Thursday, 30 August 2018

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-5)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-5)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

பிற உயிரினங்களும் தமிழ் மொழியும்
***************

அந்த காலத்தில் எல்ல விலங்குகளும் பேசியிருக்கின்றன என பல மதங்களில் சான்று உள்ளன .

ராமயணத்தில் குரங்குகள், கரடி
,மரவகைகள், பறவைகள்(ஜடாயு) அதேபோல் பைபிளில் பாம்பு,திமிங்கலம்,பன்றிகள். என்றும் இஸ்லாமியத்தில் நரிகள், மாடுகள் என விலங்குகள் பேசியதாக வருகிறது.

இது எல்லாம் உண்மையாக இருக்குமா என்றால் உண்மைதான். ஆனால் இக்காலத்தில் இது ஒரு சில இடத்தில் மட்டுமே இவை நடக்கிறது.

அவை சில சிம்பான்சி குரங்கு வகை,கிளிகள்,பேசுகிறது. மேலும் கொரியாவில் வன விலங்கு பூங்காவில் உள்ள, ஆசிய யானை ஒன்று, கொரிய மொழி பேசும் அதிசயம் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அமேசான் ஆற்று பகுதியில் வாழும் சில காட்டுவாசிகள் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்க்கு தகவல் அனுப்ப குறிப்பிட்ட ஒரு மரத்தை பயன்படுத்துகின்றனர். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கே இது இன்னும் விளங்கவில்லை.

இதை பற்றி அந்த காட்டுவாசியிடம் கேட்டதற்க்கு இந்த மரத்தோடு பேசும் வழக்கம் எங்களுக்கு உண்டு அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. ஆனால், நான் அனுப்பும் செய்தியை இந்த மரம் கேட்டு அது அந்த கிராமத்தில் உள்ள அந்த மரத்திடம் கூறும், பின் அந்த மரம் அது கூறுவதை கேட்டு அங்குள்ள என் மனைவி, மக்கள் அறிவார்கள் என கூறினார். இதுவும் இன்னும் விஞ்ஞானிகளுக்கு விளங்கவில்லை.

சித்தர்கள் மூலிகை பறிக்கும் போது சில சடங்குகள் செய்து தான் மூலிகை பறிப்பர் அதில் சாப நிவர்த்தியும் ஒன்று சில மரங்களிடம் சபநிவர்த்திக்காக பேசியதாக குறிப்புகள் ஆங்காங்கே உள்ளன.

இப்படி எல்லாவகையிலும் சில குறிப்பு பேச்சுகளை அனைத்து உயிரினங்களும் வெளிபடுத்துகின்றன.
அந்த குறிப்பு பேச்சு என்பது சில ஒலியலைகள் உள்ளடக்கியதாக உள்ளது. அது பல தமிழ் ஒலியலைகளை கொண்டதாக உள்ளது.

மதுரையில் வன்னிமரம் சாட்சி சொல்லியது பசுமாடு சாட்சி சொல்லியது என்பதெல்லாம் இந்த ஒலியலைகளை வைத்து தான். இதை சித்தர்களும் பேசுகின்றனர் ஆனால் நம்மால் தான் அறிய முடியவில்லை.

ஒரு சிலர் மனிதனுக்கு மனம் உண்டு என்பது போல், பிற விலங்குகளுக்கும் மனம் உண்டு என கூறுகின்றனர்.

நமது யோகிகள், சித்தர்கள், முனிவர்கள் கூறிய கருத்து மனம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ளது என்றும் அதனால் தான் அவனை மனிதன்(மனுஷ்யன்) என்கிறோம். ஆனால் சிலர் இதை மறுத்து பேசுகின்றனர்.

தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் மரபியல் பிரிவில் கீழ்காணும் பாடலை கவனிக்க
*“……………………………………..
ஐந்து அறிவு அதுவே *அவற்றொடு செவியே
ஆறு அறிவு அதுவே *அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
என்கிறார்.

இதை படித்தால் நன்கு விளங்கும். அவர் தான் கூறியதாக கூறாமல், நேரிதின் உணர்ந்தோர் நெறிசெய்தனர் என்கிறார்.
அதாவது இதை உணர்ந்தவர்கள் கூறினார் என்கிறார்.

இதை சில பேர் அறியாமல் அதை ஆராயாமல் உணராமல் மனம் என்பது எல்லாருக்கும் உள்ளது என கூறுகின்றனர்.அதற்கு இந்த பாடல் குட்டு வைத்தது போல் உள்ளது

எல்லா சித்தர்களும் மனிதன் மனதை செம்மைபடுத்தினால் வெற்றி பெறலாம் என கூறினார்களே அன்றி, மரமோ , விலங்கோ மனதை செம்மைபடுத்த வேண்டும் என கூறவில்லை.

இப்படி அனைத்து உயிரினங்களுடனும் பேசும் மொழியே தமிழ் மொழியாகும்.

சில இடங்களில் தமிழ் சொற்கள் முழுமையாக வராது அதனுடைய ஒலியன்கள்(phonetic) மட்டும் வரும் அதை பல உயிரினங்கள் உபயோகபடுத்துகின்றன.

