Thursday 27 September 2018

பஞ்சபூதங்களும் பஞ்ச பட்சிகளும்

பஞ்சபூதங்களும் பஞ்ச பட்சிகளும்
------------------------------------------------------
பஞ்ச பூதங்களின் குறியீடுகளாக பஞ்ச பட்சிகளை எப்படி நிர்ணயித்தார்கள் என்பது கீழே தரப்பட்டுள்ளது. 
பூமியில் பல விதமான உயிரினங்கள் வசித்து வருகின்றன. அவை, நடப்பன,மிதப்பன,பறப்பன என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக பறவையினங்கள் மட்டும் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களையும் தொட்டு நிற்பவையாகும். அதாவது பறவைகள் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய ஐந்து நிலைகளிலும் சஞ்சரிக்கக்கூடியவையாகும். இதன் காரணத்தினாலேயே சித்தர்கள் பஞ்ச பூதங்களின் குறியீடுகளாக பறவைகளை நிர்ணயித்துள்ளார்கள்.
வல்லூறு பறவை வானத்தில் மிக உயரத்தில் பறக்கும் தன்மையுடையது என்றாலும்,வானத்தில் பறந்துகொண்டே பூமியை கூர்மையாக கவனிக்கும் தன்மையுடையது என்பதால் நில பூதத்தை குறிக்கும் பறவையாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆந்தையானது நீர் சார்ந்த இடங்களான ஆற்றங்கரை, குளத்தங்கரை, ஏரிக்கரை, வாய்க்கால் ஓரம், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் வசிக்கும் பறவை என்பதால் நீர் பூதத்தை குறிக்கும் பறவையாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
வெப்ப காலத்தில் மட்டுமே இன விருத்தியில் ஈடுபடும் பறவை காகம் என்பதால், அதை நெருப்பு பூதத்தை குறிக்கும் பறவையாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதிகாலையில் குரல் எழுப்பும் பறவை கோழி என்பதால், அதை காற்று பூதத்தை குறிக்கும் பறவையாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆகாயத்தில் நகர்ந்து செல்லும் மேகங்களைக்கண்டு ஆனந்த நடனமிடும் பறவை மயில் என்பதால், அதை ஆகாய பூதத்தை குறிக்கும் பறவையாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நன்றி : ரவி சங்கரன் 

No comments:

Post a Comment