Monday, 10 September 2018

கம்போடியாவின் வரலாறு .

கம்போடியாவின் வரலாறு .
நன்றி அண்ணாமலை சுகுமாரன்
# கவின் மிகுகம்போடியா#



சென்றத்தொடருக்குத்தொடர்ச்சியாகஇன்னமும்சிலதகவல்களைச்
சொல்லவேண்டி இருக்கிறது .
பலரும் பள்ளிப்படை கோயிலும் தேவராஜ முறைக்கோயிலும் ஒன்று என எண்ணி கேள்விகள் எழுப்பியிருந்தார் .ஆனால் அவைகள் வேறுவேறு விதமானவை ஆகும்
பதண்டய தமிழர் மரபில் ,
சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்,
தாழ்வையின் அடைப்போர் தாழியிற் கவிழ்ப்போர்".
- என்று இருந்ததாக மணிமேகலைகூறுகிறது .
மாண்டுவிட்ட மாந்தரின் இறுதி சடங்குகளில் ஒன்றாகிய "தாழ்வையின் அடைத்தல் " என்ற சமாதி கட்டி அடக்கம் செய்யும் முறை பண்டைய தமிழநிலத்தில் நிலவி வந்திருக்கிறது .
இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு. எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.
அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் சடலத்தை இடுவர். பெரிய அளவில் கட்டிடம் கட்டி இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.என்றுக்கூட ஒரு செய்தியை இணையத்தில் கண்டேன் .
இவ்வாறுதான் வரலாற்றில் தமிழ் அரசகுல மக்கள் இறப்பின் அதைப்புத்தைக்கும் இடம் தமிழ் நாட்டில் பள்ளிப்படை எனப்பட்டது .அதிலும் லிங்கம்நிறுவப்பட்டது
ஆனால் தேவராஜ முறை என்பது மன்னன் வாழும் போதே எகிப்தில் , அந்த மன்னர்கள் தங்களுக்கு என்று பெரிய சமாதியை பிரமிட் என்றபெயரில் பிரம்மாண்டமாக காட்டியது போல் இல்லாமல் ,
தமிழக மன்னர்கள் வாழும் போதே தங்கள் பெயரால் ஒரு பெரியக்கோயில் எழுப்புவதும் , அந்த கோயிலில் இருக்கும் மூலவருக்கு , லிங்கத்திற்கு
தனது பெயரை இடுவதும் அதற்க்கு என தனிப்பட்ட அரசகுரு பதவியும் இருப்பது வழக்கமாக இருந்திருக்கிறது .
இதற்குச் சான்றாக ,தமிழ் நாட்டில் ,
இராஜராஜன் தனது பெயரில் ஒரு பெரியக்கோயில் தஞ்சையில்
ராஜராஜேஸ்வரம் என்றதனது பெயரில் எழுப்பி பெரிய ஒரு சிவலிங்கத்தை அதில் நிறுவினார் . அவரது பெயரையும் அவரது மறைவுக்குப்பின் நிலவும் பெயராக சிவபாத சேகரன் என்று மாற்றிக்கொண்டார் .
ராஜராஜ சோழனின்அரச குருவாக சர்வசிவ பண்டிதர் என்பவர் தான் இருந்துவந்தது மிக தெளிவாக பெரிய கோவில் கல்வெட்டில் உள்ளது
இராஜ ராஜனும் முடிசூட்டிக்கொள்வதற்கு முன் சிலகாலம் (16 ஆண்டுகள் ) உத்தம சோழனுக்கு பதவியை விட்டுக்கொடுத்து சுற்றித்திரிந்து உண்டு எங்கு சுற்றித்திரிந்தார் என்பதற்குசரியான சான்றுகள் இல்லை . தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப்போயிந்திருக்கலாம் ,
அனால் அவர் முடிசூட்டிக்கொண்டது முதல் இந்த தேவராஜவழிபாட்டு முறை தமிழ்நாட்டிலும் இருந்து வந்தது தெரிகிறது .
அவரது மகனான ராஜேந்திரரும் அவருக்கு என்று தனியாக கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் தனது புதிய தலை நகரமான கங்கைகொண்ட சோழபுரம் அமைத்தார் அதில் கோயிலில் பெரியசிவலிங்கமும் அமைத்தார் .அவரது மறைவுக்குபின் ஆன பெயராக
சிவ சரண சேகரன் என்று அமைத்துக்கொண்டார் .
இவரது அரச குருவாகவும் சர்வசிவ பண்டிதர்தான் இருந்துள்ளார் .ஆனால் அந்த சர்வசிவ பண்டிதர் எங்கிருந்து வந்தார் என்பதற்கு எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை
அவருக்குப்பின் இரண்டாம் இராஜராஜன் தாராசுரத்தில் கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும் முதலில் இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது
இவ்வாறு தொடரப்பட்ட சோழர் மரபின் தேவராஜ நெறி வேங்கியை இருந்து குலோத்துங்கன் வந்து சோழ மரபில் முடி சூட்டிக்கொண்டதும் நெறி மாறிவிட்டது சிதம்பரத்து அந்தணர்களின் ஆளுமை அதிகம் .ஆனது மரபுகளும் மாறிவிட்டது .
ஆனால் ஆனால் கம்போடியாவில் இந்த தேவராஜ வழிபாட்டு நெறி தொடர்ந்திருப்பதற்கு தொடர்ச்சியான ஆதாரங்கள் கிடைத்துள்ளது
802-850: ஜெயவர்மன் II (பரமேஸ்வரன்)
854-877: ஜெயவர்மன் III (விஷ்ணுலோகன்)
877-889: இந்திரவர்மன் II (ஈஸ்வரலோகன்)
889-910: யசோவர்மன் I (பரமசிவலோகன்)
910-923: ஹஷவர்மன் I (ருத்ரலோகன்)
923-928: ஈசானவர்மன் II (பரமருத்ரலோகன்)
928-941: ஜெயவர்மன் IV (பரமசிவபாதன்)
941-944: ஹர்ஷவர்மன் II (விராமலோகன் அல்லது பிரம்மலோகன்)
944-968: ராஜேந்திரவர்மன் (சிவலோகன்)
968-1001: ஜெயவர்மன் V (பரமசிவலோகன்)
இதில் ஜெயவர்மன் II தனது மறைவுப்பின் ஆன பெயரை பரமேஸ்வரன்
என்று மாற்றிக்கொண்டதையும் , வரிசையாக பிரமன்னர்கள் பெயர் மாற்றத்தையும் காண முடிகிறது .
காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டிய இராஜசிம்மனுக்கு நிறைய பட்டப்பெயர்கள் இருந்திருந்தது .பட்டப்பெயர் அதிகம் கொண்ட மன்னனாக கினார் இருப்பார் என்று நினைக்கிறேன் .
அவரே தேவராஜமுறை கோயிலை முதலில் கட்டியவராக இருக்கலாம் .
அவரது காலம் கிபி 685-705 ஆகும் .எனவே அத்தகைய தேவராஜமுறைப்படி தன பெயரால் கோயில் காட்டும் முறை இங்கேயே முதலில் இருந்திருக்கலாம் .நிறைய ஆய்வுகள் தேவை .
