Sunday, 9 September 2018

ஸ்ரீ. காக புஜண்ட சித்த மகரிஷி தரிசனம்

ஸ்ரீ. காக புஜண்ட சித்த மகரிஷி தரிசனம் !

Sree Kaaga Pujandar Siddhar
(  பதினெண் சித்தர்கள் )

இவர்   ரோமச    முனிவரின்    தந்தை   ஆவார்.காகபுஜண்டர் மயிலாடுதுறையில்   ( மாயவரம்    எனப்படும்  மயூரத்தில் ) பிறந்தவர்  ஆவார்.      மயூர  நாதரின்          திருவருளால்    சாகா   வரம்   பெற்று      காக்கை     வடிவத்தில்     பல்லாயிர   நூற்றாண்டுகள்   வாழ்ந்தவர்

காக்கை      உருவில்     பல     இடங்களில்         சுற்றி    திரிந்து  பல   விஷயங்களை      கண்டறிந்ததால்        காக    புஜண்டர் என்று   அழைக்கப் பட்டார்.   இவர்   வரரிஷியின்  சாபத்தால் சந்திர    குலத்தில்       பிறந்தார்.      இவர்       அறிவில்     மிகச் சிறந்தவர்.    பெரும்     தவசி.             பிரளய      காலங்களில் அவிட்டம்    நட்சத்திர    பதவியில்   வாழ்வார்.

ஒரு    சமயம்        கயிலையில்          தேவர்கள்,        சித்தர்கள் அனைவரும்    ஒன்று    கூடி  இருந்தனர். ஸ்ரீ. சிவ பெருமான் அங்கிருந்தவர்களிடம்     தனக்கு      ஏற்பட்ட      சந்தேகத்தை
அங்கு கூடி     இருந்தவர்களிடம்      தெரிவித்தார்.            இந்த உலகமெல்லாம்       பிரளய    காலத்தில்      அழிந்து      விட்ட பிறகு    எல்லோரும்    எங்கு   இருப்போம்   என்றார். மேலும் பிரம்மா,   விஷ்ணு,    ருத்திரன்,    மகேஸ்வரன்,     சதாசிவம் ஆகிய   ஐவர்களும்   எங்கே    இருப்பார்கள்  என்று கேட்டார்.

எல்லோரும்     அமைதி         காத்தனர்         மார்க்கண்டேயன் இதற்கு    திருமாலே    பதில்    தருவார்    என்றார்.     அவரும் முன்பு    பிரளயம்   ஏற்பட்ட    போது   பிரளயத்தில் எல்லாம் அழிந்து    போயின    ஆழிலை   மேல்    பள்ளி கொண்டிருந்த என்னிடத்தில்    சித்துகள்    யாவும்     ஒடுங்கின.          நானும் துயிலில்    ஆழ்ந்திருந்தேன்.    என்    சார்பாக     என்னுடைய சுதர்சன    சக்கரம்   யாராலும்     தடுக்க முடியாத வேகத்தில் சுற்றிக்   கொண்டிருந்தது.

அந்த   அங்கு     வந்த     புஜண்டர்     எப்படியோ     அதை   ஓட விடாமல்    செய்து   விட்டு    அந்த    சக்கரத்தை          தாண்டி சென்றார்.     அவர்      மிகவும்        வல்லவர்.           வசிட்டரை அழைத்து    அவரை   அழைத்து  வந்தால் அவரால்மட்டுமே உங்களின்   கேள்விக்கு    பதில்    தர   முடியும்   என்றார்.

ஸ்ரீ. சிவபெருமானும்   வசிட்டரை   அழைத்து      புஜண்டரை அழைத்து   வருமாறு கூறினார். புஜண்டரும் அங்கு வந்தார். தாம்     எத்தனையோ            பிரளயங்களை      கண்டதையும், எத்தனையோ     மும்   மூர்த்திகள்    அழிந்து   போனதையும் உலகம்   மீண்டும்    சிருஷ்டிக்க    பட்டதையும்      கண்டதாக கூறினார்.    காக  வடிவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்    ஆலமரத்தில்    வீற்றிருந்து        இந்த     அதிசயங்களை கண்டதாக    கூறினார்.    இந்த விளக்கமானது காக புஜண்டர் துணைக் காவியத்தில்    விளக்கமாக   உள்ளது.

காக    புஜண்டர்    பெயரில்     வைத்திய நூல்கள் பல உண்டு. காக புஜண்டர்    நாடி     எண்    என்ற   ஜோதிட நூலும் உண்டு இது    தவிர    காக    புஜண்டர்  ஞானம்   80         காக புஜண்டர் உபநிடதம்    31    காக புஜண்டர்   காவியம் 33   காக புஜண்டர் குறள் 16    என்ற    நூல்கள்    ஆழ்ந்த    ஞான      கருத்துகளை விளக்குகின்றன.

காணாத   காட்சியெல்லாம்    கண்ணிற்கண்ட காக புஜண்டர் யோக ஞான சமாதி முறை காரிய சித்திகள் பெரும் வழிகள், இரசவாதம், நோய் தீர்க்கும் மருந்து வகை , பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்கும் மருந்து, பகைவர்களை அழிக்கும் வழி   போன்றவைகளைப்   பற்றி          இவருடைய     நூலில் விளக்கமாக    கூறப்பட்டுள்ளது.