சங்க கால இலக்கியத்தில் மரத்தை தோழியாக நினைத்து மற்றும் தங்கையாக நினைத்து அதனுடன் நல்உறவை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது மரத்தின் உணர்வுகளை அப்படியே புரிந்துகொள்ளும் தன்மை இருந்து இருக்கிறது.
அதேபோல் குறுந்தொகை இலக்கியத்தில் சிவபெருமானின், கவிதை ஒன்று வரும். அது தருமிக்கு பொற்கிளி கொடுக்கவும், நக்கீரருடன் வாதம் செய்யும் இடம் . அந்த கவிதையில் வண்டுடன் பேசுவதாக அமையும் அதாவது தும்பி இனத்தை சேர்ந்த வண்டே நீ கூறு என்கிறார் சிவபெருமான் வண்டு பேசும் என குறிப்பிடுகிறார்(ஆதாரம்: குறுந்தொகை பாடல் எண் -2)

அதே போல் திருதக்கதேவர் எழுதிய காப்பியமான சீவகசிந்தாமணியில் சீவகன் பிற உயிரினங்கள் பேச்சுமொழியை அறிந்திருந்தான் என ஆசிரியர் கூறுகிறார்

உதாரணம்: எறும்பு,வண்டு(ஆ
தாரம்:சீவகசிந்தாமணி பாடல் எண்-892-893,133

1) பாண்டவர்களில் நகுலன் விலங்குகள் பேச்சு மொழி (பரி பாசையை)அறிந்திருந்தான் என கதை வரும். மற்ற உயிரனங்களை காட்டிலும் குதிரையுடன் பேசும் மொழியில் வல்லவன் என வியாசர் கூறுகிறார்(ஆதாரம் மகாபாரதம்--விராட பர்வம்)

இங்கு கவனிக்க அது என்ன குதிரை பேச்சு அதுதான் அய்யா, பரி(குதிரை)….பாசை(பேச்சு) அதை சொல்லவே இந்த பதிவு.
இது மறைக்கபட்ட தமிழ்ர் கலைகளில் ஒன்று.

இந்த கலையில் வல்லவர்கள் பாண்டியர்கள் தான், ஆரம்பத்தில் இது அனைத்து இடங்களிலும் இருந்தது ஆனால் பின்னால் மறைந்துவிட்டது.
இதை சுருக்கமாக தெரிந்துகொள்வோம். பரிபாஷை இரண்டு வகைபடும்.

ஒன்று 1 ஒலியலைகள் மூலம் கொடுப்பது ,
இன்னொன்று 2 கண் பார்வையால் பேசுவது அல்லது கொடுப்பது.

குதிரைக்கும்,நாய்க்கும் இந்த இரண்டு பேச்சும் இப்பவும் தெரியும். இதை அதிகமாக உபயோக படுத்துவது குதிரை மட்டுமே என்பதால் பரிபாசை என்கிறார்கள்.

பரிபாசை கூறும் பழமொழி : ஆறு பொருள்,பதினெட்டு சந்தம் வைத்து பேசாதே!!!!
(இந்த பழமொழி இப்பவும் மதுரையில் பயன்படுகிறது சந்தம் என்பது சந்து என இப்போது கூறுகிறார்கள்)
இந்த கலையை புலவர்கள், சித்தர்கள் அதிகமாக பயன்படித்தினார்கள். தாம் சொல்ல வந்த கருத்தை மறைப்பாக கண்மூலமாகவோ அல்லது ஒலியலைகள் மூலமாகவோ கூறுவார்கள் இதை பக்குவபட்டவன் அடையாளம் கண்டுகொள்வான்.

அதனால் தான் குருசிசிய உறவு மிக முக்கியம் என்பார்கள். சீடனுக்கு அப்போது புரியவில்லை என்றாலும் குரு பார்வை தக்க சமயத்தில் ஞாபகத்தில் தோன்றி அர்த்தம் கிடைக்கும்.
இதை அறியாமல் சிலர் பரிபாசை என்பதை அகராதியில் தேடுவார்கள். சித்தர்கள் பரிபாசை புத்தகம், நிகண்டு புத்தகம் என்பதெல்லாம் மருத்துவம், மூலிகை,ஜோதிடம் பற்றி அறியவே.

பிரம்ம வித்தைகள் மற்றும் சில யோக சாதனைகள் அனைத்தும் பரிபாசை (குதிரைபேச்சு கண்) மூலமே கொடுக்கபடுகிறது.

இரண்டாவது பரிபாசை ஒலியலைகள், குறிப்பிட்ட சப்தம் மூலம் சில வார்த்தைகள் மாணவன் சொல்லும்போது அது அவன் உடம்பில் அதிர்வுகளாக இருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இது எப்படி என்றால் நன்றாக நினைவில் கொள்ளவும் மனித தேகம் 72 சதவீதம் நீரால் ஆனது.நீருக்கு சப்தத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. (ஆதாரம்: நீரை பற்றிய ஆய்வுகளில் இங்கிலாந்து கூறியுள்ளது)

அப்படியானல் இப்போது புரியும் மந்திர எழுத்து ஒலியை இந்த உடல் எப்படி வாங்குகிறது என்று, இந்த ஒலி அலைகள் மூலம் என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைக்க அந்த வரியை உருவாக்குவார்கள்.

அப்படியானால் இந்த கந்தசட்டி வரிகள், என்ன பரிபாசை வகை என புரியும்.

செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

தொடரும்.......

         - shiva shangar

1 comment:

  1. செககண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென
    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

    இதன் விளக்கத்தை கூறமுடியுமா இது என்ன வகை அதிர்வுகளையும் எந்த பலனையும் ஏற்படுத்துகிறது

    ReplyDelete