சித்தர்களின் உயிர்நிலைக்கோயில் என்பது வேறுவகை .அதுவே
ஜீவ சமாதிகள் என்று இன்று அழைக்கப்படுகிறேன் .அதுகுறித்து எழுத நிறைய செய்திகள் உள்ளது அவைகளைத்தனியேக்காணலாம் .
இந்த தேவராஜ வழிப்பாட்டுமுறைப்பற்றி உலக த் தமிழ் ஆராய்ச்சிச்சி நிறுவனத்தின் வெளியீடான தஜன்கிழக்காசியா நாடுகளில் தமிழர்ப் பண்பாடு என்னும் நூலில் கிடைத்த ஒரு சிருக்குறிப்பைக்கொண்டு
விரிவு செய்தது .

கவின்மிகு கம்போடியா - #
வரலாற்றின் முதல் வியட்நாமிய மன்னன் ஒரு தமிழ் மன்னன் !
புரட்சி செய்து நாட்டைப்பிடித்தப்பாண்டியன் !
இவையெல்லாம் குறிப்பிடும் மன்னன் ஒரு தமிழ் பாண்டியன் மன்னன்
ஸ்ரீ மாறன்என்றால் நம்ப இயலுமா ? ஆனால் ஆதாரங்கள் தருவது சீன வரலாறும் , பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளர்களும் என்றால் நம்பித்தானே ஆகவேண்டும் .இனி விரியாக அந்த புரட்சிப்பாண்டியனைப்பற்றி ப பார்ப்போம் .

சம்பா எனப்படும் இன்றைய வியட்நாமில் ஸ்ரீமாறனின் இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இது திருமாறன் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பாண்டிய மன்னனே என்று அறியப்படுகிறது
அந்தப்பகுதியில் புனான்வம்சம் என்ற பெயரில் ஒரு சிறப்பான ஆட்சி இரண்டாம் நூற்றாண்டு முதல் இருந்ததை சீன இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது.
மேலும் புனான் என்பதற்கு இது வரை சரியானப்பொருள் தெரியவில்லை.பனவன் என்ற பாண்டியனின் பட்டமோ அல்லது புனல் நாடு என்பதன் திரிபாகவோ இது
இருக்கலாம். பிற்காலத்தில் அந்த இடத்தை தண்ணீர் நாடு என்றே அவர்கள் மொழியிலும் அழைத்தனர். மேலும் இந்திர விழாவுக்கு இணையான நீர் விழாவும் பெரிய அளவில் எடுத்தனர். தமிழ் புத்தாண்டான சித்திரையையே அவர்களும் புத்தண்டாகக் கொண்டாடுகின்றனர்
தென்கிழக்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போன்றே, தாய்லாந்திலும் 1ம் நூற்றாண்டின் அப்போதைய புனான் வம்ச ஆட்சி தொடக்கம் கிபி 13ம் நூற்றாண்டின் கெமர் பேரரசு வரையில் தமிழகத்தின் கலாசாரம் மற்றும் மத வாரியான தாக்கம் பெருமளவு இருந்து வந்துள்ளது
1939 சூன் 23 வரை தாய்லாந்தின் அதிகாரபூர்வ பெயர் சயாம் ஆகும். பின்னர் இது தாய்லாந்து எனப்பட்டது. மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என
அழைக்கப்பட்டு, மீண்டும் தாய்லாந்துக்கு மாற்றப்பட்டது.
சுமார் 1300ஆண்டுகளுக்கு முன்னர்ஒரு பாண்டிய மன்னன்
வியட்நாம்நாட்டை ஆண்டிருக்கிறான் ! அவன்தான்வியட்னாமிய வரலாறு அறிந்தமுதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர்ஸ்ரீமாறன் . தமிழில்இதை திருமாறன்என்று சொல்லலாம்.
வியட்னாமில்கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பழைய சமஸ்கிருதகல்வெட்டு,
இவனை ஸ்ரீமாறன்என்று குறிப்பிடுகிறது .
இந்தக் கல்வெட்டில் ஆட்சி,ஆண்டு முதலிய விவரங்கள்
கிடைக்கவில்லை .கல்வெட்டின்பெரும்பகுதி அழிந்துவிட்டது .
ஆனால் எழுத்து அமைப்பின்அடிப்படையில் இது கி. பி .
இரண்டாம்நூற்றாண்டைச்சேர்ந்ததாகபிரெஞ்சுவரலாற்று அறிஞர்கள்
கருதுகின்றனர் .
வியட்னாமில் வோ -சான்என்னும் இடத்தில்ஒரு பாறையின்
இரண்டு பக்கங்களில் ( VO–CHANH ROCK INSCRIPTION)
இது செதுக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமாறன் என்ற அரசனின்குடும்பம் செய்தநன்கொடையை ( தானத்தை)
கல்வெட்டு குறிப்பிடுகிறது.பாறையின் ஒரு பக்கத்தில் 15
வரிகளும் மறு பக்கத்தில்ஏழு வரிகளும் உள்ளன .
ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன.
சமஸ்கிருத பாட்டுப்பகுதி பாடல் வடிவிலும் ஏனையவரிகள் உரைநடையிலும்உள்ளன .
கிடைத்தவரிகளிலும் கூட சிலசொற்கள் அழிந்துவிட்டன.
கல்வெட்டின் சில வரிகள் :-
. . . . . ... ப்ரஜானாம்
கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . .. . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . .
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . .
வ . .. .. . . . . ..
ஸ்ரீ மாற லோ. . . ..
ன . . . .. .. .குலதந்தனேன
க்ராபதிம்
ஸ்வகன . . .. ..ச . . . . . . . . . .. ..
இந்தக் கல்வெட்டில் ,தனக்குச் சொந்தமானவெள்ளி , தங்கம் , தானியக்குவியல் மற்றுமுள்ளஅசையும் ,அசையா சொத்து வகைகள்அனைத்தையும்தமக்கு நெருங்கியமக்களுக்கு பொதுவுடமையாக்குவதாகமன்னன் அறிவிக்கிறான்.
எதிர்கால மன்னர்கள்இதை மதித்து நடக்கவேண்டும் என்றும்ஆணை பிறப்பிக்கிறான்.
இது வீரனுக்கு தெரியட்டும் . . .. . . .. . . ..
.. . .என்று பாதியில்முடுகிறது கல்வெட்டு.இதில் முக்கியமான சொற்கள்
“ ஸ்ரீமாற ராஜகுல ”
என்பதாகும் . இந்ததிருமாறனைக்குறித்து மிகவும்
குறைவானதகவலே கிடைத்துள்ளது .
ஆனால் வியட்னாம்,லாவோஸ் ,கம்போடியா ஆகிய
நாடுகளில் 1300ஆண்டுகளுக்கு நிலவியதமிழ் சாம்ராஜ்யத்தின் முதல்
மன்னன் இவன்என்பதை சீனர்களின்வரலாறும் உறுதி
செய்கிகிறது .திருமாறனை சீனவரலாற்று ஆசிரியர்கள் கியு லியன் (KIU LIEN ) என்றும் இவன் ஹான்வம்சம் (HAN DYNASTY ) சீனாவை
ஆண்டபொழுது அவர்களின்கட்டுபாட்டில் இருந்த ‘ சம்பா’தேசத்தில்புரட்சி செய்து ஆட்சியைக்கைபற்றியதாகவும்எழுதிவைத்துள்ளனர் .
