** சரீர தத்துவம் **
********************
********************
"உலகில் உண்டான எல்லா உயிர்களுக்கும் ஒவ்வொரு வடிவில் உடல், ஒன்று மற்றொன்றை இனம் பிரிக்கவே"
நம் மனித உடலுக்கு கங்காளக் கூடு, காயம், சரீரம், மூர்த்தி, தொக்கு, வீடு என்று இருந்தாலும் வீடுபேறு பெறவேண்டு மென்றே கூறுவர்.
நம் மனித உடலுக்கு கங்காளக் கூடு, காயம், சரீரம், மூர்த்தி, தொக்கு, வீடு என்று இருந்தாலும் வீடுபேறு பெறவேண்டு மென்றே கூறுவர்.
பராசக்தியும் பராபரமும் ஒன்றாக வசிக்கின்ற வீடு தான் இந்த உடம்பு.
மேலும் சரணகமலஆலயம், நாதம் ஒளிக்கின்ற ஞானமணி இல்லம் என்ற சிறப்பு பெயருமுண்டு.
இந்த உடலையும் உலகையும் ஆள்வதும், உண்டாக்குவதும் ஐந்து பூதங்கள் தான்.
இந்த உடலையும் உலகையும் ஆள்வதும், உண்டாக்குவதும் ஐந்து பூதங்கள் தான்.
பரந்து விரிந்து கிடக்கும் "பெருவெளி"
மற்றும் விண் ஆகாயம் முதல் பூதம்.
பிரிதிவி எனும் மண் பூதம் இரண்டாம் பூதம்.
மண்ணே தாய், விண்ணே தந்தை.
மற்றும் விண் ஆகாயம் முதல் பூதம்.
பிரிதிவி எனும் மண் பூதம் இரண்டாம் பூதம்.
மண்ணே தாய், விண்ணே தந்தை.
அப்பு, தேயு, வாயு எனும் காற்று நெருப்பு தண்ணீர் ஆகிய மூன்று பூதங்கள் வாழும் உயிர்களுக்கு சொந்தம்.
மனித உடலை ஆதிக்கம் செய்பவை பல.
உணவுடம்பு, உயிர் உடம்பு, மனஉடம்பு, ,அறிவுடம்பு, இன்பஉடம்பு என நுண்ணிய அறிவால் தெரியவேண்டியது.
உணவுடம்பு, உயிர் உடம்பு, மனஉடம்பு, ,அறிவுடம்பு, இன்பஉடம்பு என நுண்ணிய அறிவால் தெரியவேண்டியது.
இவ்வகையில் தேக தத்துவம் இப்பகுதியில் காற்றை மட்டும் அறிவோம்:
உடலெங்கும் பரவியுள்ள காற்றை தொழில் வகையாக தசவாயு என பத்தாக பிரித்து,
உயிற்க்காற்று: (பிராணன்) தினம் 21600 சுவாசம் உடலுக்குள் சென்று வெளிவருகிறது, விடுவதும் வாங்குவதும் இதன் பணி, இதில் நமக்கு விழிப்புணர்வு இருந்து சுவாசத்தை கொண்டே ஆயுள் விருத்தி ஆண்மீகம் எல்லாம்.
மலக்காற்று:(அபாணன்) குதம் குய்யத்தில் இருந்து மலஞ்சலங்களை கழிக்கச் செய்கிறது.
தொழில்காற்று: (வியாணன்) கை கால்களை நீட்டவும் மடக்கவும் செய்கிறது, இதில் குற்றம் கண்டே வாதத்தில் படுத்தோரை எழுப்பமுடியும்.
ஒளிக்காற்று: (உதாணன்) காது கேட்பதற்க்கு செயலாற்றும் காற்று. நுரையீரல் சுவாசக் குழாயில் ஏப்பம் இருமல் போன்ற செயலையும் செய்கிறது,
சமசீர்க்கா ற்று:(சமானன்) சமபத்துகின்ற பணியை செய்வது நிரவுகாற்று சமானன்.
விழிக்காற்று: (கூர்மன்) கண்களில் இருந்து வெளிச்சத்தை காண உதவும் காற்று, இதில் குறைஏற்படின் பார்வைக் கோளாறு வரும்.
கொட்டாவிக்காற்று: (கிருகரன்) தேவையற்றதை நீக்கி கெட்ட ஆவியை வெளித்தல்லும் காற்று, கெட்டஆவியே கொட்டாவியாக மாறிவிட்டது.
தும்மல்க்காற்று: (நாகன்) நுரையீரலை தாக்கும் தூசிகளை வெளியேற்ற தும்மலை உண்டுபன்னுவது, விக்கல் கக்கல் முதலியவற்றை உண்டாக்குகிறது.
இமைக்காற்று: (தேவதத்தன்) இமையில் இருந்து கருவிழியை பாதுகாக்கும் பணி இதனுடையது.
வீங்கல்காற்று; (தனஞ்செயன்) உடலை விட்டு உயிர் பிரிந்தபிறகு மூன்று நாட்களுக்கு உடலை வீங்கச் செய்து உடல் வெடித்து வெளியேறும் தஞ்செயன் காற்று,
நாம் பிறப்பதற்கு உதவியதும் தாயோடு சேர்ந்து நம் தனஞ்செயன் காற்றும் செயல் பட்டுத்தான் நம் பிறப்பு நிகழ்தது, இடுப்பின் பின் பக்கம் இரு குழி இருப்பது இதனாலேயே சுயப்பிரசவத்தில் வெளிப்படாத குழந்தை க்கு வாசியோகம் சித்திக்காது, இனிமேலாவதும் பெண்கள் தன் குழந்தை நலமுடன் வாழ சுயப் பிரசவத்திற்கு மட்டும் துணை நில்லுங்கள்.
சரீரதத்துவம் கண்டதனால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
காற்று போல் நாடிகள் தசநாடி உண்டு.
ரத்தக்குழாய்களில் மிகவும் மெல்லியகுழல்கள் காற்றும் ரத்தமும் கூடி தனித்து தங்களுக்கு உரிய பகுதியில் செயல் படுவது 72000 நரம்புகளின் தொகுப்பு பத்து தசநாடியாகும்.
இடகலை பிங்கலை சுழுமுனை சிங்குகை புருடன் காந்தாரி அத்தி அலம்புடை சங்கினி குரு என்று பத்தும் அறிவினால் அறிய பெருத்த நன்மையுண்டு.
இன்னும் ஆன்மாவை அறியக்கூடிய அறிவு மூலம் ஞானம் பெறவும், உடலை நோயற்ற தண்மைக்கு உயர்த்தவும் வந்த நோயை விரட்டவும் தசவாயு தசநாடி யை மூலிகைகள் கொண்டு வலுப்படுத்தலாம்.
இன்னும் ஆன்மாவை அறியக்கூடிய அறிவு மூலம் ஞானம் பெறவும், உடலை நோயற்ற தண்மைக்கு உயர்த்தவும் வந்த நோயை விரட்டவும் தசவாயு தசநாடி யை மூலிகைகள் கொண்டு வலுப்படுத்தலாம்.
No comments:
Post a Comment