எந்தத் தொழிலுக்கு எந்த கிரகம் துணை நிற்கும்?
`நீங்கள் பார்க்கும், வேலை, தொழில் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டால், பலரும் அதற்கு இல்லை என்ற பதிலைத்தான் சொல்வார்கள். ஒரு சிலர்தான் தங்கள் மனதுக்குப் பிடித்த வேலையில் ஈடுபட்டு, அதில் இறங்கி அடித்து விளையாடி வெற்றி பெறுவார்கள். அதற்குக் காரணம் என்ன,எந்தத் தொழிலுக்கு எந்த கிரகம் துணை நிற்கும்? என்று ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். சூரியன் முதல் ராகு -கேதுக்கள் வரையிலான ஒன்பது கிரகங்களும் என்னென்ன தொழில்களுக்கு காரகத்துவம் பெற்று விளங்குகின்றன ; அத்தகைய கிரகங்கள் நம்முடைய ஜாதகத்தில் எப்படி ஆட்சி, உச்சம் பெற்று இருக்கின்றன என்பதற்கு ஏற்ப தேர்வு செய்து பணியாற்றினால், அதில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
சூரியன்: பொன், வணிகம், மருந்துப் பொருட்கள், கம்பளி ஆடைகள், ஐ.ஏ.எஸ். - ஐ.எஃப்.எஸ். ஆட்சிபணி, காவல் துறை, ராணுவம், அரசாட்சி, மருத்துவம் போன்றவற்றுக்கு சூரியனே காரகத்துவம் பெறுகிறார். சூரியன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.
சந்திரன்: விவசாயம், மீன் பிடித்தல், பால் வியாபாரம், முத்துக்குளித்தல், கப்பல் கட்டும் துறை, கடற்பயணம் செய்தல், உப்பு காய்ச்சுதல், ஆலைத் தொழில், ஜவுளி வியாபாரம் செய்தல். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பவர்கள், இவற்றில் ஏதேனும் தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.
செவ்வாய்: காவல் துறை, ராணுவம், பாதுகாப்புத் துறை, மருத்துவம், ஆயுதத் தளவாடத் தொழில், ஸ்பேர் பார்ட்ஸ், விளையாட்டுத் துறை, லேத் பட்டறை, நெருப்பினால் உண்டாகும் தொழில்கள், பொறியியல் துறைகளிலும் தொழில் அமையும். ரியல் எஸ்டேட், விவசாயம், டிரைவர், பைலட், கேட்டரிங் ஆகியவற்றின் மூலம் பொருள் தேடினால் நல்ல லாபம் பெறுவார்கள்.
புதன்: வியாபாரம், கணிதம், ஸ்டேஷனரி, பத்திரிகைத் துறை, அச்சுக்கூடம், ஆசிரியப் பணி, ஜோதிடத் துறை, எழுத்துத் துறை, கவிதை, நாவல் இயற்றுதல், எழுத்தர் பணி, கணக்குப் பிள்ளை, வாக்குத் தொழில், தகவல் தொடர்பு துறை, விளம்பரம், பேச்சாற்றல், ஷேர் மார்க்கெட், கான்ட்ராக்ட் ஏஜென்சி, கூட்டுறவு நிறுவனங்கள். புதன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.
குரு: பொருளாதாரம், வக்கீல், நீதிபதி, தங்க நகை வியாபாரம், வங்கித் துறை, அறக்கட்டளை நிறுவுதல், தர்மகர்த்தா, ஆசிரியர், வேதங்களை உச்சரித்தல், வைதீகம், ஆலயப் பணிகள், தர்ம சத்திரம் கட்டுதல், கோயில் நிர்வாகம், ஆன்மிகப் பணி, மந்திரி பதவி, மதப் பிரசாரம், அரசாங்க ஆதரவு. குரு பகவான் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.
சுக்கிரன்: ஆடல், பாடல், நாட்டியம், நாடகம், சினிமா, ஓட்டல், லாட்ஜிங், திருமண மண்டபம், டிராவல் ஏஜென்ஸி, கட்டடக்கலை, ஜவுளித் துறை, நகைக்கடை, நவரத்தின வியாபாரம், மாட்டுப் பண்ணை, கோழிப் பண்ணை, அழகு சாதனப் பொருட்கள், தயாரிப்பு, வாசனை திரவியங்கள் விற்பனை. சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.
சனி: பாரம் தூக்குதல், சர்வர், சலூன், விவசாயம், ஆடு, மாடு, கோழி வெட்டும் கசாப்புக்கடை, எள், எண்ணெய் வியாபாரம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், அரசியல் ஈடுபாடு, சேவை செய்தல், தொண்டு நிறுவனம், மரவேலை, மண்பாண்டத் தொழில். சனி ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.
ராகு: தொழில்நுட்ப அறிவு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட தொழில்கள், கமிஷன் வியாபாரம், மதுபானம் தயாரித்தல், ஆகாய விமானம், வேதியியல் ரசாயனங்கள் தயாரித்தல், உரம், பூச்சி மருந்து தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் நல்ல லாபம் பெறலாம்.
கேது: பில்லி, சூனியம், மாந்திரீகம், மருத்துவம், ஆன்மிகம், மதப்பிரசாரம், சித்த மருந்துகள், லேகியம் தயாரிப்பு, களிம்புகள் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட நல்ல லாபம் பெறலாம்.
No comments:
Post a Comment