சம்பா (CHAMPA )என்பது தற்போதையவியட்னாமின்ஒரு பகுதியாகும் . மன்னனின்குடும்பப் பெயர் கியு (KIU )என்றும் மன்னனின் பெயர்
லியன் ( LIEN) என்றும்எழுதிவைத்துள்ளனர் .
இவன்காங்ட்சாவோவின் (KONGTSAO ) புதல்வன் என்றும்தெரிகிறது .
தென்கிழக்கு ஆசியா முழுதும்முதல்முதலாகதொல்பொருள்
ஆராயச்சி நடத்தியபிரெஞ்சுக்காரர்கள்ஸ்ரீமாறனும் ,கியு லியானும் ஒருவர்தான்என்று உறுதிசெய்துள்ளனர்.
கி. பி . 137 ல்சீனர்களை எதிர்த்துக் கலகம்துவங்கியது . ஆனால்
கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன்ஆட்சி ஏற்பட்டது .
ஸ்ரீ மாறனுக்குப் பின்னர்ஆண்ட மன்னர்களில்பெயர்கள் எல்லாம்சீனமொழி வாயிலாக உருமாறி கிடைப்பதால்அவர்களின் உண்மையானபெயர்கள் தெரியவில்லை.எல்லா மன்னர்களின்பெயர்களும் பான் (FAN)என்று
முடிவதால்இதை வர்மன் என்று முடிவுசெய்துள்ளனர்
.ஏனெனில்இடையிடையேயும் ஆறாம்
நூற்றாண்டுகளுக்குப்பின்னரும் மன்னர்களின்பெயர்களுக்குப் பின்னால்‘ வர்மன் ’ என்ற பெயர்தெளிவாக உள்ளது .
இதில்வியப்பு என்னவென்றால்தமிழ்நாட்டில் கிடைத்தசெப்புப் பட்டயங்களிலும்
பாண்டியன் வம்சாவளியில்ஸ்ரீமாறன் , வர்மன் என்றஇரண்டு பெயர்களும்கிடைக்கின்றன .
இந்தோனேசியாவுக்குச்சொந்தமானபோர்னியோ தீவின்
அடர்ந்தகாட்டிற்குள் மூலவர்மன்என்ற மன்னனின்சமஸ்கிருதக்
கல்வெட்டு கிடைத்துள்ளது.
தமிழ் இலக்கியங்களில் இடை சங்கத்தின் கடைசி மன்னனாக திருமாறன் குறிப்பிடப்படுகிறான் .அப்போது வந்த கடற்ககோளின் அழிவினால்
தற்போதைய மதுரைக்கு அரசை மாற்றியதாகக்கூறப்படுகிறது .
அந்த சமயத்தில் இந்த சம்பா நட்டு ஆளுமை ஏற்பட்டிருக்கலாம் .
வேறு இரண்டு ஸ்ரீமாறன்களின் குறிப்பும் கிடைக்கிறது .இதில் யார் வியட்நாமை ஆண்ட முதல் மன்னன் என்ற ஆய்வு தேவை .
வியட்நாமின் அடுத்த ஒரு மன்னனாக பத்திரவர்மன் அறியப்படுகிறார் .அவரது காலம் கி பி 349-361CE.அவரது தலை நகரம் சிம்ம புரம் ஆகும் .அது இப்போது
Tra Kieu டிரா குயூ என்று அழைக்கப்படுகிறது .அவர் அங்கேபல கோயில்களை எழுப்பியதாக கூறப்படுகிறது .அவர் சிறப்பாக சம்பாவை ஆண்டுவிட்டு தனது கங்கைக்கரையில் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது
சாவகம் (ஜாவா Java) என்பது தற்போது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும்
கி.பி.114ல் ஜாவாவை ஆபுத்திரன் என்ற அரசன் ஆண்டதாய் சிலப்பதிகாரம் கூறுகிறது. ஜாவாவை “ஆபுத்திரநாடு” என அழைக்கப்பட்டது. மனிமேகலை ஜாவா நாட்டிற்கு சென்ற சமயம் அங்கு தமிழ் மொழிப்பேசப்பட்டது என கூறப்படுகிறது.
. சாவகம் ஒரு காலத்தில் தமிழாட்சிக்குட்பட்டிருந்தமைக்கு சான்றாக இன்றும்
சிலபட்டிணங்கள்பாண்டியன்,மதியன்,புகார்,பாண்டிவாசம், மலையன்கோ,கந்தழி செம்பூட்செய்,மீனன் காப்பு என்று தமிழ்ப்பெயர்களில் வழங்கி வருகிறது.
இனி ஆங்கில விக்கி கூறும் செய்திகளைப்பார்க்கலாம் :
Sri Mara (Tamil: திருமாறன், Thai: ศรีมาระ fl. 137 or 192 AD) was the founder of the
Tamil kingdom of Champa.[1][2]:43 He is known in Chinese records as Oū Lián
(區連), or Zhulian, which in Vietnamese pronunciation is Khu Liên (also 區連).
Attempts have also been made to identify Sri Mara with Fan Shih-man of Funan (circa
230 CE).[3][4][5] on a stele recorded as Sri Mara (Chinese 释利摩罗).[6]
He was born in Tượng Lâm (Vietnamese pronunciation of Chinese 象林, in what is
today Quảng Nam Province of Vietnam) an area of tension between the Han Dynasty
and the natives of Lâm Ấp (Vietnamese pronunciation of Chinese Lin Yi 林邑, the
precursor to Champa). In 137 or 192 AD,[7] he defeated the Chinese prefect and
declared himself king of Lin-yi.[8]:323 This is considered the official founding
of Champa, though Cham legend dates the ounding to be much earlier.[9]
In 248, he led the Cham in looting and razing Jiaozhi and Cu'u-cho'n. The Cham
then defeated the fleet sent to repulse them, at Bay of the Battle.
நான் முதலில்இந்த செய்திகளை திரு லண்டன் ஸ்வாமிநாத்தானின் ப்ளாகில சில ஆண்டுகளுக்கு முன் படித்தேன் பிறகு இணையத்தில் ஆங்கில மூலங்களின் சில செய்தியைக்கண்டேன் .அவைகளையும் மேலேக் கொடுத்துள்ளேன் .அவர்களுக்கு நன்றி .
ஆய்வாளர்களுக்காக ஆங்கில மூலத்தையும் கொடுத்துள்ளேன் .
அடுத்தப்பதிவில் தெகிழக்காசியாவில் வழிபாடு , அகத்தியர் வழிபாடுப பற்றிக்காணலாம் .

விருந்தில் எகிப்தியரின் மிக சிறந்த தனிப்பட்ட , சிறப்பு விருந்துகளில் மட்டும் தயார் செய்யும் ஒரு சிறப்பு பண்டம் எது தெரியுமா?
நாம் பிள்ளையாருக்குப் படைத்து வழிபடும் பூரண கொளுக்கட்டை என்கிறார் சவுதியில் பணியாற்றிய அண்ணாமலை சுகுமாரன் அவர்கள். 

