Monday 10 September 2018

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
சஸ்திர பந்தம்
வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும், எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது
பாடல்: 55 எழுத்து, சித்திரம்: 30 எழுத்து

வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா 
மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேலவா.
(பதம் பிரித்தது)
வால வேதாந்த பாவா சம்போகத்து அன்பா
மாலை பூண் ஏம திற மால் வலர் தே - சாலவ
மா பாசம் போக மதி தேசு ஆர் மா பூதம்
வா பாதம் தா வேலவா
விளக்கம்: தூயவனே! வேதாந்த விலாசக் கடவுளே! பேரின்பமெனுஞ் சுவானுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெனத் திகழ்வோனே, வன்மை சான்ற திருமாலுக்கும், வல்லவர்களுக்கும், கடவுளே, என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும், ஒழிய ஞானமும், புகழுள்ள, பரமான்மாவே வந்தருள்க, திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க, வேலிறைவனே

No comments:

Post a Comment