இல்லறமாயினும்    துறவரமாயினும்     மனதில்    மாசின்றி ஒழுக    வேண்டும்    அப்படி    ஒழுகா    விடில்   செய்யும் பிற செயல்    வீண்    பகட்டாக    கருதப்படும்   என்கின்றார்.    காக புஜண்டர்   திருச்சியில்   வாழ்ந்ததாகவும்  அங்கேயே சமாதி நிலை      கொண்டதாகவும்         சித்தர்கள்      ஆய்வாளர்கள்   கூறுகின்றனர்.

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். பூலோக இந்திரன் என்று தேவர்களால், ரிஷிகளால் என்றும் போற்றப்படும் மகா முனிவர் ஸ்ரீ காகபுஜண்டர். அவரும் அவரைப் போன்ற மகா முனிவர்களான ,ஸ்ரீ காலாங்கி, ஸ்ரீ புலிப்பாணி, ஸ்ரீ கொங்கணர், ஸ்ரீ கோரக்கர் போன்ற பலநூறு சித்தர்கள் வாசம் செய்யும் மலை பிரும்மரிஷி மலை.

மலைப் பகுதி

இம்மலை திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. 210 மகா சித்தர்கள் இங்கு வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது. இந்த பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மகத்தான சக்தி படைத்தது.

இங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. மலையின் கீழ் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. மிகுந்த அதிர்வலைகள் உடையதாய் இம்மலையும், இவ்வாலயமும் விளங்குகிறது.

வருங்காலத்தில் ஸ்ரீ தேவி நளினி அம்மனாய் தோன்றி, ”ஸ்ரீ ரங்கா கலி கொண்டு வா!” என்று கூறி கலி முடிக்கும் போது, மகா சித்தர்  ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இப் பிரும்மரிஷி மலையே விளங்கப் போவதாக சித்தர் வாக்கில் கூறப்படுகிறது.

தலையாட்டிச் சித்தர்

இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்னமும் சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார். அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 2010க்குள் உலகில் நடக்கப் போகும் பல விஷயங்கள் பற்று அந்நூலில் கூறப்பட்டுள்ளதாம்.

முன்பு பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த ராஜகுமார் என்பவர், தலையாட்டி சித்தரிடம் உபதேசம் பெற்று சீடராக மாறி, தற்போது மகா சித்தர்கள் டிரஸ்ட் என்ற அப்பீடத்தின் நிறுவனர், தலைவராக இருக்கிறார். ராஜ்குமார் சுவாமிகள் அன்னதானம், மருத்துவம், மருந்து, சூரணம், சித்த வைத்தியம் போன்ற ஆன்மீகப் பணிகளையும் சேவைகளையும் செய்து வருகிறார்.

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். இதோ..  அவரை வழிபடும் சில ஸ்லோகங்கள். இவற்றை உள்ளன்போடு பூசியுங்கள். தினம்தோறும் காக்கைக்கு உங்கள் கையால் உணவிட்டு வாருங்கள். பாவங்கள் தொலையும். நன்மைகள் விளையும்.

எல்லா உயிர்களுக்கும் பசிக்கும் போது நாம் கண்டால் அதற்கு நம்மால் முடிந்த உணவினை கொடுக்க வேண்டும். இதை விட உயர்ந்த பரிகாரம் எதுவும் இல்லை.

ஓம் ஸ்ரீ காகபுஜண்டீசுவர சுவாமிநே நம:

ஸ்ரீ காகபுஜண்ட தியானம்

   த்விபுஜம் சத்வி நேத்ரம் ச
   ஜடாமகுட தாரிணம்
   காகதுண்ட முகம் சாந்தம்
   பஸ்ம ருத்ராஷ தாரிணம்
   முத்ரோ ருத்வய ஹஸ்தம்ச
   சிவசிந்தன மானஸம்
   பக்தா பீஷ்ட்ட ப்ரதம் தேவம்
   பாவயே முனி புங்கவம்.

   ஸ்ரீ காகபுஜண்டர் காயத்ரி

  1. ஓம் புஜண்ட தேவாய ச வித்மஹே
   த்யான ஸ்தீதாய தீமஹி;
   தந்நோ பகவான் ப்ரசோதயாத்.

  2. ஓம் காக ரூபாய வித்மஹே
   தண்ட ஹஸ்தாய தீமஹி;
   தந்நோ புஜண்ட ப்ரசோதயாத்.

  3.  ஓம் காக துண்டாய வித்மஹே
   சிவசிந்தாய தீமஹி;
   தந்நோ யோகி: ப்ரசோதயாத்.

   ஓம் ஸ்ரீ பஹூளாதேவி சமேத
   ஸ்ரீ காக புஜண்ட தேவாய நம:

ஸ்ரீ காக புஜண்டரின் அருளால் இதனை உள்ளன்போடும் பக்தியோடும் படிப்பவர்கள் அனைவருக்கும் எல்லா நன்மையும் விளையட்டும்!

No comments:

Post a Comment