகத்தியர் ஆவார்கள்.

இவர்கள் மூவரையும் பற்றி இனி விரிவாக பார்ப்போம்......

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

தொடரும்.......

         - shiva shangar

1 comment:

  1. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷

    ReplyDelete