Wednesday 5 September 2018

பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்

பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்.
***********************************************
'ஆட்டோபயாகிராபி ஆஃப் எ யோகி' என்ற
உலகப் பிரசித்தி பெற்ற நூலை எழுதிய
பரமஹம்ஸ யோகானந்தர் (1893-1952) 1952ம்
ஆண்டு மார்ச் 7ம் தேதி மஹா சமாதி
அடைந்தார். அவரது உடல் இருபது நாட்கள்
கழித்து மார்ச் 27ம் தேதி வெங்கல மூடியிட்ட
பேழையில் வைக்கப்பட்டது. அதுவரை அந்த
உடலில் எந்த வித மாற்றமும் இல்லை. லாஸ்
ஏஞ்சலீஸைச் சேர்ந்த ஃபாரஸ்ட் லான்
மெமோரியல் பார்க்கின் மார்ச்சுவரி டைரக்டர்
ஹாரி டி ரோ, “பரமஹம்ஸ யோகானந்தரின்
இறந்த உடலில் சிதைவுக்கான எந்த வித
அறிகுறிகளும் தோன்றாதது எங்கள்
அனுபவத்திலேயே மிகவும் அசாதாரணமான
ஒன்றாக விளங்குகிறது. உடல் தோலிலோ
அல்லது திசுக்களிலோ எந்த வித மாற்றமும்
இல்லை! இது போன்று மாறாமல் இருக்கும்
ஒரு உடல் எங்கள் சவக் கண்காணிப்பு
வரலாறிலேயே இல்லாத இணையற்ற ஒரு
சம்பவம்! நாளுக்கு நாள் எங்கள் வியப்பு
கூடிக் கொண்டே போனது” என்று
குறிப்பிடுகிறார்!
பரமஹம்ச யோகானந்தா தன் உடலை
விடும்பொழுது, அவர்முன் 700 பேர்
இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை
விடப்போகிறேன்’ என்று அவர்
அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள்,
மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து
அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது
நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என்
உடலை நான் விடப்போகிறேன்’ என்று
சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன்
உடலை நீத்தார்.
மருத்துவர்கள் எத்தனை சோதனை
செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு
விஷயமிது. ஏனெனில், மருத்துவ
அறிவியலைப் பொருத்தவரை, உடலில்
ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க
முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும்
என்று நம்பப்படுகிறது. இதயமோ,
நுரையீரலோ, வேறு எதோ ஒன்று
கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது
அவர்களது நம்பிக்கை. நன்றாக,
ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது
நான் போகப்போகிறேன்’ என்று
சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள்
எங்கும் பார்த்திருக்கவில்லை.
அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா
உடலை விடும்போது, ‘இந்த உடல் 33
நாட்களுக்கு அழிந்து போகாது. நீங்கள்
அப்படியே வைத்துக் கொள்ளலாம்’ என்று
சொல்லிவிட்டு உடலை நீத்தார். உடலில்
தேவையான அளவிற்கு ‘வியானப்
பிராணா’வை அவர் தக்கவைத்துச் சென்றதால், அத்தனை நாட்களுக்கு உடல் நன்றாக இருக்கும். இதைச் செய்வதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர்.
அதனால் போகும்போது, அவர்களுக்கு
கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச்
செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார்.
காரண அறிவை மட்டுமே பயன்படுத்தி
அவரைப் பற்றி இல்லாததை எல்லாம் பேசிய
விஞ்ஞானிகளுக்கு, புரியவைத்துப் போகலாம் என்றெண்ணி, 30 நாட்கள் உடல் அப்படியே இருக்கும், அனைத்து சோதனைகளையும் நன்றாக செய்யுங்கள் என்று சொல்லி, உடலை விட்டுப் போனார் அவர்.
ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை
விடும் நிலை தனித்துவமானது. மகா சமாதி
என்றழைகப்படும்.
கபீர் மறைந்த இடத்தில வெறும் ரோஜா
பூக்களே இருந்தன.
ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி
திருவண்ணமலையில் மறைந்தது.
பிரம்பு கூடைக்குள் புகுந்து கடற்கரையோர
சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டிய
பட்டினத்தார் அந்த கூடைக்குள்ளிருந்தே
மறைந்து போனார். அடையாளம் அழித்து
பூரணமான அவரின் அடையாளமாக, அவர்
இருந்த இடத்தில ஒரு சிவ லிங்கம்
இருந்தது....

No comments:

Post a Comment