# கவின்மிகு கம்போடியா -- #
இந்தப்பகுதியில் நான்அந்த நூலுக்கு எழுதிய முன்னுரையில் ஒரு பகுதியை
நண்பர்களின் வாசிப்புக்கு அளிக்கிறேன்
----------------------------------------------------------------------------------------------------------------------------
தென்கிழக்காசியா நாடுகள் பற்றியும் கம்போடியாவைப்பற்றிய ஈர்ப்பு எனக்கு உருவாகி ஒரு நாற்பது ஆண்டுகள் இருக்கும் ! அது .எப்படி ? என்று வியப்பபாக இருக்கிறதா ? அந்தநிகழ்வையே முன்னுரையாக கொண்டு துவங்கலாம்
1969 இல் இருந்துபத்து ஆண்டுகள் தமிழ் நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து வந்த நான் எனக்கு இருந்த குடும்பப்பொறுப்களை நிறைவேற்ற அப்போது நியாயமான வழியில் கிடைத்த ஊதியம் நிறைவாக இராது, அதைக்கொண்டு எனது பொறுப்புகளை நிறைவேற்றமுடியாது என்று வெளிநாடு சென்று பொருள் ஈட்டத தீர்மானித்தேன் .அப்போதெல்லாம் இந்த ஐ டி புரட்சி வரவில்லை . அரேபிய நாடுகள் தான் இந்தியருக்கு வேலை தரும் நாடுகளில் அப்போது முதல்;இடம் வகித்தது .
எனக்கும் சவூதி அரேபியாவில் மின் துறையில் வேலை கிடைத்தது .
நானும் 1979 இல் அங்கு சென்றேன்
அங்கெல்லாம் இந்தியாவைப்போலவோ அல்லது மற்ற நாடுகளைப்போல் , ஓரிடத்தில் மின் உற்பத்தி செய்து அதை நீண்ட தூரம் சென்று வினயோகிக்கும் முறை இல்லை . ஏனெனில் சவூதி அரேபியா ஒரு பெரிய பாலை நிலம் என்பது அனைவருக்கும் தெரியும் . இடை இடையே இருக்கும் பாலைவன சோலைகள் தான் இப்போது ஊர்களாக மாறி .இருக்கின்றன இவைகளுக்கு இடையே தூரம் மிக அதிகம் . அதனால் மின் விநியோகம் ஒரே இடத்தில உற்பத்தி செய்து விநியோகிப்பது சாத்தியமில்லாதது .
எனவே ஒவ்வொரு பாலை வன சோலையிலும் ஒரு சிறிய மின் உற்பத்தி நிலையம் இருக்கும் .அதில் உற்பத்தி செய்யும் மின்சாரம் அந்த ஊருக்குமட்டுமே பயன் ஆகும் .
(இதற்கும் தென்கிழக்காசியாவிற்கும் என்ன சம்பத்தம் என பொறுமையிழக்காதீர்கள் இனிமேல்தான் வரப்போகிறது செய்திகள் )
எனவே ஒவ்வொரு ஊருக்கும் மின்னுற்பத்தி , விநியோகம் , பழுப்பார்த்தல் , மின் சேவைகள் அளித்தல் பராமரித்தல் என்று பலப்பணிகள் செய்ய ஒரு குழு உண்டு அதற்க்கு ஒரு பொறுப்பாளர் உண்டு .
நான் தான் அந்த ப்பொறுப்பாளர் ,பதவி வகித்தேன் எனது உதவியாளர்கள் பல நாட்டினரும் இருப்பார்கள் எகிப்து , சூடான் , தாய் லாந்து பிலிபைன்ஸ் என ஒரு கலவை இருக்கும் .தமிழ்நாடு நான் ஒருவன் மட்டுமே
எங்களது நுகர்வோர் சவூதி குடி மக்கள் அவர்களுக்கு அரபியைத்தவிர வேறு மொழி எதுவும் தெரியாது .அவர்களுக்கு நிறைவாக மின் வசதிசெய்துதரவேண்டும் .மனம் குளிர்ச்சி செய்யவேண்டும் .
தாய் லாந்து காரர்களுக்கு ஒரு வார்த்தைக்கூட ஆங்கிலம் தெரியாது .
எகிப்தியர்களும் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவார்கள் .
சூடான் கொஞ்சம் ஆங்கிலம் அறிவர்
பிலிபைன்ஸ் காரர்கள் மிகக் கொஞ்சம் ஆங்கிலம் அறிவர் .
இத சூழலில் நான் முதலில் கற்க முயன்றது அரபி தான் ஏனெனில் அது நுகர்வோரிடம் பேச அவசியமானது .அதையே அனைவருடனும் பேசும் மொழியாக பயன் படுத்த ஆரபித்தேன்
அப்போது எப்படியோ எகிப்தியர்களுடன் எனது நட்பு பெருகியது .அவர்கள் மிகவும் என்னை விரும்புவர் .எனக்கும் அவர்களுக்கும் எதோ தொடர்பு இருக்கிறது நீங்கள் சென்ற பிறவியில் எகிப்தில் பிறந்திருப்பீர்கள் என்றெல்லாம் கூறி உருகுவார்கள் .அத்தனை அன்பைப்பொழிவார்கள் .
ஒரு முறை ஒரு எகிப்தியருக்கு நான் ஒரு உதவி செய்துவிட்டேன் என்று எனக்கு நன்றிபாராட்டும் விதமாக ஒரு விருந்து அளிக்கப்போவதாக என்னிடம் கூறினார் .
அந்த விருந்தில் எகிப்தியரின் மிக சிறந்த தனிப்பட்ட , சிறப்பு விருந்துகளில் மட்டும் தயார் செய்யும் ஒரு சிறப்பு பண்டத்தை எனக்காக செய்தது அளிக்கப்போவதாக ஒருவாரமாகக்கூறி எனது ஆவலை அதிகமாக்கி வந்தார்
ஒருவாறு விருந்து தினமும் வந்தது .காலையில் இருந்து அந்த தின்பண்டத்தின்
பெருமைகள் மேலும் இயம்பப்பதுதொடர்ந்தது , எனது ஆவலும் கூடிக்கொண்டேபோனது .
அன்று பகலில் அவர் தயாரித்த அந்த விஷேச உணவுப்பண்டத்துடன் எனது அறைக்கு வந்தார் அந்த எகிப்திய நண்பர் . அவரது பெயர் முகமது பலோலி .
அவர் கொண்டுவந்த சிறப்பு தின்பண்டத்தைக்கண்டதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது .
அந்த அபூர்வ தின்பண்டம் வேறு ஒன்றும் இல்லை
நம்ம ஊரு கொழுக்கட்டைதான் ,
பூரணம் வைத்து விநாயகர் சதுர்த்திக்கு செய்வது . அதை அவரிடம் சொன்னதும் வியந்து போனார் . எப்படி உங்க நாட்டுப் பண்டம் எகிப்தில் சிறப்பு தின்பண்டமாக மாறியது என்று வியந்தார்
மேலும் அவர்களுடன் சில ஆண்டுகள் பேசி பழகி பேசும் போது இன்னமும் பல தமிழர்களின் தனி ப்பழக்கங்கள் எகிப்தியரிடம் நெடு நாட்களாக இருப்பதைக் கண்டேன் .
