Thursday 27 September 2018

நமசிவய வந்தது எப்படி?

ந ம சி வ ய= 51
எப்படி?
தமிழில் மெய் எழுத்துகள் 18
அதில்
எட்டாம் எழுத்து ந்
பத்தாம் எழுத்து ம்
மூன்றாம் எழுத்து ச்
பதினான்காம் எழுத்து வ்
பதினொன்றாம் எழுத்து ய்
8+10+3+14+11=46
மெய் என்றால் உடல் நமது உடலில் இந்த ஐந்து எழுத்தும ஐந்து இடத்தில் உடல் எழுத்தாய் விளங்கி நிற்க
அதற்கு உயிர்ப்பு கூட்ட உயிர் எழுத்தாக
அ+அ+இ+அ+அ
என்ற அட்சரத்தைக் கூட்டி
ந ம சி வ ய
என்ற மந்திரம் உருப்பெற்றது
மேற் சொன்ன எண்ணிக்கையில் உயிர்எழுத்து ஒன்று கூட்ட அதாவது
8+1=9
10+1=11
3+1=4
14+1=15
11+1=12
ஆகக் கூட்ட
9+11+4+15+12=51 என்று வரும்.
இதில் ஓம் என்பது மூலமந்திரம்
ஆகவே அது மூலாதாரத்தோடு தொடர்புள்ளது
இந்த ஐந்தெழுத்தும் மூலத்தின் துணையின்றி வேலை செய்யாது.
ஓம் தாய் எழுத்து மற்றவை சேய் எழுத்து (தாய் எழுந்து போனால் குட்டிகள் தானே போகும்)
ஓம்நமசிவய
இது் மூலாதாரம் தொடங்கி அடுத்த ஐந்து சக்கரங்களையும் இயக்கும்
ஆகவே ஆறு ஆதாரங்களை இப்படி சூட்சமமாக சொல்லிவைத்தனர்...
51அட்சரம்
5+1=6
6 ஆதாரங்கள்.
நன்றி : கோரக்க தாசன் 

No comments:

Post a Comment