Thursday 27 September 2018

பஞ்ச பட்சி சாஸ்திரம் வெற்றி தோல்வி தரும் காலங்கள்

பஞ்ச பட்சி சாஸ்திரம் வெற்றி தோல்வி தரும் காலங்கள்
------------------------------------------------------
தன் பட்சிக்கு படுபட்சி நாளாக இல்லாமலும், தன் பட்சி அதிகார பட்சியாக மட்டுமே இருக்கும் பகல் அல்லது இரவுப்பொழுதில் தன் பட்சி ஊண் அல்லது அரசு தொழில் செய்யும் நேரத்தில் எந்தவித முயற்சியில் ஈடுபட்டாலும் நூறு சதவிகித வெற்றி நிச்சயம்.
தன் பட்சிக்கு படுபட்சி நாளாக இல்லாமலும்,தன் பட்சி அதிகார பட்சியாகவும் இல்லாத பகல்,இரவுப்பொழுதுகளில் தன் பட்சி ஊண் அல்லது அரசு தொழில் செய்யும் நேரத்தில் எந்தவித முயற்சியில் ஈடுபட்டாலும் எழுபத்தைந்து சதவிகித வெற்றி நிச்சயம்.
தன் பட்சிக்கு படுபட்சி நாளாகவும்,அதிகார பட்சி பொழுதாகவும் இருக்கும் இரவு நேரத்தில் தன் பட்சி ஊண் அல்லது அரசு தொழில் செய்யும் நேரத்தில் எந்தவித முயற்சியில் ஈடுபட்டாலும் வெற்றி தோல்வி வாய்ப்புகள் சரிசமமாக இருக்கும்.
தன் பட்சிக்கு படுபட்சி நாளாகவும், தன் பட்சி அதிகார பட்சியாகவும் இல்லாத பகல்,இரவுப்பொழுதுகளில் தன் பட்சி ஊண் அல்லது அரசு தொழில் செய்யும் நேரத்தில் எந்தவித முயற்சியில் ஈடுபட்டாலும் இருபத்தைந்து சதவிகித வெற்றி வாய்ப்பு உண்டு.
தன் பட்சி அதிகார பட்சியாக இல்லாமலும்,தன் பட்சி படு பட்சியாகவும் உள்ள நாளில் தன் பட்சி நடை,துயில்,சாவு தொழில் புரியும் நேரம் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் படுதோல்வி ஏற்படும்.
தன் பட்சி வலுவாகவும்,எதிராளியின் பட்சி வலுக்குன்றியும் இருக்கும் நேரம் பார்த்து செயலாற்றினால் எதிரிகளை எளிதில் வீழ்த்தலாம்.
தன் பட்சி வலுக்குன்றியும்,எதிராளியின் பட்சி வலுவாகவும் இருக்கும் நேரங்களில் எதிராளியை நேரில் சந்திப்பதையோ,போட்டிகளில் ஈடுபடுவதையோ தவிர்க்கவேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால்,அந்த குறிப்பிட்ட நேரத்தில் அரசு,ஊண் தொழில் செய்யும் பட்சியின் திசையில் தான் அமர்ந்துகொண்டு,எதிராளியை,துயில் சாவு தொழில் புரியும் பட்சியின் திசையில் அமரச்செய்து விவகாரம் செய்தால் வெற்றி பெறலாம்.

2 comments:

  1. திசை என்பது நாம் நோக்கும் திசையா அல்லது நம்மை நோக்கும் திசையா? உதாரணமாக காகம் திசை மேற்கானால் அந்த திசையை பார்த்து அமர வேண்டுமா?

    ReplyDelete
  2. ஐயா நமக்கும் நமது எதிராக இருப்பவருக்கும் ஒரே பட்சியாக இருந்தால் எப்படி செயல்படுத்துவது

    ReplyDelete