அவைகள் நம்ம ஊர் சிறுமிகள்விளையாட்டு போல சிறிய கல்லைத் த்தூக்கி போட்டு பிடிக்கும் விளையாட்டு (சொக்கட்டான்) அங்கும் வழக்கத்தில் இருப்பதையும் அதற்க்கு ஒருபாட்டு வேறுஉண்டு ., அடுத்து சிறுவர்கள் ஆடும் கிளித்தட்டு எனும் நொண்டியடித்து ஆடும் விளையாட்டு . பட்டம் விடுதல் , 
பல்லாங்குழி ஆட்டம் ஆகியவைகள் அங்கும் இருப்பது ஆகும் 
பலவித பலகாரங்கள் செய்தல் முதலிய பல பண்பாடுகள் கலந்திருந்தன 
பல தமிழர் பண்பாடுகள் எகிப்தியரிடம் அதிகம் கண்டேன் .இது நமது எகிப்தியத் தொடர்பை உறுதிசெய்தது அவர்கள் வேறு என்னையம் பூர்வ ஜென்ம எகிப்தியன் என்றே கூறி நம்பிஅன்பு செலுத்தி வந்தனர் .
இவ்வாறு சூடானியர்களிடமும் சில சிறப்பைக்கண்டேன் . அவர்கள் நமது நாட்டு வெண்டைக்காய்பிரியர்களாக இருந்தார்கள் . வேர்க்கடலையை விரும்பி தின்கின்றனர் . மேலும் உணவு உறவு வழக்கமும் தமிழரை இருந்தது .
குறிப்பாக நமது வடைகள் மாதிரி அவர்கள் சிலது செயகிறார்கள் . அவர்கள் செய்துக் கொடுத்த மசால் வடையை நான் ருசித்திருக்கிறேன்
அடுத்து நான் 1979 இல் சவூதி செல்லும் சமயத்தில் தான் கண்ணதாசன் தாய் லாந்தைப்பற்றி நிறைய எழுதிவந்தார் .அவர் திருப்பாவை தாய்லந்தில் அரசவைகளில் பாடப்படுவதைக்கூறியிருந்தார் அவைகளைப்படித்து விட்டுத்தான் அங்கப்போனேன் .அங்கு தாய் லாந்து நண்பர்கள் வேலைக்கு வந்ததும் எனக்கு ஆர்வம் பீறிட்டது கண்ணதாசன் எழுதியதும் நினைவில் இருந்தது அவர்களுக்கோ தாய் பாஸைத் தவிர வேறு மொழி எதுவும் தெரியாது .எனவே அரபியில் தமிழிலும் அவர்களிடம் பேச ஆரமித்தேன் .அவர்கள் எளிதில் வா ,போ போன்றதமிழ் வேர்ச் செல்களை பழகிக்கொண்டனர் .மேலும் பழகப்பழக அவர்களே அவர்கள் மொழியில் இருக்கும் ஒத்த சில தமிழ் வார்த்தைகளை , அவர்கள் மொழியில் இருந்ததை அவர்கள் எனக்கு சொன்னார்கள் .
ஆச்சிரியமாக அவர்களுக்கும் நமது கொழுக்கட்டையைத் தெரிந்திருக்கிறது .
பட்டம் விடுவது , பல்லாங்குழி ஆட்டம் தெரிந்திருந்தது 
மன்னரை இறையாக மதிப்பது போன்றவற்றைக்கண்டேன் .
அவர்களில் ஒரு எஸ்கேவிட்டார் ஓட்டுநர் ஆஜாபாகுவாக பீமசேனனைப்போல் 
இருப்பார் , அப்போதே அவைப் பார்த்து வியப்பதகுண்டு . இப்போது நான் கடாரத்தை வெற்றிகொண்டஇராஜேந்திரரின் தலைமை தளபதியின் பெயர் பீம சேனன் என்று அறியும் போது எனக்கு அந்த ஆஜானுபாவமான தாயலாந்து ஓட்டுநர் தான் நிலைக்கு வருகிறார் 
அப்போது அந்தகாலகட்டடத்தில் (1979 ) முனைவர் மனோகரன் என்பவர் எழுதிய தென்னமரிக்க சோழர்கள் என்ற ஆய்வு புத்தகத்தைப்படித்திருந்தேன் .
அவர் தென்னமரிக்கா வின் பெரு, மெக்ஸிகோ மாயன்கள் அவர்களில் தமிழ் தொடர்பு குறித்து விளக்கியிருந்தார் .பெருவையும் பெருவுடையாரையும் 
தொடர்புபடுத்தி எழுதியிருந்தார் .
எனக்கு மேற்க்கே எகிப்து ,தென்னமெரிக்கா , கிழக்கில் தெகெழக்காசியா கம்போடியாஎன இவ்வாறு கிழக்கிலும் மேற்கிலும் இருக்கும் தமிழ் கலாச் சாராத தொடர்புகளைக்கண்டபோது ,வியப்படைந்தேன் .
அதேப்போல் பிலிபைன்ஸ் காரர்கள் பல்வேறு மொழிகள் பலநாட்டுக்கலப்பு கொண்ட நாட்டினராக இருந்தாலும் அவர்களிடமும் தமிழர்கள் பண்பாட்டுத்தொடர்புகளைக்கண்டேன் 
அவர்களிடமும் கொழுக்கட்டை உண்டு 
பல்லாங்குழி ஆடத்தெரியும் .
இவ்வாறு நான் அங்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு நாட்டினருடன் சேர்ந்து வாழ்ந்ததால் அவர்கள் அனைவரின் பழக்க வழக்கம் , பண்பாடுகளை அறிய முடிந்தது .
அப்போதெல்லாம்1979 இணையம் என்பது குறித்து கனவு கூட வரவில்லை எனவே என்னுள் பதிந்த இவைகளை சொல்லபகிர்ந்து கொள்ள களம் அப்போது இல்லாது என்னுள் நினைவுகளை புதைத்து வைத்தேன்.

றாவது நூற்றாண்டில் சிறந்த தொழில் நுட்பத்தைக்கொண்டு எழுநூறு பேர்
பயணிக்கக்கூடிய கப்பல்கள் கட்டப்பட்டதாய் சரித்திரக் குறிப்புகள்
சொல்கின்றன. இப்படி கப்பலில் சரக்குகள் கொண்டு வந்து வியாபாரம் செய்த
தமிழர்கள் சரக்குகளை விற்று மாற்றுப் பொருட்கள் வாங்க அவகாசம்
தேவைப்பட்டதாலும் பருவக் காற்று திசை மாறும்வரையும் கடலோர
கிராமங்களில் தங்கி இருக்கவேண்டியிருந்ததது. தமிழர்கள் தற்காலிகக்
குடியிருப்புகள் இப்படிதான் ஆரம்பித்தன.”
அந்த நாட்டில் தங்கியிருந்த காலத்தில் தமிழர்கள் தங்கள் மேம்பட்ட நாகரீக
வளர்ச்சியால் மொழி, வானசாஸ்திரம், மதக்கருத்துக்கள், இதிகாசங்கள்
போன்ற தாங்கள் அறிந்த விஷயங்களை உள்ளூர் மக்களுடன்
பகிர்ந்துகொண்டார்கள்.
