Thursday 30 August 2018

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-9)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-9)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

தமிழும் -சிவனும்

இவர் ஒரு மனிதராக வந்து கடவுளாக மாறியவர் என்று கூறுகிறார்கள். (இதற்க்கு சரியான சான்று இல்லை).

இந்த உலகில் இருவரின் பிறப்பு பற்றிய தகவல்கள் இதுவரை யாருக்கும் சரியாக கிடைக்கவில்லை என்றால், அது இரண்டு நபர்களுக்கு தான் என வரலாறு கூறுகிறது.

அதாவது, ஒன்று சிவபெருமான் மற்றொன்று தமிழ் மொழி இந்த இருவரின் பிறப்பும், காலமும் இதுவரை சரியாக யாராலும் கணிக்க முடியவில்லை.

சிவனால் உருவாக்கபட்டது தான் தமிழ் மொழி. அதனால் தமிழின் காலத்தை ஆய்வு செய்தால் சிவனின் காலமும் அகப்படும் என, தமிழின் காலம் தேடுகின்றனர்.

 அதுவும் சரியான ஆண்டு கிடைத்தபாடு இல்லை.

இரண்டும் சரியான தகவல் கிடைக்காத புதிராகத்தான் உள்ளது.

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் “சிவன் என்பவர் வடநாட்டை சேர்ந்தவர் என்கிறார்கள் இது உண்மையா?”. இது மிகவும் தவறான கேள்வி.

சிவன் என்பவர் இந்த வடநாடு என்பதற்கு முன்னே தென்னாடு என்ற ஒன்று பெரிய நிலபரப்பை கொண்ட பாண்டிய நாட்டில்(குமரிகண்டம்) இருந்தார் என ஆய்வுகூறுகிறது.

இவர் மலையில் இருப்பதை அதிகம் விரும்புவர் என்பதால் இவர் இருந்த இடம் மேருமலை என்கிறார்கள்.இது தென்மதுரைக்கு அருகில் இருந்த மலையாகும். ஆக குறிப்பு படி பார்த்தால் இவர் குமரிகண்டத்தில் கிமு 15000 ஆண்டில் அங்கு இருந்தார் எனவும், கிமு.7000 வாக்கில் தமிழ் சங்கத்தில் இருந்தார் எனவும் உள்ளது.

வட மாநிலத்தவர் தற்காலத்தில் எழுதிய மெலுகாவின் அமரர்கள் புத்தகம் கூறும் சிவன் வரலாறு
சிந்து சமவெளியை அடிப்படையாக கொண்டது.

அவர் சிவனின் பிறப்பு பற்றி கூறவில்லை.
முதலில் அவர் புத்தகம் ஆரம்பிக்கும் இடம் மானசரோவர் என்ற இடத்தில் இருந்து தான்
அவர் குறிப்புகளின் அடிப்படையில் அந்த புத்தகம் எழுதினாலும் அவர் ஆரம்பிக்கும் காலம் முதல் பக்கத்தில் கொடுத்து இருப்பார். அதாவது அவர் சுட்டும் காலம் கிமு 1900 ஆம் ஆண்டு. இந்த காலத்தில் இருந்து தான் அவர் தொடங்குவார் .

நாம் இந்த காலத்தின் அடிப்படை படி கண்டால் கிமு 4500 வாக்கில் தென்மதுரை மூழ்கியது. இமயத்தின் உயரம் சற்று மேல் எழும்பியது.
சிவபெருமான் தென்மதுரையில் இருந்து புலம்பெயர்ந்தாலும். 2600 ஆண்டுகள் தென்னாட்டில்(கபாடபுரம்,மதுரை) இருந்து தான் பின் சென்றார் என தெளிவாக தெரியும்.

ஆக இது போன்ற நூல்களை வைத்து முடிவு செய்வது தவறு என அறியவும்.

சிவ பெருமான், களவியல் என்ற இலக்கண நூலை தமிழ் சங்கத்தில் வெளியிட்டார் எனவும், இதற்கு இறையனார் அகப்பொருள் என நூலின் பெயர் உள்ளதாகவும், இதற்கு உரை செய்த நக்கீரனார் கூறுகிறார்.

தமிழ் மொழி தன் இருப்பு குறைந்து பல இடங்களில் பேசபட்டதால் அதை கொடுந்தமிழ் என ஆன்றோர்கள் அழைத்தனர்.

 தமிழிருந்து உருவக்கபட்ட்து தான் வடமொழி என அறியவும். அதற்கும் ஒரு வரையறை அளித்தவர் சிவன்(பாணினி முனிவருக்கு அளித்தார்) என்பதால் அவர் வடநாட்டை சேர்ந்தவர் என முடிவு கட்டிவிட்டனர்.

  ஆக சிவன் என்பவர், மாணிக்கவாசகர் சொல்வதுபோல் தென்னாடுடையவர் என்பது தெளிவாக தெரிகிறது அவருக்கும் தமிழுக்கும் தொடர்பு அதிகம் உள்ளது என புரிகிறது.

      இன்னும் 100 ஆண்டு சென்றால் இது மாதிரி பல புத்தகங்களை கொண்டு சிவன் வடநாட்டை சேர்ந்தவர் என முடிவு கட்டிவிடுவர்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

         -shiva shangar

1 comment:

  1. ஆன்மீகத்தில் மிக உயரிய நிலையை அடைந்து அற்புத ஆற்றல்களையும் மிகுந்த சக்தியையும் உடையவர்களே சிவன் என்ற பொதுப் பெயரால் குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். இவ்விதம் யோசித்தால் குமரி நாட்டில் இருந்ததாக கூறப்படுகின்ற தமிழை உருவாக்கியதாக கூறப்படுகின்ற விரிசடை கடவுளாகிய சிவனாரும் இமயமலையில் இருப்பதாக வழிபடப்படுகின்றன சிவனாரும் வேராக இருக்குமோ என்று தோன்றுகிறது.
    நம்முள் குடிகொண்டு இருக்கும் கடவுள் தன்மையையும் ஈசன் சிவன் நந்தி என்ற பொதுப் பெயரால் வழங்கப்படுகிறதோ என்றும் தோன்றுகிறது.
    ஞானியர்கள் அவர்களுடைய பாடல்களில் திருப்பதிகங்களில் யாரை குறிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. சிவன் சிவபெருமான் என்ற பொது பெயரை உடைய அதீத மனிதரயா (great yogi, super human), அல்லது உள்ளே குடிகொண்டு புறத்தே நீக்கமற நிறைந்திருக்கும் சிவம் என்ற தன்மையா என்று தெரியவில்லை.
    குழப்பமாகத்தான் உள்ளது

    ReplyDelete