Sunday 9 September 2018

சமீபத்தில் போகர்-7000 நூல் படித்து கொண்டிருந்த போது அதில் படித்த அற்புத விடயம்

சமீபத்தில் போகர்-7000 நூல் படித்து கொண்டிருந்த போது அதில் படித்த அற்புத விடயம்

போகர், திருமூலரைச் சமாதி நிலையில் கண்டபோது அவர் எப்படியிருந்தார் என்பதை வர்ணிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

திருமூலரின் உடலை ஒரு ஜொலிக்கும் ஒளிப்பிழம்பாக கண்ணுற்றதாகவும், அவர் எழுந்து நின்ற சமாதியைச் சுற்றி ஒளிவட்டம் வீசியதாகவும், அவரின் உடலிலிருந்து பல அபூர்வ மலர்களின் நறுமணங்கள் வீசியதாகவும் பரவசமாகக் குறிப்பிடுகிறார்.

போகர் 7000 நூலில் இன்னும் பல ஆச்சர்யமான, அமானுஷ்யமான தகவல்களையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஜெருசலத்திற்கு தன்னுடைய புகை ரதத்தில் (Rail) சென்றதாகவும், இயேசு கிறிஸ்துவின் சீடர்களைக் கண்டதாகவும், அங்கிருந்து ரோமாபுரிக்குச் சென்று இயேசுநாதரின் சீடர்களின் சமாதிகளைக்கண்டதாகவும் கூறியுள்ளார் (மூன்றாவது காண்டம் செய்யுள்: 215)

இம்மானுவேல் என்ற பெயரைக் குறிப்பிட்டு, இயேசுவின் சமாதியில் தான் தியானம் செய்ததையும் குறிப்பிடுகிறார் (செய்யுள் 216)

அங்கிருந்து புறப்பட்டு மெக்கா சென்றடைந்ததாகவும், முகமது நபியின் சீடர்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார் (செய்யுள் 228-230)

அங்கு யாகோபு சித்தரைக் கண்டதாகவும், அவர் தன்னிடம் தீட்சை பெற விரும்பியதாகவும் குறிப்பிடுகிறார்.

போகர் குறிப்பிடும் இந்த நிகழ்ச்சிகளை அறிவியல் சார்பாளர்கள் கற்பனைக் கதை எனக் குறிப்பிடலாம். ஆனால், அவர் கூறிய இந்த அபூர்வமான தகவல்கள் எல்லாம், அவர் சமாதி நிலையில் இருந்தபோது, மெய்யுணர்வின் உச்சநிலையில் அகக் கண்ணில் கண்ட காட்சிகள்!

போகரின் க்ரியா யோகத்தினால் இறந்தவரை பிழைக்க வைக்க முடியும் என்று கூறுகின்றனர். மனதின் மீதும் மரணத்தின் மீதும் நுண்ணிய ஆதிக்கம் செலுத்தி உயிர்த்தெழும் அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்பது க்ரியா யோகத்தின் மகா ஆற்றல் எனச் சொல்லப்படுகிறது.

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த மூன்றாம் நாளில்உயிர்த்தெழுந்ததே அவர் பயின்ற க்ரியா யோகத்தின் அற்புதம் என்றும் சில யோகிகளால் கூறப்படுகிறது.

    - சித்தர்களின் குரல் 

No comments:

Post a Comment