உள்ளூர் மக்கள் அவர்களை எளிதாக ஏற்றுக்கொண்டார்கள். மெல்ல அந்த நாட்டு மக்களிடையே இவர்கள் கலந்தார்கள். சிலர் உள்ளூர் இனத்தலைவர்களின் பெண்களை திருமணம் செய்து கொண்டார்கள்.உள்ளூர் இனத்தலைவர்களின் குடும்பத்தோடு சம்மந்தப்பட்டதால் தமிழர்களுக்கு எளிதாய் செல்வாக்கும் அங்கீகாரமும் வந்து சேர்ந்தன. தமிழர்கள் தலைமையில் இனக்குழுக்கள் தோன்றின. இனக்குழுக்களிலிருந்து சிற்றரசுகள் தோன்றி, ஒன்றோடு ஒன்று போரிட்டு இணைந்து , கொஞ்சம் கொஞ்சமாய் தமிழர்கள் தலைமை வகித்த பேரரசுகள் தோன்றின. பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, வியத்நாம் உட்பட இந்தப் பிரதேசமே கெமர்கள், ஃபுனான்கள், சம்பா, விஜேயேந்திரர்கள் என்று நமது நாட்டு மன்னர்கள் ஆளுமையில் கிட்டத்தட்ட ஆயிரத்து முன்னூறு வருடங்கள் இருந்தது
தமிழர்கள் குடியேறி வாழ்ந்த இடங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச்
சூட்டினார்கள். இதன் விளைவாக இந்த நாடுகளில் பண்டைக்காலச்
சின்னங்கள், தமிழகத்தில் கிடைத்துள்ள அதே அளவுக்கு தென்கிழக்காசிய
நாடுகளிலும் கிடைத்துள்ளன.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்பாலான சூலங்கள், வேலின் அலகும் மலேசியாவில் கிடாவிலும் சுமத்திராவிலும் பிலிப்பைன்சிலும் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தாய்த் தெய்வம் போன்றவை தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன.
சங்க பழங்கால சூதபவழம் போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள மணிகள்,
வளையல்கள் போன்றவை தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியின்போது
குவியல்குவியலாகக் கிடைத்துள்ளன.ஆனால் இங்கு உற்பத்தியான அவைகள் என்கேக் சென்றன என்பது இதைப்போன்ற மணிகளும் வளையல்களும் காம்போசம், பிலிப்பைன்சிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளனவைகளில் இருந்து தெரியவருகிறது , தமிழகத்தின்செய்பொருள்களின் சந்தையாக அப்போது உலகம் முழுவதும் இருந்தது
முருக வழிபாட்டுக்குரிய வேல், சேவல், காவடி போன்ற பொருட்கள்
, பிலிப்பைன்ஸ் தீவுகளில் கிடைத்துள்ளன.
சங்ககாலத்திற்கு முன்பிலிருந்து கடைச்சங்க காலம் முடிவு வரை கி.பி.350
வரை தமிழகத்தில் வீசிய பண்பாட்டு அலை மியான்மர், சாம்பா,
காம்போசம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் சுமத்திரா, சாவகம் முதலிய
தீவுகளிலும் பரவியிருக்க வேண்டும். சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய
நடுகற்கள் அமைக்கும் வழக்கம் மேற்கண்ட நாடுகளிலும் காணப்படுவதே
இதற்குப் போதிய சான்றாகும்.
தென்கிழக்காசிய நாடுகளை ஆண்ட பல்வேறு மன்னர் குலங்களுக்கும் தமிழக
மன்னர் குலங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருப்பதற்கான
ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்
குலங்களைச் சேர்ந்தவர்களே தென்கிழக்காசிய நாடுகளின் அரச
பரம்பரைகளைத் தோற்றுவித்தவர்கள் என்றும் கருதப்படுகிறது.
தமிழக மன்னர் குலங்களுக்குரிய குடிப்பெயர்களை தென்கிழக்காசிய மன்னர்கள்
தங்களுக்கும் சூட்டிக் கொண்டார்கள். மணவினை உறவும் இவர்களுக்குள்
இருந்தது. சமய, பண்பாடு ரீதியான தொடர்புகளும் அந்நாடுகளுக்கும்
தமிழர்களுக்குமிடையே நெருக்கமாக இருந்தது.
வர்மன் என்னும் குடிப்பெயரை கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ அரச
மரபினர் தங்கள் பெயரோடு சேர்த்து வழங்கினர். இந்த வர்மன் என்னும்
பெயரைத் தம்முடைய சிறப்புப் பெயராகத் தென்கிழக்காசிய நாடுகளை ஆண்ட
பல்வேறு மன்னர் குலங்களைச் சேர்ந்தவர்கள் தத்தம் பெயர்களோடு சேர்த்துப்
பயன்படுத்தியுள்ளனர்.
மியான்மரைச் சேர்ந்த மோன் பழங்குடி மன்னர்கள் விக்கிரவர்மன், பிரபுவர்மன்
என்னும் பெயர்களை உடையவர்களாகத் திகழ்ந்தனர்.
பியூனானை ஆண்ட அரசன் ஒருவர் குணவர்மன் என்று குறிப்பிடப்படுகிறான்.
சம்பாவின் புகழ்மிக்க அரசன் பத்திரவர்மன் ஆவான்.
காம்போசத்தை ஆண்ட முதல் அரச மரபைச் சேர்ந்தவன் உருத்திரவர்மன் ஆவான்.மலேயாவை ஆண்ட மன்னர்கள் சிலரும் வர்மன் என்னும் பெயரைச்
சூட்டிக்கொண்டனர். அவர்களில் விஷ்ணுவர்மன் முக்கியமானவன்.
சாவகத்தை ஆண்ட மன்னர்களுள் தேவவர்மன், பூர்ணவர்மன் ஆகியோர்
குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். போர்னியோவை அசுவவர்மன் என்னும்
மன்னன் ஆண்டான்.
இந்த வர்மன் என்னும் குடிப்பெயரை முதலில் சூட்டிக்கொண்ட பியூனான்,
சம்பா, காம்போச அரசர்கள் பல்லவ அரசர்களுடன் ஏதேனும் ஒருவகையில்
தொடர்புடையவர்களாக இருந்திருக்கவேண்டும்.
மாறன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் சம்பாவை (வியட்னாம் ) ஆண்டுள்ளான். அவன் பாண்டிய அரச மரபினைச்
சேர்ந்தவன் என்பது அறிஞர் பிலியோசாயின் கருத்தாகும்.
இராசாதிராசன் என்னும் பட்டப்பெயரை 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
பயினவுங்கு என்னும் அரசன் சூட்டிக்கொண்டுள்ளான். இப்பெயர் இராசேந்திர
சோழனின் மூத்த மகனின் பெயராகும். இதே பட்டப்பெயரை காம்போசத்தை
ஆண்ட சூரியவம்ச இராம மகாதரன் என்பவனும் சூட்டிக்கொண்டுள்ளான்.
பிற்காலச் சோழ மன்னர்கள் பயன்படுத்திய திரிபுவன சக்கரவர்த்தி என்னும்
பட்டத்தை மியான்மரை 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கியாசித்தன்
பயன்படுத்தியுள்ளான்.
தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ் நாகரிகம், பண்பாடு, சமயம் ஆகியவை கடல்
கடந்து தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியிருந்தன. தாய்லாந்து நாட்டில்
நடைபெறும் மன்னருக்கு முடிசூட்டும் விழாவில் திருமுறைகள்திருப்பாவை திருவெம்பாவை ஓதப்பட்டன.
திருஞானசம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதல் பதிகமும்,
சுந்தரரின் பித்தா பிறைசூடி பெருமானே என்ற முதல் பதிகமும்
மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும்
தென்னாட்டுக்குரிய கிரந்த எழுத்தில் எழுதப்பெற்று இன்றும் தாய்லாந்து
நாட்டின் அரச விழாக்களில் பாடப்பட்டு வருகின்றன.
காம்போசம், தாய்லாந்து, வியட்நாம் முதலிய நாடுகளில் காரைக்கால்
அம்மையாரின் கோயில்கள் காணப்படுகின்றன. எனவே, தமிழர்களின்
திருமுறைகள் தென்கிழக்காசிய நாடுகளில் பல்லவர், சோழர் காலங்களில்
தமிழ் வணிகர்கள் மூலம் பரவியிருக்கவேண்டும்.
தமிழ்க்காப்பியமான மணிமேகலை கதைத்தலைவி மணிமேகலை
சாவகத்துக்குச் சென்று தருமசாவகனைச் சந்தித்து வந்ததைப் பற்றிய செய்தி
குறிப்பிடத்தக்கதாகும். சிலப்பதிகாரத்தால் சுட்டப்படும் மணிமேகலை என்னும்
கடல் தெய்வம் தாய்லாந்து மக்களால் வழிபாடு செய்யப்பட்டது. மணிமேகலை
வரலாற்றைக் கூறும் கதைப் பாடல்களும் அம்மானைப் பாடல்களும் இன்னும்
தாய்லாந்தில் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கம்போடியாவில் அகத்தியர்
அகத்தியர் இமயத்தில் இருந்து தமிழகம் வந்ததாகப் புராணக்கதைகளில் வரையப்பட்டிருந்தாலும் , அவர் தமிழகத்தில் வாழ்ந்ததற்கு ஆதாரமாக தமிழகத்தின் பல ஆலயங்களில் அகத்தியர் சிலைகளும் அந்தக்கோவிலின்தலப்புராணத்தில்அவரையைப்பற்றியக்கதைகளும் நிறைய இருக்கின்றன இமயம் முதல் குமரிவரை தமிழர்கள் விரவி வாழ்ந்ததற்கு சான்றுகள் சிந்துவெளியில் கிடைக்கின்றன .
இராமாயணத்தில் அகத்தியர் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார் .இராமனுக்கு சூரிய மந்திரங்கள் கற்றுக்கொடுத்த முனிவராக அறியப்படுகிறார் .
தமிழுக்கு அகத்தியம் எனும் இலக்கண நூல் அளித்ததால் தமிழையே " அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு "என்று அழைக்கும் மரபு இருந்திருக்கிறது .இறையனார் அகப்பொருள் உரையில் அவர் தமிழின் தலைச் சங்கத்தில் முக்கிய இடம்பெற்றிருந்ததாகவும் அப்போதுதான் அகத்தியம் எனும் இலக்கிய நூல் எழுதப்பட்டதாகவும் கூறப்படுகிறது .
தமிழகத்தைப்போலவே அவரின் வழிபாடு தென்கிழக்கு ஆசியா முழுவதும்தமிழர் பரவலுடன் சேர்ந்து அங்கும் பரவி இருந்திருக்கிறது . தமிழ் சென்ற இடமெல்லாம் அகத்தியரும் சென்றிருக்கிறார்
தென்கிழக்கு ஆசியா முழுவதும்அகத்திய முனிவரின்சிலைகள் கிடைக்கின்றன.அகத்தியர் கடலைக்குடித்தகதைகளும்பிரபலமாகியிருக்கின்றன .
முதல்முதலில் கடலைக்கடந்து ஆட்சி நிறுவியதை கடலைக்குடித்தார் என்று பெருமையாகஉயர்வு நவிற்சியாககுறிப்பிடுகின்றனர் .என எடுத்துக்கொள்ளலாம்
வேள்விக்குடி செப்பேடு இந்தக்கதைகளைக்குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின்குல குரு என்றும்அந்தச் செப்பேடு கூறுகிறது .
தமிழர் குடியேறிய வரலாறு :
சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள்.
இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம்.
தென்சீனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன.
அந்தப்பிராந்தியம் முழுவதும் இந்தோ சீனப்பகுதி என்றுதான் பண்டையக்காலத்தில் வழங்கி வந்தது .தமிழகத்திற்கும் சீனத்திற்கும் கடல்வழி வணிகப்பயத்திற்கு இந்த புகுதி முழுவதும் உத்வியாக இருந்தது . அதை நம்பியே அந்தப்பகுதி நாடுகளின் பொருளாதாரம் இருந்தது தென்கிழக்காசிய நாடுகளில் இப்போது பல நாடுகள் இடம்பெற்றிருந்தாலும் , பண்டைய காலத்தில் அவைகள் ஸ்ரீவிஜயம் கெமர் , பல்லவ சோழர் முதலிய ஆட்சிகளில் தான் மாறி மாறி இடம் பெற்றிருந்தது எனவே வரலாற்றில் கம்போடியாவைமட்டும் பிரித்துப்பார்ப்பது இயலாதகாரியம் ஆகும் .
இந்தோனேசியா வியட்னாம் , பர்மா ஜாவா கம்போடியா போன்ற நாடுகள் பல்வேறு பண்டயப்பெயர்களில் சில பேரரசுகளின் ஆளுமையியில் நெடுங்காலம் இருந்து வந்துள்ளது .எனவே தமிழரது தொடர்பு அந்தப்பேரரசுகளிலிடத்தில் இருந்தபோது இப்போதைய எல்லைகள் அப்போது இல்லை . வரலாற்றில் எல்லைகள் வேறாகவே இருந்து வந்துள்ளது
சங்க கால நூல்களில் தென்கிழக்கு ஆசியாப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மொலுக்காஸ் போன்ற தீவுப் பகுதிகள் முந்நீர்ப் பழந்தீவு என இந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.என்று நம்பப்படுகிறது
இத்தீவுகளைப் பன்னிராயிரம் என மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் ஜாவாவைச் சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்றும், சுமத்திராவை, சிரிவிசயம், சொர்ணதீபம் என்றும் அழைத்து வந்தனர்.
பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளிலிருந்து, தமிழ் வணிகர்களும், தமிழ்ப் பெருமக்களும் சங்க காலத்திற்கு முந்திய காலத்திலிருந்தே சாவகத்துடன் தொடர்பு வைத்திருந்ததை அறிய வருகிறோம்.
பொதுவாக அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இந்தோனேசியாத் தீவுகளுக்குப் பண்டைய தமிழர்கள் சென்றார்கள்.
சாவகம் (ஜாவா) பற்றிய செய்திகள் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இடம் பெற்றிருக்கின்றன. மணிமேகலையில் சாவக நாட்டிலுள்ள நாகபுரம் என்னும் பட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பூமி சந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதையும் மணிமேகலை கூறுகிறது. மேலும், மணிமேகலை சாவக நாட்டிற்குச் சென்று, அங்கு சிறப்புற்று விளங்கிய 'தருமசாவகன்' என்ற பௌத்தத் துறவியை வணங்கியதாகவும்,
சாவகத்தில் ஆட்சி நடத்திய ஆபுத்திரனோடு மணிபல்லவம் வந்து, அங்கே தீவதிலகையின் மூலம் காவிரி பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதையும் மாதவியும் சுதமதியும் அறவன அடிகளோடு வஞ்சி நகர் சென்றதையும் அறிந்து அங்கிருந்து விண்வழியாக வஞ்சி நகர் விரைந்ததாகவும் மணி மேகலையில் கூறப்பட்டுள்ளது.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலுள்ள பாண்டிய நாட்டினின்று கப்பல்கள் தொடர்ந்து சாவகம், சுமத்திரா முதலிய நாடுகளுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள துறைமுகத்தின் வழியாகச் சென்றன. இதற்குச் சான்று மணிமேகலையில் கிடைக்கின்றது என்று அறிஞர் சி.இராசநாயகம் பண்டைய யாழ்ப்பாணம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.
 கவின்மிகு கம்போடியா - #
தொல் தமிழர்களின் வணிகக்குழுக்கள் குறித்த கல்வெட்டுகள்
img 14
தமிழர்களின் கடல் வழி வாணிகம் உலகெங்கும் பரவியிருந்தவிடமெல்லாம் இந்த வணிக குழுக்கள் இயங்கி வந்துள்ளனர். இவ்வணிகர் குழுக்கள் ,அக்காலத்திய Chambers of Commerceபோல செயல்பட்டதும்   தம் வணிகத்தின் விதிமுறைகளையும் வரிகளையும் தாமே நிர்ணயித்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. .  இத்தகைய தமிழ்  வணிக  ஆளுமை , சாதுர்யம்    இப்போதைய வளர்ந்த  நாடுகளின் வணிகக்குழுக்களைவிட மிக சிறப்பாக  இருந்தது .அன்பால் தோல் தமிழரின் வணிகத்தில் அறம்  இருந்தது
தமது நாட்டில் விளைந்த அரியப்பொறுகளை , அதுதேவைப்படும் தூரத்து மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்ற அன்பு இருந்தது , அதில் செல்வம் சேர்க்கும் சாதுர்யம் இருந்தது .இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் வணிகத்திற்கு இலக்கணம் வகுத்துக்கூறிய பாடல்களைப்பாருங்கள் ,அதற்க்கு என ஒரு அதிகாரமே தந்திருக்கிறார் , அதில் இருந்து அந்த நாளைய தமிழர் வாழ்வில் வாணிகம் பெற்றிருந்த சிறப்பை உணரலாம் .ஆனால் இத்தகைய சாகசப்பயணங்களை சாத்தியம் ஆகிய நெய்தல் நில கடலோடிகளை ப்பற்றி  தக்க புரிதல் தான் இல்லை
கடல் கடந்த நாடுகளிலும் ¤மத்ரா தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்று அது கி.பி. 1010-ல் பொறிக்கப்பட்டது. அதில் ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் வணிகக்குழு கொடுத்த கொடை பற்றி சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது   இது சுமத்ரா தீவில் தமிழர் வணிகர் குழு ஒரு முக்கிய இடத்தைத் தம் இடமாகக் கொண்டு அங்கு இறங்கும் கப்பல் தலைவனும், மரக்காயர் எனும் முஸ்லீம் வணிகர்களும் எவ்வளவு தங்கம், கஸ்தூரி செலுத்திய பிறகே தரை இறங்கவேண்டும் என்ற வரிவித்தித்து வசூலித்ததை ப்பற்றிய செய்தியிக் கூறுவது ஆகும் .அத்துணை வணிக மேலாண்மையையும் ஆதிக்கமும் தமிழர்கள்  செலுத்தியத்தைபற்றியும்  அவர்கள்செயல்படும் விதிமுறைகளையும் இது சொல்கிறது.
சீன நாட்டிலும் 1281-ல்சம்பந்தப் பெருமாள் என்னும் தமிழ் வணிகன் அந்நாட்டு அரசன் செக்கா சைக்கான் (குப்ளே கான்) அனுமதியுடன் சிவ பெருமானின் உருவத்தை நிறுவுகிறான்  அரசனின் நன்மையை முன்னிட்டு. இக்கோவிலின் பெயர் திருக்கானேஸ்வரம்என்று அழைக்கப்பட்டது . இதற்கு முன்னோடிகளுண்டு. கி.மு. 140-86-ல் ஹவாங் சு (காஞ்சீபுரம்) வோடு வணிக தொடர்புகள் இருந்தன.  சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச் சக்கரவர்த்திகள் சம்பந்த பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்ரா பவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது.
இதை குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் சோழர்கால சிற்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமானத் தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்
கியோ தங்க் சு என்ற சீன நூல், சீன வணிகர்களுக்காக, பல்லவர்கள் கோவில் கட்டித் தந்ததாகச் சொல்கிறது. இம்மாதிரியான பரிமாறல்கள் மனித உறவுகளுக்கும், நாடுகளிடையே உறவுக்கும், வணிக வளர்ச்சிக்கும் உதவுகின்றன  
மேலும் இம்மாதிரியான குழுக்கள் கி.பி. ஓன்றாம் நூற்றாண்டிலிருந்து 9ம் - நூற்றாண்டு வரை தொடர்ந்துசெயல்பட்டதும் பின் படிப்படியாக குறைந்துள்ளதாகத் தெரிகிறது ஏன் குறைந்தது என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன , அதில் இன்னம் அதிக ஆய்வுகள் தேவை இவையெல்லாம் பழங்கால இடைக்கால கடல்வழி வாணிகம், தமிழ் வணிகக் குழுக்களும் வணிகப் பெருமக்களின்  உயர்பட்ச்ச சாதனையை தெரிவிக்கிறது
கம்போடியாவில் பல வணிகக்குழுக்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருப்பதை பிரெஞ்சு ஆய்வாளர் கோடாஸ் விவரிக்கிறார் .
வாப் , வணிக என்ற இரண்டு பெயர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது 
9-ம் நூற்றாண்டில் "மணிக்கிராமம்" என்னும் தென்னிந்திய வர்த்தகக் குழு வங்கக்கடலைக் கடந்து எதிர்க் கடற்கரை ஓரத்தில் இயங்கத் தொடங்கிய செய்தியை அங்குள்ள தகுவாபா என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமல்ல வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில் - புகழ்பெற்ற வணிகக் குழமான திசை ஆயிரத்து ஐய்நூற்றுவர் எனும் குழுவினர் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், சித்திரமேழிப் பெரியநாட்டவர், மணிகிராமத்தார், அஞ்சுவண்ணத்தார் போன்றோர் அவ்வகையில் முக்கியமானவர்கள்.சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
'நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)
இன்றைய பன்னாட்டு நிறுவங்களுக்கு இணையாக தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிகத்தில் கொடிகட்டிப்பறந்ததை   அறியும் போது ,  இன்றைய நிலைகுறித்து ஏக்கமும் சோகமும் மிஞ்சுகிறது .
எங்கே சென்றது அத்துணை திறமையும் , ஆற்றலும்? எனும் பெரு மூச்சுதான் மிஞ்சுகிறது .திறன் மிக்க கடலோடிகள் இப்போது  மீனவர் என்றப்பெயரால் இழிவாகப்பார்க்கப்படுகிறார்கள் .உள்நாட்டு மீனவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்தான் , கடல்வரை வந்து சேரும் சாத்துகளை , நதிகளின் மூலம் உலகத்தின் பல இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் இணையற்ற சமூகமாக இருந்திருக்கிறார்கள் .இவர்களைப்பற்றி விரிவான புத்தகம் எழுத தரவுகள் தொகுத்து வருகிறேன் .சித்தர்கள் அருளால் விரைவில் வெளிவரும் . 

நன்றி 

No comments:

Post a Comment